Tuesday, October 16, 2012

வாங்க முன்னேறலாம் : பாராட்டு எனும் மந்திரம்வாங்க முன்னேறலாம் : பாராட்டு எனும் மந்திரம்

முன்னேற்ற படிக்கட்டில் ஏற முக்கியமான ஒரு குணம் பாராட்டும் மனம். வீடோ அலுவலகமோ நீங்கள் எப்போதும் தனியாக இயங்க முடியாது. இன்னும் சிலருடன் சேர்ந்து தான் இயங்க போகிறீர்கள். வீட்டை பொறுத்த வரை நீங்கள் தான் குடும்ப தலைவர்/ தலைவி. எனவே பிறரை ஊக்குவிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு. 

யோசித்து பாருங்கள்: உங்கள் கணவன்/ மனைவியை கடைசியாய் எப்போது எதற்காக பாராட்டினீர்கள் உடனே சொல்ல முடியுமா? இன்று பல வீடுகளில் மனைவி வேலைக்கு சென்றாலும் கூட பல வீட்டு வேலைகளை சுமக்கிறார். அவரை மனம் விட்டு பாராட்டுகிறோமா?

குழந்தைகளை கொஞ்சுகிறோமே ஒழிய, உண்மையான பாராட்டு வார்த்தைகள் அடிக்கடி சொல்கிறோமா? குழந்தைகளிடம் நாம் பேசும் ஒவ்வொரு பதினான்கு முறையில் ஒரு முறை தான் அவர்களிடம் பாராட்டாகவோ, பாசிடிவாகவோ பேசுகிறோம் என சமீபத்தில் வாசித்தேன். பிற நேரங்கள் அவர்களிடம் " இப்படி நட" " அப்படி செய்யாதே" போன்ற அதிகார வாக்கியங்கள் தான் பேசுகிறோம். 

உண்மையில் அத்தகைய வாக்கியங்கள் குறைவாகவும் பாராட்டும் வாக்கியங்கள் அதிகமாகவும் பேசுவதே அவர்களுக்கு நன்மை தரும்.ஒருவரை பாராட்ட தன்னம்பிக்கை வேண்டும். தான் அப்படி இல்லையே, தன்னால் அப்படி செய்ய முடியலையே என மனதுள் குமைய கூடாது. நாம் பாராட்டும் போது அந்த தொனி வர கூடாது. அது கெடுதலே அதிகம் செய்யும்.

டேல் கார்நிஜி என்ற ஆங்கில எழுத்தாளர் மிக பிரசித்தம். அதிலும் அவரின் “ How to win Friends and influence people” பலரும் விரும்பி படித்த புத்தகங்களுள் ஒன்று. அதில் அவர் மனிதர்களுடன் நல்ல உறவு / நிறைய நண்பர்கள் வேண்டுபவர்கள் அவர்களை மனம் விட்டு பாராட்டுங்கள் என மறுபடி, மறுபடி சொல்கிறார். 

பசங்க - எனக்கு தமிழில் ரொம்ப பிடித்த படங்களுள் ஒன்று. அதில் வரும் ஒரு வசனம்: " ஒவ்வொரு மனுஷன் மனசும் ஒரு சின்ன பாராட்டுக்காக ஏங்கிட்டு இருக்கு" எவ்வளவு உண்மையான வரிகள்!! படத்தின் இறுதியில் கூட இறக்க இருக்கும் மாணவன் கைதட்டல் ஒலிகளால் நினைவு வந்து எழுவதாக காட்டியிருப்பார்கள். பார்க்கும் போதே நெகிழ்வில் அழ வைக்கும் காட்சி அது. இந்த படத்தின் அடி நாதமாக இருந்தது " பிறரை மனம் விட்டு பாராட்டுங்கள்" என்பதே. 

கவிஞர் வைரமுத்துவை ஒரு முறை திருச்சியில் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் நண்பர்கள் சிலர் சந்தித்தோம். அப்போது அங்கிருந்த வயதான ஒருவர் அவர் எழுத்துக்களை, சில வரிகளை குறிப்பிட்டு புகழ்ந்தார். வைரமுத்து மகிழ்ச்சியில் குழந்தை போல தோற்றமளித்தார். எத்தனை தேசிய விருதுகள் வாங்கிய மனிதர்! அவரையும் ஒருவர் உண்மையாக பாராட்டும் போது குழந்தை மாதிரி குதூகலம் அடைந்ததை நேரில் பார்த்தேன்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. Even God is pleased when praised!!

எனது அனுபவத்தில் சிறு வயது முதல் இன்றுவரை பல சூழல்களில் யார் யார் என்னை எப்படி பாராட்டினார்கள் என்பதை பெரும்பாலும் நினைவில் வைத்துள்ளேன். அவற்றை அடிக்கடி நினைத்து பார்ப்பது என் மேல் எனக்கே நம்பிக்கை தரும். 

இன்னொரு பக்கம், எனக்கு ஒரு விஷயம் பிடித்து விட்டால் நிச்சயம் பாராட்டி விடுவேன். உறவினர் வீட்டில் குடித்த தேநீர் நன்றாக இருந்தால் அதை தயார் செய்தது யார் என கேட்டு நேராக அவரிடமே சென்று பாராட்டினால் தான் நிம்மதி எனக்கு. போலவே அரங்கில் ஒருவர் பாடுகிறார்/ பேசுகிறார், அது பிடித்தது எனில் விழா முடிந்து செல்வதற்குள் அவரை தேடி சென்று பாராட்டிவிடுவேன். 

ஆனால் இப்படி பாராட்டுபவர்களை வாழ்வில் மிக குறைவாக தான் பார்க்கிறேன். பலரும் மற்றவர்களிடம் பாராட்டுகிறார்களே அன்றி குறிப்பிட்ட அந்த நபரிடமே பாராட்டுவதில்லை. 

எனக்கு தெரிந்த ஒரு பெண்மணிக்கு மூன்று மருமகள்கள். ஒரு மருமகளிடம் பேசும் போது மற்ற மருமகளிடம் பார்த்த நல்ல குணங்கள், அவர் வீட்டில் இருந்த போது எப்படி உபசரித்தார் என புகழ்ந்து தள்ளுவார். ஆனால் குறிப்பிட்ட அவரிடம் இவற்றிற்காக பாராட்டியிருக்க மாட்டார். இதில் என்ன பலன்? கேட்டவர் " அப்ப உங்களுக்கு அவரை தான் பிடிக்கும் போல இருக்கு" என நினைத்து கொள்வது மட்டும் தான்!! இதற்கு பதில் அவரிடமே " உனக்கு என் மேல எவ்வளவு பிரியம்; என்னை நல்லா பார்த்துக்குறியே" என சொல்லியிருந்தால் அவரும் மகிழ்ந்திருப்பார். 

உண்மையில் தன்னை முழுதாய் அறிவது தான் கடினமான செயல். நீங்கள் பாராட்டும் நபருக்கே தன் பலம் தெரியாமல் இருக்கலாம். அந்நிலையில் அவரது பலத்தை அவருக்கே நீங்கள் உணர வைக்கிறீர்கள்!! எண்ணி பாருங்கள் எத்தனை உன்னதமான செயல் இது!!

நிறைவாக பாராட்டு - சில விதிகளை பார்ப்போமா? 

1. பாராட்டு உண்மையாக இருக்க வேண்டும். செயற்கையாகவோ அடுத்து அவரிடமிருந்து வேறு உதவி எதிர் பார்த்தோ இருக்க கூடாது. உண்மையான பாராட்டிற்கும், பொய் புகழ்ச்சிக்கும் வித்தியாசம் யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். 

2. பாராட்டுவதில் தயக்கம் கூடாது. முதலாவதாக பாராட்டுபவராக இருங்கள். முதலில் வேறு யாரும் பாராட்டி விட்டாலும் நீங்களும் எப்படி உணர்ந்தீர்கள் என சொல்லி பாராட்டலாம்.  

3. பாராட்டும் போது முடிந்த வரை பொதுவாக இல்லாமல் குறிப்பிட்ட எந்த விஷயம் பிடித்தது என சொல்லி பாராட்டுவது நலம். 

4. எதற்காக பாராட்டலாம்? எதற்காகவும் பாராட்டலாம். உடைக்காக, தலை அலங்காரத்திற்காக, அவரிடம் உள்ள நல்ல பழக்கத்திற்காக ..இப்படி அந்த நேரத்தை பொறுத்து உங்கள் மனதில் அவரை பற்றி நல்ல எண்ணம் வரும் போது பாராட்டலாம். கவனம்: எதிர் பாலார் opposite sex - எனில் உடை மற்றும் அழகுக்காக பாராட்டுவது சில நேரம் ரசிக்க படாமல் போகலாம். 

5. யாரை பாராட்டலாம்? யாரையும் பாராட்டலாம். உங்களுக்கு தெரிந்தவர், தெரியாதவர், அலுவலகத்தில் உங்கள் கீழ் வேலை செய்பவர் மட்டுமல்ல உங்களுக்கு இணையான நபர், உங்கள் பாஸ் என யாரையும் சரியான காரணத்துக்காக பாராட்டலாம். (சிலர் பாஸை பாராட்டுவதை " காக்கா" பிடிப்பதற்காக செய்ய கூடும். அவ்வாறு இல்லாமல், முதல் பாயிண்டில் சொன்னது போல் பாராட்டு உண்மையாக இருக்க வேண்டும். காக்கா பிடிக்க செய்யும் முயற்சிகள் பாஸுக்கு எளிதில் தெரியும்)

6. எப்படி பாராட்டலாம்? பெரும்பாலும் நேரில் பாராட்டுவது மிக சிறந்தது. அது இயலாத போது மெயில் அல்லது போனில் பாராட்டலாம். மெயில் எனில் சிலர் அந்த பாராட்டுகளை டெலிட் செய்யாமல் நினைவாக வைத்திருக்க வாய்ப்புகள் உண்டு. 

வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஒருவர் மற்றவர் மேல் ஏதோ ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி செல்கிறோம். அந்த தாக்கம் நல்ல விதமாக இருக்கட்டுமே.. உங்களை சுற்றி உள்ளவர்களை மனம் விட்டு பாராட்டுங்கள். அவர்களும் மகிழ்வார்கள். என்றும் அந்த வரிகளை மட்டுமல்ல, உங்களையும் சேர்த்தே நினைவில் கொள்வார்கள். 

எது நல்ல நாள்?.....எது கெட்ட நாள்?

    எது நல்ல நாள்?.....எது கெட்ட நாள்?
                                                          --------------------


அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?

"சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள். ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார்.

நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.

நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட்டேன்.

அதற்கு என் சகோதரி போங்க அண்ணா, நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான், இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.

நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்று கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது? அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டேன். சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர். இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.

நான் மேலும் கூறினேன். அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள். க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.

மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம். பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம்."

"A GOOD ONE FOR SUPERSTITIOUS PEOPLE" என்ற தலைப்பில் இன்று எனக்கு வந்த மின் அஞசல் செய்தி இது. அதற்கான இணைப்பு:

அதோடு மேலும் சில செய்திகளும் சொல்லப்பட்டிருந்தன.

“செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம், கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. (நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்).

இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.

வாரத்தில் செவ்வாய், சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது (10 நாட்கள்). 

மாதத்தின் அஷ்டமி, நவமி நன்மைக்கு உகந்தது அல்ல (4 நாட்கள்).

பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை (2 நாட்கள்).

ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம், குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட...எப்படி முன்னேற...?

என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்?"
 
அஷ்டமி, நவமி பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதுபற்றி அதிகமாகத் தெரியாது. மேற்கண்ட மின் அஞ்சல் செய்தியைப் படிதுவிட்டு இரண்டு பெண்களிடம் "அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?" என்று கேட்டேன். 'கெட்ட நாட்கள் என சட்டென பதில் சொன்னார்கள். அப்பொழுதுதான் புரிந்தது எல்லா சகோதரிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று. மேற்கண்ட செய்தியை பிரதி எடுத்துக் கொடுத்தேன். முழுமையாகப் படித்தார்கள். பிறகு மீண்டும் கேட்டேன் "அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?" என்று. அவர்களால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை. மௌனமானார்கள். ஆனால் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது மட்டும் தெரிந்தது.

பிறரை சிந்திக்கத் தூண்டும் நல்லதொரு செய்தியைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி! நீங்களும் பிறருக்குப் பகிரலாமே!

Thursday, July 19, 2012

அனைத்து- நாற்பெத்தெட்டு வகையான பித்தம் எளிதில் விலக

அனைத்து-  நாற்பெத்தெட்டு  வகையான  பித்தம் எளிதில் விலக
சீரகத்தை  பொடி  செய்து  எலுமிச்சை  சாற்றினை சீரக பொடி மூழ்கும்  அளவிற்கு பிழியவும்.
பிறகு வெயிலில் உலர்த்தவும். இவ்வாறு ஏழு முறை  எலுமிச்சை  சாற்றினை சீரக பொடி மூழ்கும்  அளவிற்கு பிழிந்து வெயிலில் உலர்த்தவும்.
 இந்த பொடியை காலை மற்றும் மாலை ஒரு டி ஸ்பூன் அளவிற்கு உண்டு வந்தால் குறைந்த பட்சம் 21 நாட்களாவது உன்ன வேண்டும். நல்ல பலனை உணர.
 
நமது உடலில் பித்தத்தினை கட்டு பாட்டிற்குள் வைத்திருக்கும். அனைத்து பித்த வியாதிகளையும் உடலை விட்டு விலகிவிடும்.

Sunday, May 20, 2012

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நிறுத்தவும் - ஆபத்து!!!"மறந்தது வேண்டா யாக்கைக்கு அற்றது
போற்றி உணின் - வள்ளுவம் 
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை எரி முன்னர் 
வைத்தர் போல் கெடும்  - வள்ளுவம்'


அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நிறுத்தவும் - ஆபத்து!!! 
பல பல பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளின் மூலமும் நாம் அனைவரும் அறிந்தது அதிகாலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்துவது மிகவும் சிறந்தது என்று???பொய் இப்படி இருக்க உண்மை யாதெனில் வெறும் வயிற்றில் கட்டாயம் யாரும் சிறிதளவு கூட தண்ணீர் அருந்த கூடாது???

இப்போது சற்று அறிவியல் ரீதியான விளக்கத்தினை பார்ப்போம்.     
நாம் இரவில் உறங்கும் போது வளர்சிதை மாற்றம் நடைபெறுவதை அறிவோம். இந்த வளர் சிதை மாற்றத்தின் போது நமது மண்ணீரல், கல்லீரலில்   மற்றும் வயிற்றில் பல விதமான வேதி பொருட்கள் உருவாகிறது.
   
