Wednesday, October 12, 2011

ஏழு பிறப்புகளும் / ஏழு நோய்களும்


ஏழு பிறப்புகளும் / ஏழு நோய்களும் 
"ஏழ் பிறப்பும், உன்னை விடாது"
"ஏழு பிறப்பும், ஏமா புடைத்து"
"ஏழு சென்மம் எடுத்தாலும்"
இது போன்று ஏழு பிறப்பு இருப்பதாக தமிழ் மக்கள் கூறிவருது இன்றும் வழக்கத்தில் இருந்துவருகிறது. இவற்றின் உண்மை என்ன? 
நாம் உண்ணும் உணவானது இரைப்பையில் சென்று சீரணம் ஆகி, கல்லீரல், மண்ணீரல், பருகும் நீர் மூன்றும் கலந்து ஒரு விதமான நீர்மம் ஆகும். இந்த நீர்மம் 7  விதமான நீர்மம் ஆகும். இந்த 7 விதமான தாதுக்களாக பிரியும். அவை முறையே இரசம், இரத்தம், கொழுப்பு, நரம்பு, மஞ்ஞை, சுக்கிலம் என்பனவாம். இவைகள் தாம் நம்மை வளர்க்கும் தாதுக்கள்(Occult  Power ) ஆகும். இவைதான் நமக்கு ஏழு பிறப்பு என்பது. இவை சீராக நடந்தால் நல்ல ஆரோக்கியமான உடல்  வளம் பெறலாம். மாறாக நடக்குமென்றால் நோய் என்கிறோம். மேற்கண்ட காரணத்தால் 'அன்ன தானம்' மேன்மையை தானமாக கருதப்படுகிறது. மேற்படி தாதுக்களில் ஏற்படும் குறைகள் காலத்தால் தொடர்ந்து இருக்குமென்றால் அவை, நோய், வியாதி, உரோகம், பிணி,பீடை, சீக்கு,கன்மம் என்னும் ஏழு விதமான குற்றங்களை(நோய்களை) தரும்.

மேற்படி சீரணம் சீராக நடக்க வேண்டும் என்றால் முறையான உணவு உட்கொள்ள வேண்டும். கொளுத்த, பருத்த, வறுத்த உணவுகளை உண்ணக்கூடாது. மேற்படி சீரணம் எப்படி நடக்கிறது என்றால் நாம் நம் அன்னை, தந்தையிடம் இருந்து கடன் பெறப்பட்ட நாத, விந்து, கலை(Entoplasm, Cytoplasm,  Ectoplasm) என்ற அடிப்படையான மூன்று சக்திகளால் ஆகும். எனவே உடம்புக்கு 'கடம்' என்று பெயர். இதையே "நாத விந்து கலை ஆதி நமோ நாம" என்று அருணகிரி பெருமான் விளக்கியுள்ளார். இந்த சக்திகள் நம் உடம்பில் உப்பு வடிவமாக இருக்கின்றன. அவைகள் மொத்தம் 27 ஆகும். ஆதலால் தான் "உப்பிட்டவரை உள்ளவும் நினை" என்பது. ஓட்டலில் உப்பு போடும் ஊழியரை (அ)  உறவினரை அல்ல. நம் உடம்பை தந்த தாய், தந்தையரையே குறிக்கும். நாம் இருக்கும் வரை நினைத்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்பது. 

மேற்படி விந்து, நாதங்கள், கலையில் ஏற்படும் மாறுபாடுகளே மரபு நோய்களுக்கு காரணம். ஆதலால் கண்ட உணவுகளை உண்டு தாதுக்களின் குற்றத்தை அதிகப்படுத்தி நோய்களை பெருக்கி கொள்ள வேண்டாம். 
 
"நோய்க்கு இடங்கொடேல்"  - அவ்வை பாட்டி  
விந்து குற்றம் அதிகமானால்  -- கண் நோய்கள், நீரழிவு, மேக நோய், மோக நோய், நரம்பு தளர்ச்சி, வாத நோய் வரும்.
நாதம் குற்றம் ஏற்பட்டால் -- காது கேளாமை, பக்கவாதம், முடமான குழந்தைகள், கருப்பை கோளாறுகள் வரும்.

கலை குற்றத்தால்  --- குறைந்த ஆயுள், ஊமை குழந்தைகள், சுவாச கோளாறுகள், இரண்டு தலை, அதிகமான விரல்கள்(உறுப்புகள்)  உள்ள குழந்தைகள், பைத்திய நோய்கள் வரும். 

இவற்றை மருந்துகளை மூலம் நிவர்த்தி செய்வது  முடியாத செயல். 

எனவே அவரவர் நல்ல உணவு உண்டு, ஒழுக்கத்தோடு வாழ்வதும், பின்வரும் சந்ததிகளை வாழவைப்பதும் நமது கடமை. வள்ளுவரும் இதை,
"தம்பொருள் என்பதாம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினால் வரும்" என்கிறார். 

உடல் வலியா ??? இனி கவலை வேண்டாம் !!!!

உடல் வலியால் தொல்லையா?
அசதி, சோர்வு, மயக்கம், குறைந்த ரத்த அழுத்தம் (Low BP ) இவற்றிற்கான எளிய தீர்வு.
மேலும் மன அழுத்தம் (டென்சன்) மிகுதியால் சில பேர் டி குடிக்க நினைப்பார்கள், புகை பிடிக்க நினைப்பார்கள், அதிகம் சாப்பிடுவார்கள்.   
டென்சனை குறைக்க ஒரு அற்புத வழி         
 1. சிறிது (நெல்லிக்காய்) அளவு புளியை எடுத்து ஊறவைத்து, புளி நீரை எடுத்துக்கொள்ளவும் (250  மில்லி). 
 2. பத்து சொட்டு எலுமிச்சை சாறு எடுத்துக்கொள்ளவும்.
 3. சுக்கு, ஏலக்காய், கருப்பட்டி( இவை மூன்றையும் நன்கு பொடி செய்து கொள்ளவும் ) அல்லது நாட்டு சர்க்கரை 
 4. கொத்தமல்லி இலை அல்லது காய்ந்த கொத்தமல்லி 
 5. அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

இந்த பானகத்தை பருகி பாருங்கள்.
மேலே சொன்ன அத்தனையும் எங்கே போயிற்று என்று?

சந்தோசம் தானே இப்போது.    

நம் உடலை இயக்கும் ஆறு பூதங்களை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்
நம் உடலை இயக்கும் ஆறு பூதங்களை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம் 
நமது உடலை பஞ்ச பூதங்களே இயக்குகிறது என்று நாம் அனைவரும் அறிவோம். ஆறாவதாக ஒன்று இருப்பதை பற்றி வெகு சிலரே அறிவர்.

