Sunday, September 22, 2013

ஹிந்துத்துவம் என்பது பண்பும்,பலமும் தான்!!!


நிதீஷ்குமார் சிறந்த மதச்சார்பின்மையாளர்(செக்யூலர்) என்று சமீபகாலமாக கூறப்பட்டுவருகிறது.இதைவிட அட்டகாசமான ஜோக் வேறு எதுவும் இருக்கமுடியாது.ஆமாம்,செக்யூலராக இருப்பது என்றால் என்ன? முஸ்லீம்கள் குல்லா இல்லாமல் தென்படுவதில்லை; ‘நான் முஸ்லீமாக்கும்’ என்று ஊருக்கு உணர்த்துகிறார்களாம்.செக்குலராக இருப்பது என்றால் இதுதானே?
முஸ்லீம் வகுப்புவாதிகளிடம் மண்டியிடுவது செக்குலர் ஆகிவிடாது.நரேந்திரமோடியிடம் முஸ்லீம்கள் குல்லா கொடுத்தார்கள்.அவர் அதை அணிய மறுத்தது நியாயம்.அவர் தான் திடமான செக்குலர்வாதி! முஸ்லீம் குல்லா அணிவது வகுப்புவாதம் அல்ல என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதினால் அவர்கள் அனைவரும் முஸ்லீம் குல்லா அணியவேண்டியது தானே? ஏன் அணியவில்லை?
முஸ்லீம்களை தாஜா செய்வதற்காக நிதீஷ்குமார் விடாப்பிடியாக குல்லா அணிந்துவருகிறார்.டாக்டர் ராம் மனோகர் லோகியாவுக்கு இதைவிட அவமானத்தை அளித்துவிடமுடியாது.நிதீஷ்குமாரின் செயல்பாடு வெட்கக்கேடானது.
மறுபுறம்,ஹிந்துத்துவத்தை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.ஹிந்துயிசத்தின் சாராம்சமே ஹிந்துத்துவம்.உலகிலேயே ஹிந்துவைப் போல மதச் சுதந்திரம் உள்ளவர் வேறு யாரும் இல்லை;ஹிந்துக்கள் துவைதத்தையோ,அத்வைதத்தையோ,விசிஷ்டாத்வைதத்தையோ பின்பற்றலாம்;ஏன் இவற்றை நிராகரிக்கவும் செய்யலாம்;அந்த அளவுக்கு சுதந்திரம் உடையவர்கள் ஹிந்துக்கள்.
முஸ்லீம்களைப் போலவோ கிறிஸ்தவப் பாதிரிகளைப் போலவோ மற்றவர்களை தங்களின் விசால நோக்குள்ள மதத்திற்கு மாற்ற ஹிந்துக்கள் ஒருபோதும் முயற்சி செய்ததில்லை;கடந்த காலத்தில் ஹிந்து அரசர்கள் யாரேனும் ஒரு மசூதியையாவது தரைமட்டமாக்கியதாக கூறமுடியுமா? ஏதாவது ஒரு சர்ச்சை இடித்ததாக கூற முடியுமா?
மாறாக இஸ்லாமிய அரசர்கள் கோவில்களை ஆயிரக்கணக்கில் இடித்து தரைமட்டமாக்கியதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.கோவாவில் கிறிஸ்தவ மிஷனரிகள் செய்தது இதை விட   மோசம்.
விநாயக தாமோதர சாவர்க்கர் 1923 இல் தேசியம் என்பதை விளக்குவதற்கு ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிட்டார்.அதில் அவர் முதல் முறையாக ஹிந்துத்வம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.சுதேசி மதமான தங்கள் மதத்தை குறித்து ஹிந்துக்களுக்கு பெருமிதம் ஏற்படுவது அடாத செயலா என்ன? பாரதம் சார்ந்த அனைத்தையும் தழுவியது ஹிந்துத்துவம் என்பதே சாவர்க்கரின் கருத்து. “ஹிந்துத்துவம் என்பது ஒரு சொல் அல்ல,அது ஒரு வரலாறு.நமது மக்களின் ஆன்மீக,சமய வரலாறு மட்டும் அல்ல அது;அப்படி கருதுவது தவறு;நமது முழுமுதல் வரலாறே ஹிந்துத்துவம் தான்.சிந்தனை,செயல்மட்டங்களில் அனைத்தையும் தழுவியது ஹிந்துத்துவம்” என்பது சாவர்க்கரின் வாக்கு.
மாதவ சதாசிவ கோல்வல்கர்(ஸ்ரீகுருஜி) “பாரதத்தில் மரபுகளும்,பாரம்பரியங்களும்,வழிபடுமுறைகளும் இவ்வளவு விதவிதமாக இருப்பதே தேசத்தின் ஈடு இணையற்ற தன்மை” என்பார்;
“இவ்வளவு வேற்றுமைகள் தென்பட்டாலும் அடிநாதமான கலாச்சார ஒருமை இல்லாமல் போய்விடவில்லை”என்பார் அவர். “சுதேசிகளான ஹிந்துக்கள் எவ்வளவுதான் வேற்றுமைகளுக்கிடையே இருந்தாலும் பொதுவான பண்புகளையும்,பொதுவான அபிலாஷைகளையும் கொண்டிருந்தார்கள்;ஒரு தேசத்திற்கான கலாச்சார,நாகரீக அஸ்திவாரமாக அது அமைந்தது”: என்பார் ஸ்ரீகுருஜி. அவர் கூறியபடி ஹிந்துத்வம் என்பது ஒரு கலாச்சாரத்தை,ஒரு நாகரீகத்தை குறிக்கும் கருத்தியல்; அது அரசியல் கோட்பாடோ,சமய நெறிமுறையோ அல்ல”என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

