Saturday, April 6, 2013

நமது மகன்களுக்கு பண்பாடும்,ஆன்மீகமும் பற்றி அறிந்துகொள்ள ஒரு பயிற்சி முகாம்!!!

சுவாமி சித்பவானந்தர் ஆசிரமம் ஒவ்வொரு ஆண்டும் கோடைகால ஆன்மீக மற்றும் இந்துப் பண்பாடு சார்ந்த பயிற்சி முகாமை தேனியில் நடத்தி வருகிறது.இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதன் மூலமாக தியானம்,யோகாசனம்,மேலாண்மை ஆளுமைத் திறன்களைக் கற்றுக் கொள்ளலாம்;ஐந்து நாட்கள் நடக்கும் இந்தப் பயிற்சி முகாமில் பதினாறு முதல் நாற்பது வயது வரையிலான யாரும் கலந்து கொள்ளலாம்;முகாம் நாட்களில் வெளியில் செல்ல அனுமதி இல்லை;இந்த ஐந்து நாட்கள் பயிற்சி முகாமுக்கான நன்கொடை ரூ.ஐநூறு மட்டுமே!நன்கொடையினை நேரில் வந்து செலுத்தினால் போதும்;இது தொடர்பாக தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய செல் எண்கள்;ஸ்ரீஸ்வாமி பூர்ணானந்த 90039 34344 மற்றும் ஸ்ரீ ஜி.வி.நாராயணன் 94430 51910                          ஆஸ்ரம அலுவலகம்:+91 4546 253908 மின் அஞ்சல்:swamiomkarananda@gmail.com
இளைஞர் முகாம்:
இடம்:ஸ்ரீஸ்வாமீ சித்பவானந்த ஆசிரமம்,சத்திரப்பட்டி சாலை,வேதபுரீ,தேனி.
நாள்:22.5.13 புதன் முதல் 26.5.13 ஞாயிறு வரை
முகாம் 21.5.13 மாலை ஏழு மணிக்குத் துவங்கி,26.5.13 அன்று மதிய உணவுடன் நிறைவு பெறும்.
இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதால்,நமது ஆளுமைத்திறன்,தேசபக்தி,தெய்வபக்தி,தனித் திறன்கள் வெளிப்படும்;எதற்காகவும் சிறிதும் அஞ்சமாட்டோம்;ஒவ்வொரு சிறு விஷயத்திலும் ஆழ்ந்த கவனம் செலுத்த ஆரம்பிப்போம்;நமது முன்னோர்கள் கடந்த இருபது லட்சம் வருடங்களாக சாதித்த இந்து தர்மத்தின் சாதனைகளில் ஒரு பகுதியை உணர்ந்து கொள்வோம்.
விருப்பம் உள்ளவர்கள் 15.5.13க்குள் தங்களைப் பற்றிய ஒரு விண்ணப்பத்தினை பின்வரும் முகவரிக்கு போட்டோவுடன் அனுப்பி வைக்க வேண்டும்;
முகவரி:இளைஞர் முகாம்,ஸ்ரீஸ்வாமீ சித்பவாநந்த ஆசிரமம்,சத்திரப்பட்டி சாலை,வேதபுரீ,தேனி-625531.
நன்றி:விஜயபாரதம்,தேசிய வார இதழ்,பக்கம் 27;வெளியீடு: 12/4/13

உங்கள் மகளை ஆளுமைத்திறனுள்ள(Proper Personality) பெண்ணாக்கிட ஒரு அரிய வாய்ப்பு!!!