மண், காற்று, ஆகாயம், நெருப்பு, நீர் ( ஐந்து )
விண் காந்த துகள்கள் - ஆறு. தாவரங்கள் மட்டுமே இந்த விண் காந்த துகள்களை  உட்கொண்டு, அதன் மூலம் நம்மை வாழ வைக்கிறது. 
 நம் பழக்க வழக்கத்தினாலும், உணவு முறையாலும் இந்த  ஐந்து பூதங்களை சீரழித்து [ சீ- என்றால் உயிர், உயிரை அழித்துக் கொள்கிறோம்]

அதிகம் உண்பது, மாமிசம் உண்பது, முறையற்ற பழக்கங்கள். இதனால் பஞ்ச பூதங்கள் கழிவுகளாக வெளியேறிவிடுகிறது. இதன் மூலமும் ஒருவர் நோய் வாய்படுவர்.

காற்று சக்தி  - வேர்வையாக 
மண் சக்தி  - மலமாக 
நீர் சக்தி - சிறு நீராக 
ஆகாய சக்தி  -  கண்களில் பீளையாக
அக்னி சக்தி  - கபமாக - சளியாக 
விண் அணுக்கள் - வாயுவாக  வெளியேறுகிறது.  
              இறைவன் நிர்மலமானவன். மலம் அற்றவன். தாவரங்களும் மலமற்ற ஒரு அறிய உயிரினமே. தாவரத்தை மட்டுமே உண்பவன் எளிதில் இறைவனாகலாம்.
"கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா 
 உயிரும் கைதூக்கி தொழும். - திருவள்ளுவர்"

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நிறுத்தவும் - ஆபத்து!!!"மறந்தது வேண்டா யாக்கைக்கு அற்றது
போற்றி உணின் - வள்ளுவம் 
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை எரி முன்னர் 
வைத்தர் போல் கெடும்  - வள்ளுவம்'


அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நிறுத்தவும் - ஆபத்து!!! 
பல பல பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளின் மூலமும் நாம் அனைவரும் அறிந்தது அதிகாலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்துவது மிகவும் சிறந்தது என்று???பொய் இப்படி இருக்க உண்மை யாதெனில் வெறும் வயிற்றில் கட்டாயம் யாரும் சிறிதளவு கூட தண்ணீர் அருந்த கூடாது???

இப்போது சற்று அறிவியல் ரீதியான விளக்கத்தினை பார்ப்போம்.     
நாம் இரவில் உறங்கும் போது வளர்சிதை மாற்றம் நடைபெறுவதை அறிவோம். இந்த வளர் சிதை மாற்றத்தின் போது நமது மண்ணீரல், கல்லீரலில்   மற்றும் வயிற்றில் பல விதமான வேதி பொருட்கள் உருவாகிறது.
   
நீன நீர் 
நீன நீரானது ஒரு வகை அமிலமே . இது நமது உடலில் உள்ள ஒரு  மசகுப் பொருள், உராய்வு காப்புப் பொருள், மசகு (எண்ணெய்).
ஜீவ நீர்
ஹைட்ரோ குளோரிக் அமிலமும், நைட்ரிக் அமிலம்  - நொதித்தளுக்கு பயன்படும் வேதி பொருள் - இந்த இரண்டு அமிலமும் கலந்த கலவைக்கு பெயர் ஜீவ நீர். இந்த ஜீவ நீரானது நமது உடலில் நீர்ம நிலையில் இருக்கும் ஒரு நெருப்பு. இதை தான் பெரியோர்கள் ஜடராக்னி என்று அழைப்பர்.   
இந்த  இரண்டு  நீர் மட்டுமே ஜீரணத்திற்கு  அதாரம். ஜீரணத்தினால் மட்டுமே நாம் உயிர் வாழ்கிறோம். இந்த இரண்டு நீரினால் மட்டுமே உணவானது நொதித்தளுக்கு உட்பட்டு உணவு செரிகப்படுகிறது. ஜீவ நீர் என்ற ஜடராக்கினி[இது ஒரு நீர்ம நிலையில் உள்ள ஒரு தீ ] உணவை எரித்து சாம்பலை மலமாகவும், நீராவியை சிறு நீராகவும் வெளி தள்ளுகிறது. இந்த இரு வேலைக்கும் நின நீரானது உதவுகிறது.   
[குறிப்பு: நமது வயிற்றில் மிச்சியோ , கிரைண்டரோ உணவை அரைப்பது இல்லை]      

மற்றும் பல விதமான சுரபி நீர்களும் உற்பத்தியாகிறது. இவை அனைத்தும் உடலிற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. மேலும் இவை அனைத்தும் சேர்ந்து வேதிவினை புரிய தயாராகி  இருக்கும் நிலையில் நாம் அருந்தும் நீரானது வேதித் தன்மையை குறைத்து நச்சு பொருளாக மாறுகிறது. [ இதன் விளைவாக நம் உடலில் நாற்பத்தி இரண்டு வகையான வெப்ப நோய்கள் ஏற்படுகிறது. மேலும் பித்த வியாதிகளான நீரழிவு மற்றும் மேக நோய்(மோக நோய்) ஏற்படுகிறது. 

இந்த ஒரு அறியா பழக்கத்தினால் பல பேர் நோயில் சிக்குண்டு கொள்கிறார்கள். 
காலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்துவதால் விரைவில் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வெளிப்படும்.   

 நாம் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதனால்  ஏற்படும் விளைவுகளை தெளிவாக மேலும் விளக்கம் அளிக்கிறோம். காலங் காலமாக  நாம் பழகிவரும் இத்தவறான இச்செயலை நாம்  நிறுத்தவேண்டும். இது வியாபாராம் நோக்கில் இச்செய்தியை பரவி இருக்கிறாக்கள்.ஏனென்றால் நாம் உறங்கும் நேரத்தில்  நாம்  உறுப்புக்கள் சாந்தமாக இருப்பதால் மொத்த உடலிலுமே வெப்ப சக்தி குறைந்துகாணப்படும். இப்படி இருக்க நமது  உடலில்  முன்று  முக்கிய உறுப்புகளான இருதயம், சிறு குடல், கல்லீரல் வெப் சக்தியால் மட்டுமே இயங்க கூடியது.  காலையில் இந்த முன்று உறுப்புகளிலும் வெப்ப சக்தி மிகவும் குறைந்து காணப்படும். மேலும் தண்ணீர் அருந்துவதில் மொத்த உறுப்புகளும் பாதிப்பு அடைகிறது.                                                                                                                             
இப்படி காலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்துவதால் அனைத்து அமிலங்களும் நீர்த்து போய் உணவு பாதையில்  அசிடிட்டி ஏற்படுவதற்கு ஏதுவாகிறது. மேலும் சிறு நீராக நோய்களை உருவாகுகிறது.

