அறிவு புகட்டும் அறிய விழாக்கள்
தமிழர்கள் வாழ்வின் பரிணாமங்களை 12 வகையாக பிரித்தனர். அவற்றை இராசிகள் என்றனர். இந்த இராசிகளுக்கு ஏற்ப 12 மாதங்ககளை ஏற்படுத்தினர்.
அந்தந்த மாதங்களில் பருவ நிலையை உணரும் பொருட்டு அவற்றை "விழா" என்று அழைத்தனர்.
பண்டைய தமிழ் மக்கள் மாதங்களை ஆடி, ஆனி, புணர்வசி, ஐப்பசி, வைகாசி, யாழி,ஆவணி, காரி, பங்குனி, மாசி,புரட்டாசி என்று வகைபடுத்தினர். மேற்படி மாதங்களுக்கு ஏற்ப விழாக்களை ஏற்படுத்தினர்.
ஆடி மாதம் ஆண்டு பிறப்பு விழா கொண்டாடினர்.
"ஆடி பட்டம் தேடி விதை" என்றனர் (ஆடு + இ = ஆடி) (மேச மாதம்)
ஆனி மாதம் (ஆன் + இ = ஆனி) பசு மாதம் (இரிசபம் மாதம்)
இதனால் இம் மாதத்தில் பூரணி "பொங்கல்" விழா கொண்டாடினர்.
புணர்வசி மாதம்(ஆண் + பெண் சேர்க்கை) (காமன் பண்டிகை)
தீப விழா, காமனை எரிக்கும் விழா, சொக்கப்பன் எரிக்கும் விழா கொண்டாடினர்.
ஐப்பசி மாதம் (ஐயனார்) குழந்தை பிறப்பு, புது பிறவி எடுத்ததின் அடையாளம்.
குழந்தைகளுக்கு பெயர் வைத்தல், மொட்டை அடித்தல், காத்து குத்துதல், புது ஆடை உடுத்துவது. இதை பிள்ளையார் சதுர்த்தி - சதுரம் (4 நான்கு) நான்காவது மாதம்.
வைகாசி மாதம் (உடல் வளர்ச்சி) - தீப யாளி, தீ என்பது நெருப்பு, யாளி என்பது யானை, யானை முகம் கொண்ட சிங்கம். உடலானது சைவ, அசைவ உணவால் வளர்வதை யாளி உணர்த்துகிறது.
யாளி மாதம் (யாழ் + இ) ஆயுத விழா, ஆயுதம் என்பது உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர் மெய் எழுத்துக்களை கொண்ட தமிழை கற்றுக் கொள்ளல்.
யாழ் போன்ற இசை கருவிகள்/அற நூல்களை கற்றல். சரஜோதி (சரசுவதி) பூசையும் அன்றே கொண்டாடபடுவதின் காரணம். அறிவு வளர்ச்சி மாதம்.
ஆவணி மாதம் "அ" உயிர்(அணி) உயிருக்கு அழகு சேர்த்தல், அதாவது உண்ணா நோன்பு நோர்த்தல், உயிர் வளர்ச்சி மாதம். இதை வள்ளுவர் உற்ற நோய் நோற்றல் என்கிறார்.
காரி மாதம் (காத்தல் மாதம்) - பசிப் பிணி - நோன்பின் மூலம் பசியின் கொடுமையை உணர்தல், பசியின் உணர்வை பெற்றபின் எல்லா உயிர்களுக்கும் இந்த நோய் இருக்கும் என்று உணர்ந்து "அன்ன தானம் செய்வது". கூழ் படைத்து ஊற்றுவது(சீவ காருண்ய மாதம்). கருந்தேள் விசம் போல் - பசிப்பிணி என்று உணர்ந்தனர்.
பங்குனி மாதம் (பகை அறுத்தல்) வீர தீர விளையாட்டுகள் ஏற்படுத்தி உடலை வன்மைபடுத்தினர். (பம் + குனி = பங்குனி) பம் = அம்பு, குனி = வில். நோயானது அம்பு போல் வரும் அதை எதிர்கொள்வது, கூனி(பனி) மாதம் என்று கூறுவர்.
மாசி மாதம் - மரண மாதம் (மாய்தல்) மா = மாண்ட, சி = சிவம். மாசி மகத் திருவிழா கொண்டாடினர்.
மார்கழி மாதம் (பீடை மாதம்) என்பர். உயிர் கழிதல் மாதம். இறப்பு மாதம் "பீடை நாள் விழா" கொண்டாடினர். கொடும் பாவி கட்டி சுடுகாட்டில் எரித்துவிட்டு ஆறு, குளங்களில் குளித்து இறந்தவர்கள் நல்ல கதி பெற வேண்டுதல்.
புரட்டாசி மாதம் (புரட்டு + ஆசி) ஆன்ம மாதம் - உடலற்ற ஆன்மா கீழ் மேல் பிறப்புகளை எய்தும் பொருட்டு அலையும். தேர் திருவிழா (கூடி இழுத்து செல்லும் விழா). மலை மேல் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தல். மலை கோயில் என்பது உயர் பிறப்பை குறிக்கும்.
இவ்வாறு 12 மாதப்படி விழாக்களும், சடங்குகளும் ஏற்படுத்தி அதன்படி நடந்து வந்தனர். காலத்தால் இவை இன்று மாறுதலுடன் நடக்கின்றன.
அறிவியல் படி நடந்த விழாக்கள் இன்று அர்த்தமற்ற விழாக்களாகி வருகின்றது.
இதையே வள்ளுவர்
"பொருளல் லவற்றை பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு" என்கிறார்.