Tuesday, April 3, 2012

நமக்கு ஏற்பட்ட விதியின் வரலாறு

நமக்கு ஏற்பட்ட விதியின் வரலாறு 

காலம் என்னும் தத்துவம் தோன்றுவதக்கு முன்பே நாம் எப்படி இருந்தோம் என்பதைச் சற்றுச் சிந்திக்க வேண்டும். கடிகாரம் தோன்றுவதற்கு முன்பு நம் முன்னோர்கள் சூரியனின் நிலையை கொண்டு காலத்தைக் கணக்கிட்டு அறிந்து வந்தார்கள். இந்தச் சூரியனும் தோன்றுவதற்கு முன்பு எங்கும் இருள் சூழ்ந்திருக்க வேண்டும் அல்லவா? அத்தகைய கொடிய இருளில், நாம் அனைவரும் அறியாமை வயப்பட்டுக் கிடந்திருக்கிறோம். அந்நிலையில் இறைவன் நம்மீது இறக்கம் கொண்டு, நமக்கு உருவமற்ற ஒரு நுண்ணுடலைத் தந்தான். அந்த நுண்ணுடல் எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரியானதாக வழங்கப்பட்டது. அதனாலேயே, 
"பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்"
என்று வள்ளுவர் கூறுகிறார்.

அந்த நுண்ணுடலைப் பெற்றதும், நமது அறியாமை சிறிதளவு நீங்கியது. அப்போது, நமது விருப்பு வெறுப்புக்கள் வெளிப்படலாயின. நமது விருப்பு வெறுப்புகளுக்கு இசைந்த அளவில், ஒவ்வொரு உயிர்க்கும் வெவ்வேறு விதமான பரு உடல்களை இறைவன் வழங்குகினான். முதல் பரு உடலை பெற்றதே நமக்கு ஏற்பட்ட முதல் பிறப்பு ஆகும்.

இந்த முதல் பருஉடலில் இருந்து நாம் செய்த நல்வினைகளும்  தீவினைகளும், அடுத்த பிறப்பில் நமக்கு இன்பங்களையும், துன்பங்களையும் தந்தன. இந்த வினைகளை நமது அறிவின் நிலைக்கு ஏற்ப நமது விருப்பப்படியே  நாம் செய்கிறோம். நமது விருப்பபடி நாம் செய்யும் செயல்களில் யாரும் தலையிடுவதை நாம் விரும்புவதில்லை. எனவே, ஒவ்வொரு பிறப்பிலும் நாம் வினைகளைச் செய்து குவிக்கிறோம். அந்த வினைகுவியளைச் "சஞ்சிதம்" என்று கூறுவார்.

அடுத்து அடுத்து வரும் பிறப்புகளில் இறைவன் அந்த வினக் குவியலில் இருந்து ஒரு பகுதியை எடுத்து நாம் திருந்தும் அளவுக்கு நமக்குப் பயனாக ஓட்டுகிறான். இந்த வினைப்பயனே "ஊழ்" அல்லது "விதி" எனப்படுகிறது. இதுவே நமக்கு ஏற்பட்ட விதியின் வரலாறு ஆகும்.

வினைபயனை இறைவன் ஊட்டுவதற்கு காரணம்: 

காத்திருங்கள் அடுத்த பதிவிற்காக   

நவகிரகங்கங்களைப் பற்றிச் சில

 "சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே" - திருஞானசம்பந்தர்
தோற்றுவாய்
 உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் துன்பத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். துன்பமோ, துயரமோ, தொல்லையோ சிறிதும் இல்லாதவர் எவரும் இல்லை. துன்பங்கள் நம்மை ஏன் தொடர்கின்றன? துன்பங்கள் நமக்கு எப்படி ஏற்படுகின்றன? என்பனவற்றைத் துன்புறுபவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆனால் துன்பத்தை தாங்க இயலாமல், அதனை போக்குவதற்கான வழி முறைகளைத் தேடி அலைகிறார்கள். 
சோதிட நம்பிக்கை
அவ்வாறு தேடி அலைபவர்களில் பெரும்பாலோர் சோதிட நிபுணர்களைக் கண்டு, தமக்கு எப்போது இந்தத் துயர் நீங்கும் என்னும் கேள்வியை எழுப்பிப் பெரும் பொருள் கொடுத்துச் சோதிடரின் விடைக்காக காத்திருக்கிறார்கள். பரிகாரம் என்னும் பெயரால் பகுத்தறிவிற்கு ஒவ்வாதன பலவற்றைச் செய்து, பொருளையும், காலத்தையும் வீண் விரயம் செய்கிறார்கள். ச்ப்திடர் கூறும் பரிகாரம் நமது துயரை நீக்குமா என்பதைக் குறித்துச் சிறிதேனும் சிந்திப்பதில்லை. சோதிடர்கள் எப்படி பலன் கூறுகிறார்கள்? நான் பிறந்தபோது நவகிரகங்கள் நிற்கும் இடத்தைப் பார்த்து சோதிட நூல்களில் கூறப்பட்டுள்ள விதிகளை அனுசரித்து சோதிடர்கள் பலன் சொல்கிறார்கள். அவற்றுள் சில பலிதம் ஆகும், பல பலிதம் ஆகாமல் போகும். சோதிடர்களின் வாக்குகளில் இருக்கும் நம்பிக்கை, இறைவனிடத்திலும், இறையடியார்களின் அருள்வாக்குகளிலும் நம்மில் பலருக்கு இல்லை என்பது  சில சமயம் உண்மை. எனவே தான், நம்மில் பெரும்பாலோர்க்குச் சோதிடர்கள் கூறும் பரிகாரங்களை செய்து முடித்த பின்னும் துயர்கள் நீங்க பெறாமல் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பலன் சொல்லும் சொதிடர்களில், இறைப்பட்ட்று உடையவர்கள் கூறும் பலன்களே பலிதமாகின்றன என்பது தான் உண்மை.    