தண்ணீரை மெதுவாக  அருந்தவும் 
தண்ணீர் அருந்தும் போது வேகமாக அருந்தாதிர்கள். வேகமாக அருந்துவதனால் நாம் இரைப்பைகள்   பாதிப்பு அடைகிறது. நம் இரைப்பைகள்   மற்ற  உறுப்புக்கள்  விட மிகவும் மென்மையானது. நமது இரைப்பைக்கும் நீன நீருக்கும் [பல விதமான அமிலங்கள்] இடையில் முயுகஸ் என்ற ஜெல் தன்மையால்] ஒரு பாதுகாப்பு மண்டலமாக உள்ளது. நீரை வேகமாக அருந்துவதால் இந்த மண்டலம் பாதிப்படைந்து நம் இரைபைகள்  துவாரம்  அடைகிறது  அதனால் அல்சர்   ஏற்படுகிறது. 

தாகம் எடுத்தால்  மட்டுமே நீர் அருந்த வேண்டும்.

சாப்பாட்டிற்கு அரை மணி நேரம் முன்பும், உண்ணும் போதும், உண்ட அரை மணி நேரம் மட்டும் நீர் அதிகம் அருந்த கூடாது. வேண்டும்  என்றால்  ஓரிரு வாய் நீர் அருந்தலாம்.     
 
காலையில் வெறும் வயிற்றில் டி, பால், பழ ரசம், சூப், கசாயம், மூலிகை டி, நீராகாரம், இளநீர் வேண்டுமென்றால்  அருந்தலாம். அல்லது நேரிடையாக உணவு உண்ண தொடங்கலாம்.

     


சோதிடம் பற்றிய ஒரு திடமான கட்டுரை
 சோதிடமும் தமிழரும் 
சோ + உயிர் 
திடம் ----- திடமாக (நுட்பமாக கணித்தல்)
உயிரின் இயக்கத்தையும் அதனால் வரும் பயன்களையும் (நன்மை/தீமை) நுட்பமாக அறிதல் சோதிடமாம்.
சோ ------ என்றால் சந்திரன் 
சந்திரன் இயக்கத்தை அறிதல் - சந்திரனுக்கும் உடலுக்கும் ஏற்படும் உறவுக்கு உலவு சொல்லல் சோதிடம் ஆகும் .
தமிழர்கள் ஆன்ம இன்பம் பெற பல வகையில்  முயன்றனர். அதில் பெறும் வெற்றியை கொண்டு இவரால் முடியும் என்று ஒரு கணிதத்தை ஏற்படுத்தினர். அவை தான் இன்று சோதிடவியலாக மலர்ந்துள்ளது. அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட ஆன்ம மாற்றங்கள் 12 ஆகும். இவையே 12 இராசிகள் ஆகும். மேசம், இரிசபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகும். இவை முறையே,
                                          
 1.  மேசம் ---- அப்பா ----உயிர்  -- செங்கதிரோன்(சூரியன்) 
 2.  இரிசபம் --- அம்மா --- உடல் -- அன்னபூரணி (சந்திரன்)
 3.  மிதுனம் ---- காமம்(அம்மா + அப்பா இணைவு) அம்மையப்பன் (சிவசக்தி)
 4.  கடகம் --- குழந்தை பிறப்பு --- (ஐயனார்)
 5.  சிம்மம் ---- உடல் வளர்ச்சி (அரிகரன்)
 6. கன்னி --- உயிர் வளர்ச்சி --- வியாழன் (குரு)
 7. துலாம் --- வயோதிகம் --- பெருமாள் (பள்ளி கொண்ட பெருமாள்)
 8. விருச்சிகம் --- பசிப்பிணி --- மாரியம்மன் (கூழ் ஊற்றுவது)
 9. தனுசு --- பகை --- கொற்றவை (பகைகடிதல்)
 10. மகரம் -- மரணம் --- (காலன்)
 11. கும்பம் --- உயிரற்ற உடல் -- பிணம் (காட்டேரி)
 12. மீனம் --- அலையும் ஆன்ம --- வேலன் (அடுத்த பிறப்பு)  
மேற்கண்ட 12  பருவன்களே மானுடம் பெறும் பயன், இவற்றில் ஏற்படும் மாற்றங்களை 10  கோள்கள் மூலம் கணித்தனர். கோ -- ஒளி என்று பொருள். மேற்கண்ட பருவத்திற்கு தெய்வங்களை ஏற்படுத்தி வழிபாடு செய்ய வேண்டும் என்று பின் தலைமுறைக்கு உயிரின் அடுத்த நிலை என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப தன்னை மாற்றி அமைத்துக்கொள்ள நெறிபடுத்தினார்கள். 
காலப்போக்கில் இது சிதைவுற்று வெறும்  சடங்காகி போகின. மேற்கண்ட பருவங்களை கடந்து மரணத்தை மாற்றி அமைத்து சாகா வரம் பெற்றனர் சித்தர்கள். சோதிடம் சாகா கலையின் அடிப்படை கூறாகும்.    

அவசியம் தமிழனாகிய நாம் அறிய வேண்டும்

புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட

 


புகை பிடிக்கும் பழக்கத்திலிரிந்து விடுபட 
நாற்பது நாட்களுக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் புதினா சாறு 30 மில்லி தொடர்ந்து குடித்து வர எளிதில் புகை பிடிக்கும்  பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.
உங்களின் நுரையீரலையும், இருதயத்தையும் காப்பீர். சுற்றுபுறத்தை தூய்மையாக வைப்போம்

