Showing posts with label தமிழின் வெற்றி. Show all posts
Showing posts with label தமிழின் வெற்றி. Show all posts

Tuesday, October 11, 2011

வெற்றி

வெற்றியின் அளவுகோல் - ஆசை மற்றும் செயலின் வெளிப்பாட்டினை பொருத்தது 
தாயின் வெற்றி  
குழந்தையின் முகத்தில்
அரசியலின் வெற்றி  
ஓட்டு  எண்ணிக்கையில்
மாணவனின் வெற்றி  
மதிப்பெண்ணில் 
காதலின் வெற்றி  
இணைதலில்
தொழிலின் வெற்றி  
லாபத்தில்
ஆன்மீகத்தின் வெற்றி  
பற்றற்ற வாழ்வில்  

 பாமரனின் வெற்றி
வயிறு நிறைவதில்
தேசத் தலைவரின் வெற்றி
நாட்டின் வளர்ச்சியில்
கவியின்  வெற்றி
கற்பனை வளத்தில்
நாட்டின் வெற்றி
பொருளாதார வளர்ச்சியில்
வாலிபனின் வெற்றி
சுதந்திர  வாழ்வில்
முதுமையின்   வெற்றி
அன்பான வாழ்வில்
குழந்தையின் வெற்றி
பொறுப்பான வளர்ப்பில்
அமைதியின் வெற்றி
வளமான வாழ்வில்
சிற்பியின் வெற்றி
சிற்பத்தின் அழகில்
ஓவியனின் வெற்றி
ஓவிய அழகில்
இயற்கையின் வெற்றி
படைத்தல், காத்தல், அழித்தலில்
தமிழின் வெற்றி
பாரினில் எங்கெங்கும்!

Total Pageviews

Followers