நவகிரகங்கங்களைப் பற்றிச் சில  
நவகிரகங்கள் நமது வாழ்வை எந்த அளவு பாதிக்கின்றன என்பதை, நாம் ஓரளவு புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், நமது துயரைத் துடைப்பதற்கு எந்த வழியை பின்பற்றினால், அது பயனுள்ளதாக இருக்கும் என்பதில் நமக்கத் தெளிவு ஏற்படும்.

நவகிரகங்கள் இறைவனின் ஏவலர்கள், இறைவன் வகுத்துள்ள சட்டப்படி பிராரத்துவம் எனப்படும் வினை பயன் ஆகிய விதியை, நாம் அனுபவிக்கும்படி செய்வார்கள். இறைவனால் வகுக்கப்பட்ட சட்டங்களில் விதிகளில், ஏதேனும் ஒன்றை கூட்டியோ குறித்தோ மாற்றியோ பலனை கொடுக்க நவகிரகன்களால் இயலாது என்பதை நாம் தெயவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அரசு வகுத்துள்ள சட்ட திட்டங்களுக்கு ஏற்பவே அரசு ஊழியர்கள் எதையும் செய்ய முடியும் அல்லவா? அதைபலவே நவகிரகங்களும் தமது விருப்பப்படி எந்த வினைப்பயனையும் யாருக்கும், நியதிக்கு மாறாகச் செய்ய முடியாது.

சோதிட நூல்கள், நவகிரகங்கள் நமது சாதகத்தில் நிற்கும் நிலைக்கு ஏற்ப, நமக்குள்ள விதி எப்படிபட்டது என்பதை கூறமுடியுமே அன்றி, நமது உழப் போக்குவதற்கான வழிவகைகளைக் கூறுவதில்லை. நவகிரக சாந்திகள் எனக் கூறப்படுவன அனைத்தும் நமக்கு ஏற்ப்பட்ட ஊழ்வினைத் தொல்லைகளிளிரிந்து நம்மக் காக்கமாட்டா என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அப்படியானால்,
 ஊழ்வினை துயரை நீக்குவது எப்படி?
காத்திருங்கள் அடுத்த பதிவிற்காக 

சாகாக் கல்வி புத்தகம் பற்றிய அறிமுகம்

உண்மையான ஆன்மீக ரகசியம் நான் யார், ஆன்மா என்றால் என்ன, ஞானம் என்றால் என்ன, மரணமில்ல வாழ்வு, சாகாக் கலை பற்றிய விளக்கங்களை பல ஆயிரம் புத்தகத்தை படித்துப் பார்த்தேன். எதோ பல தகவல்கள் கிடைத்தது ஆனால் முழுமையாக கிடைக்கவில்லை.  தேடி தேடி கலைத்து போனேன். பல பல சித்தர்கள் பரிபாஷையில் கூறியுள்ளார்கள். அதுவும் புரிவதில்லை என்னைப்போல் உள்ள எளிய மனிதருக்கு.
சமீப காலத்தில் அட்சயபாத்திர வாசகர் ஒருவர் கீழ்கண்ட இணைய தள முகவரியை வெளியிட்டு படிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கிணங்க தற்போது தான் படித்து முடித்தேன். மிகவும் அருமையான புத்தகம் ஆன்ம தாகம் கொண்ட அனைவருக்குமே. 
   
ஆன்மிகம் பற்றிய படிப்பிற்கு இந்த இணைய தளத்தில் கொடுக்கப்பட்ட புத்தகங்களே போதுமானது. இங்கு குருவும் கிடைத்து விடுகிறார் விடையும் கிடைத்து விடுகிறது.

கீழ் கண்ட இணைப்பில் அழுத்தி பயன்பெறவும் அன்பர்களே சாகாக் கல்வி

Wednesday, March 28, 2012

சாகாக்கலை - உண்மையா?