சைவ உணவின் மகிமைகள்
"உற்றியும் என்ற ஓரறிவு கொண்டே
ஆறறிவை வளர்க்கும் அற்புதம் 
தான் தாவரம்"  
தாவரம் = தா + வரம்  
தாவரங்களே மனிதன் பூமியில் வாழ்வதற்கான உணவையும், உடையையும், புகலிடத்தையும் வரங்களாக நமக்கு அளிக்கிறது.  தாவரங்களே மனிதன் வாழ ஆதார நாடி. 
தாவரங்கள் மட்டுமே விண்ணுக்கும், மண்ணுக்கும் தொடர்பு கொண்டு வாழும் ஒரு உயர்ந்த ஜீவா ராசி.
அண்ட சக்தியை, ஒளியை, விண் காந்த துகள்களை விண்ணிலிருந்து உறுஞ்சி உணவாக உட் கொள்கிறது. விண் காந்த துகள்கள் பஞ்ச பூதத்தின் ஒரு முக்கிய அங்கம்.
பூமி பல பல தனிமங்களை தன்னுள்ளே கொண்ட ஒரு சேர்மம். பூமியில் உலோகத்தின் அப்பால் உள்ள நீர்ம பொருள்  பாதரசம். மேலும் பூமியின் உட்கருவிலிருந்து அரிய பல தாதுக்கள், உலோகங்கள், சுபரசங்கள், பாஷாணங்கள் வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது. இத்தனை அரிய பொருட்களையும் தாவரங்கள் உறுஞ்சி  தன்னையே மனிதகுலத்திற்கு [பூக்களாகவும், காய்களாகவும், பழங்களாகவும், கொட்டைகளாகவும், வேர்களாகவும், தண்டுகளாகவும், இலைகளாகவும்] அர்பணிக்கிறது.

தாவரங்களுக்கு இருப்பதோ ஓரறிவு, ஆனால் அதுவே மிக உயர்ந்த ஜீவ ராசி. 
தாவரத்தின் மற்றொரு பெயர் பல்லவம் என்பதாகும். தாவரம் மட்டுமே மலம் அற்ற ஒரு அரியஉயிரினம். தாவரங்கள் பஞ்ச பூதங்களை உட்கொண்டு மனித உடலை உருவாக்கி, வளர்ந்து உயிர் வாழ வைக்கிறது.

இப்படியிருக்க நாம் ஏன் அசைவத்தை உணவாக உட்கொள்ள வேண்டும்????

முதலில் மனிதனின் செரிமான உறுப்பானது அசைவத்தை செரித்து உறுஞ்சும் தன்மை  அற்றது.
இரண்டாவது ஒரு உயிரை கொள்ளும் போது அது துடித்து தன்னுடைய எல்லா கெட்ட சுரபிகளை அதிகமாக இயக்க செய்கிறது. பயம், கோபம், வலி, வேதனை இந்த வகையான உணர்வுகளையே தன்னுடைய மாமிசத்தில்  கலக்கிறது. இதை நாம் உட்கொள்ளவது சரியா என்று ஆறரிவு உள்ள மனிதன் சற்று சிந்திக்க வேண்டும். நமக்கு மட்டும் பிறர் துன்புறுத்துவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை, ஆனால் நாமோ பல உயிர்களை  பறிக்கிறோம். 
ஒரு விலங்கானது பல கோடி அணுக்களை ஒன்று சேர்த்த ஒரு கூட்டு பொருள். இதனை கொள்ளும் பொது இறைமைக்கும், பிரபஞ்ச சக்திக்கும் எதிராக செய்யும் ஒரு கொடிய பாவச் செயல். இப்படியே சென்றால் இயற்க்கை மனித சங்கிலியை அழிப்பதற்கு சற்றும் தயங்காது.

இதற்க்கு ஒரு மிக பெரிய சத்திய உதாரணம்:
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் என்ற பெரிய,கொடிய மிருகம் வாழ்ந்ததை பற்றி நாம் எல்லோரும் அறிவோம். இப்போது எங்கே போயிற்று???
!!!!சிந்தியுங்கள்!!!!                 
இயற்கையே இந்த வகை மிருகங்களை அழித்து விட்டது???
ஏன் தெரியுமா??? டைனோசர் மிருகங்கள் சிறிதும் கருணை இன்றி பல விலங்குகளை உண்டு பெருத்த பாவத்தால் கூண்டோடு அழிக்கப்பட்டது.
இதை போல் யாளி என்ற மிருகம் யானையை போல மூன்று மடங்கு பெரிய உருவம். இதுவும் சிறிதும் கருணை இன்றி பல விலங்குகளை உண்டு பெருத்த பாவத்தால் கூண்டோடு அழிக்கப்பட்டது.

உயிர் சங்கிலியின் பிணைப்பு ஒன்றை ஒன்று சார்ந்தது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர்   டோடோ என்ற தரை வாழ் பறவை இருந்தது. போர்ச்சுகீசியர்கள் மொரிஷஸ் தீவில் வாழ்ந்த டோடோ பறவை இனத்தை சுட்டுத் தள்ளி அந்த இனத்தையே அழித்தனர்.  இந்த பறவை ஒரு பழத்தை உணவாக உட்கொள்ளும். அந்த மரமானது மிகவும் உயர்ந்த வகையை சார்ந்தது, மருத்துவத்திற்கும் உதவும். ஆனால் அந்த பழத்தின் ஓடுகள் கடினமாக இருக்கும். இந்த பறவை தன் அலகால் கொத்தி தின்று கொட்டையை எச்சத்தில் வெளி விடும். அதிலிருந்தே அந்த மரம் வளரும். இப்போது அந்த அரிய வகை மரமானது ஒன்று கூட இல்லை. 

இப்படி பல பல இனங்கள் மனிதனின் ஆசையை தீர்த்துக்கொள்ள அழிக்கப்பட்டன.

மனிதனுக்கு படைத்த ஆறாம் அறிவானது மற்ற ஜீவ ராசிகளை அழிப்பதற்கு அல்ல. தனது ஜீவன் எங்கு உறைந்துள்ளது என்று அறிந்து மரண மில்லா பெருவாழ்வை பெற்று இறை வீடு அடைவதே.        

  10 கிணறுகள் 1 குளத்திற்கு சமம்.
  10 குளங்கள்  1 ஏரிக்கு சமம்.
  10 ஏரிகள் 1 மகனுக்கு சமம்.
  10  மகன்கள் 1 மரத்திற்கு சமம்     
     
"ஜீவ காருண்யம் கொண்டு விலங்குகளை காப்போம். நம்மை, இந்த பூமியை பாவ அழிவிலிருந்து காப்போம்."   

பல் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளஇரவில் அவ்வபோது வெந்நீரில் தேன் கலந்து வாய் கொப்பளித்து வர பல் நோயிலிருந்து எளிதில் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும் வராமலும் தடுக்கலாம்.  

தேகத்தில் புத்துணர்ச்சி பெறதுளசி இலைகளை சிறிது நீருடன் சேர்த்து இரவு முழுதும் செம்பு பாத்திரத்தில் வைத்து பகலில் தேவையானபோது பருகி வர தேகத்தில் புத்துணர்ச்சி ஏற்படும்.
[குறிப்பு- இரண்டு நாட்களுக்கு ஒரு முறை புளியை உபயோகித்து செம்பு பாத்திரத்தை  கழுவி தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும்.]    


