Showing posts with label சுமை தாங்கியே...... Show all posts
Showing posts with label சுமை தாங்கியே...... Show all posts

Tuesday, October 11, 2011

பூமி தாயே!

பூமி தாயே!

சுமை தாங்கியே.....

எங்களை எப்போதும் உன் கருவறையில் சுமக்கிறாய் 
ஒவ்வொரு பருபொருளிலும் நீக்கமற கலந்துல்லாய் - புவி ஈர்ப்பு விசையால் 
  அனைத்து பரு பொருளையும் ஈர்ப்பு விசையால்
உம்மோடு அரவணைகிறாய்

மனிதன் வாழ
  மனிதனின் ஆசை, பேராசை தீர
என்னென்ன  விந்தை செய்கிறாய் 
என்னென்ன  வரம் அளிக்கிறாய் 
கணக்கில் அடங்கா வள்ளல் குணம் கடல் போல 

யார் எதை கேட்கிறார்களோ 
    அதை அப்படியே 
தருகிறாய் - எள்ளளவும் குறையாமல் 

காலை முதல் மாலை வரை 
மிக உயர்ந்த - அரிய பொருட்களையே 
 தருகிறாய் - உம் குழந்தைகளுக்கு

உமக்கு எஞ்சி நிற்பதோ - எங்களின்

அழுக்குகளும், எச்சங்கள் மட்டுமே 
கருணையின் உச்சம் தான் எத்தனை!

                          இப்படிக்கு 
                    நீ பெற்ற பிள்ளை




















   



Total Pageviews

Followers