சாகாக்கலை என்ற தமிழ் சொல்லை பழம் பெரும் சித்தர்களில் ஒருவரான "திருமூல நாதர்" தனது திருமந்திரம் என்னும் "தமிழ் வேதத்தில்" எடுத்தாண்டுள்ளார்கள். அதற்கான அறிவியல் கோட்பாடுகளுடன்  சாகாக்கலையை தனது ஓக சாதனை மூலம் இவ்வுலக மக்களுக்கு  "தெள்ளிய தமிழ்" மூலம் அறிவித்தார்கள். திருமூலரை தனது ஆன்மீக குருவாக போற்றி அவரின் கோட்பாடுகளை தெளிவாக புரிந்து கொண்ட "வள்ளல்" பெருமான் மேலும் இக்கலையை தமிழில்  சன்மார்க்கம் என்ற பெயரில் வழங்கினார்கள்.இக்கலையின் உன்னத  தன்மையை  தானே செய்து காட்டி மெய்பித்தார்கள். இன்றும் சல அறிவு குறைவுடையோர்  வள்ளளாரை எரித்து கொன்று விட்டார்கள் என்று கூறிவருகின்றனர். அவர்களை கண்டு வருத்தபட மட்டுமே முடிகிறது. சாகாக்கலை உண்மையா என்று இன்றைய விஞ்ஞான முறையில் விளக்கம் காண்போம்.

 ஒளி கதிர்களை குவியலாக ஒரு புள்ளியில் செலுத்தினால் அந்த இடம் தீ பற்றிக் கொள்கிறது. ஓசை அதிர்வுகளையும் இவ்வாறு செலுத்தினால் மலைகள் கூட தூள்களாக  மாறி விடுவதை நாம் காண்கிறோம். அதே போல்  காந்த அலைகளை குவிக்கும் போதும்  மின் ஆற்றல் உண்டாவதை அறிவியல்  நிகழத்தி காட்டியுள்ளது. மனோ சக்தியை மின் காந்த அலைகளாக  மாற்றும் திறன் பெற்றவர்களே சித்தர்கள் என்கின்றோம். இந்த காந்த சக்தியை வள்ளல் பெருமான் "கதிர் நலம்" என்கின்றார்கள். சித்தர்கள் ஓர் உயிரை கருணையோடு பார்த்தால் நன்மையும், கோபமாக பார்த்தால் தீமையும் ஏற்படுவதை நாம் கண்டுள்ளோம். உதாரணமாக கொங்கண சித்தர் கொக்கை எறித்த  உண்மையை அறிவோம். அவர் தன் கண்களில் அதிகமான "கதிர் நலம்"  கொண்டிருந்தார் என்பதே உண்மை. இதே போன்று தான் வள்ளல் பெருமான் தன் கண்களிலிருந்து வெளிபடும் "கதிர் நலம்"  யாருக்காவது துன்பத்தை ஏற்படுத்தி விடும் என்பதற்காக தன் முகத்தை கண்கள் வரை மூடிக்கொண்டிருந்தார்கள். இதை வள்ளல் பெருமான் "கதிர் நலம்" இரு கண்களில் காட்டு என்று அருட்பாவில் கூறுகின்றார்கள். சாகாக்கல்வி மூலம் உடலை கற்பூரம் போல்  மாற்ற முடியும் என்றும், தடையமே இல்லாமல் "மறைவு" செய்ய முடியும் என்பதையும் மெய்பித்தார்கள். அணுக்களை பிளக்கும் போது வெடிப்பும், தீப்பிழம்பும் உண்டாகும் என்று அறிவோம். மேலும் கதிர் வீச்சுகளும்( X-கதிர்கள், காமா கதிர்கள், ஆல்பா,  பீட்டா கதிர்கள், காஸ்மிக், டெல்டா கதிர்கள்) வெளிப்படும். இதே போல் ஓக மார்க்கத்தில் இவ்வாறு செய்யமுடியும். ஏனென்றால் அண்டத்தில் ஏற்படுவதை பிண்டத்திலும் ஏற்படுத்தலாம். இந்த கதிர்களை ஒருமுகமாக அழுத்தம் கொடுத்தால் அணுக்கள் ஆவியாகி விடும். எப்படியென்றால் நீராவி அணு (ஹைட்ரஜன்) மற்ற இதே நான்கு அணுக்களை சேர்த்து அழுத்தினால் அது எரியும் வாயு எனப்படும் ஹீலியம் ஆக மாறிவிடும். இதை மீண்டும் அழுத்தினால் தானே எரியும் "மீத்தேன்"  எனப்படும் எரியும் அணுக்காக மாறி  விடும். இதை போல் நம் உடலில் 96 பங்கு நீர் தான் உள்ளது(நீராவி அணுக்கள்) இதை சன்மார்க்கம் என்னும் ஓக மார்கத்தில் அழுத்தினால் "மீத்தேன்" பொன்ற தானே எரியும் அணுக்களாக இந்த உடல் அணுக்கள் மாறி விடும்.இது விஞ்ஞான, மெய்ஞான உண்மையாகும். இந்த மாதிரி  "மறைவு" செய்து கொண்டவர் தான் "வள்ளல் பெருமான்". இவரை யாரும் கொல்ல வில்லை. இது சத்தியமான உண்மை. இதே போன்று மாணிக்கவாசகர், ஞான சம்பந்தர், ஒளவையார், திருவள்ளுவர், நந்தனார், அருணகிரிநாதர், சுந்தரர், கரைக்கால அம்மையார், பட்டினத்தார் .....) இன்னும் பல சித்தர்கள் இந்த நிலையில் தன்னை இயற்கையோடு இனைத்துக்  கொண்டு தகுதி பொற்ற தன் மக்கள் முன்  "இறை காட்சி" தருகிறார்கள்.சாகாக்கலையின் முடிவு இது தான். இதை பல சித்த நூல்களில்  காணலாம். சன்மார்க்கம் ஒன்றே உயிர், உடல் துன்பங்களை களைந்து இன்பம் அளிக்கும் என்று வள்ளல் பெருமான் சித்தர்கள் கூறியதை வகுத்தும், தொகுத்தும்  எளிய முறையில் தந்தார்கள். சன்மார்க்கம் ஒன்றே நன்மார்க்கம் மற்றெல்லாம்  துன்மார்க்கம் என்றார்கள். வாழ்வியல் தருமத்திற்காக ஒவ்வொருவரும் 60 வயதிற்குள் கடமையாற்றி விட்டு சன்மார்க்கம் என்னும் தவ வழியில் செல்ல உறுதி எடுக்க வேண்டும். இல்லறம், துறவறம் இரண்டிலும் சன்மார்க்கமே அமைதியையும் சாந்தத்தையும் தரும்.முப்படைந்த காலத்திலும் இளமை காலத்திலும் மன அமைதி பெற சனமார்க்கத்தை தவிர வேறு வழியில்லை.
காலை, மாலை வள்ளளாரின் சாகாக்கலை பயின்று  அதற்கேற்ற உணவு பழக்கங்கள், சிந்தனை இவற்றை முறையாக செயல்படுத்தி அமைதியும், வளமும் பெற்று வாழ்வோம். வள்ளளார் இறை கலப்பு செய்த "தை திங்கள்  பூசத் திருநாளை" உலக மக்கள் அனைவரும் சன்மார்க்க நாளாக கொண்டாட வேண்டி அன்புடன் வேண்டுகிறோம்.

