நமக்கு ஏற்பட்ட விதியின் வரலாறு
காலம் என்னும் தத்துவம் தோன்றுவதக்கு முன்பே நாம் எப்படி இருந்தோம் என்பதைச் சற்றுச் சிந்திக்க வேண்டும். கடிகாரம் தோன்றுவதற்கு முன்பு நம் முன்னோர்கள் சூரியனின் நிலையை கொண்டு காலத்தைக் கணக்கிட்டு அறிந்து வந்தார்கள். இந்தச் சூரியனும் தோன்றுவதற்கு முன்பு எங்கும் இருள் சூழ்ந்திருக்க வேண்டும் அல்லவா? அத்தகைய கொடிய இருளில், நாம் அனைவரும் அறியாமை வயப்பட்டுக் கிடந்திருக்கிறோம். அந்நிலையில் இறைவன் நம்மீது இறக்கம் கொண்டு, நமக்கு உருவமற்ற ஒரு நுண்ணுடலைத் தந்தான். அந்த நுண்ணுடல் எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரியானதாக வழங்கப்பட்டது. அதனாலேயே,
"பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்"
என்று வள்ளுவர் கூறுகிறார்.
அந்த நுண்ணுடலைப் பெற்றதும், நமது அறியாமை சிறிதளவு நீங்கியது. அப்போது, நமது விருப்பு வெறுப்புக்கள் வெளிப்படலாயின. நமது விருப்பு வெறுப்புகளுக்கு இசைந்த அளவில், ஒவ்வொரு உயிர்க்கும் வெவ்வேறு விதமான பரு உடல்களை இறைவன் வழங்குகினான். முதல் பரு உடலை பெற்றதே நமக்கு ஏற்பட்ட முதல் பிறப்பு ஆகும்.
இந்த முதல் பருஉடலில் இருந்து நாம் செய்த நல்வினைகளும் தீவினைகளும், அடுத்த பிறப்பில் நமக்கு இன்பங்களையும், துன்பங்களையும் தந்தன. இந்த வினைகளை நமது அறிவின் நிலைக்கு ஏற்ப நமது விருப்பப்படியே நாம் செய்கிறோம். நமது விருப்பபடி நாம் செய்யும் செயல்களில் யாரும் தலையிடுவதை நாம் விரும்புவதில்லை. எனவே, ஒவ்வொரு பிறப்பிலும் நாம் வினைகளைச் செய்து குவிக்கிறோம். அந்த வினைகுவியளைச் "சஞ்சிதம்" என்று கூறுவார்.
அடுத்து அடுத்து வரும் பிறப்புகளில் இறைவன் அந்த வினக் குவியலில் இருந்து ஒரு பகுதியை எடுத்து நாம் திருந்தும் அளவுக்கு நமக்குப் பயனாக ஓட்டுகிறான். இந்த வினைப்பயனே "ஊழ்" அல்லது "விதி" எனப்படுகிறது. இதுவே நமக்கு ஏற்பட்ட விதியின் வரலாறு ஆகும்.
வினைபயனை இறைவன் ஊட்டுவதற்கு காரணம்:
காத்திருங்கள் அடுத்த பதிவிற்காக
No comments:
Post a Comment