Tuesday, September 25, 2018

கோபத்தை வெளிப்படுத்த உதவும் மண்ணீரல் (GALLBLADDER)



மண்ணீரல் (Gallbladder) நமது உடலின் உள் உறுப்புகளில் முக்கியமான உறுப்புகளில் ஒன்று.  மண்ணீரல், இது கல்லீரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகவும். நிணநீர் உறுப்புகளில் மிக பெரிய உறுப்பு மண்ணீரல் தான்.

இது ரெட்டிகுலார் செல்கள் மற்றும் அவற்றின் நார்கள் போன்ற பகுதிகளால் ஆன வலைப்பின்னல் அமைப்புக்கொண்டது .
முதிர்ந்த இரத்த சிவப்பணுக்களை அழிப்பதே மண்ணீரலின் முக்கிய பணியாகும். மேலும், இரத்த சிவப்பணுக்களின் செயல்களைச் சீர்படுத்துவதும், இதயத்தின் செயல்பாடுகளைத் தூண்டுவதும், சீராக்குவதும் இதன் வேலைதான். 

ஆரம்பத்தில் கருவில் வளரும் கரு குழந்தையின் இரத்தச் சிவப்பணுக்களை உருவாக்குவதும் மாநில தான். குழந்தை பிறந்தவுடன் இரத்தச் சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றன . ஆனால் அவ்வாறு உருவாகும் அணுக்கள் முழுமையாக பக்குவம் அடைவதற்கு மண்ணீரல் தான் உதவுகிறது.


கோபம் எப்படி வருகிறது தெரியுமா?

மண்ணீரலில் சுரக்கும் ஒருவகை நீர் இரத்தத்தில் கலந்து மூளைக்கு சென்று அங்கேயுள்ள நுண்ணறைகளை பாதிக்கிறது . அதனால் தான் நமக்கு கோபம் உண்டாகிறது.

மண்ணீரல் பாதிக்கப்பட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். நுரையீரலின் செயல்பாடுகளிலும் மண்ணீரலுக்கு பங்கு உண்டு.

இரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண்கிருமிகளை அழித்து, சிறுநீரகத்தின் செயல்பாடுகளை மண்ணீரல் தூண்டுகிறது. அதேபோல் இரத்த ஓட்ட பாதையில் கிருமிகள் போன்ற வெளிப்பொருட்களை வடிகட்டி வெளியேறவும் செய்கிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரிக்கச் செய்வதும், வியர்வைச் சுரப்பிகளை தூண்டி அவைகளை செயல்பட வைப்பதும் மண்ணீரல் தான்.

அடிக்கடி கோபம், எரிச்சல், மனா அழுத்தம் அடைவோருக்கும் மது பழக்கம்,புகைப்பழக்கம் உள்ளோருக்கு மண்ணீரல் பாதிக்கப்படக்கூடும். கல்லீரல், பித்தப்பை, இரைப்பை சிறுகுடல் பகுதிகளில் எதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும் மண்ணீரல் பாதிக்கப்படலாம். 

அடிவயிற்றில் கடுமையான வலி, நாக்கு வறண்டு விறைப்புத் தன்மை அடைவது, வாயுக்களால் உடலெங்கும்  வலி போன்றவை மண்ணீரல் பாதிப்பை உணர்த்தும்.


நேர்மையான எண்ணங்கள், அமைதி, பொறுமை, தியானம், யோகா மற்றும் சத்தான உணவுகள், பழங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் ஆழ்ந்த தூக்கம் இவை அனைத்தையும் கடை பிடித்தால் வாழ்வில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் வாழலாம்.











Friday, September 21, 2018

இணைய வழி கல்வி - தமிழ்நாடு +1 மற்றும் +2 மாணவர்களுக்கு


தமிழக அரசுக்கும்,பள்ளிக் கல்வித்துறைக்கும்,SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!

கிராமப்புற ஏழைப் பிள்ளைங்களுக்கும்,தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைக்கும் இப்ப நல்லாவே chemistry work out ஆகுது.