மரணமிலாப் பெருவாழ்வு பற்றி பெருமானாரின் சாற்றுக் கவிகள்.

"கற்றவரும் கல்லாடும் அழிந்திடக் காண் கின்றீர்
கலங்க வரும் மரணமும் சம்மதமோ?"


"இற்றினைத் தடுத்திடலாம் என்னோடு சேர்ந்திருமின்
என்மார்க்கம் இறபொழிக்கும்  சனமார்க்கந்தானே"

"மரணமிலா பெரு வாழ்வில்  வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன்  பொய்புகலேன் சத்தியஞ் சொல்கிறேன்
இறந்தாரை எடுத்திடும் போதரற்றுகின்றீர் உலகீர்
 இறவாத பெரும்வரம் நீர் ஏன் அடைய மாட்டீர்?"


"சிறந்திடும் சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம்
சேராமல் தவிர்த்திடும் காண்."


"சதுமறை ஆகம  சாத்திரம் எல்லாம்
சந்தை படிப்பு நம் சொந்த படிப்போ
விது நெறி சுத்த சன்மார்க்கத்தில்
சாகா  வித்தையை கற்றனள் தோழி"



"சன்மார்க்கம் பற்ற சாகா வரம் பெறல் நிச்சியம்
கற்றேன்சிற் றம்பலக் கல்வியை கற்றி கருணைநெறி
உற்றேன்எக் காலமும் சாகாமல்ஓங்கும் ஒளிவடிவம்
பெற்றேன் பெற்றேன் உலகில் பிறநிலையைப் பற்றேன்
ஆக்கமும் அருளும் அறிவும்மெய் அன்பும் அழிவுறா
                                                          உடம்பும் மெய்இன்ப
ஊக்கமும் எனையே உற்றன உலகீர் உண்மை இவ்வாசகம் உணர்மின்"



"அருட்ஜோதி யானேன் என்று அறையப்ப முரசு
அருளாட்சி பெற்றேன்  என்று அறையப்ப முரசு
மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்ப முரசு
மரணந் தவிர்ந்தேன் என்று அறையப்ப முரசு"