நீன நீர் 
நீன நீரானது ஒரு வகை அமிலமே . இது நமது உடலில் உள்ள ஒரு  மசகுப் பொருள், உராய்வு காப்புப் பொருள், மசகு (எண்ணெய்).
ஜீவ நீர்
ஹைட்ரோ குளோரிக் அமிலமும், நைட்ரிக் அமிலம்  - நொதித்தளுக்கு பயன்படும் வேதி பொருள் - இந்த இரண்டு அமிலமும் கலந்த கலவைக்கு பெயர் ஜீவ நீர். இந்த ஜீவ நீரானது நமது உடலில் நீர்ம நிலையில் இருக்கும் ஒரு நெருப்பு. இதை தான் பெரியோர்கள் ஜடராக்னி என்று அழைப்பர்.   
இந்த  இரண்டு  நீர் மட்டுமே ஜீரணத்திற்கு  அதாரம். ஜீரணத்தினால் மட்டுமே நாம் உயிர் வாழ்கிறோம். இந்த இரண்டு நீரினால் மட்டுமே உணவானது நொதித்தளுக்கு உட்பட்டு உணவு செரிகப்படுகிறது. ஜீவ நீர் என்ற ஜடராக்கினி[இது ஒரு நீர்ம நிலையில் உள்ள ஒரு தீ ] உணவை எரித்து சாம்பலை மலமாகவும், நீராவியை சிறு நீராகவும் வெளி தள்ளுகிறது. இந்த இரு வேலைக்கும் நின நீரானது உதவுகிறது.   
[குறிப்பு: நமது வயிற்றில் மிச்சியோ , கிரைண்டரோ உணவை அரைப்பது இல்லை]      

மற்றும் பல விதமான சுரபி நீர்களும் உற்பத்தியாகிறது. இவை அனைத்தும் உடலிற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. மேலும் இவை அனைத்தும் சேர்ந்து வேதிவினை புரிய தயாராகி  இருக்கும் நிலையில் நாம் அருந்தும் நீரானது வேதித் தன்மையை குறைத்து நச்சு பொருளாக மாறுகிறது. [ இதன் விளைவாக நம் உடலில் நாற்பத்தி இரண்டு வகையான வெப்ப நோய்கள் ஏற்படுகிறது. மேலும் பித்த வியாதிகளான நீரழிவு மற்றும் மேக நோய்(மோக நோய்) ஏற்படுகிறது. 

இந்த ஒரு அறியா பழக்கத்தினால் பல பேர் நோயில் சிக்குண்டு கொள்கிறார்கள். 
காலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்துவதால் விரைவில் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வெளிப்படும்.   

 நாம் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதனால்  ஏற்படும் விளைவுகளை தெளிவாக மேலும் விளக்கம் அளிக்கிறோம். காலங் காலமாக  நாம் பழகிவரும் இத்தவறான இச்செயலை நாம்  நிறுத்தவேண்டும். இது வியாபாராம் நோக்கில் இச்செய்தியை பரவி இருக்கிறாக்கள்.ஏனென்றால் நாம் உறங்கும் நேரத்தில்  நாம்  உறுப்புக்கள் சாந்தமாக இருப்பதால் மொத்த உடலிலுமே வெப்ப சக்தி குறைந்துகாணப்படும். இப்படி இருக்க நமது  உடலில்  முன்று  முக்கிய உறுப்புகளான இருதயம், சிறு குடல், கல்லீரல் வெப் சக்தியால் மட்டுமே இயங்க கூடியது.  காலையில் இந்த முன்று உறுப்புகளிலும் வெப்ப சக்தி மிகவும் குறைந்து காணப்படும். மேலும் தண்ணீர் அருந்துவதில் மொத்த உறுப்புகளும் பாதிப்பு அடைகிறது.                                                                                                                             
இப்படி காலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்துவதால் அனைத்து அமிலங்களும் நீர்த்து போய் உணவு பாதையில்  அசிடிட்டி ஏற்படுவதற்கு ஏதுவாகிறது. மேலும் சிறு நீராக நோய்களை உருவாகுகிறது.

தண்ணீரை மெதுவாக  அருந்தவும் 
தண்ணீர் அருந்தும் போது வேகமாக அருந்தாதிர்கள். வேகமாக அருந்துவதனால் நாம் இரைப்பைகள்   பாதிப்பு அடைகிறது. நம் இரைப்பைகள்   மற்ற  உறுப்புக்கள்  விட மிகவும் மென்மையானது. நமது இரைப்பைக்கும் நீன நீருக்கும் [பல விதமான அமிலங்கள்] இடையில் முயுகஸ் என்ற ஜெல் தன்மையால்] ஒரு பாதுகாப்பு மண்டலமாக உள்ளது. நீரை வேகமாக அருந்துவதால் இந்த மண்டலம் பாதிப்படைந்து நம் இரைபைகள்  துவாரம்  அடைகிறது  அதனால் அல்சர்   ஏற்படுகிறது. 

தாகம் எடுத்தால்  மட்டுமே நீர் அருந்த வேண்டும்.

சாப்பாட்டிற்கு அரை மணி நேரம் முன்பும், உண்ணும் போதும், உண்ட அரை மணி நேரம் மட்டும் நீர் அதிகம் அருந்த கூடாது. வேண்டும்  என்றால்  ஓரிரு வாய் நீர் அருந்தலாம்.     
 
காலையில் வெறும் வயிற்றில் டி, பால், பழ ரசம், சூப், கசாயம், மூலிகை டி, நீராகாரம், இளநீர் வேண்டுமென்றால்  அருந்தலாம். அல்லது நேரிடையாக உணவு உண்ண தொடங்கலாம்.

     


Tuesday, April 3, 2012

நமக்கு ஏற்பட்ட விதியின் வரலாறு

நமக்கு ஏற்பட்ட விதியின் வரலாறு 

காலம் என்னும் தத்துவம் தோன்றுவதக்கு முன்பே நாம் எப்படி இருந்தோம் என்பதைச் சற்றுச் சிந்திக்க வேண்டும். கடிகாரம் தோன்றுவதற்கு முன்பு நம் முன்னோர்கள் சூரியனின் நிலையை கொண்டு காலத்தைக் கணக்கிட்டு அறிந்து வந்தார்கள். இந்தச் சூரியனும் தோன்றுவதற்கு முன்பு எங்கும் இருள் சூழ்ந்திருக்க வேண்டும் அல்லவா? அத்தகைய கொடிய இருளில், நாம் அனைவரும் அறியாமை வயப்பட்டுக் கிடந்திருக்கிறோம். அந்நிலையில் இறைவன் நம்மீது இறக்கம் கொண்டு, நமக்கு உருவமற்ற ஒரு நுண்ணுடலைத் தந்தான். அந்த நுண்ணுடல் எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரியானதாக வழங்கப்பட்டது. அதனாலேயே, 
"பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்"
என்று வள்ளுவர் கூறுகிறார்.

அந்த நுண்ணுடலைப் பெற்றதும், நமது அறியாமை சிறிதளவு நீங்கியது. அப்போது, நமது விருப்பு வெறுப்புக்கள் வெளிப்படலாயின. நமது விருப்பு வெறுப்புகளுக்கு இசைந்த அளவில், ஒவ்வொரு உயிர்க்கும் வெவ்வேறு விதமான பரு உடல்களை இறைவன் வழங்குகினான். முதல் பரு உடலை பெற்றதே நமக்கு ஏற்பட்ட முதல் பிறப்பு ஆகும்.

இந்த முதல் பருஉடலில் இருந்து நாம் செய்த நல்வினைகளும்  தீவினைகளும், அடுத்த பிறப்பில் நமக்கு இன்பங்களையும், துன்பங்களையும் தந்தன. இந்த வினைகளை நமது அறிவின் நிலைக்கு ஏற்ப நமது விருப்பப்படியே  நாம் செய்கிறோம். நமது விருப்பபடி நாம் செய்யும் செயல்களில் யாரும் தலையிடுவதை நாம் விரும்புவதில்லை. எனவே, ஒவ்வொரு பிறப்பிலும் நாம் வினைகளைச் செய்து குவிக்கிறோம். அந்த வினைகுவியளைச் "சஞ்சிதம்" என்று கூறுவார்.

அடுத்து அடுத்து வரும் பிறப்புகளில் இறைவன் அந்த வினக் குவியலில் இருந்து ஒரு பகுதியை எடுத்து நாம் திருந்தும் அளவுக்கு நமக்குப் பயனாக ஓட்டுகிறான். இந்த வினைப்பயனே "ஊழ்" அல்லது "விதி" எனப்படுகிறது. இதுவே நமக்கு ஏற்பட்ட விதியின் வரலாறு ஆகும்.

வினைபயனை இறைவன் ஊட்டுவதற்கு காரணம்: 

காத்திருங்கள் அடுத்த பதிவிற்காக   

நவகிரகங்கங்களைப் பற்றிச் சில

 "சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே" - திருஞானசம்பந்தர்
தோற்றுவாய்
 உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் துன்பத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். துன்பமோ, துயரமோ, தொல்லையோ சிறிதும் இல்லாதவர் எவரும் இல்லை. துன்பங்கள் நம்மை ஏன் தொடர்கின்றன? துன்பங்கள் நமக்கு எப்படி ஏற்படுகின்றன? என்பனவற்றைத் துன்புறுபவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆனால் துன்பத்தை தாங்க இயலாமல், அதனை போக்குவதற்கான வழி முறைகளைத் தேடி அலைகிறார்கள். 
சோதிட நம்பிக்கை
அவ்வாறு தேடி அலைபவர்களில் பெரும்பாலோர் சோதிட நிபுணர்களைக் கண்டு, தமக்கு எப்போது இந்தத் துயர் நீங்கும் என்னும் கேள்வியை எழுப்பிப் பெரும் பொருள் கொடுத்துச் சோதிடரின் விடைக்காக காத்திருக்கிறார்கள். பரிகாரம் என்னும் பெயரால் பகுத்தறிவிற்கு ஒவ்வாதன பலவற்றைச் செய்து, பொருளையும், காலத்தையும் வீண் விரயம் செய்கிறார்கள். ச்ப்திடர் கூறும் பரிகாரம் நமது துயரை நீக்குமா என்பதைக் குறித்துச் சிறிதேனும் சிந்திப்பதில்லை. சோதிடர்கள் எப்படி பலன் கூறுகிறார்கள்? நான் பிறந்தபோது நவகிரகங்கள் நிற்கும் இடத்தைப் பார்த்து சோதிட நூல்களில் கூறப்பட்டுள்ள விதிகளை அனுசரித்து சோதிடர்கள் பலன் சொல்கிறார்கள். அவற்றுள் சில பலிதம் ஆகும், பல பலிதம் ஆகாமல் போகும். சோதிடர்களின் வாக்குகளில் இருக்கும் நம்பிக்கை, இறைவனிடத்திலும், இறையடியார்களின் அருள்வாக்குகளிலும் நம்மில் பலருக்கு இல்லை என்பது  சில சமயம் உண்மை. எனவே தான், நம்மில் பெரும்பாலோர்க்குச் சோதிடர்கள் கூறும் பரிகாரங்களை செய்து முடித்த பின்னும் துயர்கள் நீங்க பெறாமல் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பலன் சொல்லும் சொதிடர்களில், இறைப்பட்ட்று உடையவர்கள் கூறும் பலன்களே பலிதமாகின்றன என்பது தான் உண்மை.    

நவகிரகங்கங்களைப் பற்றிச் சில  
நவகிரகங்கள் நமது வாழ்வை எந்த அளவு பாதிக்கின்றன என்பதை, நாம் ஓரளவு புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், நமது துயரைத் துடைப்பதற்கு எந்த வழியை பின்பற்றினால், அது பயனுள்ளதாக இருக்கும் என்பதில் நமக்கத் தெளிவு ஏற்படும்.

நவகிரகங்கள் இறைவனின் ஏவலர்கள், இறைவன் வகுத்துள்ள சட்டப்படி பிராரத்துவம் எனப்படும் வினை பயன் ஆகிய விதியை, நாம் அனுபவிக்கும்படி செய்வார்கள். இறைவனால் வகுக்கப்பட்ட சட்டங்களில் விதிகளில், ஏதேனும் ஒன்றை கூட்டியோ குறித்தோ மாற்றியோ பலனை கொடுக்க நவகிரகன்களால் இயலாது என்பதை நாம் தெயவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அரசு வகுத்துள்ள சட்ட திட்டங்களுக்கு ஏற்பவே அரசு ஊழியர்கள் எதையும் செய்ய முடியும் அல்லவா? அதைபலவே நவகிரகங்களும் தமது விருப்பப்படி எந்த வினைப்பயனையும் யாருக்கும், நியதிக்கு மாறாகச் செய்ய முடியாது.

சோதிட நூல்கள், நவகிரகங்கள் நமது சாதகத்தில் நிற்கும் நிலைக்கு ஏற்ப, நமக்குள்ள விதி எப்படிபட்டது என்பதை கூறமுடியுமே அன்றி, நமது உழப் போக்குவதற்கான வழிவகைகளைக் கூறுவதில்லை. நவகிரக சாந்திகள் எனக் கூறப்படுவன அனைத்தும் நமக்கு ஏற்ப்பட்ட ஊழ்வினைத் தொல்லைகளிளிரிந்து நம்மக் காக்கமாட்டா என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அப்படியானால்,
 ஊழ்வினை துயரை நீக்குவது எப்படி?
காத்திருங்கள் அடுத்த பதிவிற்காக 

சாகாக் கல்வி புத்தகம் பற்றிய அறிமுகம்

உண்மையான ஆன்மீக ரகசியம் நான் யார், ஆன்மா என்றால் என்ன, ஞானம் என்றால் என்ன, மரணமில்ல வாழ்வு, சாகாக் கலை பற்றிய விளக்கங்களை பல ஆயிரம் புத்தகத்தை படித்துப் பார்த்தேன். எதோ பல தகவல்கள் கிடைத்தது ஆனால் முழுமையாக கிடைக்கவில்லை.  தேடி தேடி கலைத்து போனேன். பல பல சித்தர்கள் பரிபாஷையில் கூறியுள்ளார்கள். அதுவும் புரிவதில்லை என்னைப்போல் உள்ள எளிய மனிதருக்கு.
சமீப காலத்தில் அட்சயபாத்திர வாசகர் ஒருவர் கீழ்கண்ட இணைய தள முகவரியை வெளியிட்டு படிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கிணங்க தற்போது தான் படித்து முடித்தேன். மிகவும் அருமையான புத்தகம் ஆன்ம தாகம் கொண்ட அனைவருக்குமே. 
   
ஆன்மிகம் பற்றிய படிப்பிற்கு இந்த இணைய தளத்தில் கொடுக்கப்பட்ட புத்தகங்களே போதுமானது. இங்கு குருவும் கிடைத்து விடுகிறார் விடையும் கிடைத்து விடுகிறது.

கீழ் கண்ட இணைப்பில் அழுத்தி பயன்பெறவும் அன்பர்களே சாகாக் கல்வி

Wednesday, March 28, 2012

சாகாக்கலை - உண்மையா?


சாகாக்கலை என்ற தமிழ் சொல்லை பழம் பெரும் சித்தர்களில் ஒருவரான "திருமூல நாதர்" தனது திருமந்திரம் என்னும் "தமிழ் வேதத்தில்" எடுத்தாண்டுள்ளார்கள். அதற்கான அறிவியல் கோட்பாடுகளுடன்  சாகாக்கலையை தனது ஓக சாதனை மூலம் இவ்வுலக மக்களுக்கு  "தெள்ளிய தமிழ்" மூலம் அறிவித்தார்கள். திருமூலரை தனது ஆன்மீக குருவாக போற்றி அவரின் கோட்பாடுகளை தெளிவாக புரிந்து கொண்ட "வள்ளல்" பெருமான் மேலும் இக்கலையை தமிழில்  சன்மார்க்கம் என்ற பெயரில் வழங்கினார்கள்.இக்கலையின் உன்னத  தன்மையை  தானே செய்து காட்டி மெய்பித்தார்கள். இன்றும் சல அறிவு குறைவுடையோர்  வள்ளளாரை எரித்து கொன்று விட்டார்கள் என்று கூறிவருகின்றனர். அவர்களை கண்டு வருத்தபட மட்டுமே முடிகிறது. சாகாக்கலை உண்மையா என்று இன்றைய விஞ்ஞான முறையில் விளக்கம் காண்போம்.

