கண்கள் முக அழகை கூட்டக்கூடியது. அதிகம் சிந்தித்து வேலை பார்ப்பவர்களுக்கு மற்றும் கணினி வேலை பார்ப்பவர்க்கும் கண் எரிச்சல் மற்றும் கண் உறுத்தல் மிகவும் நெருடலை ஏற்படுத்தும். வேலையில் கவனம் செலுத்துவதும் கடினமாக இருக்கும்.
பொதுவாக இந்த கால கட்டத்தில் பெரும்பாலானோர் அதிக நேரம் கணினி மற்றும் மொபைல் வேலைகளில் ஈடுபடுகின்றனர். எனது நண்பர்கள் சில பேர் என்னிடம் கேட்ப்பார்கள் கண் எரிச்சல், கண் வலி மற்றும் கண் உறுத்தல் அதிகமாக உள்ளது, எதாவது வீட்டு வைத்தியம் அல்லது எளிய வைத்திய முறைகளை கேட்பார்கள்.
அவர்களுக்கு நான் கூறிய ஒரு சில வைத்திய முறைகள் மிகவும் பலனளித்தது. நீங்களும் அதை பின்பற்றி பயனடைய இதோ ஒரு சில வழி முறைகள். கீழ்கண்ட இந்த மூன்று முறைகளில் எதாவது ஒன்றையோ அல்லது மூன்றையுமே நீங்கள் செய்து பயனடையலாம்.
1. கற்றாழை வைத்தியம்
கற்றாழை மடலில் இருக்கும் முட்கள் மற்றும் பச்சை நிற தோலை நீக்கி விட்டு, உள்ளே இருக்கும் வெள்ளை நிற சதை பகுதியை சிறிய மற்றும் மெல்லிய துண்டுகளாக செய்து எடுத்துக்கொள்ளவும்
இந்த கற்றாழை துண்டுகளை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். மஞ்சள் நிற பசை போன்ற திரவம் கண்களின் மேல் சில சமயம் அரிப்பை ஏற்படுத்தும். அதனால் மூன்று முறையாவது குளிர்ந்த நீர் விட்டு கழுவவும்.
இந்த கற்றாழை துண்டுகளை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். மஞ்சள் நிற பசை போன்ற திரவம் கண்களின் மேல் சில சமயம் அரிப்பை ஏற்படுத்தும். அதனால் மூன்று முறையாவது குளிர்ந்த நீர் விட்டு கழுவவும்.
முகம் கழுவிய பிறகு தினமும் இந்த கற்றாழை துண்டுகளை கண்களின் மேல் வைத்து (கண்களை மூடி கொள்ளவும்) சுத்தமான துணியை கொண்டு கண்களை கட்டிவிடவும்.
குறைந்தது ஒரு மணி நேரம் இதை வைத்து உறங்கவும் அல்லது இரவு முழுவதும் கூட வைத்துக்கொள்ளலாம். பகலிலும் உட்கார்ந்த நிலையிலோ அல்லது படுத்துக்கொண்டோ இதை செய்யலாம்.
கண்கள் மிகவும் பொலிவுடன் இருக்கும். குளிரிச்சியையும் நீங்கள் உணரலாம்.
2. நந்தியாவட்டை பூ வைத்தியம்
நந்தியாவட்டை ஓரிதழ் அல்லது அக்கு இதழ் பூக்களை நன்கு கழுவி விட்டு பூ இதழ்களை மட்டும் எடுத்துக்கொள்ளவும். மிகச்சிறிய பூச்சிகள் இருக்கும்.மிகவும் கவனமுடன் கழுவி எடுத்துக்கொள்ளவும்.
முகம் கழுவிய பிறகு தினமும் இந்த பூ இதழ்களை கண்களின் மேல் (கண்களை மூடி கொள்ளவும்) வைத்து சுத்தமான துணியை கொண்டு கண்களை கட்டிவிடவும்.
குறைந்தது ஒரு மணி நேரம் இதை வைத்து உறங்கவும் அல்லது இரவு முழுவதும் கூட வைத்துக்கொள்ளலாம். பகலிலும் உட்கார்ந்த நிலையிலோ அல்லது படுத்துக்கொண்டோ இதை செய்யலாம்.
கண்கள் மிகவும் பொலிவுடன் இருக்கும். குளிரிச்சியையும் நீங்கள் உணரலாம்.
3. வெள்ளரிக்காய் வைத்தியம்
வெள்ளரிக்காயை சிறிய மற்றும் மெல்லிய துண்டுகளாக செய்து எடுத்துக்கொள்ளவும்
முகம் கழுவிய பிறகு தினமும் இந்த வெள்ளரி துண்டுகளை கண்களின் மேல் (கண்களை மூடி கொள்ளவும்) வைத்து சுத்தமான துணியை கொண்டு கண்களை கட்டிவிடவும்.

கண்கள் மிகவும் பொலிவுடன் இருக்கும். குளிரிச்சியையும் நீங்கள் உணரலாம்.
இவையன்றி தலைக்கு எண்ணெய் தேய்த்து வாரம் ஒருமுறையாவது குளிக்கவும். அதிக பழங்கள் மற்றும் பச்சை காய்கறி சாலட் எடுத்துக்கொள்ளவும்.
இந்த தகவலை தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிரவும்.