இன்றைய காலகட்டத்தில் அம்மாவும்,அப்பாவும் வேலைக்குப்போய்விடுகின்றனர்;வீட்டில் பெரும்பாலும் மகள்கள் தனியாகத் தான் இருக்கிறார்கள்;பள்ளியில் தரப்படும் வீட்டுப்பாடத்தை வாசித்துவிட்டு,எப்போதும் டிவி பார்த்தல் அல்லது வகுப்புத்தோழியிடம் செல்போனில் வம்பளத்தல்தான் நடைபெற்றுவருகிறது;இது தமிழ்நாடு முழுவதும் பரவலாக இருந்துவருகிறது;

மாநகரங்களில் இன்னும் ஒருபடிமேலே போய் முகநூலில் கணக்குத் துவங்கி உலகெங்கும் நட்பு வளர்க்கிறார்கள்;நேரில் பழகும் ஆண்,பெண்களின் சுபாவத்தை உணர இயலவில்லை;ஒருவர் பேசும் வார்த்தைகளைக் கொண்டே அவர்/ள் எந்த இடத்தில் பொய் பேசுகின்றனர்? என்ன நினைக்கின்றார்/ள்? என்பதை உணரும் சிந்தனைத்திறன் இன்று குறைந்து வருகிறது.இவர்களிடம் அன்பு செலுத்தவும்,அக்கறையாக இருக்கவும் ஆளில்லை;எனவே,செல்போனில் பேசும்/நேரில் புகழ்ந்து பேசும் கயவர்களின் பசப்பு வார்த்தைகளில் விழுந்து விடுகின்றனர்;

கூட்டுக்குடும்பமாக வாழும் இடங்களில் வயதானவர்களின் அனுபவ வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவோர் மிகவும் குறைவு.இந்த சூழ்நிலையில் வாரம் ஒருநாள் மட்டுமாவது அம்மா,அப்பா,குழந்தைகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடும் பழக்கமும் அரிதாகிவருகிறது.

மாதம் ஒருமுறை கோவில்களுக்குப் போவதும் குறைந்து வருகிறது.சம்மர் வந்தாலே ஊட்டி,கொடைக்கானல் என்று சென்று அந்த ஊர்களையும் நாறடித்து,தீம் பார்க்குகளில் பணத்தைக் கொட்டிட மட்டும் தெரிந்திருக்கிறோம்.நமது மகள்கள் படிக்கும் பொறியியல் படிப்புகள் அவளை சிறந்த வேலைக்காரியாக மட்டுமே தயார் செய்கிறது;ஆனால்,இல்லத்தரசியாக,பொறுப்புள்ள பெண்ணாக மாற்றிடச் செய்கிறதா?

பருவ வயதிலும்,அதற்குப்பிறகும் தனக்கு வர இருக்கும் & வரும் பிரச்னைகளை தானே எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை நமது மகள்களுக்கு ஊட்டிட முயன்றிருக்கிறோமா?

நமது முன்னோர்களின் பெருமைகளை நமது அடுத்த தலைமுறையான மகள்களுக்குப் போதித்துக் கொண்டே வந்திருந்தால் இன்று பப்கள் சென்னை,கோவை,திருப்பூர்,ஈரோடு,நாகர்கோவில்,மதுரைக்கு வந்திருக்காது;நமக்கே நேரமில்லையே? 

நமது இந்து தர்மப் பண்புகளை மனதில் பதிய வைக்க ஒரு அருமையான வாய்ப்பு இது:=
இந்தக் குறையைத் தீர்க்க ஒரு அருமையான கோடைகால பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் ஏற்பாடாகியிருக்கிறது.அதுதான் பண்புப்பயிற்சி முகாம்! இந்த முகாமில் பெண்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்; ஒரே குடும்பத்தில் இருந்து அக்கா,தங்கை,மருமகள்,அம்மா,பாட்டி என்று அனைவருமே கலந்து கொள்ளலாம்;

அல்லது

குடும்பத்துக்கு ஒரு பெண்ணை அனுப்பி வைப்பது அவசியம்;தனியாக எனது மகள் இருக்க மாட்டாள் என்று நினைத்தால்,இரண்டு மூன்று தோழிகளாக அனுப்பி வைப்பது அவசியம்;இந்த முகாமுக்கு அனுப்பி வைத்துவிட்டால் இந்த பதினைந்து நாட்களும் பார்க்க முடியாது;செல்லில் பேசிக்கொள்ளலாம்;இடையில் வெளியே வந்தால் மீண்டும் உள்ளே செல்ல அனுமதி இல்லை;