உய்வு


ஓர் உயிரின் எழுச்சி என்பது பிறப்பு, உயிரின் வீழ்ச்சி என்பது மரணம். பிறப்பு, வாழ்வு, அழிவு  என்பது இயற்கை நியதியாக இருக்கிறது. இந்த இயற்கை உண்மைகளை கண்டு மனிதன் அஞ்சுகிறான். மரணம் இயற்கையாகவும், செயற்கையாகவும் நடைபெறுகிறது. உடலில் அகமும்,புறமும் இணைந்து உயிர் இயக்கம் நடைபெறுகிறது. மூச்சு ஓட்டம்,  இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம்   ஒளி, ஓசைகளின் ஓட்டங்கள் மொத்தமாக  கூடி இந்த உடலை நடத்துகிறது. உண்மையில் உயிர் ஓட்டந்தான் மற்ற இயக்கங்களை நடத்துகின்றது. இதற்கு புலன்கள் செயல்படுகின்றன அதாவது இதயம், ஈரல்கள், இரத்த குழாய்கள், மூத்திர கருவிகள், மலக்கருவிகள் போன்ற கூட்டுறவு கருவிகள் துணை செய்கின்றன. இவற்றில் ஒன்றின் ஓட்டம் நின்றுவிட்டாலும், பழுதானாலும் மற்ற இயக்கங்களும் பாதித்து முடிவில் உயிர் இயக்கத்தை நிறுத்தி விடுவதாக இருக்கிறது.உயிர் ஓட்ட கருவிகளை தூண்டவும், ஊக்கப் படுத்தவும், நிர்வாகியாகவும் மூளை செயல்படுகிறது. இந்த மூளையின் இடது பாகத்தில் மனம் என்னும் மாயக் கருவி இருக்கிறது. இந்த மனத்திற்கும், உயிருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இவை இரண்டும் மின் காந்த அலைகளால் தொடர்பு கொண்டுள்ளன. இந்த மின் காந்த ஏற்ற, இறக்கத்தின் மூலமே உடலின்  அனைத்து உறுப்புகளும் இயக்கப்படுகின்றன. இந்த காந்த இயக்கமே உயிரின் இயக்க ஆற்றல் என்கின்றோம். உயிர் செயல்பாடுகளுக்கு கரு அணுக்கள் எனப்படும் விந்தணுக்களிலிருந்தே இந்த காந்த சக்தி பெறப்படுகிறது. உடல், மன, உயிர் இயக்கத்திற்கு இந்த விந்தணுக்களே சக்தி பீடமாக இருக்கின்றன. உடலின் காந்த ஆற்றல் செலவை ஈடு செய்ய முடியாமல் போனால் முடிவில் மரணம் என்னும் இயக்கமற்ற நிலை அடையும். நல்ல முதுமை பெற்ற மனிதனின் உடல் உறுப்புகளில் எந்த நோயும், பாதிப்பும் இல்லை என்றாலும் கரு அணுக்களில் தயாரிக்கப்படும் காந்த ஆற்றல் தன் சக்தியை இழக்கும் போது மனம் செயலற்று போகும். அதனை தொடர்ந்து காற்று மண்டலம், நீர் மண்டலம், ஒளி,ஒசை மண்டலம் என வரிசையாய் செயலிழப்பு ஏற்பட்டு மரணம் என்ற நிலை ஏற்படும். இதுவே இயற்கை மரணம் எனப்படும். இப்படி இல்லாமல் கை, கால்கள் விழுவது, இதயம் நின்று நின்று துடிப்பது, மூன்று  திணறுவது, வாய் குளறுவது,  நீர், மலம் உணர்வற்று  தானே கழிவது போன்ற வேதனை நடக்கும் போது மனம் செயல்பட்டு கொண்டிருப்பது துர்மரணமாகும் (அ) நரக வேதனையாகும். சொர்க்கமும், நரகமும் வானத்தில் இல்லை. அவனவன் நினைவிலே இருக்கிறது.( சொர்க்கம் = சுவர்(தங்கம்) அகம் நல்லமனம். நரகம்= நர(கெட்ட) அகம் தீதான மனம்). அதாவது மரணம் என்பது மனதிலிருந்து துவங்கினால்  இயற்கை மரணம் என்றும், கருவி கரணங்களிலிருந்து துவங்கினால் துர்மரணம் ஆகும். பொய், களவு, சூது, கட்குடி, காமம், நன்றி கொல்வது, உயிர் கொலை இல்லாமல் சத்தியம், தருமம், ஒழுக்கம், பொறுமை,  இனிய நடத்தை காத்து வாழ்வின் மரணம் அமைதியாகவும், தருமத்திற்கும்,  ஒழுக்கதிற்கும் கேடாக வாழ்ந்தவன் மரணம் அமைதியற்று நிகழ்வதும் இயற்கையின் சட்டமாகும். என்ன பாவம் செய்தேனோ, சாவு  வரவில்லையே என்று புலம்புகிறவர்களை காண்கின்றோம். எந்த பாவம் செய்திருந்தாலும் செய்நன்றி கொன்ற பாவத்திற்கு ஆளாக கூடாது. நல்ல உடல் வசதிகள், நல்ல மனமுள்ள நல்லவர்கள், நல்ல முன்னோர்கள் கிடைத்தும் நன்றி இல்லாமல் நடந்து கொள்வதன் மூலம் அந்த உயிருக்கு உடலுக்கு கிடைக்க வேண்டிய உய்வு எனப்படும்  "இயற்கை பரிசளிப்பு" கிடைக்காமல் போய் விடும். ஒரு மனிதனுக்கு இறுதி நாளில் கணக்கு தீர்க்கப்படும் என்பது இது தான் ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்பதை மரணமே முடிவு செய்யும்.