உணவில் பூண்டு மற்றும் வெங்காயம் அதிகம் சேர்த்து வந்தால் கொழுப்பு குறைந்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.  

இரத்தம் சுத்தமாக


குங்கும பூவை தினமும் தேனில் கலந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். 

நரம்புகளை பலப்படுத்தஅருகம்புல் சாருடன், வெல்லம் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாத காலம் சாப்பிட்டு வர நரம்புகள் பலமாகும். 

உடல் உஷ்ணம், நீர்கடுப்பு தனிய
கோரை கிழங்கு பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல் உஷ்ணம், நீர்கடுப்பு குறையும்.

நீங்கள் அழகியாக வேண்டுமா மங்கையர்களே !!!!

 • மருதாணி இலை சாறு குளியல் உடல் பளபளப்பை ஏற்படுத்தும்.
மருதாணி இலை
 ஆவாரம் பூ தொடர்ந்து உணவில் சேர்த்துவர (கசாயமாகவோ, அல்லது கூட்டு செய்தோ, துவையலாகவோ) தேகம் பொன்னிறமாகும்.
ஆவாரம் பூ 
 குங்கும பூவை மஞ்சளுடன் அரைத்து இரவில் சாப்பிட்டால் உடல் மினு மினுப்பாகும்.
குங்கும பூ

முருங்கை பிசினை பொடி செய்து அரை சிட்டிகை அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வளப்பு அதிகமாகும்.

முருங்கை மரம் 
 பச்சை உருளை கிழங்கை அரைத்து முகத்திலும், கை கால்களில் தொடர்ந்து பூசிவர பளபளப்பாகவும், மிருதுவாகவும் தோற்றமளிக்கும்.   
உருளை கிழங்கு 

இனி நீங்கள் எல்லோரும் அழகுதானே????        

Tuesday, October 11, 2011

நுரையீரல் பலம் பெற


துளசி இலை சிறிதளவு, இரண்டு சிட்டிகை - மிளகு தூள், சுக்கு தூள், மல்லித்தூள் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை 400 மில்லி தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும். பாதியாக 200  மில்லியாக வற்றியதும் பால் மற்றும் கருப்பட்டி சேர்த்து தினமும் குடித்து வந்தால் நுரையீரல் பலம் பெரும்.  
    

வயிற்று புண்கள் ஆரும்
ஜாதிக்காய் தேனில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டால், வயிற்று புண்கள் ஆரும்.
மேலும் காய்ச்சல் வந்தவர்களுக்கு வாயில் உணவை சுவைக்க தேவையான உணர்வை கூட்டும்.
குழந்தைகளுக்கு நாக்கில் ஏற்படும் பசை போன்ற கழிவை சுத்தப்படுத்த உதவும்.    

உள் உறுப்புக்கள் சீராக இயங்க
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். வாரம் ஒரு முறை தேனில் கலந்து சாப்பிட உள் உறுப்புக்கள் சீராக இயங்கும். 

பித்தம் நீங்க
சீரகம், இஞ்சி இரண்டையும்  எலுமிச்சை சாறில் கலந்து ஒரு நாள் ஊறவைத்து, தினம் இரு வேளை வீதம் மூன்று நாட்களுக்கு மட்டும் சாப்பிட பித்தம் நீங்கும்.    

மூளை பலம் பெற
தாமரை பூவை அரைத்து சாப்பிட்டு வந்தால் மூளை நன்கு பலம் பெரும்.

சிறு நீரகம் நன்கு பலம் பெற 
 • ஆவாரம் இலையை நிழலில் உலர்த்தி இடித்து தூளாக்கி தேன் சேர்த்து சாப்பிட்டால் சிறு நீரகம் நன்கு பலம் பெரும்.  
 • முள்ளங்கி  சாருடன்  தேன் சேர்த்து சாப்பிட்டால் சிறு நீரகம் நன்கு பலம் பெரும்.  
 • கேரட் சாருடன்  தேன் சேர்த்து சாப்பிட்டால் சிறு நீரகம் நன்கு பலம் பெரும்.
 • முட்டைகோஸ்  சாருடன்  தேன் சேர்த்து சாப்பிட்டால் சிறு நீரகம் நன்கு பலம் பெரும்.

சரும நோய் அகல
சரும நோய் அகல   
கஸ்தூரி மஞ்சள் மற்றும் கருந்துளசி இலை இரண்டையும் அரைத்து உடல் முழுவதும் பூசி நீராட சரும நோய் அகலும்.

உடல் பருமனை குறைபதற்குஉடல் பருமனை குறைபதற்கு  
பத்து நாட்களுக்கு ஒரு முறை காலையில் வெறும் வயிற்றில் அருகம் புல் சாறு குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட  நீர் வெளியேறி உடல் பருமன் குறையும் மற்றும் ரத்தம் சுத்தமாகும். 
கொள்ளு ரசத்தில் மிளகு சேர்த்து உணவில் அதிகம் பயன்படுத்தி வந்தால் உடல் மெலியும்.
  

உள்உறுப்புகளில் ஏற்படும் நோயினை நீங்களே கண்டறிய எளிய வழி!

உள்உறுப்புகளில் [கல்லீரல், மண்ணீரல், கணையம், குடல்கள், பித்தப்பை,etc ] ஏற்படும் நோயினை நீங்களே கண்டறிய எளிய வழி! 
ஐந்தாவது வேதமான ஆயுள் வேதத்தை நமக்கு தந்த லங்காபுரி அரசர் இராவணன் அவர்களால் கீழ்க்கண்ட எளிய முறை மனித குலத்திற்கு கொடுக்கப்பட்ட ஒரு கொடை.
காலையில் எழுந்தவுடன் சிறு நீரை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து, இரண்டு சொட்டு நல்லெண்ணை விடுங்கள்.
எண்ணெய் துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால் - வாதம் அதிகம் 
எண்ணெய் துளி மோதிரம் போல் வட்டமாக இருந்தால் - பித்தம் 
எண்ணெய் துளி முத்து போல நின்றால் - கபம் 
எண்ணெய் துளி வேகமாக/விரைவாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.
எண்ணெய் துளி  மெதுவாக பரவினால் காலதாமதமாகும்.
எண்ணெய் துளி பரவாமலோ,  சிதறாமலோ, அமிலாமலோ  அப்படியே இருந்தால்  நோயை குணப்படுத்த இயலாது.    