 ஒளி கதிர்களை குவியலாக ஒரு புள்ளியில் செலுத்தினால் அந்த இடம் தீ பற்றிக் கொள்கிறது. ஓசை அதிர்வுகளையும் இவ்வாறு செலுத்தினால் மலைகள் கூட தூள்களாக  மாறி விடுவதை நாம் காண்கிறோம். அதே போல்  காந்த அலைகளை குவிக்கும் போதும்  மின் ஆற்றல் உண்டாவதை அறிவியல்  நிகழத்தி காட்டியுள்ளது. மனோ சக்தியை மின் காந்த அலைகளாக  மாற்றும் திறன் பெற்றவர்களே சித்தர்கள் என்கின்றோம். இந்த காந்த சக்தியை வள்ளல் பெருமான் "கதிர் நலம்" என்கின்றார்கள். சித்தர்கள் ஓர் உயிரை கருணையோடு பார்த்தால் நன்மையும், கோபமாக பார்த்தால் தீமையும் ஏற்படுவதை நாம் கண்டுள்ளோம். உதாரணமாக கொங்கண சித்தர் கொக்கை எறித்த  உண்மையை அறிவோம். அவர் தன் கண்களில் அதிகமான "கதிர் நலம்"  கொண்டிருந்தார் என்பதே உண்மை. இதே போன்று தான் வள்ளல் பெருமான் தன் கண்களிலிருந்து வெளிபடும் "கதிர் நலம்"  யாருக்காவது துன்பத்தை ஏற்படுத்தி விடும் என்பதற்காக தன் முகத்தை கண்கள் வரை மூடிக்கொண்டிருந்தார்கள். இதை வள்ளல் பெருமான் "கதிர் நலம்" இரு கண்களில் காட்டு என்று அருட்பாவில் கூறுகின்றார்கள். சாகாக்கல்வி மூலம் உடலை கற்பூரம் போல்  மாற்ற முடியும் என்றும், தடையமே இல்லாமல் "மறைவு" செய்ய முடியும் என்பதையும் மெய்பித்தார்கள். அணுக்களை பிளக்கும் போது வெடிப்பும், தீப்பிழம்பும் உண்டாகும் என்று அறிவோம். மேலும் கதிர் வீச்சுகளும்( X-கதிர்கள், காமா கதிர்கள், ஆல்பா,  பீட்டா கதிர்கள், காஸ்மிக், டெல்டா கதிர்கள்) வெளிப்படும். இதே போல் ஓக மார்க்கத்தில் இவ்வாறு செய்யமுடியும். ஏனென்றால் அண்டத்தில் ஏற்படுவதை பிண்டத்திலும் ஏற்படுத்தலாம். இந்த கதிர்களை ஒருமுகமாக அழுத்தம் கொடுத்தால் அணுக்கள் ஆவியாகி விடும். எப்படியென்றால் நீராவி அணு (ஹைட்ரஜன்) மற்ற இதே நான்கு அணுக்களை சேர்த்து அழுத்தினால் அது எரியும் வாயு எனப்படும் ஹீலியம் ஆக மாறிவிடும். இதை மீண்டும் அழுத்தினால் தானே எரியும் "மீத்தேன்"  எனப்படும் எரியும் அணுக்காக மாறி  விடும். இதை போல் நம் உடலில் 96 பங்கு நீர் தான் உள்ளது(நீராவி அணுக்கள்) இதை சன்மார்க்கம் என்னும் ஓக மார்கத்தில் அழுத்தினால் "மீத்தேன்" பொன்ற தானே எரியும் அணுக்களாக இந்த உடல் அணுக்கள் மாறி விடும்.இது விஞ்ஞான, மெய்ஞான உண்மையாகும். இந்த மாதிரி  "மறைவு" செய்து கொண்டவர் தான் "வள்ளல் பெருமான்". இவரை யாரும் கொல்ல வில்லை. இது சத்தியமான உண்மை. இதே போன்று மாணிக்கவாசகர், ஞான சம்பந்தர், ஒளவையார், திருவள்ளுவர், நந்தனார், அருணகிரிநாதர், சுந்தரர், கரைக்கால அம்மையார், பட்டினத்தார் .....) இன்னும் பல சித்தர்கள் இந்த நிலையில் தன்னை இயற்கையோடு இனைத்துக்  கொண்டு தகுதி பொற்ற தன் மக்கள் முன்  "இறை காட்சி" தருகிறார்கள்.சாகாக்கலையின் முடிவு இது தான். இதை பல சித்த நூல்களில்  காணலாம். சன்மார்க்கம் ஒன்றே உயிர், உடல் துன்பங்களை களைந்து இன்பம் அளிக்கும் என்று வள்ளல் பெருமான் சித்தர்கள் கூறியதை வகுத்தும், தொகுத்தும்  எளிய முறையில் தந்தார்கள். சன்மார்க்கம் ஒன்றே நன்மார்க்கம் மற்றெல்லாம்  துன்மார்க்கம் என்றார்கள். வாழ்வியல் தருமத்திற்காக ஒவ்வொருவரும் 60 வயதிற்குள் கடமையாற்றி விட்டு சன்மார்க்கம் என்னும் தவ வழியில் செல்ல உறுதி எடுக்க வேண்டும். இல்லறம், துறவறம் இரண்டிலும் சன்மார்க்கமே அமைதியையும் சாந்தத்தையும் தரும்.முப்படைந்த காலத்திலும் இளமை காலத்திலும் மன அமைதி பெற சனமார்க்கத்தை தவிர வேறு வழியில்லை.
காலை, மாலை வள்ளளாரின் சாகாக்கலை பயின்று  அதற்கேற்ற உணவு பழக்கங்கள், சிந்தனை இவற்றை முறையாக செயல்படுத்தி அமைதியும், வளமும் பெற்று வாழ்வோம். வள்ளளார் இறை கலப்பு செய்த "தை திங்கள்  பூசத் திருநாளை" உலக மக்கள் அனைவரும் சன்மார்க்க நாளாக கொண்டாட வேண்டி அன்புடன் வேண்டுகிறோம்.

மரணமிலாப் பெருவாழ்வு பற்றி பெருமானாரின் சாற்றுக் கவிகள்.

"கற்றவரும் கல்லாடும் அழிந்திடக் காண் கின்றீர்
கலங்க வரும் மரணமும் சம்மதமோ?"


"இற்றினைத் தடுத்திடலாம் என்னோடு சேர்ந்திருமின்
என்மார்க்கம் இறபொழிக்கும்  சனமார்க்கந்தானே"

"மரணமிலா பெரு வாழ்வில்  வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன்  பொய்புகலேன் சத்தியஞ் சொல்கிறேன்
இறந்தாரை எடுத்திடும் போதரற்றுகின்றீர் உலகீர்
 இறவாத பெரும்வரம் நீர் ஏன் அடைய மாட்டீர்?"


"சிறந்திடும் சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம்
சேராமல் தவிர்த்திடும் காண்."


"சதுமறை ஆகம  சாத்திரம் எல்லாம்
சந்தை படிப்பு நம் சொந்த படிப்போ
விது நெறி சுத்த சன்மார்க்கத்தில்
சாகா  வித்தையை கற்றனள் தோழி""சன்மார்க்கம் பற்ற சாகா வரம் பெறல் நிச்சியம்
கற்றேன்சிற் றம்பலக் கல்வியை கற்றி கருணைநெறி
உற்றேன்எக் காலமும் சாகாமல்ஓங்கும் ஒளிவடிவம்
பெற்றேன் பெற்றேன் உலகில் பிறநிலையைப் பற்றேன்
ஆக்கமும் அருளும் அறிவும்மெய் அன்பும் அழிவுறா
                                                          உடம்பும் மெய்இன்ப
ஊக்கமும் எனையே உற்றன உலகீர் உண்மை இவ்வாசகம் உணர்மின்""அருட்ஜோதி யானேன் என்று அறையப்ப முரசு
அருளாட்சி பெற்றேன்  என்று அறையப்ப முரசு
மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்ப முரசு
மரணந் தவிர்ந்தேன் என்று அறையப்ப முரசு"


உய்வு


ஓர் உயிரின் எழுச்சி என்பது பிறப்பு, உயிரின் வீழ்ச்சி என்பது மரணம். பிறப்பு, வாழ்வு, அழிவு  என்பது இயற்கை நியதியாக இருக்கிறது. இந்த இயற்கை உண்மைகளை கண்டு மனிதன் அஞ்சுகிறான். மரணம் இயற்கையாகவும், செயற்கையாகவும் நடைபெறுகிறது. உடலில் அகமும்,புறமும் இணைந்து உயிர் இயக்கம் நடைபெறுகிறது. மூச்சு ஓட்டம்,  இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம்   ஒளி, ஓசைகளின் ஓட்டங்கள் மொத்தமாக  கூடி இந்த உடலை நடத்துகிறது. உண்மையில் உயிர் ஓட்டந்தான் மற்ற இயக்கங்களை நடத்துகின்றது. இதற்கு புலன்கள் செயல்படுகின்றன அதாவது இதயம், ஈரல்கள், இரத்த குழாய்கள், மூத்திர கருவிகள், மலக்கருவிகள் போன்ற கூட்டுறவு கருவிகள் துணை செய்கின்றன. இவற்றில் ஒன்றின் ஓட்டம் நின்றுவிட்டாலும், பழுதானாலும் மற்ற இயக்கங்களும் பாதித்து முடிவில் உயிர் இயக்கத்தை நிறுத்தி விடுவதாக இருக்கிறது.உயிர் ஓட்ட கருவிகளை தூண்டவும், ஊக்கப் படுத்தவும், நிர்வாகியாகவும் மூளை செயல்படுகிறது. இந்த மூளையின் இடது பாகத்தில் மனம் என்னும் மாயக் கருவி இருக்கிறது. இந்த மனத்திற்கும், உயிருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இவை இரண்டும் மின் காந்த அலைகளால் தொடர்பு கொண்டுள்ளன. இந்த மின் காந்த ஏற்ற, இறக்கத்தின் மூலமே உடலின்  அனைத்து உறுப்புகளும் இயக்கப்படுகின்றன. இந்த காந்த இயக்கமே உயிரின் இயக்க ஆற்றல் என்கின்றோம். உயிர் செயல்பாடுகளுக்கு கரு அணுக்கள் எனப்படும் விந்தணுக்களிலிருந்தே இந்த காந்த சக்தி பெறப்படுகிறது. உடல், மன, உயிர் இயக்கத்திற்கு இந்த விந்தணுக்களே சக்தி பீடமாக இருக்கின்றன. உடலின் காந்த ஆற்றல் செலவை ஈடு செய்ய முடியாமல் போனால் முடிவில் மரணம் என்னும் இயக்கமற்ற நிலை அடையும். நல்ல முதுமை பெற்ற மனிதனின் உடல் உறுப்புகளில் எந்த நோயும், பாதிப்பும் இல்லை என்றாலும் கரு அணுக்களில் தயாரிக்கப்படும் காந்த ஆற்றல் தன் சக்தியை இழக்கும் போது மனம் செயலற்று போகும். அதனை தொடர்ந்து காற்று மண்டலம், நீர் மண்டலம், ஒளி,ஒசை மண்டலம் என வரிசையாய் செயலிழப்பு ஏற்பட்டு மரணம் என்ற நிலை ஏற்படும். இதுவே இயற்கை மரணம் எனப்படும். இப்படி இல்லாமல் கை, கால்கள் விழுவது, இதயம் நின்று நின்று துடிப்பது, மூன்று  திணறுவது, வாய் குளறுவது,  நீர், மலம் உணர்வற்று  தானே கழிவது போன்ற வேதனை நடக்கும் போது மனம் செயல்பட்டு கொண்டிருப்பது துர்மரணமாகும் (அ) நரக வேதனையாகும். சொர்க்கமும், நரகமும் வானத்தில் இல்லை. அவனவன் நினைவிலே இருக்கிறது.( சொர்க்கம் = சுவர்(தங்கம்) அகம் நல்லமனம். நரகம்= நர(கெட்ட) அகம் தீதான மனம்). அதாவது மரணம் என்பது மனதிலிருந்து துவங்கினால்  இயற்கை மரணம் என்றும், கருவி கரணங்களிலிருந்து துவங்கினால் துர்மரணம் ஆகும். பொய், களவு, சூது, கட்குடி, காமம், நன்றி கொல்வது, உயிர் கொலை இல்லாமல் சத்தியம், தருமம், ஒழுக்கம், பொறுமை,  இனிய நடத்தை காத்து வாழ்வின் மரணம் அமைதியாகவும், தருமத்திற்கும்,  ஒழுக்கதிற்கும் கேடாக வாழ்ந்தவன் மரணம் அமைதியற்று நிகழ்வதும் இயற்கையின் சட்டமாகும். என்ன பாவம் செய்தேனோ, சாவு  வரவில்லையே என்று புலம்புகிறவர்களை காண்கின்றோம். எந்த பாவம் செய்திருந்தாலும் செய்நன்றி கொன்ற பாவத்திற்கு ஆளாக கூடாது. நல்ல உடல் வசதிகள், நல்ல மனமுள்ள நல்லவர்கள், நல்ல முன்னோர்கள் கிடைத்தும் நன்றி இல்லாமல் நடந்து கொள்வதன் மூலம் அந்த உயிருக்கு உடலுக்கு கிடைக்க வேண்டிய உய்வு எனப்படும்  "இயற்கை பரிசளிப்பு" கிடைக்காமல் போய் விடும். ஒரு மனிதனுக்கு இறுதி நாளில் கணக்கு தீர்க்கப்படும் என்பது இது தான் ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்பதை மரணமே முடிவு செய்யும்.

"என் நன்றி கொன்றாற்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"


என் வள்ளுவர் எழுதியதன் பொருள் இது தான் வாழ்கையில் கரை ஏறுவது மட்டுமல்ல மரணத்தில் கூட நல்லபடியாகக் கரை ஏற வேண்டும் இது தான் "உய்வு"வைதோரைக் கூட வையாதே!
வெய்ய வினைகள் செய்யாதே!
கஞ்சாப் புகைபிடி யாதே!
கட்குடித்து மயங்கி திரியாதே!
அஞ்ச வுயிர் மடியாதே!
அஞ்ஞான நூல் படியாதே!
கள்ள வேடம் புனையாதே!
கொள்ளை கொள்ள நினையாதே!
நட்புக்கு நீ கோள் முனையாதே!


                                             கடுவெளி சித்தர்.


"ஆவியோடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவியென்று நாமம் படையாதே"

                                                 பட்டினத்தார் 

புற்று நோய்உலக மக்கள் அஞ்சி நடுங்கும் நோய்களில் ஒன்று தான் புற்று நோய். இதற்கு காரணம் தெரிந்து கொள்ள முடியாமல் பகுமுறை மருந்துவமும்(ஆங்கில மருத்துவம்) தனது தோல்வியை ஒத்துக் கொண்டுள்ளது. நோய்களுக்கு கிருமிகளே காரணம் என்ற தனது புளுகு மூட்டையை தானே "இல்லை" என்று புற்று நோய்யிடம் மண்டியிடுகிறது.
1,47,117 வருடங்களுக்கு முன் திருஆவினன்குடியில் வாழ்ந்த  குறுமுனி என்னும் அகத்தியர் தனது "பரிபூரணம்" என்னும் நூலில் புற்று நோய்க்கான காரணத்தை நன்கு  விளக்கியுள்ளார்கள். அவற்றை சுருக்கமாக

"கனத்த வாயுவதனால் குன்மம் ஆச்சு
கரைகடந்த போகத்தால் மேக மாச்சு
கண்துஞ்சும் லாகிரியால் பித்த மாச்சு
கண்ட இது மூன்றுமே கதித்து புற்றாச்சே"


                                                     என்கிறார்.

அதிக வாயு பொருட்களை உண்பதால் குன்மம் என்னும் வயிற்று புண்கள், வரைமுறை இல்லா உடலுறவு மூலம் மேகம் ( காற்று + வெப்பம் = அமிலம்) அதிகரித்து உடலில் புற்று நோயை உணடாக்குகிறது என்றும் ,இலாகிரி என்னும் போதை மற்றும் மது பானங்களால் பித்தம் அதிகரித்து புற்று நோயை உண்டாக்குகிறது என்கிறார்.  சித்த மருத்துவத்தில் புற்று நோய் 4 வகையாக பகுத்து கூறப்படுகிறது. அவையன இலிங்கபுற்று, யோனிபுற்று, பரவல் புற்று, அழுகல் புற்று என்பன. இலிங்கபுற்று- வெளி நோக்கி வளருவது, யோனி புற்று- உள் நோக்கி வளருவது, அழுகல் புற்று- அழுகல் உண்டாகி நீர் கசிவது (குஷ்டம்). மேலும் இந்த தன்மை ஏற்பட்டு எந்த உறுப்பையோ, தாதுக்களையோ  பாதிக்கும் என்றால் அதன் பெயரால் அழைக்கபடுகிறது( கன்ன புற்று, நாக்கு புற்று, ஆண்குறி புற்று...) சித்த மருத்துவத்தில் மொத்தம் 143  இனங்கள் கண்டறியப்பட்டு, அதற்கான விளக்கம், மருந்துகள், உணவுமுறை விளக்கபடுகின்றன. இவற்றை விரிவாக காண்போம்.

(1).  வாயு பொருட்களை உண்பதன் மூலம் வயிற்றில் வாயு உண்டாகி அது குடல், வயிறு, உள்ளுறுப்புகள் இவற்றில் ஒரு வகையான உராய்வை ஏற்படுத்தி புண்களை ஏற்படுத்துகின்றன. இதுவே குன்மம் எனப்படும் .இவை நீண்ட காலம் இருக்குமாயின் புற்று நோயாக மாறும். இவைதான் கல்லீரல், இரைப்பை, குடல் புற்றுகள்.

(2) அதிக உடலுறவின் மூலம் ஆண்கள், பெண்களுக்கு  பிறப்புறுப்புகளில் புற்று ஏற்படுகின்றது. உடலுறவில் ஆண், பெண் உறுப்புகளில் ஏற்படும் உராய்வின் மூலம் புண்கள் ஏற்படுகின்றன. இவை இரணமாக  மாறி புற்றாக மாறும். ஆண்களுக்கு உறுப்புகள் வெளியே இருப்பதால் சிகிச்சை எளிதாகிறது. பெண்களுக்கு மறைவாக இருப்பதால் சிகிச்சை கடினம். ஆண், பெண் சுய இன்பத்தால் புற்று நோய் உண்டாகிறது. விடுதியில் தங்கி படிக்கும் பெண்கள் சில பெண்களின் உணர்ச்சிக்கு வயப்பட்டு சுய இன்பத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளபட்டு, உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, விடமுடியாமல் பெண்குறி புற்று, கருப்பை புற்று, கரு குழாய் புற்று ஏற்படுத்திக் கொள்கின்றனர். விடுதிகள் நோய்களின் கூடாரமாக இருக்கின்றன. உயர் கல்வி பெற்ற பெண்களும் இதில் தள்ள பெற்று மடிகின்றனர். இதை மருத்துவர், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறமுடியாமல் தவிக்கும் பெண்கள் ஏராளம். இதனால் ஆண்களை வெறுக்கும் பெண்கள் அதிகம். காமத்தினால் பெண்களின் மார்பகங்கள் கசக்கப் படும் போது மார்பக தசைகளில் உராய்வு ஏற்பட்டு புண்ணாகவும் மீண்டும் மீண்டும் இந்நிகழ்வால் இரணம் உண்டாகி புற்றாகிறது.

(3) இலாகிரி என்னும் போதை பொருட்களாலும், மது பானத்தாலும், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சீரண உறுப்புகள், குடல்கள், மூலம் இவற்றில் புண்கள் ஏற்பட்டு கால நீட்டிப்பால் புற்று நோய் ஆகிறது.

(4) அதிக கவலை, அழுகை, கோபம், பொறுமை இன்மை ,காதல், வெறுப்பு இவற்றால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இரணம் உண்டாகிறது. இதுவே பிற்பாடு புற்றாகும். சொற்கள் கூட புண்ணை உண்டாக்கும். இதை வள்ளுவர் "நாவினால் சுட்ட வடு" என்கிறார். நீண்ட கால புண்கள் இரணமாக மாறி புற்று நோயாக மாறும் என்பதை கண்டோம். அது போல் தலையில் அடிபட்டாலும், உடலில் அடிபட்டு நீண்ட காலம் ஆறாத புண்கள் இருக்குமேயானால் அவைகளும் பிற்காலத்தில் புற்று நோயாக பரிணாமம் செய்யும். இராசாயண கூடம், நகல் எடுக்கும் இயந்திரம், ஆசிரியர்கள், கதிர்வீச்சு கூடங்கள், கணிப்பொறி ,மின்கலங்கள், கொதிகலங்கள், பற்ற வைப்பு, சோதனை கூடங்கள், ஆய்வகங்கள் இவற்றில் வேலை செய்வோருக்கும் புற்று நோய் வரும்.

சிகிச்சை முறை


 ஆங்கில வைத்தியத்தில் அறுவை, கதிர் வீச்சு முறை, விசத்தை உட்செலுத்துதல்(கீமோ) முறைகள் பின்பற்றபடுகின்றன. அவைகள் புற்று நோயின் காரணமான புண்கள் அல்லது இரணம் அதிகரிக்கவே செய்கின்றன. இதனால் புற்று நோய் அதிகரித்து ஒரு சதவிகித நோயாளிகள் கூட பிழைப்பது என்பது முடியாது போகிறது.

சித்த மருத்துவம்


பழந்தமிழ் மருத்துவம் இவற்றை தெளிவாக ஆராய்ந்து சிகிச்சை முறைகளை தந்துள்ளது. இதனால் எத்தனையோ பேர் முழுமையாக குணம் பெற்றுள்ளனர். ஆங்கில வைத்தியமுறைக்கு சென்று முதிர்ந்த நிலையில் வருவோரும், பத்தியம் என்றவுடன் ஓட்டம் பிடிப்போரும், மரபு என்று சில பழக்க வழக்கங்களை கொண்டோரும், நாகரிகம் என்ற பெயரில் உண்மையை மறைப்போரும், வைத்தியரை தனக்கு சாதமாக நடத்த முனைவோரும், அதிகம் படித்தோரும், பொறுமை இல்லாதவருக்கும் சிகிச்சை செய்வது கடினம். சித்த மருத்துவ முறையில் நாத செந்தூரம், இரச பதங்கம், கெளரி பதங்கம், நவலோக பரிபூரண செந்தூரம், பஞ்சலோக செந்தூரம், அய-தாமிர செந்தூரம், தங்க நீறு, வெள்ளி நீறு, உலமகத்துவ செந்தூரம் முதலிய மருந்துகளால் ( எனது பரம்பரை அனுபவம்) புற்று நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்

"வெந்த மருந்தே வினை தீர்க்கும்"   - பழமொழி

"விடாது வினை தருமத்தின் கணை
அடாத செயலுக் குள்ளே ஒளிந்து
கெடாமல் வளரும் அதற்கு தருமலாதனும்
கட்டலா காதே அணை"

                                           யூகிமுனி

"செயலிலே விளைவாக தெய்வ ஒழுங்கமைவு இருக்க
பயன் என்ன தவறிழைத்து பின் பரமனை வேண்டுவதால்"


                                                             வேதாத்திரி மகரிசி

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்"


                                                          வள்ளுவர்

தாய்மைபெண்மை என்பது பேதமையுடையது என்கிறார் திருவள்ளுவர். ஒரு பேதை பிள்ளை பெற்றால் எப்படி தாயாக மாறுவாள்? பெற்றவளாகத்தான் இருப்பாள். பெண் வழிச் சேரல் என்று ஒரு அதிகாரம் எழுதியவர். தாய்மை பற்றி எதுவுமே கூறவில்லை. தாயை அவர் பொருட்படுத்தவில்லை.தியாகம் செய்பவள் தான் தாய், தனது கடமைகளையும், தனது உயிரையும் பிள்ளைகளுக்காக  விட்டுக் கொடுபவள் தான் உண்மையான தாய். பிள்ளைகளின் மனக் குறிப்பறிந்து கொடுத்து மகிழவும், மகிழ வைக்கும் தன்மை கொண்டவளே தாய் என்ற பெயர் பெற முடியும். கருவுற்ற பெண்னை தாய்மை அடைந்து விட்டாள்  என்கிறார்கள், இது பாரமாகி விட்டதே? என்ன துன்பம் வருமோ? சுகப் பிரசவம் ஆகுமா? தன் உயிருக்கு கேடு வருமா? என்றெல்லாம் எண்ணுகிற பெண் எவ்வாறு தாய்மை பெற்றவளாவாள்? கருவுருதல் என்பது சாதாரணச் செயல்பாடு என்று தைரியம் கூறுவார் இல்லை. அது எல்லா பெண்களுக்கும் மன நோயாக இருக்கிறது.இந்த குழந்தையால் தான் நமக்கு இந்த பேறு கிடைத்தது என்று எந்த பெண்ணும் எண்ணுவதில்லை. உடல் உபாதைகளை எண்ணி வருந்துதல், தனக்குள்ளே ஒரு பூ மலர்கிறது என்று எண்ணாதிருத்தல், மன அதிர்வுகள், உருட்டல், புரட்டல்கள், குழப்பம், அச்சம், இவற்றை எண்ணி வருந்துதல கொண்ட பெண்கள் அனைவரும் தாய்மை என்பதன் பொருள் அறியாதவர்களே, இதை கருத்தில் கொண்டு தான் பெண்கள் வள்ளுவர் பெண்  பேதமையுடையவள் என்கிறார். வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆகாத உணவுகள்,பழக்கங்கள்,பேச்சுக்கள் இவைகளை தள்ளி வைப்பதும் தாய்மையின் கடமையாகும். ஆனால் ஆசைப்பட்ட  அனைத்தையும் கேட்டு பெற இதனை பயன்படுத்துகிறார்கள். அவர்களுடைய அசைவுகளும் இயற்கையானதாக  இக்காலங்களில் இருப்பதில்லை.குழந்தையை சுமப்பது, உணவு ஊட்டுவது, அதன் இயக்கத்தை கவனிப்பது, குழந்தையின் இயற்கை எழுச்சியை உடனே சரி செய்வது எல்லாம்  ஒரு தாயின் கடமையாகும். இதையெல்லாம்  நான் செய்கிறேன் என்ற எண்ணம் கூட தவறாகும் பிள்ளை பகையாகி விட்டால் பாலூட்டியதை சொல்லிக் காட்டும் எந்த பெண்ணும் "தாய்" இல்லை. மேற்படி சொல்லி காட்டி திட்டும் செயல் தழை போட்டு வளர்த்த ஆட்டை தானே வெட்டிக் கொல்லும் செயலை விட கொடுமையானது. நாய் ஒரே நேரத்தில் 10 குட்டிகளுக்கு பாலூட்டுகின்றது இதில் ஒரு பங்கு கூட பெண்கள் செய்வது இல்லை. பழி சொற்களை  எப்படி வேண்டுமானாலும் சொல்வதற்கு பெண்களால் மட்டுமே முடியும். இதற்கு வருந்தவும்இ திருந்தவும் தயார் இல்லாத பெண்களை "தாய்மை" என்று அழைப்பது  அர்த்தம் இல்லை. எந்த பெண்ணாவது பிள்ளை பெறாத காலங்களில் எதையாவது ஒரு குழந்தைக்கு பாலூட்ட முடியுமா? பிள்ளை பெறுவதும்,  பாலூட்டுவதும் இயற்கை நிகழ்வு, இதை மனதில் கொள்ளாமல் ஆண்களை பழிக்கும் எந்த பெண்ணும் "தாய்" என்னும் தகுதி பெறாதவர். தியாகம் எங்கே உருவாகிறதோ அங்கே அன்பு என்னும் உயிர் வளரும் அன்பில்லா எந்த பெண்ணும் "தாய்மை" அடைய முடியாது.


"கற்புடுத் தன்புமுடித்துநாண் மெய்ப்பூசி
நற்குண நற்செய்கை பூண்டாட்கு மக்கட்பே
றென்ப தோர் செல்வமு முண்டாயின் இல்லன்றே
கொண்டாற்குச் செய்தவம் வேறு".