பாரதத்தின் உச்சநீதிமன்றம் 1995 இல் தீர்ப்பு ஒன்றில், ‘ஹிந்துத்வம் என்பது ஒரு வாழ்க்கைமுறை அல்லது மனப்பான்மை என்று கருதுவது வழக்கம்;அதை மத அடிப்படைவாதம் என்பதுடன் ஒப்பிடுவதோ அவ்வாறு புரிந்துகொள்வதோ கூடாது’ என்று அறிவித்துள்ளது.தீர்ப்பு மேலும் கூறுகிறது: “ஹிந்துத்வம் அல்லாத மதங்களைச் சேர்ந்த எல்லோருக்கும் விரோதமானது என்று கருதுவது சட்டசம்மதமானதல்ல;ஏதோ ஒரு கட்சி பாரபட்சம் பார்க்கிறது அல்லது சகிப்புத்தன்மை இல்லாமல் இருக்கிறது என்று அதனுடைய கொள்கையை விமர்சிப்பதற்காக இந்த வார்த்தைகள் பயன்படுவதாய் இருக்கலாம்.”
நமக்குத்தான் தெரியுமே,ஹிந்துக்களாய் இருந்துகொண்டு போலி மதச்சார்பின்மைவாதிகளாய் திரிபவர்கள் ஹிந்துத்துவத்தை இழித்தும்,பழித்தும் பேசுவதும், பா.ஜ.க.வை குற்றம் சாட்டுவதும் நடக்கிறதே? இப்போது நரேந்திரமோடியையும் குறிவைத்து தாக்குகிறார்கள்- அவர் ஹிந்துத்துவத்தை கடைபிடிக்கிறாராம்.ஹிந்துயிஸத்திற்கும் ஹிந்துத்துவத்திற்கும் படுமோசமான எதிரிகள் ஹிந்து அல்லாதவர்கள் அல்லர்.ஹிந்து அல்லாத மதங்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக ஹிந்துயிஸத்தை தாறுமாறாக ஏசுகிற கும்பல் இருக்கிறதே அதுதான் மோசமான எதிரி.சமீபத்தில் கூட ஒரு டிவி நிகழ்ச்சியில் முருகக்கடவுளை அண்ணனாகவும்,விநாயகப் பெருமானை தம்பியாகவும் புனைந்து கேவலமாக நையாண்டி செய்து ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்.இது போல,ஹிந்து அல்லாத மதத்தை கேலி செய்ய இவர்களால் முடியுமா?
இன்று,எப்படியெல்லாம் முடியுமோ, எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் ஹிந்துத்துவத்தை,ஹிந்துயிஸத்தை இழிவுபடுத்துவது ‘செக்குலரிசம்’ என்று ஆகிவிட்டது.விஷம் கக்கும் செக்குலர்காரர்கள் ஹிந்து ஹிந்துத்துவத்தை பாசிசம் என்று வர்ணித்து அறிவாளித்தனமாக காலரை தூக்கிவிட்டுக் கொள்கிறார்கள்.பாகிஸ்தானில் ஹிந்துக்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்,அல்லது அந்த நாட்டைவிட்டே துரத்தப்படுகிறார்கள்.பாரதத்தில் முஸ்லீம்களை சரிசமமாக நடத்துகிறோம்.எவ்வளவு முடியுமோ அவ்வளவு சலுகைகளை அவர்கள் மீது பொழிவதற்கு ஓடோடிப் போகிறோம்.ராஜஸ்தானிலும் குஜராத்திலும் ஹிந்துக்களைவிட முஸ்லீம்களுக்கு சற்றே அதிக அளவு நிலம் சொந்தம் என்பது எத்தனைபேருக்குத் தெரியும்?