மேலும் நமது பத்து விரல்களும் பஞ்ச பூத சக்தியையும், தச வாயுக்களை பற்றியும் வெளிப்படுத்தும் ஒரு உறுப்பு.
விரல்களில் வெடிப்பு ஏற்பட்டாலோ 
விரல்களின் நிறம் மாறினாலோ 
விரல் நகலில் புள்ளிகள் ஏற்பட்டாலோ 
நகங்கள் வளைந்து காணப்பட்டலோ உள் உறுப்புகளில் குறைபாடு உள்ளதாக அர்த்தம்.
மேலும் வலது மற்றும் இடது - எந்த பக்கம் இந்த அறிகுறிகள் தென்படிகிறதோ அதை பொருத்தும் நோயை கண்டறியலாம்.        

அயோடின் கலந்த உப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும்அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவதை தவிர்க்கவும் 

இயற்கையிலேயே பழங்கள், காய் கறிகள், கொட்டைகள், தானியங்கள், கீரைகள்  அயோடின் நிறைந்துள்ளது.  அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவதால் கீழ்க்கண்ட நோய்களுக்கு வழி வகுக்கும்.
தைராய்ட் பிரச்சினைகள் 
மார்பக புற்று நோய் 
மண்ணீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் 
இரத்த வெள்ளை அணுக்கள் குறைபாடு 
வாயு தொல்லையால் வலி 
நீல நிற நகங்கள், பற்கள் 
பற்களில் கரை படித்தல் 
சிறு நீராக குழாய் சார்ந்த பிரச்சினைகள் 
வாந்தி உணர்வு   

மேலும் ஒரு முக்கிய செய்தி  

உலக சுகாதார அமைப்பு அயோடின் கலந்த உப்பை முற்றிலும் தடை செய்து விட்டது.
மேலும் இந்த கீழ்க்கண்ட நாடுகள் தடை விதித்துள்ளது - இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்த்.     

தமிழ்நாட்டு மக்கள் அதிகம் கோதுமை உணவு உண்பதை தவிர்க்க வேண்டும்தமிழ்நாட்டு மக்கள் அதிகம் கோதுமை உணவு உண்பதை தவிர்க்க வேண்டும் .

நமது பூமியை குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று 5 பகுதிகளாக பிரித்து பண்டைய காலத்தில் மக்கள் வாழ்க்கையை வாழ்ந்தார்கள். இதன் அடிப்படையில் நாம் எந்த நிலத்தை சார்ந்தவர் என்பதை அறிந்து அதற்க்கான உணவு மற்றும் உடை கலாச்சார விதிகளை வகுக்க வேண்டும். இல்லையேல் நம்மை ஆபத்து அணுகி விடும்.

இதன் அடிப்படையில், கோதுமை உணவு வட இந்திய பூமியை சார்ந்த உணவு. வட இந்தியாவில் ஒரு வருடத்தில் மூன்று மாத காலம் மட்டுமே வெப்பம் மீதி ஒன்பது மாதமும் குளிரும்,பனியுமே. கோதுமையில் அதிக உப்பு சத்தும் அமோனியா சத்தும் அதிகம் உள்ளதால் நமது உடலில் அதிக வெப்பத்தை உண்டு பண்ணும். எனவே வட இந்திய மக்களுக்கு மட்டுமே சிறந்த உணவு.
நம் தமிழ்நாட்டு அன்பர்கள் அரிசி, கம்பு, சோளம் , கேழ்வரகு, பருப்பு மற்றும் தானிய  உணவுகளை பயன்படுத்துவதே மிகவும் சிறந்தது.    

[குறிப்பு : பொடுகு உள்ளவர்கள் கட்டாயம் கோதுமைஉணவை பயன் படுத்தக் கூடாது.]          

பரிகாரம் என்ற வார்த்தையின் உண்மையான பொருள்

மக்களே உசாராக இருங்கள் - பரிகாரம் பற்றி பேசுபவர்களிடம்  

பரி - தங்கம் என்று பொருள்
கரம் - என்றால் உப்பு என்று பொருள் 
        காலப்போக்கில் இதன் பொருளை மறைத்து கோவில்களில் வியாபார நோக்கில் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்.
 
உண்மையில் தாழ்ந்த உலோகத்தை உயர்ந்த உலோகமாக மாற்றும் செயலிற்கு பெயர் பரிகாரம்.
குரு, சிஷ்யனுக்கு கொடுக்கும் தீட்சை, குருவிற்கும் சிஷ்யனுக்கும் உள்ள உறவின் பெயர் பரிகாரம்.
இதை தவிர நாம் செய்யும் பரிகாரம் எல்லாம் வெறும் பணம், காரு சம்பத்தப்பட்டது.

அறியாமை ஒரு பாவம்!!!
  நாம் ஒவ்வொருவரும் அறியாமையால் பாவம் செய்கிறோம், அறியாமையால் பரிகாரமும் செய்கிறோம். வாழ்க்கை கல்வியை முதலில் ஒவ்வொரு  மனிதனும் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கை கல்வி என்பது, நம் உடலை பற்றி, மனதை பற்றி, வாழ்வின் ரகசியத்தை பற்றி அறிந்து மிகவும் விழிப்புணர்வுடன் வாழவேண்டும் என்பதாகும்.                   

பட்டாசு / வெடிகளை பற்றி ஒரு அறிய தகவல்
பல நூறாண்டுகளுக்கு முன்பெல்லாம் மாதம் மும்மாரி பெய்தது. அதிலும் குளிர்காலத்தில் மிக அதிக மழை பெய்தது. வெள்ளம் கரை புரண்டு ஓடியது. 
உங்களின் உட்குரல் எனக்கு நன்றாக கேட்கிறது. மழைக்கும் பட்டாசுக்கும் என்ன சம்மந்தம்  என்று? ஆனால் இருக்கிறதே.             

வெடிகளில் அதிகம் பயன்படுத்தும் வேதி பொருள் சல்பர்-டை-ஆக்சைட். இந்த வேதி பொருளானது மழை மேகங்களை கலைத்து மழை பெய்யாமல் தடுத்து நிறுத்தும். மழையை தடுத்து வெள்ளத்திலிருந்து பாதுகாத்து கொள்ளவே பண்டைய காலத்தில் பட்டாசுகள் வெடிக்க பட்டன. 
அனால் இன்றைய கால கட்டத்திற்கு இது தேவையா சற்றே யோசிப்போம். சுற்றுபுறத்தை பாதுகாப்போம்.

மேலும் தாவரங்களில் - பாத்தினிய செடியும், மரங்களில் - யுகலிப்டஸ் மரமும் அதிக சல்பர்-டை-ஆக்சைடை வெளிவிடும். அது மட்டுமல்லாமல் இந்த இரு தாவரமும் அருகில் வேறு  எதையும் வளர விடாது. மற்றும் நீர் பற்றாகுறை பிரச்சனை ஏற்படும்.   

