Sunday, January 4, 2015

ஆரோக்கியத்தைப் பராமரிப்பது எப்படி?

1980 ஆம் ஆண்டு வரையிலும் உணவுப் பழக்கத்தில் பெரிய அளவு மாற்றம் எதுவும் நம்மிடையே ஏற்படவில்லை;1.1.1995 அன்று உலக மயமாக்கலில் இந்தியா கையெழுத்திட்டது;இதன் படி உலகில் இருக்கும் 230 நாடுகளில் 220 நாடுகள் உலகமயமாக்கலின் கீழ் ஒரே குடையின் கீழ் வந்தன;இதன் பிறகுதான் கேபிள் டிவி பரவலானது;செல்போன் சகஜமானது;ஒரே ஒரு ஜவுளிக்கடை வைத்திருந்தவர்கள் பெரிய நகரங்களில் தனது கடைகளைத் திறந்து கொண்டேவந்தார்கள்;உலகமயமாக்கல் என்ற பெயரில் அமெரிக்கமயமாக்கல் உலகம் முழுக்கப் பரவியது;

நமது இந்துதர்மக் கொள்கையின் படி குடிக்கும் தண்ணீர்,உண்ணும் உணவு,கற்கும் கல்வி இம்மூன்றையும் ஒரு போதும் பணத்துக்காக விற்பனைச்  செய்யக் கூடாது;அப்படி விற்பனை செய்யும் நிலை வந்தால் குடும்பம் என்ற அமைப்பு சிதைந்துவிடும்;தாம்பத்தியம் என்ற உன்னதமான மனித கண்டுபிடிப்பு நாசமாகிவிடும்;விபச்சாரமும்,மாஃபியாவும் சமுதாயத்தை ஆட்சி செய்யும்;பெண்களின் நிலை மிகவும் இழிவாகிவிடும்;அன்பு,பாசம்,விட்டுக் கொடுத்தல்,பத்தினித்தன்மை,சிவவழிபாடு போன்றவை அருகிவிடும்;

கி.பி.1930 வரை இந்தியாவில் உண்ணும் உணவை விற்கும் அவலநிலை இல்லை;இன்றோ உணவுத்தொழில் தான் கொள்ளை லாபம் தரும் தொழிலாக உருவெடுத்துவிட்டது;பூமியில் சிவ வழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைய,குறைய தண்ணீர்ப்பஞ்சம் உண்டாகும் என்பது கடந்த 20 ஆண்டுகளில் நிரூபணமாகிவருகிறது.


சமைத்த உணவு சாத்தானின் உணவு;தொந்தி மரணத்தின் தந்தி போன்றவை ஆரோக்கியத்தை நினைவூட்டும் பழமொழிகள்;


ஆரோக்கியத்தைப் பராமரிக்க நாம் உண்ணும் உணவுப்பழக்கத்தை முறைப்படுத்தினாலே போதும்;ஒரு போதும் நம்மை நோய்கள் அண்டாது;


காலையில் ஒரு போதும் பற்பசைகளைப் பயன்படுத்தக் கூடாது;பற்களை பாதுகாக்க பல் பொடியே சிறந்தது;டூத் பேஸ்டில் உப்பு இருந்தாலும் சரி;மூலிகைகள் கலக்கப்பட்டிருந்தாலும் சரி;அதனால் தீமையே! காலையில் பல்லின் மீது ஒரு போதும் இனிப்பு படக் கூடாது;(பெட் காபியானது குளிர்காலங்களிலும் தீமையையே தருகின்றன;)காலையில் கசப்பு,துவர்ப்பு சுவையில் பற்பொடியைப் பயன்படுத்தினால் பல்லும் வாயும் ஆரோக்கியமாக இருக்கும்;


தூங்கி எழுந்தது முதல் காலை உணவு சாப்பிடும் வரையிலும் உள்ள காலத்தில் இறைவழிபாடு 15 நிமிடங்கள் இருக்க வேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே உடலுக்கு அந்த நாள் முழுவதும் அதிர்ஷ்டம் நிறைந்தவைகளாக இருக்கும்;இன்றும் 40 வயதைக் கடந்த பலர் காலையில் காலைக் கடன் களை முடித்துவிட்டு இறைவழிபாடு  செய்தப் பின்னரே காலை உணவு சாப்பிடும் பழக்கம் வைத்துள்ளனர்;
ஆறு சுவைகளும் உள்ள உணவை ஒரு நாளுக்கு ஒரு வேளையாவது ஒவ்வொரு மனிதனும் சாப்பிட வேண்டும்; ஏதாவது ஒரு சுவையை நாம் தினமும் தவிர்த்து வந்தால் அந்தச் சுவையால் செயல்படும் நமது உடல் உறுப்பு நாளடைவில் பலம் இழக்கும்;படிப்படியாக செயல் இழக்கும்;(நம்மில் பெரும்பாலானவர்கள் கசப்புச் சுவையைத் தவிர்க்கிறோம்)


இனிப்புச் சுவையால் இரைப்பை பலம் பெறுகிறது;

புளிப்புச் சுவையால் கல்லீரல் செயல்படுகிறது;

காரச்சுவையால் நுரையீரல் வாழ்கிறது;

கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையால் இருதயம் துடிக்கிறது;

உப்புச் சுவையால் சிறுநீரகம் இயங்கிவருகிறது;