மொத்தம் 7 பாரத மாநிலங்களில் ஹிந்துக்களைவிட முஸ்லீம்களுக்கு எழுத்தறிவுவிகிதம் அதிகம் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.முஸ்லீம்களின் நிலத்தை யாராவது பிடுங்கிக்கொண்டுவிட்டார்களா என்ன? ஒன்றுமில்லை;1990 களில் காஷ்மீரிலிருந்து 3,50,000 ஹிந்துக்கள் முஸ்லீம் ஆயுதம் தாங்கிகளால் அடித்து விரட்டப்பட்டார்கள்.ஹிந்துக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன;அவர்களின் கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன;ஹிந்துப்பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.
பாரதத்தில்,தனது மதத்தில் ஒரு ஹிந்து பெருமிதம் கொள்வானானால் அவனை வகுப்புவாதி என்று தூற்றுகிறார்கள்;பாஸிஸ்டு என்று ஒதுக்குகிறார்கள்.உலகத்தில் இத்தனை தேசங்கள் இருக்கின்றனவே,எந்த நாட்டிலாவது பிரதமரோ ராணுவத்தின் தலைமைத் தளபதியோ சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களோ இருக்கிறார்களா? அல்லது துணை ஜனாதிபதியொ வெளிவிவகாரத்துறை அமைச்சரோ முஸ்லீமா? அல்லது ஒரு ரோமன் கத்தோலிக்கர்,அதுவும் வெளிநாட்டுக்காரர்(இன்னும் அந்த நாட்டு பாஸ்போட் வைத்திருப்பவர்) தேசத்தின் பெரிய அரசியல் கட்சியின் ‘மேலிடமாக’ உட்கார்ந்திருக்கிறாரா? இதையெல்லாம் ஹிந்துக்கள் எப்போதாவது எதிர்த்ததுண்டா? இல்லையே?
“ ‘ஹிந்துயிஸம்,நாகரீகங்களின் மோதல்’ என்ற தனது நூலில் அமெரிக்க அறிஞர் டேவிட் ப்ராலி எழுதுகிறார்: நவீன இந்தியர்கள் எண்ணத்தில் ஒரு தோல்வி மனப்பான்மை புகுந்துகொண்டிருக்கிறது.இது போல வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. தேசத்தை அதலபாதாளத்திற்கு கொண்டு போவதுதான் இந்த தேசத்தின் கலாச்சார பெரும்புள்ளிகளுடைய தலையாய கடமையாக இருந்துவருகிறது.இந்த மண்ணின் மரபுகள்,பண்பாடு இவற்றிலிருந்து அடியோடு பெயர்ந்து விலகி நிற்கிறது. இந்தியாவின் படிப்பாளி வர்க்கம்,தேசத்தின் பண்பாட்டை இழிவுபடுத்துவதை ஒரு பொழுதுபோக்காக கருதும் நிலவரம் உலகத்தில் அநேகமாக வேறு எந்த நாட்டிலுமே பார்க்கக் கிடைக்காது.இந்த தேசத்தில் பெரும்பான்மை மதத்திற்கு ஆன்ம ஒளி உண்டு.ஆனாலும்,அது கேலிப்பொருளாக்கப்படும்;சிறுபான்மை மதங்களோ எவ்வளவுதான் வெறித்தனமாக இருந்தாலும்,முரட்டுத்தனமாக இருந்தாலும்,செல்லம் கொஞ்சப்படும்.இது போல் உலகில் வேறு எந்த நாட்டிலும் பார்க்கக் கிடைக்காது.”