சுற்றுபுறத்தில் அதிக ஆக்சிஜனை வெளிவிடும் சவுக்கு மரத்தினை வளர்ப்போம். பூமி பந்தை பாதுகாப்போம்.            
ஒட்டு குடி (ஒரு சவுக்கு வகை) பாரம்பரிய ஊட்டி மக்கள் இதனை சமைப்பதற்கு அதிகம் பயன் படுத்துவார்கள்.  சவுக்கு உணவு, நமது சிறு நீரகம் / கிட்னிக்கு நல்ல பலத்தை கொடுக்கும்.  இதில் அதிக தாது உப்புக்கள் உள்ளது.  

வாஸ்து என்றால் என்ன? ஒரு அறிவியல் ரீதியான விளக்கம்

வஸ்து என்பதே உண்மையான வார்த்தை. வாஸ்த்து என்பது மருவிய வார்த்தை.
இரவும் பகலும் சூரியன் மறைவதாலோ அல்லது உதிப்பதலோ நிகழ்வதில்லை.
பூமி மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுற்றுவதால் ஏற்படும் மாற்றம்.

பூமி இப்படி சுற்றி கொண்டிருக்கும் போது வட- கிழக்கிலிருந்து, தென் - மேற்கு திசையை நோக்கி இரண்டு எதிர் விசைகள் செயல்படும். ஒன்று  மைய நோக்கு விசை மற்றொன்று  மைய விலக்கு விசை. இந்த இரண்டு விசைகளுக்கும் நடுவில் ஏதேனும் தடுப்பு ஏற்பட்டால் அதுவே வாஸ்து குறை என்பதாகும். இது நம் உடலுக்கும் உணர்விற்கும் நிச்சயம் பாதிப்பை  விளைவிக்கும். 
வாஸ்து என்பது தூய தமிழில் காற்று என்று பொருள்.  இந்த இரண்டு துருவங்கள்  வட- கிழக்கு மற்றும் தென் - மேற்கு துருவங்களுக்கு இடையில் வீடோ/அல்லது எந்த கட்டிடம் கட்டினாலும் தடுப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.  இல்லையேல் காற்றின்  அடர்த்தி அதிகமாகி நம் உடலுக்கும் உணர்விற்கும் ஊறு விளைவிக்கும். 
          

கிட்னியை /சிறு நீரகத்தைபாதுகாப்பது எப்படி?

கிட்னியை/ சிறு நீரகத்தை பாதுகாப்பது எப்படி?  
அவித்த மற்றும் வேகவைத்த உணவுகளை பயன் படுத்தினால் கிட்னியை மட்டுமல்ல மொத்த உடலையே நோயிலிருந்து பாதுகாக்க முடியும்.
 1. தாகம் எடுத்தால் மட்டுமே நீரை பருக வேண்டும்.
 2. மது, மாமிச பொருட்களை தவிர்க்க வேண்டும்.  
 3. பேக்கரி பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.
 4. கல்லில் சுட்ட  பதார்த்தங்களை [தோசை, ஆம்லைட்]  தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால் மாதம் இருமுறை சாப்பிடலாம்.
 5. அதிகம் கோதுமை உணவு மற்றும் நிலக்கடலை உண்பது தவறு. இரண்டிலும் உப்பு சத்து அதிகம் உள்ளதால் சீறு நீரகத்திற்கு கேடு விளைவிக்கும்.  
 6. எண்ணையில் பொறித்த உணவு, உப்பு அதிகம் உள்ள உணவை தவிர்க்க வேண்டும்.

காய்கறி வற்றலை பற்றி ஒரு அறிய தகவல்

அதிக நார் சத்து நிரந்த உணவு 
காய்கறிகளில் அதிக நார் சத்து இருப்பதை பற்றி நாம் அனைவரும் அறிந்த உண்மையே!!!
ஆனால் உலர வாய்த்த காய் கறிகளின்/வற்றலின் மகத்துவத்தை பற்றி இங்கு பார்ப்போம்.

சில காய்களை நாம் உலர வைத்து பன்படுத்துவதால் பல நன்மைகள் நமக்கு உண்டு.    

 1. உண்மையில் அதிக நார் சத்து உலர வைத்த வற்றலில்/காய் கறிகளில் இருந்து அதிகமாக கிடைக்கிறது.
 2. மலசிக்கலை வெகு எளிதாக தீர்க்க வற்றல் குழம்பு மற்றும் வற்றலில் சமைத்த உணவு பெரிதும் உதவுகிறது.
 3. அதனால் காய் கறிகளை போலே காய் வற்றலுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.       
காய்களை நறுக்கி மோரில் பன்னிரண்டு மணி நேரம் ஊறவைத்து பின்பு சூரிய வெளிச்சத்தில் நன்கு காயவைத்து சேமித்து வைத்து கொள்ளலாம். காய்களின் விலை குறையும் போது இப்படி செய்து வைத்துக்கொண்டால் பெரிதும் நன்று. பொருளாதார ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் நன்கு பயனடையலாம்.

வற்றல் செய்ய உகந்த காய்கள் :
 1. சுண்டை காய் 
 2. வெண்டை காய்
 3. கத்தரிக்காய் 
 4. சுக்குட்டி/மணத்தக்காளி காய் 
 5. பாவைக்காய்
 6. கொத்தவரங்காய் 
 7. மாங்காய்
 8. கோவைக்காய் 
 9. மிளகாய் [மோர் மிளகாய் உடலுக்கு மிகவும் நல்லது]    

வாழ்கையின் மணம்

மனிதா,
உன் உடலின் ஒவ்வொரு செல்லிலும்
ஆக்சிஜனை நிரப்பு
உன் நுரையீரல் முழுவதும்
நறுமணத்தை நிரப்பு
காது முழுவதும் 
இசையை   நிரப்பு
பிறகு பார்
வாழ்கையின் மணம்
மனம் முழுவதும் நிரம்புவதை 

வைர "முத்துவின்" தண்ணீர் தேசத்திலிருந்து நான் எடுத்த முத்துக்கள்

வைர "முத்துவின்" தண்ணீர் தேசத்திலிருந்து நான் எடுத்த முத்துக்கள் 
உணர்வுகளின் தேவை காதல்
உணர்சிகளின் தேவை காமம் 
உலகத்தின் தேவை உழைப்பு 
இந்த தேவைகளின் வெவ்வேறு 
வடிவங்கள் வாழ்க்கை   
அழுகையும் அச்சமும்
தீர்ந்த நிலை தான்
சுதந்திரம்

