Showing posts with label 4448 நோய்களில் கல்லடைப்பு. Show all posts
Showing posts with label 4448 நோய்களில் கல்லடைப்பு. Show all posts

Wednesday, March 28, 2012

கல்லடைப்பு


நமது சித்த மருத்துவத்தை பொறுத்தவரையில் அன்றைய விஞ்ஞானிகளாகிய சித்தர்கள் எடுத்துக் கூறிய 4448 நோய்களில் கல்லடைப்பு ஒன்றாகும். இதை ஆங்கிலத்தில் Gravel என்பார்கள்.
கல்லடைப்பை  பொறுத்தவரையில் சித்த மருத்துவம் 4 வகையாக பிரித்துள்ளது.

1) வாத கல்லடைப்பு
2) பித்த கல்லடைப்பு
3) சிலேத்தும கல்லடைப்பு
4) தொந்தம கல்லடைப்பு

என்பனவாகும்.

கல்லடைப்புக்கு காரணம்

நம் உடம்பு இயக்கத்திற்க்கு 27 வகையான தாது உப்புகள் இருக்கின்றன.இந்த உப்புகள் நாம் உண்ணும் உணவு மூலமே பெறப்படுகிறது. இந்த தாது உப்புகள் உடலில் நன்றாக சீரணித்து சேரா விட்டால். தசை எலும்பு போன்ற ஏழு விதமான தாதுக்கள் வளர்ச்சி இல்லாமல் பலம் குன்றி விடும். இந்த தாது உப்புக்கள் நன்றாக சீரணிக்காமல்  நம் உடல்களில் பல்வேறு உறுப்புகளில் தங்கி கற்களாக உருவாகி அடைப்புகளை ஏற்படுத்துகின்றன. இவற்றில் பித்த நாளம் உமிழ் நீர்  சுரப்பி நாளங்கள் சிறுநீரகங்கள் மூத்தர குழாய்கள் ஆகிறவற்றில் விரைவாக உற்பத்தியாகின்றன.

சிறுநீரக கற்கள் தோன்றும் காரணங்கள்

தாது உப்புகள் தசை எலும்புகளில் சேராமல் இரத்தத்தில் கலந்தாலும் சிறுநீரக கற்கள் உருவாகின்றன. சிறுநீரை நன்றாக கழிக்காமல் அடக்கி வைத்தாலும் கல் தோன்றும்.பக்க வாதத்தால் பாதித்து நீண்ட காலம் படுக்கையில் இருந்தாலும் சிறுநீரக கற்கள் தோன்றும். மித மிஞ்சிய மது மாது போதை பழக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கும் சிறு நீரக கற்கள் ஏற்படும்.

வாத கல்லடைப்பு (calcium stone)

கல்லின் நிறம் அமைப்பை பொறுத்து நோயாளிகளுக்கு வேதனைகள் வேறுபடும். வாத கல்லடைப்பு எனப்படுவது சிறு நீரகத்தில வாதம்(காற்று) சக்தி அதிகரித்து சுண்ணாம்பு கல்லை போன்று கருமை நிறத்தில் உண்டாகும். இது உணவிலுள்ள பாஸ்பேட் எனப்படும் உப்புகள்  மூலம் இவ்வகை கல் ஏற்படுகிறது.

பித்த கல்லடைப்பு  (acsalate stone)

இது கடினமான கடல் பஞ்சு போன்று இருக்கும். இவ்வகை கற்கள் சுடர்முனை கொண்ட முற்கள் போல் இருப்பதால் நீர் குழாய்களில் காயம் ஏற்படுத்தும். இதனால் சிறுநீருடன் இரத்தமும் வரும். தாங்க முடியாத வலி உண்டாகும். சிறுநீர் சொட்டு சொட்டாக கழியும். தாங்க முடியாத இடுப்பு வலியும் வரும்.

சிலேத்தும கல்லடைப்பு (urate stone)


இவ்வகை கல்லடைப்பு பொடி துகள்களாக இருக்கும். கப நோய் உள்ளவர்களுக்கு இவ்வகை கற்கள் தோன்றும். புளிப்பு நீர்(யூரிக் ஆசிட்) அதிகமாவதாலும் இது தோன்றும்.

தொந்த கல்லடைப்பு (multiple stone)

இவ்வகை கற்கள் உடலில் கல்லிரல், மண்ணீரல், கணையம்,உமிழ் சுரப்பிகள் போன்ற உறுப்புகளில்  வாதம், பித்தம், கபம் இவற்றின் சீரிண்மை பொறுத்து ஏற்படும். இவைகள் பல நிறம், மற்றும் வலிகளை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்

அடிக்கடி சொட்டு சொட்டாக சிறுநீர் வெளிபடுதல், பிறப்பு உறுப்புகளில் வலி உண்டாதல், தொடை பகுதியில் அதிக வலி உண்டாகி மேல் பகுதியில் பரவுதல், கண், காதுகளில் சிவப்பு நிறத்துடன்  வலி உண்டாதல். இவைகள் சிறப்பான அறிகுறிகள். சிறுநீரின் நிறம், சிறுநீர் கழிக்கும் போது வலி இவற்றை கவனித்து உடன் பரிசோதனை செய்து கற்களை களைந்து  விட வேண்டும்.

தடுக்கும் முறைகள்

1) கற்கள் உண்டாகாமல் தடுக்கும் ஆற்றல் தண்ணீருக்கு  உண்டு.  சுத்தமான நீரை (காய்ச்சி      ஆற வைத்த நீர்) உணவிற்க்கு பின்பு போதுமான அளவு எடுத்துக் கொள்ள             வேண்டும்

2) வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கக் கூடாது.

3) உப்பை வறுத்து உபயோகப் படுத்த  வேண்டும்

4) வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்

5) அதிக வெயில், பனி  குளிரூட்டிய அறைகளில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்கவும்

6) சிறு நீரை அடக்காதீர்கள்

7) பால், பாலாடை கட்டி, மீன்,முட்டை, இறைச்சி வகைகள் அதிக புளிப்பாக பழங்கள்  இவற்றை தவிர்க்க வேண்டும்

8) இரவில் அதிக நேரம் மின் விளக்கு கணிப்பொறிகளில் வேலை தொலைகாட்சி பார்த்தல் இவற்றை தவிர்க்கவும்.

9) அதிக எண்ணெய் மசாலா அடுமனை உணவுகள்(பேக்கரி) அரைவேக்காடு உணவுகள்(பீட்சா) இவற்றை தவிர்க்கவும்.

10) உண்ட பின் குறு நடை கொள்ளுங்கள்.

மேற் கண்ட கற்களை சித்த மருத்துவத்தின் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல், எளிய முறையில் கரைத்தும், உருவாகாமலும், வலி இல்லாமலும் சிறப்பான சித்தர் மருந்துகளால்  3-7 நாட்களுக்குள் சிகிச்சை அளித்து (எவ்வளவு நாட்களானாலும் ) சரி செய்யலாம்.

Total Pageviews

Followers