                                              நீதிநெறி விளக்கம்

"வட்டிலிலும்  தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்"

                                                                        பட்டினத்தார்."பிறந்தபோழுதினும் பெரிது வக்கும் தன்மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய்".
                                                           வள்ளுவர்

தமிழ் மொழிநாம் வாழும் அண்டமானது ஐம்பெரும் பூதங்கள்,  ஒன்பது கோள்கள், ஏழு தாதுகள், இருபத்து ஏழு நட்சேத்திரங்கள், ஆயிரத்து எட்டு அண்டங்கள் கொண்டதாக
விளங்குகின்றது. இவற்றையே "இயற்கை" என்கின்றோம். தமிழ் மொழியானது "இயற்கை"யிலுருந்து தோன்றியது. தமிழில் இயற்கையின் "செறிவை" நன்கு உணரலாம். மொழி என்பது காற்றின்  இயக்க  ஆற்றலாகும். காற்றின் இயக்கம் என்பது சுருங்கி விரிதலாகும். உடலில் காற்றை  உள்ளிழுத்தைலையும், வெளியேற்றலையும் குறிக்கும். தமிழ் மொழியானது  முற்றிலும் வேறுபட்ட  நான்கு வகையான ஓசைகளை உடையது. அவையன உயிர் ஓசை ,மெய் ஓசை, உயிர்மெய் ஓசை, ஆயுத ஓசை எனப்பவாம். இவற்றை  வரி வடிவமாக எழுதுவதே  "எழுத்து" என்பதாம். நமது உடலில் ஐம்பூதத்திற்கேற்ப , அ-ஆ,  இ-ஈ, உ-ஊ, எ-ஏ, ஒ-ஓ என்ற ஐந்து வகை உயிர் எழுத்துக்கள் உள்ளன. க்-ங் ச்-ஞ் ப்-ம், வ்-ட்-ண்-ள், ற்-ன்-ல், ர்-ழ்-ய் என்னும் ஏழு வேறுபட்ட ஒசைகளுடைய மெய் எழுத்தாக உள்ளது. இவைகள் உடலில் ஏழு நாடி நரம்புகளாக உள்ளன. நாடிகளை இயக்குவதாகவும் இருக்கின்றன. உயிர் எழுத்துக்கள் ஈரலை சுருங்கவும், விரியவும் செய்வதன் மூலம் உயிராற்றலை வளர்க்கின்றன. உயிர்மெய் எழுத்துக்கள் ஒரே நேரத்தில் காற்றை சுருங்கவும், விரிக்கவும், உள்ளிழுத்தலையும், வெளியேற்றலையும் செய்ய வல்லவை. ஆயுத எழுத்து என்பது மூச்சோடாத நிலையில் நிறுத்தும் சக்தி பெற்று விளங்குகிறது. மேற்குறித்த நான்கு ஒலிகளைதான்  நான்கு "மறைகள்" என்கிறோம். இதை "ஒலி மறைவு" என்கிறோம். ஒலிகள் மறைவாக உள்ளன என்பதாம். நமது உடல் மார்பு,வயிறு,இடுப்பு என்னும் மாறுபட்ட செயல்களுடைய உறுப்புகளை  கொண்டுள்ளது. மார்பு- காற்று அறையாகும். வயிறு- உணவு அறையாகும். இடுப்பு- காம உறுப்புகளை கொண்ட அறையாகும். காற்றால் உயிர் வளர்கிறது(ஈரல்). உணவால் உடல் வளர்கிறது( ஏழு நாடிகள்). காம உறுப்புகளால் ஆன்மா வளர்கிறது(பிறப்பு). இவற்றை தான் "முத்தமிழ்" என்கிறோம். இயல், இசை, நாடகம் என்பது முத்தமிழ் இல்லை. ஏனென்றால் இது எல்லா மொழிகளிலும் இருக்கின்றன. காற்றானது உடலில் வலது, இடது, நடு என்று பகுந்து ஓடுவதன் மூலம் ஆண், பெண், அலி தன்மை கொண்ட எழுத்துகளையும், அவற்றின் மூலம் ஆண், பெண், அலி தோற்றங்களையும் உருவாக்குகின்றது. காற்றின் தோற்றம், உள் தோற்றம், வெளி தோற்றம், விரிதல், சுருங்குதல், உள்நிலை இருத்தல், வெளி நிலை இருத்தல், உறுப்புகளில் தங்கும் கால அளவு, வெளியேறும் கால அளவு, மாத்திரை அளவு, பகுதி, விகுதி, மார்பு (வல்லினம்), வயிறு(இடையினம்), தொடை பகுதி (மெல்லினம்) இவற்றில் உற்பத்தி ஆகுதல். நெடில், குறில் இவற்றை வரைமுறை படுத்தி தமிழ் இலக்கணம் செய்துள்ளனர் நம் பெரியோர்கள். இயற்கையான தமிழ் மொழியை தவிர மற்ற மொழிகள் யாவும் மானிடர்களால் உண்டாக்கப் பட்ட செயற்கை மொழியாகும். செயற்கையான இந்த மொழிகளில் இயற்கை நியதிகள் ஏதுமில்லை. தமிழ் மொழியின் சிதைந்த (கெட்டுப் போன ) மொழிகள் தான் மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளுவம், ஒரியா மற்றும் வட நாட்டு மொழிகள். முழுமையாக கெட்ட மொழிதான் ஆங்கிலம். தமிழ் சொற்களில் உயிரின் தோற்றம், உடல் பிறப்பு, ஆன்ம விரிவு போன்ற அரிய, பெரிய உண்மைகள் அடங்கி உள்ளன. மானிடர்களால் ஆக்கப் பட்ட எழுத்து, சொற்களால் ஆன்மா, உடல்,  உயிர், குறுகி விலங்கிகளாவும், மரம், செடி, கொடிகளாகவும், பறவை இனங்களாகவும், உடலற்ற பேய்களாகவும், மாயாவிகளாகவும், கீழ் பிறவிகளாகவும் தோற்றம் உண்டாகிறது. ஆகவே தமிழ் மொழியை தாழ்வில்லாமல் கற்று, ஆன்ம, உடல், உயிர் வளம் பெற்று வாழ்வோம்.
"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
               
                                       பாரதிதாசன்

"சீரி ளமை திறம் வியந்து வாழ்த்துவோம்"
                        
                                                        திரு. வி.க

"தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் காணோம்"     - பாரதியார்


"என்னை நன்றாக படைத்த னன்
என்னை நன்றாக தமிழ் செய்யு மாறே"


                                                              திருமூலர்

என்றெல்லாம் போற்ற பெற்ற தமிழ் மொழியை பேசினாலும், தமிழன் என்று சொன்னாலும் "தீவிரவாதி"கள் என்று கூறி  கைது செய்து சிறையில் அடைக்கும் நிலையை எண்ணி வேதனை அடைகிறோம். இந்நிலை மாற தமிழர் அனைவரும் தமிழால் ஒன்றிணைந்து இழி நிலை கலைந்து வாழ்வோம்.


அனைவருக்கும் தமிழ் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ஆன்மீகம்ஆன்மீகம் என்றால் பொதுவாக ஆசிரமம், மடம், கோவில் போன்ற இடங்களில் போதிக்கின்ற கொள்கை என்று எண்ணுகின்றனர். சரியை, கிரியை, ஓகம், ஞானம் என்பதும் ஆன்மீகமாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் ஆன்மீகத்திற்க்கு செல்லும் வழியே ஆகும். ஆன்மீகம் என்பது கடவுள் கொள்கையோ, கடவுள் மறுப்பு கொள்கையோ இல்லை. கடவுள் கொள்கைகளை மறுக்கும் போது ஆன்மீகத்தை சேர்த்தே மறுக்கின்றனர். ஆன்மீகம் ஆத்திகத்திற்க்கும், நாத்திகத்திற்க்கும் அப்பாற்பட்ட இயற்கை உண்மை ஆகும். சித்தர்கள் கடவுள் ஏற்பு அல்லது கடவுள் மறுப்பு செய்வதில்லை இரண்டுமே முட்டாள்தனம் என்கிறார்கள். ஆன்மீகம் முழுக்க முழுக்கப் பகுத்தறிவு கொள்கையாகும். ஒரு நகர மக்களின் வாழ்வியல்முறை, பண்பாடு, கலை, பழமை, புதுமை இவற்றை விளக்குவது நாகரீகம் எனப்படும். அதே போல் இயற்கை இயல், ஆற்றல், உயிர், மனம், செயல், விளைவு பற்றிய விளக்கங்களை கூறுவது ஆன்மீகம் எனப்படும். உயிர் விளக்கம் என்பது எல்லா உலக மக்களுக்கும் பொதுவானது. அது போல் ஆன்மீகம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. கடவுள் கொள்கைகள் நாட்டிற்கு நாடு, இனத்திற்கு இனம் மாறுபடுகிறது. ஆனால் ஆன்மீகம்  மாறுபடுவது இல்லை.கடவுள் கொள்கை இருக்கும் இடத்தில் கடவுள் மறுப்பு கொள்கைகளும் இருக்கும். கடவுள் கொள்கைவாதிகளும், கடவுள் மறுப்பு கொள்கைவாதிகளும் உண்மை ஆன்மீகத்தை  புரிந்து கொள்ளாதவர்களாக உள்ளனர். ஒவ்வொரு உயிருக்கும் மூலமாகவும், இயக்கமாகவும் உள்ள உண்மை பொருளே ஆன்மீகம். அது வான் காந்தமாக எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த காந்த ஆற்றலிருந்தது ஒலி, ஒளி, ஓசை, வெப்பம் வெளிப்படுகிறது. இவற்றின் ஏற்றத்தாழ்வுகளே பஞ்தபூதங்களாக மாறுகின்றன.இந்த பூதங்களின் மாறுபாடுகளே உயிரினங்களின் தோற்றம், மறைவு, இயக்கத்திற்கு காரணம். இதை சித்தர்கள் வான் காந்தத்தை பரம் (பரமான்மா) என்றும், அதிலிருந்து  தோன்றிய  உயிர்களை அபரம்( சீவான்மா) என்று  கூறினார்கள்.

 "பரமாகிய சக்தியுள் பஞ்சமா புதம்
தரமாறிடில் தோன்றும் பிறப்பு".

                                          ஒளவை.

இந்த ஆன்மாக்களுக்கு அறிவு, மனம், செயல்பாடு, விளைவு உண்டு இவற்றை பற்றிய விளக்கமே ஆன்மீகம் என்றனர். உயிர், மனம், அறிவு, செயல், விளைவு இவற்றை வேண்டாம் என்றும், இல்லை என்றும் கூற முடியாது. இதில் கடவுள் கொள்கை ஏதும் இல்லை.ஆத்திகமோ, நாத்திகமோ இல்லை. இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். உண்மையான பகுத்தறிவு கொள்கை மீது கட்டபட்ட குடிசைகளே மதங்கள், சமயங்கள், கடவுள் கொள்கைகள்,  கடவுள் கொள்கைகள்  கடவுள் மறுப்பு கொள்கைகள், வேத புரானங்கள் ஆகும்.  இவற்றை தகர்க்க வேண்டிய கட்டாயத்தில்  இருக்கின்றோம். ஏனெனில் இவைகள் பழமையானது மட்டுமல்ல இவை இடிந்து மக்களைக் கொல்லும் நிலையில் இருக்கின்றன. ஆன்மீகம் மட்டுமே உண்மை. மற்ற அனைத்தும் கற்பனைகளின் விளைவுகளே. விளக்கமாகாதது அகநிலை(நாத்திகம்). விளக்கமானது புறநிலை(ஆத்திகம்). அறிவும், மனமும் உயிரின் அகநிலை.சொல்லும், செயலும் புறநிலை. அகம், புறம் இயற்கையின் உண்மையாகும். இவற்றின் விளக்கமே திருமந்திரம் முதல் திருவருட்பா வரை கூறப்படுகின்றது. உண்மைகளுக்காக வாதம் செய்ய வேண்டியதில்லை ( ஆத்திகம்). பொய்களுக்காக எவ்வளவு வாதம் செய்தாலும்  அது முடிவுக்கு  வரவே வராது( நாத்திகம்). உயிர்நிலை, மனநிலை,செயல்நிலை பற்றி அறியாதவர்களிடம் மனிதநேயம் உருவாக வாய்ப்பில்லை. ஆன்மீகம் என்பது மனித நேயக் காப்பாகும். ஆன்மிகத்திற்கு ஆட்சியோ, அதிகாரமோ தேவையில்லை. ஆன்மீனம் யாரையும் கட்டுப்படுத்தும் கொள்கை இல்லை. ஒரு பொருள் இருக்கின்றது என்பவன் அதை உணர வைக்க வேண்டும். இல்லை என்பவன் அதை நிரூபிக்க வேண்டும். விளக்கி காட்ட முடியாத ஒன்றை இருக்கின்றது என்றோ, இல்லை என்றோ கூறுவது முட்டாள்தனமானதாகும். வெறும் கடவுள் மறுப்பு மட்டும் பகுத்தறிவு ஆகாது. வெறுப்பது, கோபப்படுவது, தண்டனை தருவது போன்ற தீவிர செயல்கள் பகுத்தறிவு அல்ல. அண்டம், பிண்டம், உயிர் பற்றிய அறிவு,  உடல் பற்றிய அறிவு இவற்றை சந்தேகமற கற்று தெளிதலே ஆன்மீக கல்வி ஆகும். ஆன்மீகம் என்பது தன்னை அறிதலாகும். பிறரிடம் கை கட்,டி வாய் மூடி, மெளனியாய் பெற்றுக் கொள்ளும் பொருள் இல்லை. மக்களின் ஏற்றத்தாழ்வான வாழ்க்கை, சாதி, சமயம்,மதங்கள், துறவிகளின் செயல்கள் பற்றி விமர்சனம் செய்வது ஆன்மீகம் அல்ல. புற அறிவையும், அக அறிவையும் அறிதலே ஆன்மீகம். ஆத்திமோ, நாத்திமோ ஒருவரை செம்மைபடுத்தாது. ஆன்மீகம் ஒன்றினாலே மட்டுமே முடியும் என்பதை அறிவோம்.  அறியாமைக்குள் மூழ்கித் தூங்கிக்கிடப் பேரை எழுப்புவது கடினம் தான். ஆனாலும் எப்படியாவது அவர்களை விழிப்படைய செய்ய வேண்டியது ஒவ்வொரு ஆன்மீகவாதியின் கடமையாக இருக்கிறது.

"தன்னை அறிதலே அறிவு
மற்றெல்லாம் பேயறிவு ஆகுமடி"

                                                    வள்ளல்


"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"

                                                              வள்ளுவர்


"தன்னை யறிய தனக்கொரு கேடில்லை
தன்னை யறியாமல் தானே கெடுகின்றான்.
தன்னை அறிவை அறிந்தவன் பின்
தன்னை அர்ச்சிக் தானிருந் தானே"

                                                          திருமூலர்
                     

மகாபாரதம் நடந்தது உண்மையா?
மகாபாரதத்தை பற்றி எல்லோருக்கும் ஓரளவு தெரியும். அறிவுரை கூறும் போது மகாபாரதத்தை மேற்கோள் காட்டி விளக்கம் தருவார்கள். மேற்படி பாரத கதை உண்மையா? என்றால் ஆம் என்றே உரைப்பார்கள். உண்மையில் பாரத கதை நடக்க வில்லை. அது உடல், உயிர் போராட்டத்தை எடுத்துக் கூறுவதாகும். பாரத கதையில் அருச்சுணன் என்பவன் நாடு, வீடு, மனை, மனைவி, குழந்தைகள், மக்கள் இவற்றை பெறுகின்றான். தருமன் என்பவன் நாடு, வீடு, மனை, மனைவி, பொன், பொருள், மக்கள் இவற்றை இழக்கின்றான். இதில் அருச்சுணன் என்பவன் இந்திரனுக்கு பிறந்தவன் அதாவது பிறப்பாகும். பிறந்தால் மேற்படி செல்வங்களை பெற முடியும். தருமன் என்பவன் எமனுக்கு பிறந்தவன் அதாவது அழிவு ஆகும். அழிவு ஏற்படும் போது மேற்படி செல்வங்கள் அழிவது உறுதி. இந்திரபிரத்தம் ( இந்திரியம் - விந்து , பிரத்தம் - பிறப்பு ) பிறப்பின் நகரம். அத்தினாபுரம்(அஸ்தி - சாம்பல்) - இறப்பாகும், இறப்பின் நகரம். வீமன் என்பது ஆன்மா வாகும். வீமன் என்பது வாயுவிற்கு பிறந்தவன். வாயு என்பது ஆவியாகும், ஆவி என்பது ஆன்மாகும். அதாவது ஆன்மா தருமன் என்ற மரணத்தையும் அருச்சுணன் என்ற பிறப்பையும் அடையும் என்பதை குறிக்கும். கருணன் சூரியனுக்கு பிறந்தவன். அதாவது வானுலகம் அதாவது மோட்ச உலகம், கருணன் என்பவன் பிறருக்காக தன் உடல், பொருள், ஆவியை கொடுத்ததால் மோட்சம் பெற்றான். துரியோதனன் தனக்காக பிறருடைய உடல், பொருள், ஆவியை எடுத்தான். ஆதலால் கீழ் உலகை பெற்றான். தனக்காக வாழ்வர் கீழ் உலகை அடைவர்.  சகாதேவன் - அசுவனி தேவருக்கு பிறந்தவன் அதாவது மேல் உலக பிறப்பு (அசுவினி - குதிரை - ஆவி)
நகுலன் - தேவ பிண்டத்தில் பிறந்தவன் அதாவது கீழ் உலக பிறப்பு (பிண்டம்-பாண்டம்).
அதாவது வீமன் (ஆன்மா) - மேல் உலக, கீழ் உலக பிறப்பை சகோதரர்களாக  வைத்துக் கொள்ளும் ( மேல் கீழ் உலகில் பிறக்கும் என்பதாம்).