தமிழ்பேசும் ஒவ்வொரு இந்துக்குடும்பப் பெண்களுக்கும் இந்தப் பயிற்சி முகாம் அவசியமானது ஆகும் என்பதை பதினைந்தாவது நாள்தான் உணருவீர்கள்;(எனக்கு தேசபக்தியையும்,தெய்வபக்தியையும் உணர்வில் ஊட்டியது இதே போன்ற ஒரு ஆண்களுக்கான பயிற்சி முகாம் தான்! அதன் பிறகே,நான் தன்னம்பிக்கை மிக்கவனாகவும்,பிறருக்கு வழிகாட்டும் முன்னுதாரணமானவனாகவும் மாறத் துவங்கினேன்!!!!)
இதை நடத்துவது ராஷ்ட்ர சேவிகா சமிதி=தமிழ்நாடு
பயிற்சி நடைபெறும் நாட்கள்;3.5.13 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் 18.5.13 சனிக்கிழமை இரவு 9 மணி வரை

இடம்:சுத்தானந்த ஆஸ்ரமம், ‘அடி அண்ணாமலை’, கிரிவலப்பாதை,திருஅண்ணாமலை
கட்டணம்:ரூ.350/-(உணவிற்காக மட்டும்)

தகுதி:பெண்கள் மட்டும்;13 வயது நிரம்பியிருக்க வேண்டும்;கல்வித்தகுதி அவசியமில்லை;

கொண்டுவர வேண்டியவை:=ராணி க்ருஷ்ணன்,மதுரை ப்ராந்த கார்யவாஹி 09790291516 அல்லது ராதா சந்திரமவுலி 9884081969 அவர்களில் ஒருவரைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுக்கொள்ளலாம்.

பயிற்சிக்குப் பிறகு: இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மாணவி,பெண்ணும் தனது ஒவ்வொரு செயலிலும்  தன்னம்பிக்கையோடும்,தெய்வபக்தியோடும்,தேசபக்தியோடும்,செயல்நுட்பத்தோடும் செயல்படுவார்;அவர்களின் பயம்,கூச்சம் விலகும்;படிப்பில்,குடும்பப் பொறுப்பில்,வேலை செய்யும் இடத்தில் இன்னும் சிறப்பாகச் செயல்பட ஆரம்பிப்பார்;சிறந்த ஆளுமைத்திறனும் உருவாகத்துவங்கும்;இந்த ஆளுமைத்திறன் குறைந்தது இருபது ஆண்டுகளுக்கு வழிநடத்தும்!!!
இந்த அரிய வாய்ப்பைப்  பயன்படுத்திக் கொள்ளவும்.
தகவல் ஆதாரம்: விஜயபாரதம்,தேசிய வார இதழ்,பக்கம் 5, வெளியீடு:12.4.13

Tuesday, April 2, 2013

கொய்யாவின் மருத்துவ பயன்கள்

பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது. 

* வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன. 

* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம். 

* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.  
* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. 

* கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும். 

* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். 

* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது. 

* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம். 

* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது. 

* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும். 

* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.


Friday, March 22, 2013

பசுமையான நிணைவுகள்



பசுமையான நிணைவுகள் 


 

 
'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?
 
1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே
WE ARE AWESOME !!!!
OUR LIFE IS A LIVING PROOF
 
 
 
·         தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
·         எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
·         கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
·         புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.
·         சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
·         பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
·         நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
·         தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
·         ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
·         அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
·         காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
·         சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
·         உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
·         எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
·         எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
·         அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
·         உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
.
·         எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை
 உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
·         எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
·         வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
 
·         எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
·         உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
·         நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.
·         இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.
·         இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்

Tuesday, February 19, 2013

வடுக்கள் தழும்புகள் மறைய

கசகசா  நூறு கிராம் வேப்பிலை 25 கிராம் பாலில் அரைத்து தழும்பின் மீது தடிவினால் வடுக்கள் மறையும்.
ஆமணக்கு கொட்டையை  அரைத்து பூசினாலும் வடுக்கள் தழும்புகள் மறையும்.