"என் நன்றி கொன்றாற்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"


என் வள்ளுவர் எழுதியதன் பொருள் இது தான் வாழ்கையில் கரை ஏறுவது மட்டுமல்ல மரணத்தில் கூட நல்லபடியாகக் கரை ஏற வேண்டும் இது தான் "உய்வு"



வைதோரைக் கூட வையாதே!
வெய்ய வினைகள் செய்யாதே!
கஞ்சாப் புகைபிடி யாதே!
கட்குடித்து மயங்கி திரியாதே!
அஞ்ச வுயிர் மடியாதே!
அஞ்ஞான நூல் படியாதே!
கள்ள வேடம் புனையாதே!
கொள்ளை கொள்ள நினையாதே!
நட்புக்கு நீ கோள் முனையாதே!


                                             கடுவெளி சித்தர்.


"ஆவியோடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவியென்று நாமம் படையாதே"

                                                 பட்டினத்தார் 

புற்று நோய்



உலக மக்கள் அஞ்சி நடுங்கும் நோய்களில் ஒன்று தான் புற்று நோய். இதற்கு காரணம் தெரிந்து கொள்ள முடியாமல் பகுமுறை மருந்துவமும்(ஆங்கில மருத்துவம்) தனது தோல்வியை ஒத்துக் கொண்டுள்ளது. நோய்களுக்கு கிருமிகளே காரணம் என்ற தனது புளுகு மூட்டையை தானே "இல்லை" என்று புற்று நோய்யிடம் மண்டியிடுகிறது.
1,47,117 வருடங்களுக்கு முன் திருஆவினன்குடியில் வாழ்ந்த  குறுமுனி என்னும் அகத்தியர் தனது "பரிபூரணம்" என்னும் நூலில் புற்று நோய்க்கான காரணத்தை நன்கு  விளக்கியுள்ளார்கள். அவற்றை சுருக்கமாக

"கனத்த வாயுவதனால் குன்மம் ஆச்சு
கரைகடந்த போகத்தால் மேக மாச்சு
கண்துஞ்சும் லாகிரியால் பித்த மாச்சு
கண்ட இது மூன்றுமே கதித்து புற்றாச்சே"


                                                     என்கிறார்.

அதிக வாயு பொருட்களை உண்பதால் குன்மம் என்னும் வயிற்று புண்கள், வரைமுறை இல்லா உடலுறவு மூலம் மேகம் ( காற்று + வெப்பம் = அமிலம்) அதிகரித்து உடலில் புற்று நோயை உணடாக்குகிறது என்றும் ,இலாகிரி என்னும் போதை மற்றும் மது பானங்களால் பித்தம் அதிகரித்து புற்று நோயை உண்டாக்குகிறது என்கிறார்.  சித்த மருத்துவத்தில் புற்று நோய் 4 வகையாக பகுத்து கூறப்படுகிறது. அவையன இலிங்கபுற்று, யோனிபுற்று, பரவல் புற்று, அழுகல் புற்று என்பன. இலிங்கபுற்று- வெளி நோக்கி வளருவது, யோனி புற்று- உள் நோக்கி வளருவது, அழுகல் புற்று- அழுகல் உண்டாகி நீர் கசிவது (குஷ்டம்). மேலும் இந்த தன்மை ஏற்பட்டு எந்த உறுப்பையோ, தாதுக்களையோ  பாதிக்கும் என்றால் அதன் பெயரால் அழைக்கபடுகிறது( கன்ன புற்று, நாக்கு புற்று, ஆண்குறி புற்று...) சித்த மருத்துவத்தில் மொத்தம் 143  இனங்கள் கண்டறியப்பட்டு, அதற்கான விளக்கம், மருந்துகள், உணவுமுறை விளக்கபடுகின்றன. இவற்றை விரிவாக காண்போம்.

(1).  வாயு பொருட்களை உண்பதன் மூலம் வயிற்றில் வாயு உண்டாகி அது குடல், வயிறு, உள்ளுறுப்புகள் இவற்றில் ஒரு வகையான உராய்வை ஏற்படுத்தி புண்களை ஏற்படுத்துகின்றன. இதுவே குன்மம் எனப்படும் .இவை நீண்ட காலம் இருக்குமாயின் புற்று நோயாக மாறும். இவைதான் கல்லீரல், இரைப்பை, குடல் புற்றுகள்.

(2) அதிக உடலுறவின் மூலம் ஆண்கள், பெண்களுக்கு  பிறப்புறுப்புகளில் புற்று ஏற்படுகின்றது. உடலுறவில் ஆண், பெண் உறுப்புகளில் ஏற்படும் உராய்வின் மூலம் புண்கள் ஏற்படுகின்றன. இவை இரணமாக  மாறி புற்றாக மாறும். ஆண்களுக்கு உறுப்புகள் வெளியே இருப்பதால் சிகிச்சை எளிதாகிறது. பெண்களுக்கு மறைவாக இருப்பதால் சிகிச்சை கடினம். ஆண், பெண் சுய இன்பத்தால் புற்று நோய் உண்டாகிறது. விடுதியில் தங்கி படிக்கும் பெண்கள் சில பெண்களின் உணர்ச்சிக்கு வயப்பட்டு சுய இன்பத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளபட்டு, உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, விடமுடியாமல் பெண்குறி புற்று, கருப்பை புற்று, கரு குழாய் புற்று ஏற்படுத்திக் கொள்கின்றனர். விடுதிகள் நோய்களின் கூடாரமாக இருக்கின்றன. உயர் கல்வி பெற்ற பெண்களும் இதில் தள்ள பெற்று மடிகின்றனர். இதை மருத்துவர், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறமுடியாமல் தவிக்கும் பெண்கள் ஏராளம். இதனால் ஆண்களை வெறுக்கும் பெண்கள் அதிகம். காமத்தினால் பெண்களின் மார்பகங்கள் கசக்கப் படும் போது மார்பக தசைகளில் உராய்வு ஏற்பட்டு புண்ணாகவும் மீண்டும் மீண்டும் இந்நிகழ்வால் இரணம் உண்டாகி புற்றாகிறது.