பாஞ்சாலி என்பது தருமன், வீமன்,  அருச்சுணன், நகுலன், சகாதேவன் என்னும் பஞ்ச பூத ஆற்றல்களால் இயங்கும் வாயு (உயிர்) ஆகும்.
பாண்டவர்கள் என்பது (பாண்டம்-உடல்) அழிவற்ற உடல் பெற்றவர்கள் என்பதாம்.
கெளரவர்கள் என்பது ( காவு-சாவு + இரியர்) அதாவது அழியும் உடலை பெற்றவர்கள் என்பதாம்.

 ஆன்மாவாகிய வீமனுக்கும், உடலாகிய துரியோதனனுக்கும் ஏற்பட்ட போராட்டமே பாரத கதையாகும். தமிழ் மக்களின் வழிபாட்டையும், ஆன்ம அறிவியலையும் மறைத்து எழுதப்பட்டது தான் பாரத கதையாகும். ஐரோப்பிய யூதர்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள். அவர்கள் ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு தமிழ் நாட்டில் குடியேறினர்.குடியேறிகள்

 தமிழ் கலாச்சாரத்தை தெரிந்து கொண்டு தமிழர்களையும், யூதர்களையும் கலப்பு இனமாக மாற்ற எழுதப்பட்ட கதையே பாரதம். இதில் பாண்டவரும், கெளரவரும் தமிழர்கள். பலராமனும், கிருட்டினனும்-யூதர்கள். யூதர்களையும் தமிழர்களையும் இணைக்க வேண்டி எழுதப்பட்ட காவியமே பாரதம் என்று வழங்கி வருகிறது.
பாரதம் நடந்த கதையில்லை என்பதை அகத்தியர், தேரையர் நூல்களில் சான்றுகள் நிறைய காணக் கிடைக்கின்றன. ஆகவே பாரத கதையின் (தத்துவத்தை) மட்டும் எடுத்துக் கொண்டு வேண்டாத பொய்யான கற்பனைகளை மறுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரும் செய்ய வேண்டிய கடமையாகும். ஏனெனில் வேத, புரான, இதிகாசங்களை எழுதி வைத்துக் கொண்டு தமிழர்களை இழிவுபடுத்துகின்றனர்

சைவ நெறிதற்காலத்தில் சைவமா? என்று கேட்டால் அதற்கு பதில் உணவைப் பற்றி கூறுகிறார்கள். வழக்கமாக மாமிசம் உண்பவரை அசைவம் என்றும், காய்கறி, கனிகளை உண்பதை சைவம் என்று கூறுகின்றனர்.மெய்ஞானத்தில் அதன் பொருள் வேறாகும். மனித உடலில் வலது பாகத்தில் உள்ள மனோன்மணியில் எட்டு குணங்களுடன் சதாசிவம் ஆடிக் கொண்டிருப்பதால் அதற்கு அசைவம் என்று பெயர். இடதுபக்கம் உள்ள ஞானமணியில் அசைவில்லாமல் ஏழு அணுவாக உள்ள சக்தி இருப்பதால்  அதற்கு சைவம் என்று பெயர். மனித குலம் உய்ய வந்த மதங்களில் முதலில் தோன்றியதே சைவமாகும்.

சீவன் ( பசு) சிவத்துடன்(பதி) கலத்தலே சைவம் எனப்படும். இதை திருமூலர் சைவம், சிவனுடன் சம்பந்தம் ஆவது என்கிறார். இன்று கற்பனையில் உருவாக்கி வைத்துள்ள காளை மாட்டின் மீது வரும் மனித உருவமன்று சிவம். சிவநிலை (அ) சைவநிலை என்பது அசைவிலாத பெருவெளி நிலை ஆகும். உடம்பினுள்ளே அசைவில்லாமல்
இருக்கும் பெருநிலையில் அடக்கமாக இருத்தலே சைவமாகும். இதை வள்ளுவர் அடக்கம் அமரருள் உய்க்கும் என்கின்றார். இருதயத்தில் உள்ள பெருவெளி சற்று அசையும் என்றால் அசைவம் ஆகிறது. ஓராயிரம் எண்ணங்களை அசைபோட்டு கொண்டுள்ள அனைவரும் அசைவர்களே. எண்ணங்களற்றவறாய், அறிவாய், மூச்சோடாமல் சும்மா இருப்பவரே மெய்யான சைவர் ஆவார்கள். அசைவர்களை சைவர்களாக மாற்றுவதே சைவ நெறியாகும். சைவத்தின் அடையாளங்களாவன திருநீறு பூசுவது, உருத்திராக்கம் அணிவது, ஐந்தெழுத்தை ஓதுவது, புலால் உண்ணாதிருத்தல் ஆகியன நெறிகள் சைவம் எனக் கருதப்படுகிறது. இவற்றின் உண்மையை அறியாமல் சாம்பலை பூசுவதும், கொட்டைகளை அணிவதும்,  "நமசிவாய" என்று கூறுவதும் பொய்யாய்  சடங்காய் செய்கின்றனர். விபூதி என்பது வெற்றி கொள்ளும் தீ ஆகும் ( குரு பிரான் சொன்ன திருவாக்கு) இதை பூசிக்கொள்ள வேண்டும். இதை திருமூலர் "கங்காலன் பூசுங் கவசத் திருநீறு" என்கின்றார். உருத்திராட்சம், உருத்திரன்(எமன்) அட்சம்(ஒளி) எமன் அஞ்சும் மணியே உருத்திராட்சம் மணி ஆகும். குரு பிரான் உணர்த்திய நெருப்பு பொருளே உருத்திராட்ச மணி ஆகும். இதை அணிந்து கொள்ள வேண்டும். பஞ்சாட்சரம் என்பது எழுத்தன்று, ஒலியன்று, சொல்லன்று அது மெளன மொழியாகும். இருதய கமலத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் உண்மையான சீவன் ஆகும். செபிக்கும் மொழியல்ல.இதை "உற்று உற்று பார்க்க ஒளிவிடும் மந்திரம்" என்பார் திருமூலர். புலால் மணம் வீசும் தன் தேகத்தின் மீதும் , பிற உயிர் தேகத்தின் மீதும், பெண் தேகத்தின் மீதும் பற்று வைக்காதவரே ஞானி எனப்படுவார்கள். இதுவே புலால் மறுத்தல்  எனப்படும்

"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் "

                                     என்கிறார் வள்ளுவர்.

சைவத்தின் குறிக்கோளாவது வீடுபேறு அடைதலாகும்.அதற்கு சரியை, கிரியை, ஓகம், ஞானம் என்னும் நான்கு படி நிலைகள் உள்ளன. இன்நான்கிற்கும் குருவே துணையும், வழி காட்டியாகவும் இருக்க வேண்டும். சிவச்  செயலை பூரணமாக ஏற்றுக்கொள்ள பொருள் ,பதவி, வசதி, மதிப்பு  இவற்றை தள்ள வேண்டும். பரம்பொருளை அறிந்து அறிய  குருபிரானின் வழிகாட்டல் அவசியம் வேண்டும். இதுவே தெய்வீகம் எனப்படும். இதையல்லாது  ஆலய வழிபாடு, தீர்த்த யாத்திரை, விரதம், அனுட்டானம் இவை முழு மூட செயல்கள் ஆகும். பொய் சமய வழிபாட்டில்  வாழ்நாளை வீணாக்கி மரண கதியை அடையாமல் சைவநெறி நின்று மேன்மையடைய வேண்டும்.
"பேருற்ற உலகிலுறு சமயமத நெறியெல்லாம்
பேய்பிடிப்  புற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டென வுணர்ந்திடா உயிர்கள் பல
பேதமுற் றங்கு மிங்கும்
பொருற் றிறந்து வீண் போயினர்"


என்று வள்ளல் பெருமானின் வாக்கை நினைவில் கொள்ள வேண்டும்

பணவெறி, மதிப்பு வெறி, காமவெறி, பதவி வெறி, மதவெறி, சாதிவெறி இவற்றில் வாழ்நாளை பறிகொடுக்காமல்  சைவநெறி நிற்போம்

"சீவன்  என்ன சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகி லார்
சீவனார் சிவனாரை அறிந்த பின்
சீவனார் சிவனாகி யிருப் பரே"

  
                                       திருமந்திரம்

"சிவாயநம என்று  சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லையே"
 
                                              ஒளவை

அவயோகம்அறிவறிந்த சான்றோர்கள் தமிழ் மக்களுக்காக எடுத்தியம்பிய கருத்துக்கள் ஏரானம்.
 சித்தர்கள் தன் உடலையே கருவியாக்கி உயிர் இரகசியத்தையும் அண்டத்தைப் பற்றியும்
அறிந்து உணர்ந்து எடுத்துக்காட்டியவை எண்ணிலடங்கா. அவ்வாறு சித்தர்கள் கூறியவற்றில் ஒன்றுதான்  யோக நெறியும். வீடு பெறுவது தான் இம்மானிடத்தின் உண்மையான நோக்கம் என்பதை உணர்ந்த சித்தர்கள் அவற்றிற்காக  இந்த யோக நெறியை 8 அங்கங்களாக பிரித்து வழிமுறைபடுத்தினர் அவற்றை இன்று அட்டாங்க யோகம் என்று கூறி வருகின்றனர். சித்தர்கள் கூறிய கருத்தை விட்டு இவர்கள் தங்கள் கருத்துக்களையும் தனக்கு சாதகமான கருத்துக்களையும் ஏற்றி எழுதி வைத்துக்கொண்டு பதஞ்சலி யோக சூத்திரம், உபநிசங்கள், வேத சூத்திரங்கள் என்று கூறி மக்களை மாற்றி பிழைத்து வருகிற கூட்டம் ஏராளம் உண்டு. சித்தர்கள் ஆசை அறுமீன்கள் என்றனர். ஆனால் மூடர்கள் அனைத்திற்க்கும் ஆசை படு என்கின்றனர்.  சித்தர்கள் நித்திய வாழ்வு பெற சொன்ன வழிகளை அறிவியல் படி எடுத்துரைக்கின்றேன் என்று அனித்திய வழிகளை போதிக்கும் ஆனந்தாக்கள் ஆயிரம் இருக்கின்றனர். மூச்சை குறைத்து சாகாக் கலை பெற சொன்ன சித்தர்களை மறந்து  "சோகம் சோகம்" என்று  வேகமாக மூச்சை விடும் படி கூறி சாகும் கலையை போதிக்கும் குருக்கள் நிறைய உண்டு. வெயில், பனி, மழை, குளிர் இவற்றால் உடல் பாழாகும் என்று கூறி உடலை பாதுகாக்க சொன்ன சித்தர்கள் கூற்றை அகந்தையால் மறைத்து  பனிமழைகளில் ஈசன் அருளாட்சி இருக்கிறதாக கூறி இலட்சங்கள் பறிக்கும் இலட்சிய வாதிகள் இருக்கின்றனர்.  நாமெல்லாம் கடவுள் சாதி என்றி கூறி கட்டிடம் கட்டி சில கோடிகளை விற்கும் கேடிகள் நிறைய உண்டு. இந்த மாதிரியான யோக குருக்கள் என்னும் மோக குருக்கள் வார்த்தை சறிக்களில் விழாமல் இருக்க பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் "புலத்திய சித்தர்" கூறிய ஈகாத அவயோகம் எவை என்பதைக் காண்போம்

"காணுமூச் சடக்கி  விழியதை உருட்டிக்
கபாலமுந் திறந்தனர் கோடி
கனத்த வாயுவதனால் குன்ம நோய் அனுகி
கலங்கினோர் ரொரு கோடி
தோணு மெய் மறந்து சுழன்று அனல் எழுப்பிச்
சொக்கி னோர் ரொரு கோடி
சூலைவாயு அனுகி சுவாலையும் எழுப்பி
சுரமதனால் இறந்தவர் ரொரு கோடி
ஊண உண்ணாக்கை உள் தூக்கி
உள்ளடங்கி னோர் ரொரு கோடி
உயர சாணீளம் முழமது எழுப்பி
உறங்கி ஒடுங்கினோர் ரொரு கோடி
பேனாதி சாரப் பேதி வந்தனுகி
பிறவியா இறந்தவர் ரொரு கோடி
இனமறியாமல் இருத்தியே வாய்வை
இறந்தனர் ரொரு கோடி
இனிய தம்பனஞ் செய்து எழுப்பி கும்பித்
தேங்கியே இறந்தனர் ரொரு கோடி
கனமறி காற்றை நாசியால் விட்டு
கருதியே இறந்தனர் ரொரு கோடி
கண்ட நாசியை விட்டொன்று விட்டொன்று
கலங்கியே மடிந்தனர் கோடி
தினமொரு நாழி வாசி கொண்டேற்றிச்
சிவபுரம் மேவினர் ரொரு கோடி
அம்புவி தனிலே மறையவும் சூழ்செய்
தனிதும் பதுங்கினோர் கோடி
தெளிந்தவர் அறிந்துமே செப்ப
தேறிடும் வாசி யோகத்தின் பெருமை
திருத்தமாய் உரைத்திடலாமே"

   
            என்கின்றார்

ஆகவே நிறை மதியுடையோர் மேற்கண்ட அவயோகத்தை(தவறான யோகத்தை) புரிந்து கொண்டு வீணர்கள் வழியில் செல்லாமல் சித்தர் வழி சென்றி பிறப்பறுபோம்

"அதயோகங்கள் ஆகாதப்பா"    அகத்தியர்

"அட்டாங்கு செய்தாலும் நெட்டாங்கு பண்ணினாலும்
இட்டாது இட்ட வர ஒட்டாது
முட்டியே அது  பாயுமே முனை தேயுமே"

                                         குணங்குடியார்

"வீணான வேடங்கள் பூண்டு வந்துமெத்த
வெதம் படித்தவன் போல முன்னே நின்று
தோணாத மக்களைக் கெடுப்பானென்று அன்றே
தோற்றம் கூறினரே றானப் பெண்ணே"

       
                                                      நெருஞ்சில் சித்தர்

சுருக்குப் பை "செக் அப்"


"பத்து மாதமும் நடையாய்  நடந்தேன்
பத்து மாதமும் படம் பிடித்தாய்
பத்து மாதமும் ஃபிலிம் காட்டினாய்
பத்து மாதமும் நார்மல் நார்மல் என்றாய்
பத்தாம் மாதம் நீ  நார்மலாக இல்லாது போனாயோ?
பத்து மாதமும் உன்னையே என் தாயாய் நம்பினேன்
பத்தாம் மாதம் கருவிகளால் மிரட்டுகிறாய்!
பத்தாம் மாதம் நார்மலாக பேபி இல்லை என்கிறாய்
பத்தாம் மாதம் புரிந்தது சக்களத்தி பரவாயில்லை என்று
பத்தாம் மாதம் பனி நீர் வற்றி போவது எப்படியோ?
பத்தாம் மாதம் பேட் பேபி ஆவதும் எப்படியோ?
பத்து மாதமும் நார்மலாக இருந்த தொப்புள் கொடி
பத்தாம் மாதம் குழந்தை கழுத்தை இறுக்குவது எப்படியோ?
பத்து மாதமும் அலைய விட்டது!
பத்தாம் மாதம் பத்தாயிரம் பரிக்கத்தானா?
பத்து மாத செக் அப்பும் என் அப்பன் ஆத்தா  சுருக்குப் பைக்குத்தானா? "
       
                                                                                     அபலை பெண்

கல்லடைப்பு


நமது சித்த மருத்துவத்தை பொறுத்தவரையில் அன்றைய விஞ்ஞானிகளாகிய சித்தர்கள் எடுத்துக் கூறிய 4448 நோய்களில் கல்லடைப்பு ஒன்றாகும். இதை ஆங்கிலத்தில் Gravel என்பார்கள்.
கல்லடைப்பை  பொறுத்தவரையில் சித்த மருத்துவம் 4 வகையாக பிரித்துள்ளது.