என்னான்னு கேக்குறீங்களா..11-வது chemistry new bookல உள்ள கடினமான,முக்கியமான பகுதிகளை எல்லாம் எளிமையா,புரியும் படியா video lessons பண்ணிருக்காங்க.

sema work.extraordinary plan.conceptஐ விளக்கி சொல்லியிருக்காங்க.

English,தமிழ் ரெண்டு மொழியிலும் தயாரிக்கப் பட்டிருக்கு.

இந்தாப்பா...இனி ஆயிரக்கணக்குல செலவழிச்சு Tuition அனுப்ப வேண்டாம்.

வாத்தியார் இல்லன்னாலும் சரி,நடத்துனது புரியலனாலும் சரி இத ஒரு அஞ்சு தடவ பார்த்தாவே போதும்,தெளிவா புரிஞ்சிரும்.

TN SCERT ..அப்பிடீங்ற  You Tube Channelல்ல எல்லாமே upload ஆயிருக்கு.

இப்ப என்ன பிரச்சனைனா இது பத்தி யாருக்குமே தெரியல.

freeyaa கிடைக்கிறதால யாருக்குமே இதன் அருமை தெரியல.

கிராமப்புற, ஏழைப் பிள்ளைங்களுக்கு இந்த விசயம் போய்ச் சேரவேயில்ல.

Tuition வருமானத்திற்காக பல பேர் இதைச் சொல்லுறதேயில்ல.

ஏதாவது நல்லது செய்யனும்னு நினைச்சா இதப் பத்தி மாணவர்களுக்கு சொல்லி நல்லா படிக்க உதவுங்க.

what's app,face book media வுல share பட்டன அழுத்துங்க.

பிடிச்சதோ,பிரச்சனையோ உடனே share பண்ணுறோம்ல.
அதே போல இதையும் share    .

இனி பணக்காரர்களுக்கு மட்டுமல்ல நல்ல கல்வியும்,மருத்துவமும்,உயர் கல்வியும்.

ஒவ்வொரு ஏழை மாணவனுக்கும் இதைக் கொண்டு போய்ச் சேர்ப்போம்.

Monday, August 6, 2018

வயிற்று வலியா?-என்ன பிரச்சனை என்று எப்படி அறிந்து கொள்வது?

வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம். 

சிறிது விசய ஞானத்தோடு வயிறு வலியினை புரிந்து கொண்டால் மன பயம் விலகும்.



வயிறு ஒரு பை மாதிரி. முக்கிய உறுப்புக்களான - கிட்னி, பித்த பை , கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கணையம் , சிறு நீர்பை, கர்ப்பப்பை,சினைப்பை (பெண்களுக்கு) மற்றும் விந்துபை (ஆண்களுக்கு), என்று அனைத்து ராச உறுப்புகளும்  வயிற்றில் உள்ளன.

ஆனால், இதை  எப்படி நீங்கள்  தெரிந்துகொள்ளலாம் ? 



வயிற்றின் மேலிருந்து கீழ் வரை மூன்று பகுதியாவும் மற்றும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரகற்பனை செய்து பார்க்கவும்.

அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் ஒன்பது பகுதிகள் வரும். 

அதாவது மேல், நடு (தொப்புள் பகுதி) மற்றும் அடி பகுதி, இடது, நடு (தொப்புள் பகுதி) மற்றும் வலது பகுதி.

1.மேல்வயிறு வலது மூலையில வலிச்சா -  கல்லீரல்  அல்லது  பித்தப்பை பிரச்சனை

2.மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால்  - அல்சர் அல்லது வயிற்று புண் .

3.நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலித்தால் - நீர்கடுப்பு அல்லது கிட்னி பிரச்சனை 

4.நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால்  - உணவு ஒவ்வாமை  அல்லது ஃபூட் பாய்சன்.