(3) இலாகிரி என்னும் போதை பொருட்களாலும், மது பானத்தாலும், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சீரண உறுப்புகள், குடல்கள், மூலம் இவற்றில் புண்கள் ஏற்பட்டு கால நீட்டிப்பால் புற்று நோய் ஆகிறது.

(4) அதிக கவலை, அழுகை, கோபம், பொறுமை இன்மை ,காதல், வெறுப்பு இவற்றால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இரணம் உண்டாகிறது. இதுவே பிற்பாடு புற்றாகும். சொற்கள் கூட புண்ணை உண்டாக்கும். இதை வள்ளுவர் "நாவினால் சுட்ட வடு" என்கிறார். நீண்ட கால புண்கள் இரணமாக மாறி புற்று நோயாக மாறும் என்பதை கண்டோம். அது போல் தலையில் அடிபட்டாலும், உடலில் அடிபட்டு நீண்ட காலம் ஆறாத புண்கள் இருக்குமேயானால் அவைகளும் பிற்காலத்தில் புற்று நோயாக பரிணாமம் செய்யும். இராசாயண கூடம், நகல் எடுக்கும் இயந்திரம், ஆசிரியர்கள், கதிர்வீச்சு கூடங்கள், கணிப்பொறி ,மின்கலங்கள், கொதிகலங்கள், பற்ற வைப்பு, சோதனை கூடங்கள், ஆய்வகங்கள் இவற்றில் வேலை செய்வோருக்கும் புற்று நோய் வரும்.

சிகிச்சை முறை


 ஆங்கில வைத்தியத்தில் அறுவை, கதிர் வீச்சு முறை, விசத்தை உட்செலுத்துதல்(கீமோ) முறைகள் பின்பற்றபடுகின்றன. அவைகள் புற்று நோயின் காரணமான புண்கள் அல்லது இரணம் அதிகரிக்கவே செய்கின்றன. இதனால் புற்று நோய் அதிகரித்து ஒரு சதவிகித நோயாளிகள் கூட பிழைப்பது என்பது முடியாது போகிறது.

சித்த மருத்துவம்


பழந்தமிழ் மருத்துவம் இவற்றை தெளிவாக ஆராய்ந்து சிகிச்சை முறைகளை தந்துள்ளது. இதனால் எத்தனையோ பேர் முழுமையாக குணம் பெற்றுள்ளனர். ஆங்கில வைத்தியமுறைக்கு சென்று முதிர்ந்த நிலையில் வருவோரும், பத்தியம் என்றவுடன் ஓட்டம் பிடிப்போரும், மரபு என்று சில பழக்க வழக்கங்களை கொண்டோரும், நாகரிகம் என்ற பெயரில் உண்மையை மறைப்போரும், வைத்தியரை தனக்கு சாதமாக நடத்த முனைவோரும், அதிகம் படித்தோரும், பொறுமை இல்லாதவருக்கும் சிகிச்சை செய்வது கடினம். சித்த மருத்துவ முறையில் நாத செந்தூரம், இரச பதங்கம், கெளரி பதங்கம், நவலோக பரிபூரண செந்தூரம், பஞ்சலோக செந்தூரம், அய-தாமிர செந்தூரம், தங்க நீறு, வெள்ளி நீறு, உலமகத்துவ செந்தூரம் முதலிய மருந்துகளால் ( எனது பரம்பரை அனுபவம்) புற்று நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்

"வெந்த மருந்தே வினை தீர்க்கும்"   - பழமொழி

"விடாது வினை தருமத்தின் கணை
அடாத செயலுக் குள்ளே ஒளிந்து
கெடாமல் வளரும் அதற்கு தருமலாதனும்
கட்டலா காதே அணை"

                                           யூகிமுனி

"செயலிலே விளைவாக தெய்வ ஒழுங்கமைவு இருக்க
பயன் என்ன தவறிழைத்து பின் பரமனை வேண்டுவதால்"


                                                             வேதாத்திரி மகரிசி

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்"