Monday, February 11, 2013

இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்

வணக்கம் நண்பர்களே..!

இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் 
வயதானவர்கள் வரை இன்று சந்திக்கும் ஒரு பிரச்னை இடுப்புவலி.

இடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம்? 

இடுப்பு வலி நீங்க
edduppu vali neengaஅதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை 
செய்பவர்களுக்கு இடுப்பு ஏற்படுகிறது. 
குறிப்பாக கணினியின் முன்பு அமர்ந்து 
வேலை செய்யும் இளைய தலைமுறைகள்
 முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, 
இடுப்புவயால் துடித்துப் போகின்றனர்.



காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து 
கொண்டே கணினியின் முன்பு அமர்ந்திருப்பதுதான்.

இதற்குத் தீர்வு என்ன? 

  1. அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம். 
  2. சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும். 
  3. கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும். 
  4. அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும், மேசையின் உயரத்திற்கு 
  5. தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும். 
  6. பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 
  7. சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும். 
  8. தொடர்ச்சியாக கணினியின் முன்பு அமர்ந்து பணியாற்றுவதால் 
  9. இடுப்புப்பகுதியில் சதைகள் அழுத்தப்பட்டு, முதுகுத் தண்டின் சவ்வில்
  10.  தேய்மானம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். 
  11. இதனால் தாங்க முடியாத இடுப்பு வலி ஏற்படும். 
தொடர்ச்சியாக இதே நிலை நீடித்தால், இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய
 வேண்டிய நிலை ஏற்படும். எனவே வரும் முன் காப்பதே சிறந்த வழி. 
மேற்கொண்ட முறைகளை நடைமுறைப்படுத்த, விரைவில் இடுப்பு வலியிலிருந்து
 மீள முடியும்.

இடுப்பு வலியை குணமாக்கும் கொள்ளு...

  1. கொள்ளு பல பிரச்னைகளைத் தீர்க்கும் ஒரு இயற்கை உணவுப் பொருள். 
  2. கிராமங்களில் அதிகமாக இது கிடைக்கும். 
  3. கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும். 
  4. உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை வாரம் மூன்று முறை சேர்க்க
  5.  உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உஉடல் வாகை பெற முடியும். 
  6. உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது. 

பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க: 

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும் இடுப்பு வலியும் ஏற்படுவது 
 இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு
 வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை 
கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும்.

வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு 
குறைந்துவிடும்.

இளம்பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க: 

  • நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் 
  • கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள 
  • குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். 
  • ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை 
  • முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி,
  •  இடுப்பு வலி ஏற்படும். 
  • மிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட
  •  இடுப்பு வலி குறையும். 
  • தளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்து 
  • துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும். 






Click here to Reply or Forward
Why this ad?Ads –
Offers World Class Residences, Apartments, & More! Visit Us Today.
21% full
Using 2.2 GB of your 10.1 GB
©2013 Google - Terms & Privacy
Last account activity: 1 minute ago
Details

Raja Dhandapani


Show details
Ads – Why these ads?
Lumosity.com
Get smarter, think faster – Train your brain with Lumosity, the personal trainer designed by scientists. Try a free workout!
Mechanical Hall A
We're just a rock band. Having a good time.
Bajaj Health Insurance
4 Lakh cover for just Rs 23 a day Family Floater Health Guard.Buy Now
Weight Management Tip:
Eat Breakfast.
Special K is a Low Fat Breakfast.
Create a Mobile Site
Convert Your Website to Mobile In Under 2 Minutes. Start Now!

ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்

ஜலதோசம், தும்மல்
உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.
முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால்,  தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.

மூக்கடைப்பு மருந்து
மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு - குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது. ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம். மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.
1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார். உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
 
சுண்ணாம்பு  + மஞ்சள் ............... மறக்கவேண்டாம்

Total Pageviews

Followers