கோவிலாவது குளங்களாவது ஏதடா?
பள்ளமும், மேடும் உன்னை பண்படுத்துமா?
சாத்திரம் ஆயிரம் கற்றாலும் உதவாது!!!
ஐந்து அறிவு நிரம்பாத மானுடத்திற்கு
ஏழாம் அறிவு வேண்டுமாம்????
பத்து மாத துமயல்லோ திரண்டு
மனித உடல் ஆனதே - சிவ வாக்கியர்
மாதவிலக்கு நாட்களில் கோயில், குளங்களுக்கு செல்வதோ அல்லது வீட்டு பூஜை அறையில் பூஜை செய்வதோ காலம் காலமாக சில பேர் பெண்களை அனுமதிப்பதில்லை. இது மிகவும் தவறான கருத்தாகும்.
ஒரு பெண்ணிற்குள் உள்ளே என்ன இருக்கிறதோ அதே இரத்தம் தான் மாதவிலக்கு நேரத்தில் வெளியேறுகிறது. மேலும் எந்த இரத்தம் வெளி ஏறுகிறதோ, அதிலே தான் ஒவ்வொரு மனிதனும் கருவாகி, பின்பு திசுவாகி, பிள்ளையாகி, பெரிய ஆளாகிறான்.
அந்த காலங்களில் பெரியவர்கள் மாதவிலக்கு நேரத்தில் பூரண ஓய்வினை பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தினை கொண்டு செயல்பட்டனர். இதுவே காலப்போக்கில் தீட்டு நாட்களில் பெண்களை தீண்ட கூடாது மற்றும் இறைவழிபாடுகளில் ஈடுபடக்கூடாது என்ற மூட நம்பிக்கையாக உருவெடுத்துவிட்டது.
எப்படி நம்முள் இருக்கும் சோதியான இறைவனை சில நாட்களில் மட்டும் கழட்டிவிட முடியும்.