                                                          வள்ளுவர்

தாய்மை



பெண்மை என்பது பேதமையுடையது என்கிறார் திருவள்ளுவர். ஒரு பேதை பிள்ளை பெற்றால் எப்படி தாயாக மாறுவாள்? பெற்றவளாகத்தான் இருப்பாள். பெண் வழிச் சேரல் என்று ஒரு அதிகாரம் எழுதியவர். தாய்மை பற்றி எதுவுமே கூறவில்லை. தாயை அவர் பொருட்படுத்தவில்லை.தியாகம் செய்பவள் தான் தாய், தனது கடமைகளையும், தனது உயிரையும் பிள்ளைகளுக்காக  விட்டுக் கொடுபவள் தான் உண்மையான தாய். பிள்ளைகளின் மனக் குறிப்பறிந்து கொடுத்து மகிழவும், மகிழ வைக்கும் தன்மை கொண்டவளே தாய் என்ற பெயர் பெற முடியும். கருவுற்ற பெண்னை தாய்மை அடைந்து விட்டாள்  என்கிறார்கள், இது பாரமாகி விட்டதே? என்ன துன்பம் வருமோ? சுகப் பிரசவம் ஆகுமா? தன் உயிருக்கு கேடு வருமா? என்றெல்லாம் எண்ணுகிற பெண் எவ்வாறு தாய்மை பெற்றவளாவாள்? கருவுருதல் என்பது சாதாரணச் செயல்பாடு என்று தைரியம் கூறுவார் இல்லை. அது எல்லா பெண்களுக்கும் மன நோயாக இருக்கிறது.இந்த குழந்தையால் தான் நமக்கு இந்த பேறு கிடைத்தது என்று எந்த பெண்ணும் எண்ணுவதில்லை. உடல் உபாதைகளை எண்ணி வருந்துதல், தனக்குள்ளே ஒரு பூ மலர்கிறது என்று எண்ணாதிருத்தல், மன அதிர்வுகள், உருட்டல், புரட்டல்கள், குழப்பம், அச்சம், இவற்றை எண்ணி வருந்துதல கொண்ட பெண்கள் அனைவரும் தாய்மை என்பதன் பொருள் அறியாதவர்களே, இதை கருத்தில் கொண்டு தான் பெண்கள் வள்ளுவர் பெண்  பேதமையுடையவள் என்கிறார். வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆகாத உணவுகள்,பழக்கங்கள்,பேச்சுக்கள் இவைகளை தள்ளி வைப்பதும் தாய்மையின் கடமையாகும். ஆனால் ஆசைப்பட்ட  அனைத்தையும் கேட்டு பெற இதனை பயன்படுத்துகிறார்கள். அவர்களுடைய அசைவுகளும் இயற்கையானதாக  இக்காலங்களில் இருப்பதில்லை.குழந்தையை சுமப்பது, உணவு ஊட்டுவது, அதன் இயக்கத்தை கவனிப்பது, குழந்தையின் இயற்கை எழுச்சியை உடனே சரி செய்வது எல்லாம்  ஒரு தாயின் கடமையாகும். இதையெல்லாம்  நான் செய்கிறேன் என்ற எண்ணம் கூட தவறாகும் பிள்ளை பகையாகி விட்டால் பாலூட்டியதை சொல்லிக் காட்டும் எந்த பெண்ணும் "தாய்" இல்லை. மேற்படி சொல்லி காட்டி திட்டும் செயல் தழை போட்டு வளர்த்த ஆட்டை தானே வெட்டிக் கொல்லும் செயலை விட கொடுமையானது. நாய் ஒரே நேரத்தில் 10 குட்டிகளுக்கு பாலூட்டுகின்றது இதில் ஒரு பங்கு கூட பெண்கள் செய்வது இல்லை. பழி சொற்களை  எப்படி வேண்டுமானாலும் சொல்வதற்கு பெண்களால் மட்டுமே முடியும். இதற்கு வருந்தவும்இ திருந்தவும் தயார் இல்லாத பெண்களை "தாய்மை" என்று அழைப்பது  அர்த்தம் இல்லை. எந்த பெண்ணாவது பிள்ளை பெறாத காலங்களில் எதையாவது ஒரு குழந்தைக்கு பாலூட்ட முடியுமா? பிள்ளை பெறுவதும்,  பாலூட்டுவதும் இயற்கை நிகழ்வு, இதை மனதில் கொள்ளாமல் ஆண்களை பழிக்கும் எந்த பெண்ணும் "தாய்" என்னும் தகுதி பெறாதவர். தியாகம் எங்கே உருவாகிறதோ அங்கே அன்பு என்னும் உயிர் வளரும் அன்பில்லா எந்த பெண்ணும் "தாய்மை" அடைய முடியாது.


"கற்புடுத் தன்புமுடித்துநாண் மெய்ப்பூசி
நற்குண நற்செய்கை பூண்டாட்கு மக்கட்பே
றென்ப தோர் செல்வமு முண்டாயின் இல்லன்றே
கொண்டாற்குச் செய்தவம் வேறு".

                                              நீதிநெறி விளக்கம்

"வட்டிலிலும்  தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்"

                                                                        பட்டினத்தார்.



"பிறந்தபோழுதினும் பெரிது வக்கும் தன்மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய்".
                                                           வள்ளுவர்

Total Pageviews

Followers