விரல் விழுந்துவிட்டால் அழுதுகொண்டிருக்ககூடாது
நகம் வெட்டும் நேரம் மிச்சம் எண்டு நினைத்து கொள்வோம் 

படகு பழுது என்றல் பதறிக் 
கொண்டிருக்கக்கூடாது 
கடலில் ஓர் இரவு என்ற கட்டுரைக்கு 
குறிப்பெடுப்போம் 

எரிந்து விட்டது வீடு
இனி 
தெளிவை தெரியும் 
நிலவு
இந்த கவிதையை வழக்கபடுத்தி கற்றுக்கொண்டேன்

தண்ணீரில் எடையிழக்கும் பரம் போல 
துன்பம் எடையிழந்தது 

தங்கத்தின் துருவல்களை சேகரித்தே 
ஒரு நகை செய்துவிடுவது போல 
கஷ்டங்களை சேகரித்தே 
நாம் கலை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் 

வாழ்வின் மர்மம் தான் வாழ்வின் ருசி 
நாளாய் நேர்வர்வதரியாத சூட்சுமங்கள்  தான்
அதன்  சுவை
எதிர்பாராத வெற்றி தான் மனித மகிழ்ச்சி 

தோல்வியும் எதிர்பாராமல் வருவதால் தான் 
மனிதன் அதன் முன் நிமிடம் வரைக்கும் 
முயற்ச்சியில் இருக்கிறான் 

மரணத்தின் தேதி மட்டும் மனிதனுக்கு
தெரிந்துவிட்டால் மரணம் வரும்முன்பே 
அவன் மரித்துப் போவான்
ஐம் பூதங்கள் தந்த இந்த உடலை நாளை 
 ஐம் பூதங்கள் பிரித்தெடுத்துக் கொள்ளலாம் 
ஆனால்   மரணம் என்ற பௌதிகச் 
சம்பவத்தால் நாம் மரிக்கப் போவதில்லை 

ஒரு மனிதன் 
எத்தனை நாடுகள் கடந்தான் 
 எத்தனை நாடுகள் கடல்கள் கடந்தான் 
எத்தனை  பேரை கொன்றான்
எத்தனை   மகுடம் சூடினான்
எத்தனை   காலம் இருந்தான் 
எத்தனை   பிள்ளைகள் ஈன்றான் 
என்பன அல்ல அவன் எச்சங்கள் 
இவை எல்லாம் நான் என்ற 
ஆணவத்தின் நீளங்கள் 

அவன் இன்னோர் உயிருக்காக 
எத்தனை  முறை அழுதான் என்பது தான் 
அவன் மனிதன் 
என்பதற்கான மாறாத சாட்சி     
   
  
ஒருவன் தனக்காக அழும் கண்ணீர் 
அவனை மட்டுமே சுத்திகரிக்கிறது 
அடுத்த உயிருக்காக அழும் கண்ணீர் அகிலத்தையே 
சுத்திகரிக்கிறது 

 பேதையாய் கூட இரு கோழையாய் இராதே 
இந்த பிரபஞ்சத்தில் எதுவும் நேரலாம் 
இன்று காண்பது நாளை மாறலாம் 
மாற்றமே பரிணாமம் மறுத்தல் ஒன்று தான் 
உலகில் மாறாதிருப்பது 

இந்த சிறகத் தொகுதியும் காட்சி மாறலாம் 

மனித வாழ்வின் பெருந்துன்பம் எது தெரியுமா?

மரணத்தைவிட வாழ்க்கை பயங்கரமானது என்று 
தெரிந்த பின்னும் வாழ்க்கையோடு
ஒட்டிக் கொண்டிருப்பது தான் 
மரணத்தின் வாசல் வரை சென்று 
மீண்டவர்களுக்கே வாழ்வின் பெருமை விளங்கும் 

வாழ்கையை துளி துளித்துளியாய் ரசித்தால் 
வாழ்வின் ஒவ்வொரு கணமும் 
பெருமையுடையதாகும் 
ஒவ்வொவொரு புல்லிலும், பூவிலும் தீராத 
வாழ்க்கை தேங்கி நிற்பது தெரியும் 
தான் உதிரும் முதல் நிமிடம் வரைக்கும் 
இந்த பிரபஞ்சத்தின் சந்தோசத்தை 
மட்டுமே காற்றோடு பேசிக்கொண்டிருக்கும் 
ஒரு தென்ன௩'கீற்றை பூல இனி இன்பமாயிறு
'           

வாழ்வின் பெருமையை உயர்த்துவதும் 
உறுப்புகளின் பெருமையை உணர்த்துவதும் 
நேற்றைய இன்றைய நேசிக்கவைப்பதும் 
தன்னைச் சர்ந்தவர்பற்றி யோசிக்க வைப்பதும் 
செலுத்தப்படாத அன்பைச் செலுத்தச் செய்வதும் 
திமிர் கொண்டாடும் தேகத்தை 
யானைப்பதக்கு அழைத்து வருவதும் 
மனிதனுள்ளிருக்கும்
சிங்கம் புலிகளைத் துரத்தியடிப்பதும் 
கடந்த காலத் தவறுகளை எண்ணிக் 
கடை விழியில் நீரொழுக வைப்பதும் 
நோய்தான்! 
ஆகவே உடம்பே! அவ்வப்போது 
கொஞ்சம் நோய் பெறுக!  
ஆகவே உடம்பே! அவ்வப்போது 
கொஞ்சம் நோய் பெறுக!  
நோயற்ற வாழ்வு தான் குறைவற்ற செல்வம் 
ஆனால் நோயும் ஒரு செல்வமென்று 
பட்டுத்தெளி, மனமே பட்டுத்தெளி    

  
   எது பிறப்பு? எது இறப்பு?
இரண்டிலும் நான் தெளிவாகவே இருக்கிறேன் 
 பிறப்பு என்பது ஐம் பூதங்கள் கொதித்த கடன்
இறப்பு என்பது ஐம் பூதங்களின் வசூல்
நிலம் நீர் தீ வளி வெளி 
என்றும் ஐம் பூதங்களால் மீண்டும்
பிரின்தெடுத்துக் கொள்கின்றன

என் பாதம் தாங்கிய மண்ணே.. நன்றி 
என்  ரத்தமான தண்ணீரே..  நன்றி 
எனக்குள் ஒளி கொடுத்த தீயே  நன்றி 
என் உயிரை இயக்கிய காற்றே  நன்றி 
எங்களுக்கு நிலவும் கதிரும் மழையும்
கொடுத்த ஆகாயமே  நன்றி