5.அடிவயிறு வலது மூலை வலித்தால் - அப்பன்டிசைடிஸ்,

6.அடி வயிறு நடுவில் வலித்தால் - சிறுநீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,

7.அடிவயிறு இடது மூலையில் வலித்தால் - குடலிறக்கம்.

இப்போது  என்ன பிரச்சனைன்னு என்று  தெரிந்து கொண்டீர்கள், 
அப்பிரச்சனைக்கு திர்வு காணுங்கள்! 

Sunday, August 5, 2018

பல் சொத்தை - வீட்டு வைத்தியம்

பல் சொத்தையால் அவதியா ??? 

எளிய வீட்டு  வைத்தியம் மற்றும் நிரந்தர தீர்வு!!!

பல் சொத்தை  முதல் கட்டத்தில் இருந்தால்,  கீழ்கண்ட வீட்டு வைத்திய குறிப்பு 100% குணமடைய செய்யும் .



கீழ்கண்ட வைத்திய முறைகளை தவறாமல் செய்தால் குணமடைவது உறுதி. மேலும் கீழ்கண்ட எதாவது ஒரு முறையை வரம் தோறும் கடை பிடித்ததை பல் சொத்தையாவதிலிருந்து விடுபடலாம் அல்லது பாதுகாத்து கொள்ளலாம் .


1. ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு முடித்தவுடன் 3-5 கொய்யா இலைகளை கழுவி நன்கு மெல்லவும் . கொய்யா இலைகளை மெல்லும் பொது வாயில் எச்சில் நன்கு ஊறும். இந்த சாறு மற்றும் நுண்ணிய இலைகளை வாயில் 15-30 நிமிடம் வைத்திருக்கவும் . பிறகு வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் போடி மற்றும் உப்பு சேர்த்து 5-10 முறை வாய்  கொப்பளிக்கவும் . 





2. புளிய இலைகளையும், மஞ்சள் பொடியும் மற்றும் உப்பு  சேர்த்து  200 மில்லி நீரில் 10 நிமிடம் கொதிக்க வைத்து, சிறுது சூடு ஆறியவுடன் 10-20 முறை வாய் கொப்பளிக்கவும். 







3. இரண்டு கிராம்பு அல்லது லவங்க பூவை வாயிலிட்டு நன்றா மென்றால் வாயில் எச்சில் நன்றா உறும், பிறகு 10-20 நிமிடம் இந்த சாற்றை வாயில் வைத்து துப்பி விடவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம்.


4. காலை மற்றும் இரவில் கீழே குறிப்பிட்ட மூன்று பொருட்களை கொண்டு பல்துலக்கவும்.
கடுக்காய் பொடி, மஞ்சள் பொடி  மற்றும் உப்பு மூன்றையும் சரியளவு கலந்து பல்பொடியாக உபயோகிக்கவும் . 




மேற்குறிய முறைகளை எந்த வரிசையில் வேண்டுமானாலும்  செய்யலாம். ஆனால் 4 முறைகளையும் ஒருமுறையாவது ஒரு நாளைக்கு கட்டாயம் செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் 
lakshmi_mailme@rediffmail.com

நலம்பெற வாழ்த்துக்கள்!!!

Sunday, June 24, 2018

கால் வெடிப்பு குணமாக எளிய வீட்டு வைத்தியம்



1. விளக்கெண்ணெய்  2 தேக்கரண்டி 
2. சுண்ணாம்பு சிறிதளவு (3 மிளகு அளவு)
3. சிறிது மஞ்சள் பொடி 
4. மேற் கூறிய இந்த மூன்று பொருளையும் நன்றாக கலக்கி வைத்துக்கொள்ளவும் 
5. தினமும் இரவில் 3-5 நாட்கள் கல் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வரவும் 

விரைவில் குணமாவதை நன்கு உணரலாம்

பாட்டி வைத்தியம்/ வீட்டு வைத்தியம்


உடல் சோரவை போக்க:
ஒரு டம்ளர் அண்ணாசிப் பழச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் காலை அருநதி வந்தால் உடல் சோர்வு குறையும்

மயக்கம்:
அடிக்கடி மயக்கம் ஏற்படும் நபர்கள் காப்பி,தேனீர்க்கு பதில் எலுமிச்சை பழச்சாற்றை குடிப்பது நல்லது.