அந்த நூலைப்படித்துப் பார்த்தால் தான் இதையெல்லாம் நம்மால் நம்பவே முடியும்.ஹிந்துத்வம் என்பது போற்றப்படவேண்டியது.ஆழ்ந்த பெருமிதம் கொள்ளப்படவேண்டியது.ஆனால்,மெக்காலே புத்திக்காரர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்ப்பது? ஹிந்துத்துவத்தை சிறுமைப்படுத்தும் இந்தியப் படிப்பாளி வர்க்கத்தைப் பற்றி டேவிட் ப்ராலி பேசுகிறார்:அது உண்மையில் படிப்பாளி வர்க்கமல்ல;ஹிந்து வெறுப்பை தொழிலாகக் கொண்ட கும்பல்;அந்த கும்பலுக்கு ஊடகத்தில் செல்வாக்கு உண்டு.தேசத்தின் கழிசடைத்தனமான சிந்தனையாளர்கள் இவர்கள்.மகத்தான பாரம்பரியம் கொண்ட ஒரு மதத்தை கேவலப்படுத்துகிறவர்கள் இவர்கள்;:இதைப் பலரும் உணர்ந்திருக்கிறார்கள்.
தாரக் ஃபதா என்ற பாகிஸ்தானிய அறிவுஜீவி 2013 ஜீன் ‘பாரதிய பரக்ஞா’ என்ற இதழில் பின்வருமாறு பேசுகிறார்: “முஸ்லீம்கள் செல்வாக்குள்ளவர்களாக பயமே இல்லாமல் நடமாடுவதை பாரதத்தில் மட்டும்தான் என்னால் காணமுடிந்தது;ஒரு முஸ்லீம் என்கிற முறையில் அது சுவாரசியமாக இருந்தது.” அந்த நாளில்,அதாவது 1947 இல், ‘செக்குலர்’ என்ற வார்த்தையை எல்லோரும் மதித்தார்கள்; ஒரு விசேஷ அர்த்தம் அதற்கு இருந்தது.இன்றோ ஆட்சிபீடத்தைப் பிடிப்பதற்காக சிறுபான்மையினருக்கு வேப்பிலை அடிக்கும் சடங்கு என்று அதற்கு அர்த்தம் வந்துவிட்டது.
நிதீஷ்குமாரைப்பாருங்கள். காங்கிரஸ் கட்சியைப் பாருங்கள்.அந்தக் கட்சியின் பேச்சாளர்கள் பண்பாடற்ற முறையில் அசிங்கமாக கொக்கரித்தபடி திரிகிறார்கள்.அதன் மேலிடமோ அரசியல் விவாதத்தை எவ்வளவு மட்டரகம் ஆக்க முடியுமோ அந்த அளவுக்கு ஆக்கிவிட்டது.தன் முகத்தில் தானே கரிபூசிக்கொள்வது பேஷனாகிவிட்ட அவலமான ஒரு தேசத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நன்றி:நியூஸ் டுடே.
(கட்டுரையாளர் எம்.வி.காமத் அவர்கள் பிரசார் பாரதி அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்; ‘இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா இதழின் முன்னாள் ஆசிரியர்)
தமிழில்:விஜயபாரதம்,தேசிய வார இதழ்,பக்கம் 14,15,16;வெளியீடு 19.7.2013


1 comment:

  1. Population of hindhus are decreasing in Pakistan and Bangladesh.

    ReplyDelete

Total Pageviews

Followers