இந்த சுவைகள் உள்ள உணவுகளே நமது தமிழ் உணவுகளாக இருந்து வருகின்றன;நமது சமையல் அறையில் இருக்கும் ‘அஞ்சறைப் பெட்டி’யில் என்னென்ன இருக்க வேண்டும்? என்பதை 20 நூற்றாண்டுகளுக்கு முன்பே தனது சித்த சக்தியால் தீர்மானித்தவர் சித்தர்களின் தலைவர்;தமிழ் மொழியை பூமிக்குக்கொண்டுவந்தவருமான அகத்தியர்! அதனால் தான் உணவே மருந்து;மருந்தே உணவு என்ற பழமொழி தோன்றியது;


கோதுமையில் செய்யப்படும் உணவுகள் ஆரோக்கியமானவை;மைதாவில் இருந்து தயாராகும் நூடுல்ஸ்,மேகி,பிஸ்ஸா,பர்கர்,பேக்கரி வகைகள் ஜீரணமண்டலத்தைக் கெடுப்பவை;

அயோடைஸ்டு உப்பு,சீனி,ஷாம்பு,சோப்பு போன்றவையும் நமது ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல கெடுக்கக் கூடியவை;

ஹேர் டை,செண்ட்,ஸ்பிரே,டியோடரண்ட் போன்றவை நேரடியாகவே கேன்சர் அல்லது ஹார்ட் அட்டாக்கை வரவழைக்கும் கெமிக்கல்களைக்கொண்டவை;நாடு முழுவதும் இந்த உண்மைகளை அறிந்து கொண்டு இவைகளை நிரந்தரமாக ஒதுக்கியவர்கள் பல லட்சம் பேர்கள்;

சீனியை படிகமாகவே இருக்க ஒரு கெமிக்கலைச் சேர்க்கிறார்கள்;வெண்மையாக இருக்க இன்னொரு கெமிக்கலைச் சேர்க்கிறார்கள்;பல ஆண்டுகலளுக்குக் கெடாமல் இருக்க ஒரு கெமிக்கலைச் சேர்க்கிறார்கள்;இதனால் சீனியில் இனிப்புச் சுவை மட்டுமே இருக்கிறது;அந்த சுவையுடன் மூன்றுவிதமான ஸ்லோ பாய்சன் கள் இருக்கின்றன; சாதாரண உப்பிலும்,ராக் சால்ட் எனப்படும் பாறை உப்பிலும் நமது ஆரோக்கியம் நமக்காக காத்திருக்கிறது.


சாப்பிடும் போது போனில் பேசக்கூடாது;சாப்பிடும் போது டிவி பார்க்கக் கூடாது;சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் குடிக்கக் கூடாது;சாப்பிடும் போது இடையிடையே கோக் முதலான பானங்களும் அருந்துவது நமது உடல் நலத்தைச் சீரழிக்கும்;
சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிக்கக் கூடாது;பழச்சாறு அருந்தக் கூடாது;குளிர்பானம் அருந்தக் கூடாது;சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது;அப்படி குடிக்கும் நீரானது,உடலுக்குள் நாம் சாப்பிட்ட உணவை ஜீரணிக்க காத்திருக்கும் ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டை செயலிழக்க வைக்கும்;


குளித்து விட்டப் பிறகு குறைந்தது 30 நிமிடத்திற்குப் பின்னரே சாப்பிட வேண்டும்;
சாப்பிட்டு விட்டால் 2.30 மணி நேரத்திற்குப் பின்னரே குளிக்க வேண்டும்;உடல் ஆரோக்கியம் பற்றிய முழுமையான விழிப்புணர்வைப் பெற விரும்புவோர் ராஜபாளையம் அரவிந்த் ஹெர்பல்ஸ் நிறுவனத்தார் மாதம் தோறும் நடத்தும் இயற்கை நலவாழ்வு விழிப்புணர்வு முகாம்களில் கலந்து கொள்ளலாம்;15 வயது நிரம்பிய எவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்;முகாமில் கலந்து கொள்ள கட்டணம் கிடையாது;(சில பொருட்களை வாங்க ரூ.300/-ம்,எடை பார்க்க ரூ1/- நாணயங்கள் இரண்டும் கொண்டு வருவது அவசியம்)ஒவ்வொரு ஆங்கில மாதமும் முதல் வாரத்தில் 3 நாட்களும்,இரண்டாம் வாரத்தில் ஆறு நாட்களும் இந்த முகாம் நடைபெற்று வருகிறது.முகாமுக்குள் செல்போன்,கணினி,மடிக்கணினி,ஐபோன்,ஐபேடு,புத்தகங்கள் அனுமதி கிடையாது;இந்த முகாம் நாட்களில் மூன்று வேளையும் பழச்சாறுதான் உணவு;ஆமாம் பட்டினி கிடக்கும் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும்;மற்றவர்கள் இந்தக் கட்டுரையை வாசித்துவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விடலாம்;முழு ஆண்டு விடுமுறை வரப் போகிறது;பள்ளி கல்லூரியில் பயிலும் நமது குழந்தைகளோடு நாம் இந்த முகாமுக்கு கலந்து கொள்வதால் நமது அடுத்த தலைமுறைக்கும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கலாம்;முன்பதிவு செய்து கொள்ள அரவிந்த் ஹெர்ப் என்ற இணையதளத்தைத்  தொடர்பு கொள்ளவும்.அதில் குறிப்பிட்டிருக்கும் தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளவும்;இந்தக் கட்டுரையை அரவிந்த் ஹெர்பல்ஸ் நிறுவனத்தார் வெளியிடவில்லை;அவர்கள் நடத்தும்இயற்கை நலவாழ்வு முகாமில் கலந்து கொண்ட ஒருவர் எழுதியது.

No comments:

Post a Comment

Total Pageviews

Followers