கை, கால் வலி:
சுக்கு50 கிராம் ஆவாரம்பட்டை  50 கிராம் அளவு எடுத்து 200மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆற வைத்து சாப்பிட்டு வர கை, கால் வலி போகும்.

விஷம் முறிவு:
விஷம் உள்ள வீட்டுப்பூச்சிகள் கடித்து விட்டால் ஆடாதொடையை சுத்தம் செயது அரைத்து சிறிதளவு வெந்நீரில் கலந்து குடிக்க விஷம் முறியும்.

கால் வலி:
முருங்கை பட்டை மற்றும் சுக்கு இவற்றை ஊற வைத்து பின்பு அதை மைய அரைத்து கால் வலி ஏற்பட்ட இடத்தில் பூச வலி குறையும்.

உடலில் ரத்தம் விருத்தி:
தினமும் ஒரு செம்பருத்தி பூவை காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சூடு தணிந்து இரத்தம் விருத்தியாகும்.

உள்ளங்கை, கால் வியர்வை நிருத்த: 
இருவேளை இலந்த மர இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை, கால்களில் தடவி வர உள்ளங்கை& கால் வியர்வை நின்று விடும்.

முகத்தில் கரும்புள்ளி:
வெள்ளரிக்காயை அரைத்து கரும்புள்ளி மீது தடவி நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி வநதால் கரும்புள்ளிகள் குறையும்

*வெள்ளை நோய் ,உடல் சூடு,கண் எரிச்சல் குணமாக*

           பெரிய கற்றாழை மடலை நீளவாக்கில் கீறிப் பிளந்து இதில் மூன்று தேக்கரண்டி அளவு வெந்தயத்தைப் பதித்து மூடி, நூலால் கட்டி இரண்டு நாள் இரவு முழுவதும் வைத்து  மூன்றாவது நாளில் பிரித்துப் பார்க்கும் போது வெந்தயம் முளை கட்டியிருக்கும். இந்த வெந்தயத்தை மூன்று பாகமாக்கி மூன்று தினங்கள் காலை வெறும் வயிற்றில்  சாப்பிட்டால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்பட்ட வெள்ளை நோய் குணமாகும்.

குளியலுக்கு….

மூலிகை குளியல் எண்ணெய் தயாரிக்க

 சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரைக்கிலோ எடுத்து ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் தினமும் ஐந்து முதல் 8 மணி நேரம் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான இயற்கை வாசனையைக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் எண்ணெய் உடல் எரிச்சல்,பாத எரிச்சல்,உடல் ஊறல்,வெட்டைச்சூடு,ஜனன உறுப்பு நோய்கள் குணமாகும்.!

Wednesday, February 8, 2017

தொப்புளில் எண்ணெய்

தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்றத் தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு, முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
கண்கள்_வறட்சி_நீங்க
குறைந்தபார்வை_சரியாக பளபளப்பான_தலைமுடி_பெற மெருகூட்டப்பட்ட_சருமம்_பெற
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.
முழங்கால்_வலி_குணமடைய
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி விளக்கெண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.
நடுக்கம்_மற்றும்_சோர்வு, மூட்டுவலி_மற்றும்_வறண்ட_சருமத்திலிருந்து_நிவாரணம்_பெற
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி கடுகு எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரைஇன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.
தொப்புளில்_ஏன்_எண்ணெய்விட_வேண்டும்?
எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும். அதனால் தொப்புள் அந்த எண்ணெயைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பி திறக்கச் செய்கிறது.
சிறு குழந்தைக்கு வயிறு வலியென்றால், பெரியவர்கள் காயப்பொடியுடன் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம். சில நிமிடங்களில் குணமாகும். எண்ணெயும் அவ்வாறே வேலை செய்கிறது.

Total Pageviews

Followers