1) வாத கல்லடைப்பு
2) பித்த கல்லடைப்பு
3) சிலேத்தும கல்லடைப்பு
4) தொந்தம கல்லடைப்பு

என்பனவாகும்.

கல்லடைப்புக்கு காரணம்

நம் உடம்பு இயக்கத்திற்க்கு 27 வகையான தாது உப்புகள் இருக்கின்றன.இந்த உப்புகள் நாம் உண்ணும் உணவு மூலமே பெறப்படுகிறது. இந்த தாது உப்புகள் உடலில் நன்றாக சீரணித்து சேரா விட்டால். தசை எலும்பு போன்ற ஏழு விதமான தாதுக்கள் வளர்ச்சி இல்லாமல் பலம் குன்றி விடும். இந்த தாது உப்புக்கள் நன்றாக சீரணிக்காமல்  நம் உடல்களில் பல்வேறு உறுப்புகளில் தங்கி கற்களாக உருவாகி அடைப்புகளை ஏற்படுத்துகின்றன. இவற்றில் பித்த நாளம் உமிழ் நீர்  சுரப்பி நாளங்கள் சிறுநீரகங்கள் மூத்தர குழாய்கள் ஆகிறவற்றில் விரைவாக உற்பத்தியாகின்றன.

சிறுநீரக கற்கள் தோன்றும் காரணங்கள்

தாது உப்புகள் தசை எலும்புகளில் சேராமல் இரத்தத்தில் கலந்தாலும் சிறுநீரக கற்கள் உருவாகின்றன. சிறுநீரை நன்றாக கழிக்காமல் அடக்கி வைத்தாலும் கல் தோன்றும்.பக்க வாதத்தால் பாதித்து நீண்ட காலம் படுக்கையில் இருந்தாலும் சிறுநீரக கற்கள் தோன்றும். மித மிஞ்சிய மது மாது போதை பழக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கும் சிறு நீரக கற்கள் ஏற்படும்.

வாத கல்லடைப்பு (calcium stone)

கல்லின் நிறம் அமைப்பை பொறுத்து நோயாளிகளுக்கு வேதனைகள் வேறுபடும். வாத கல்லடைப்பு எனப்படுவது சிறு நீரகத்தில வாதம்(காற்று) சக்தி அதிகரித்து சுண்ணாம்பு கல்லை போன்று கருமை நிறத்தில் உண்டாகும். இது உணவிலுள்ள பாஸ்பேட் எனப்படும் உப்புகள்  மூலம் இவ்வகை கல் ஏற்படுகிறது.

பித்த கல்லடைப்பு  (acsalate stone)

இது கடினமான கடல் பஞ்சு போன்று இருக்கும். இவ்வகை கற்கள் சுடர்முனை கொண்ட முற்கள் போல் இருப்பதால் நீர் குழாய்களில் காயம் ஏற்படுத்தும். இதனால் சிறுநீருடன் இரத்தமும் வரும். தாங்க முடியாத வலி உண்டாகும். சிறுநீர் சொட்டு சொட்டாக கழியும். தாங்க முடியாத இடுப்பு வலியும் வரும்.

சிலேத்தும கல்லடைப்பு (urate stone)


இவ்வகை கல்லடைப்பு பொடி துகள்களாக இருக்கும். கப நோய் உள்ளவர்களுக்கு இவ்வகை கற்கள் தோன்றும். புளிப்பு நீர்(யூரிக் ஆசிட்) அதிகமாவதாலும் இது தோன்றும்.

தொந்த கல்லடைப்பு (multiple stone)

இவ்வகை கற்கள் உடலில் கல்லிரல், மண்ணீரல், கணையம்,உமிழ் சுரப்பிகள் போன்ற உறுப்புகளில்  வாதம், பித்தம், கபம் இவற்றின் சீரிண்மை பொறுத்து ஏற்படும். இவைகள் பல நிறம், மற்றும் வலிகளை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்

அடிக்கடி சொட்டு சொட்டாக சிறுநீர் வெளிபடுதல், பிறப்பு உறுப்புகளில் வலி உண்டாதல், தொடை பகுதியில் அதிக வலி உண்டாகி மேல் பகுதியில் பரவுதல், கண், காதுகளில் சிவப்பு நிறத்துடன்  வலி உண்டாதல். இவைகள் சிறப்பான அறிகுறிகள். சிறுநீரின் நிறம், சிறுநீர் கழிக்கும் போது வலி இவற்றை கவனித்து உடன் பரிசோதனை செய்து கற்களை களைந்து  விட வேண்டும்.

தடுக்கும் முறைகள்

1) கற்கள் உண்டாகாமல் தடுக்கும் ஆற்றல் தண்ணீருக்கு  உண்டு.  சுத்தமான நீரை (காய்ச்சி      ஆற வைத்த நீர்) உணவிற்க்கு பின்பு போதுமான அளவு எடுத்துக் கொள்ள             வேண்டும்

2) வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கக் கூடாது.

3) உப்பை வறுத்து உபயோகப் படுத்த  வேண்டும்

4) வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்

5) அதிக வெயில், பனி  குளிரூட்டிய அறைகளில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்கவும்

6) சிறு நீரை அடக்காதீர்கள்

7) பால், பாலாடை கட்டி, மீன்,முட்டை, இறைச்சி வகைகள் அதிக புளிப்பாக பழங்கள்  இவற்றை தவிர்க்க வேண்டும்

8) இரவில் அதிக நேரம் மின் விளக்கு கணிப்பொறிகளில் வேலை தொலைகாட்சி பார்த்தல் இவற்றை தவிர்க்கவும்.

9) அதிக எண்ணெய் மசாலா அடுமனை உணவுகள்(பேக்கரி) அரைவேக்காடு உணவுகள்(பீட்சா) இவற்றை தவிர்க்கவும்.

10) உண்ட பின் குறு நடை கொள்ளுங்கள்.

மேற் கண்ட கற்களை சித்த மருத்துவத்தின் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல், எளிய முறையில் கரைத்தும், உருவாகாமலும், வலி இல்லாமலும் சிறப்பான சித்தர் மருந்துகளால்  3-7 நாட்களுக்குள் சிகிச்சை அளித்து (எவ்வளவு நாட்களானாலும் ) சரி செய்யலாம்.

ஓம் பிரணவ மந்திரம்
பிரணவ மந்திரம் என்னும் ஓம் பற்றி  நிறைய கருத்துகளை நாம் அறிவோம். இது ஓ மற்றும் ம் என்ற இரண்டு எழுத்துகளை கொண்டது. இது ஆதி காலம் தொட்டு தமிழர்களால் வழங்கி வருவது. இதற்கான விளக்கம் என்ன என்று கேட்டால் இது பிரணவ மந்திரம் என்றும், உயிர் மந்திரம் என்றும், முருகன் சிவனுக்கு சொன்னது என்றும், முதற் சித்தரான தட்சினமூர்த்தி மறைவல்லோர் நால்வருக்கு சொன்னது என்றும், அண்டம் என்னும் வான்வெளி வெடித்து சிதறும் போது உண்டான  ஒலி என்றும், இதுவே முதல் தொனி என்றும், ஆர்பரிக்கும் கடல் எழுப்பும் நாதாந்த ஓலி என்றும், பெருமாள் கையில் வைத்துள்ள வலம்புரி சங்கு எழுப்பும் ஒலி என்றும் இன்னும் பல்வேறு வகையான கட்டு (இட்டு) கதைகள் இந்த ஓம் என்னும் இரண்டு தமிழ் எழுத்திற்க்கு வழங்கி வருவதை நாம் காண்கிறோம். இதற்கான உண்மை விளக்கம் இதுவரை யாரும் சொன்னதாக தெரியவில்லை. தமிழ் மொழியானது இயற்கை என்னும் பேரண்டத்திலிருந்து உதித்த உயிரினங்களிலிருந்து வெளிபட்டு உயிரை இயக்கும் உன்னத மொழியாகும் என்று தமிழ் கற்ற பெரியோர்கள் கூறுவார்கள். இப்படி  இருக்க கட்டும் இட்டும் கூறும்  கருத்துகளையே உண்மை என்று நம்பி வருவது வேதனை அளிக்கிறது. மோசே காலத்தில் கிருத்துவக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் அங்கிருந்து கைபர் போலன்  கணவாய் வழியாக சம்பு நாடு என்றும் பாரத நாட்டில் குடியேறிய "செர்மானியர்" என்னும் யூதர்களால் ஈர்க்கப்பட்ட தமிழ் நாகரிகம் அவர்களுடையதாக (பிறமண்ணினர்) ஆக்க வேண்டும் என்ற கொடூர சிந்தனையின் விளைவே. இந்த மறைக்கப்பட்ட(இட்டும் கட்டும்) உண்மைக்கு காரணம். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உண்மையை சான்றோர் வழி நின்று காண்போம். நமது உடலானது மூன்று அடுக்குகளாக உள்ளது  அதாவது ஊண் உடல், பூத உடல், வளி உடல்(சூட்சும உடல்) ஆகும். இந்த உடல்களானது காற்றால் இயக்கம் பெறுகிறது. இந்த காற்றானது உடலின் மூக்கு வழியே சென்று உயிரை இயக்குகின்றது. அவ்வாறு இயங்கும் காற்றை சித்தர்கள் உயிர் மெய் உயிர்மெய் என்று பெயரிட்டு  அவற்றைக்கு வரி வடிவம் தந்து எழுத்து என்றார்கள். அவ்வாறு கண்ட ஒலிகள் 12- உயிர், 18- மெய் எழுத்து, 216 உயிர்மெய் எழுத்துக்கள் என்று வகைபடுத்தினர். இதையே தமிழ் என்றனர்.இதில் ஓ என்பது மூக்கை குறிக்கும் எழுத்து ஆகும். மூக்கு என்பது மூச்சு உறுப்பாகும். ம்  என்பது (உடல் )மெய் எழுத்தாகும். "ம்" என்ற மெய் எழுத்து மட்டுமே மேலே குறிப்பிட்ட மூன்று( ஊண், பூதம், வளி  உடல் ) காற்று உள்ளே சென்று உயிருக்கு வலிமை சேர்க்கிறது அதாவது ம் என்ற மெய் எழுத்து மட்டுமே மொழிக்கு முதலிலும் இடையிலும் கடையிலும் வரும் தன்மை உடையது. மேலும்

"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இல"

இக்குறளில் மகாரம் இல்லாததால் உச்சரிக்கும் போது உதடு ஒட்டப்படுவதில்லை. ஆதலால் உயிரோடு இயக்கபடுவது இல்லை.

ஓ என்பது உயிரெழுத்து

ம்  என்பது மெய் எழுத்து
ஓம் என்பது  உயிர் + மெய்  எழுத்தாகும். ( உயிர் + உடல் சேர்ந்தது)

உடல் + உயிர்  இதுவே நமக்கு  ஆயுள் அதாவது (பிரமாணம்)(உயிரின் கால அளவு) தருவது.இந்த பிரமாணம் தழுவி  பிரணவ ஆயிற்று. மந்திரம் என்பது மறைவான மொழி. இந்த உடல் + உயிரின் இரகசியத்தை (மறைவை) கூற வந்த  மொழியே தமிழ் என்றும் ஓம் என்றும் வழங்கும் பிரணவ மந்திரம்  ஆகும். இது 1008 முறை  சொல்வதோ, செபிப்பதோ, மனனம் செய்வதோ இல்லை. இது ஒரு தந்தரமான செயல் முறை ஆகும். இதை நல்ல குருநாதர் மூலம் அறிந்து ஆயுள் நீட்டிப்பு  பெற்று. இன்புற்று வாழ்க.

இதை கண்டு கொண்ட  மேல் நாட்டியிலிருந்து மதம் பரப்ப வந்த  வீரமாமுனிவர். சி.யு. போப் தேவநேயபாவணர் போன்றோர் மதத்தை விடுத்து தமிழுக்கு அடிமையானார்கள். நாம் இன்னும்  தமிழ் கற்காமல் சாகிறோம். கடன் பெற்ற அறிவைக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்."ஓமெனும் ஓங்காரத் துள்ளே யொருமொழி
ஓமெனும் ஓங்காரத் துள்ளே யுருவரு
ஓமெனும் ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனும்ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே"


                                                திருமந்திரம்

"ஊணும் உயிரும் ஒரு வழி ஓட
காணும் ஞானத்தை கண்டிடு தமிழாலே"       

   
                                                    நெருஞ்சில் சித்தர்.

சிவவாக்கியர் காட்டும் இராம நாமம்


"அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப்  பனங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தை ராம  ராமராம ராமஎன்னும் நாமமே"


                                                             என்கிறார் சிவவாக்கியர்

இப்படிபட்ட மேன்மை உடையதா இராம நாமம்? என்று சிந்திப்போம்

அரே ராம அரே ராம என்று சொல்லியும், சிறீ ராம செயம் என்று எழுதி வருவதையும், சிலர் இராம இராச்சியம் அமைய வேண்டும் என்று முழங்கி வருவதையும் நாம் அறிவோம். இப்படிபட்ட ராமன் யார்?

 வால்மீகி என்பவர் வடமொழியில் இராமாயணம் என்னும் காவியம் எழுதினார். அதில் இராமன் தெய்வப் பிறப்பாக பிறந்து, இராவணன் என்னும் அரக்கனைக் கொன்று அரசபை ஏற்று, இந்த நாட்டை ஆண்டதாக கூறப்படும் செய்தியை நாம் அறிவோம். இராம நாமத்தை போற்றும்படிக்கு அவர் என்ன செய்தார் என்பதை காண்போம். இராமன் தசரதனுக்கு மகனாய் பிறந்து, 14 வருடம் கானக வாழ்வு வாழ்ந்து, சீதையை மணம் புரிந்து, மீண்டும் கானக வாழ்வு வாழும் போது இராவணனால் மனைவியை இழந்து, மீண்டும் மனைவியை மீட்டு அயோத்தி சென்றடைந்தார் என்று இராமாயணம் கூறுகிறது.

இராமாயணத்தில் இராமன் குணம் எடுத்துக் காட்டபடுகிறது. இராமன் தன் மனைவியை ஒத்த மார்பகம், கூந்தல் உள்ள பெண்களை கண்டால் வெறுப்பதும், மேற்படி மார்பகம், கூந்தல் அறுப்பவர் என்றும், (சூர்ப்ப நகையை  இவ்வாறு அறுத்ததே இராவணனுக்கு கோபம் ஏற்படுத்திற்று. ஆதலால் சீதையைத் தொடாமல் சிறை எடுத்துச் சென்றான். தங்கையின் மூக்கு, காது அறுப்பவரை எந்த அண்ணன் ஏற்ப்பான்?)

சுக்ரீவனை தன் அண்ணன் வாலியிடம் இருந்து பிரித்து தனக்கு சாதகமாக மாற்றினார், வாலியை மறைந்து நின்று அம்பு எய்து கொன்றார்.  வாலியின் மனைவியை  தனக்கு உதவிய சுக்ரீவனுக்கு மனைவி ஆக்கினார்.(?) 63 கலைகள் பெற்ற இராவணனைக் கொன்றதால் "பிரம்ம கத்தி" தோசம் பெற்றார்.  (சான்றோரைக் கொன்ற அழியா பாவம்)  (பிரம்ம கத்தி விலகியதாக நூலில் கூறப்படவில்லை.) தன் நாட்டு மக்களில் ஒருவன் தன் மனைவியை தவறாக கூறியதால் தீயில் ஏற உத்தரவிட்டார். தன் மனைவி கர்ப்பமாக இருந்த  போதும் இரக்கமில்லாமல்  கானகத்தில் கொண்டு விட்டு விட்டார்.

இராமனுக்கு இப்படிபட்ட  மேன்மையுடைய (கடவுள்) குணம் இருந்ததாக கூறப்படுகிறது. சாதாரண சம்சாரி வாழ்க்கையைக் கூட வாழாதவர், பெண்களின் அங்கம் அறுப்பவர், சகோதரர்களிடையே  கோள் மூட்டுவது, அறிவோடையோரை கொல்வது, இரக்கமற்ற மனம் இது தான் கடவுளின் குணமா?  இப்படிபட்ட  இராமனை நாள் தோறும் எழுதுவதும், செபிப்பது முறையாகுமா?. இப்படிபட்ட கொடூரமான இராம காதையை எழுதிய வால்மீகியை இந்த உலகம் ஏற்றுக் கொண்டது வியப்பாக இருக்கிறது!!.இதை அறிந்த கம்பனும் அறிவுக்கும், தர்மத்திற்க்கும் புறம்பான இராம காதையை தமிழில் எழுதி தமிழ் தாய்க்கு ஆறாத வடுவை ஏற்படுத்திவிட்டார். அறிவிற்க்கும், தர்மத்திற்கும் புறம்பான ஒன்றை நயம்பட உரைத்தால் இந்த உலகம் ஏற்கும் என்பது புலனாகிறது. வேதம், புராணம், இதிகாசம், ஆச்சாரம், மதம், சாதி, வழிபாடு இவற்றை விடுத்து அறிவு ஒன்றையே ஆயுதமாக கொண்ட சித்தர் மரபில் வந்த சிவவாக்கியர் மேற்படி அடாத செயல் செய்த   இராமனை வழிபட (செபிக்க)  சொல்லி இருப்பாரா? சற்று சிந்தனை செய்ய வேண்டும்.

மந்திரம் என்பது மறைமொழி  என்பர். சித்தர்கள் ஒன்றை குறிப்பின் மூலமே(பரிபாசை) உணர்த்துவர் என்பதை அறிவோம். மேலும் சிவவாக்கியர்

"மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்றுநீர் மரித்தபோது சொல்வீரோ"


"உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்"


"வேதம் ஓது வேலையோ வீணானதாகும் பாரிலே"

"நூறு கோடி மந்திரம் நூறு கோடி யாகமம்
நூறு கோடி நாளிலிருந்து பாடினாலுமென் பயன்""மூச்சிரைப்பு வந்த போது வேதம் வந்து உதவுமோ"
           
                                                                   என்கிறார்.

அப்படியென்றால் உண்மை என்ன? என்று ஆராய்ந்தால் அந்தி, மாலை, உச்சி வேளையும், தீர்த்தம், தர்ப்பனம், தபம், செபம், ஞானம் இப்படி எல்லாம் அறிவிக்கின்ற பொருள் எது என்றால்  "வாசி" ஆகும். அதுவே உயிருக்கு உறுதி தருவதாகும்.

 உண்மையான இராம நாமம் என்பது "இரு சுவாசம்" ஆகும்

ர- இரவி ( சூரியன்) (வலது மூச்சு)
ம- மதி( சந்திரன்) (இடது மூச்சு)


இதுவே "ரம" என்று வழங்கி வருவது. இதை "ராம" என்று இலக்கனத்திற்காக மருவி வழங்கி வருகின்றோம். இது வால்மீகி, கம்பன் காட்டிய இராமன்  இல்லை. இதை எப்படி செபிப்பது என்று குருவின் மூலம் அறிக. இதை விடுத்து புராண, இதிகாச இராமனை 1008 முறை செபித்தாலும், எழுதினாலும், சுந்தர காண்டத்தை சுருக்கமாக ஓதினாலும், நல்ல கதி வாய்க்காது.அப்படி செபித்தாலும், ஓதினாலும் வரும் பயன் துன்பமே. ஏனெனில் "எண்ணம் போல் வாழ்வு" என்பார்கள். எதை நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய். புராண இதிகாச இராமனை நினைத்தால், நம் வாழ்வும் அவ்வாறே அமையும். அறிவுடையோர் சிந்தித்தது தெளிவு பெறுக.

"அண்டர்கோன் இருப்பிடம் அறிந்து உணர்ந்த ஞானிகள்
கண்டகோயிலை தெய்வமென்று கையெடுப்பதில்லையே"


                                                                        சிவவாக்கியர்.

இறைவன் பலியை ஏற்றுக் கொள்கிறானா?

கோயில் விழாக்கள், குல தெய்வ வழிபாடு, சிறப்பு நிகழ்ச்சிகள், பண்டிகைகள் எப்படி எது நடத்தினாலும் பலி என்பது உண்டு என்பதை நாம் அறிவோம். இது  இல்லையென்றால் செல்லாதிருப்பவர்களை காண்கின்றோம். ஆதலால் பலி என்பது நிகழ்ச்சிகளுடன் கலந்தது என்றாகி விட்டது. இயற்கையை வழிபட்ட ஆதி மனிதன் எப்படி பலியை ஏற்றுக் கொண்டான் என்பதையும், அதை இறைவனோடு எப்படி தொடர்புபடுத்தி கொண்டான் என்பதையும் சற்று அறிவோடு சிந்திப்போம். ஆதியில்  மனித இனம் காடுகளில் மிக குறைந்த அளவே வாழ்ந்து வந்தனர். மிருகங்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வரும் போது அவை இடும் சாணம் மிக அதிக அளவு ஓரிடத்தில் நிறைந்தது. அவ்வாறு நிறைந்த சாணத்திலிருந்து ஒரு விதமான வாயு(இன்று சாண எரி வாயு என்றும் மீத்தேன் வாயு என்றழைக்கப்படுகிறது). இது தானே எரியும் தன்மையுடையது. அன்று இதை கொள்ளி வாய் பிசாசு என்றனர். இந்த வாயுவானது சூரிய வெப்பத்தாலும் காய்ந்து போன சருகுகள், இலைதழைகள் தீப்பற்றி  பல நாட்கள் எறிந்தது.இதனால் மனித குலமும், விலங்கினங்களும் பெரிதும் துன்பம் அடைந்தன. அவ்வாறு எரிந்து  போன சில விலங்கின மாமிச துண்டுகளை மனிதன் சாப்பிடும் போது சுவை ஒன்றை பெற்றுக் கொண்டான். ஆதியில் மனிதன் காய்,கனி, கிழங்குகளை உண்டு வாழ்ந்து வந்தான். இவ்வாறு தீயினால் வருந்தி வரும் வேளையில்  மனித இனத்தில் சற்று அறிவு பெற்றவன் இந்த நெருப்பு  சாணத்தில்ருந்துதான்  உற்பத்தியாகிறது என்று புரிந்து கொண்டான். இதை மற்றவர்களுக்கு எடுத்து கூறி விளக்க முடியாமல். இது கடவுள் தரும் தண்டனை என்றும், நம் மீது கோபம் கொள்கிறார்.  ஆதலால்  கொள்ளி  வாய் பிசாசை ஏவி விடுகிறார் என்றும், இதை மாற்ற அவருக்கு பல மிருகங்களை பலியிட வேண்டும் என்று கூறினான். மிருகங்களை கண்டு அஞ்சி வாழ்ந்த மனிதன் அவற்றையே கொல்ல முனைந்தான். கல், பெரிய மரக்கிளைகள் இவற்றை பயன்படுத்தி தெய்வ அடையாளமாக ஏற்படுத்தி அதற்கு முன் பலியிட வேண்டும் என்றும் கூறினான். பலியிட்ட மிருகங்களை சுட்டு எல்லோருக்கும் உணவாக அளித்தான். இதன் மூலம் மேற்படி தவறை எல்லோருக்கும் பொதுமை படுத்தினான். கல், பெரிய மர கிளைகள், பெரிய மரங்கள் இவை இன்று ஆலயங்களாகவும், தல விருட்சமாகவும், கற்சிலையாகவும் உருப் பெற்று விட்டது. பலிக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் தெய்வத்தின் ஆயுதமாக வைத்து வழிபட்டனர்(வருகிறார்கள்).இப்படித் தான் இறைவனுக்கென்று பலி இடுதல் தொடர்ந்தது. இவ்வாறு ஏற்படுத்தி  புராணங்களாவும், வேதங்களாகவும், மதங்களாகவும் எழுதி வைத்துக் கொண்டு பின்பற்றி வருகின்றோம்.
தமிழில் பிள்ளைக்கறி நாயனார் வரலாறும், இசுலாமியத்தில் இப்ராகிமின் வரலாறும், கிருத்துவத்தில் மோசே வரலாறு,ம் இதை போன்ற நிகழ்ச்சி சொல்லப் படுகின்றது.அவர்கள் இறைவனின் ஆணை, காட்சி பெற்று செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் நாம் எந்த இறைவனின் ஆணை அல்லது அசரீரி, காட்சி பெற்று இந்த செயலை செய்கின்றோம். இது எங்கள் பழக்கம் ,சமயம், மதம் என்று சொல்லி தவறுகளை மறைக்கின்றோம். ஒருவன் இது என் பழக்கம், தொழில் என்று திருட்டையும், கொலையையும் செய்வதை இந்த மானுடம் ஏற்றுக் கொள்ளுமா? அனைத்தும் மனிதனுக்காக படைத்தான்  என்று கூறிவரும் மனிதன் நோயும், இயற்கை சீற்றத்தையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளவில்லையே!

"பிதாவே என்னை மன்னியும்", "அல்லாவே உன் புறம்பான செயலை மன்னியும்", "வினையே ஒரு தேகம் கண்டாய்" என்று சொல்லி வரும் மானுடம். அந்த பாவம் அல்லாவிற்கு புறம்பான வினை என்னவென்று இதுவரை சிந்திக்க வில்லையே!. "நான்  வழியும், சத்தியமும், சீவனுமாய் இருக்கிறேன்","அல்லா அனைத்து உயிர்களுக்குள்ளும் "நூர்" ஆக இருக்கிறான்". சீவன் என்ன சிவன் என்ன வேறில்லை என்பர். பெரியோர்களின் மதிப்பு மிக்க அறிவுரையை மதிக்க வில்லையே!.

முல்லைக்கு தேர் கொடுத்த பாரியும், மயிலுக்கு போர்வை கொடுத்த பேகனும், புறாவிற்கு தசை அரிந்த சிபி சக்கரவர்த்தியும், பசுவுக்காக மகனைக் கொன்ற மனுநீதிச் சோழுனும்,பறவைகளுக்காக கற்ப தேகத்தை சிதைத்த வள்ளுவரும். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரும் வாழ்ந்த பூமி தான் இது. பிற உயிர்களின் துன்பத்தை தன் துன்பமாக காணவில்லையா? இந்த வள்ளல்கள். இவர்கள் வாழ்ந்த இந்த பூமியில் தான் இத்தனை கொடுமைகள்! அறிவுடையோர் சிந்திக்க... விலங்கினங்களை கொல்லாமல் விட்டு  விட்டால்  பெருகிவிடும் என்பார்கள். இவர்களை விட முட்டாள்கள் யாரும் அல்லர். சர்வத்தையும் படைக்கும் இயற்கைக்கு தெரியாதா எது வேண்டும், எது வேண்டாம் என்று. இந்த அண்டமானது ஒளி அணுக்களில் இருந்து திணிவு பெற்று பஞ்ச பூதங்களாகவும் கோள்களாகவும் இயங்கி வருகிறது ( தங்கத்தை பொருட்டே வாணிபம் நடப்பது போல்) இந்த திணிவு சிதைந்து மீண்டும் தனது ஆதி  நிலை(ஒளி அணுக்களாக) மாற்ற வேண்டும். இதைத் தான்  இயற்கை ஒழுங்கமைவு(Eco Balance) என்கிறோம். இதற்காகத் தான் இந்த  பூமியில் 84 லட்சம் உயிர்கள் தோன்றுகின்றன. அதாவது பூமியில் கிடைக்கும் புல் ,பூண்டு ,உலோகம், தாது பொருள்கள், உப ரசங்கள் இவற்றை தின்று சீரணித்து மீண்டும் ஒளி அணுக்களாக (காந்த அலை) மாற்றும் கருவியாக தான் உயிர்கள் தோன்றுகின்றன.

இந்த உயிர்கள் ஒரே நாளில் கொல்லப் படும் போது ஒளி அணுக்களின் தன்மாற்றம் பாதிக்கப் படுகிறது. இதுவே பஞ்ச பூதத்தின் மாற்றத்திற்கு காரணம். இந்த மாற்றத்தால் இயற்கை சீற்றம் ,பூகம்பம், பெரும் மழை, பஞ்சம் போன்ற பாதிப்புகளுக்கு முக்கிய காரணம். இதை அறிவுடையோர்  உணர்ந்து தெளிக. உயிர்களை கொல்வது நடைமுறை இயற்கை சட்டத்துக்கு புறம்பானது. அன்பும் கருணையும் கொண்ட இறைவனை நாம் அன்பும் கருணையும் இல்லாமல் அவன் அன்பும்  கருணை கொண்டு  படைத்த உயிர்களை கொன்று அவனுக்கே படைப்பதை இறைவன் ஏற்றுக் கொள்வானா? அறிவுடையோர்  பதில் தருக..

"பராபரம் ஒன்றே தெய்வம்
அனைத்து உயிரும் அதுவாச்சே"

                                                   அகத்தியர்


"வெள்ளைநிற மல்லிகையோ வெறெந்த மாமலரோ
வள்ளல் அடியினைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளைநிற பூவுமல்ல வெறெந்த மலருமல்ல
உள்ள கமலமடி உத்தமனார் வேண்டுவது"


                                                        விபுலானந்த அடிகள்

"கோவிலில் பலி கொடுக்குங் 
கூவின சேவல் ஆடு 
ஆவிகள் துடித்து ஓடுதே
அறிவிழந்த பாவயென்றே சாபமிடுதே "

                                                       சித்திர முத்தடிகள்

"புண்டரிக மலர் சொரிந்து
புண் நெறி தவிர்த்து வாழ்வோம்"

                                               நெருஞ்சில் சித்தர்