தான் பயன்படுத்தாத எந்த ஒரு பொருளுக்கும் இனி விளம்பரம் செய்யப் போவதில்லை
என்ற அதிரடி முடிவை எடுத்திருக்கிறார் அமிதாப்பச்சன்.
ஜெய்ப்பூரில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற அமிதாப்பிடம்
ஒரு மாணவி, “பெப்சியை என்னோட மிஸ் ‘மோசம்’னு சொல்றாங்க.ஆனா, நீங்க ஏன் அங்கிள் அதை
புரமோட் பண்றீங்க?”எனக்கேட்டு அதிர வைத்தாள்.
மேடையை விட்டு கீழே இறங்கியவர்,தான் பயன்படுத்தாத எந்த பொருளுக்கான விளம்பரத்திலும்
இனி நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தார்.இந்த முடிவை அகமதாபாத்தில் உள்ள இண்டியன்
இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் வளாகத்தில் நடந்த விழாவில்,மாணவர்கள் முன்னிலையிலேயே
மனம் விட்டு வருந்தினார்.
“அந்தச் சிறுமியின் கேள்விக்கு என்னால் அன்றைக்கு பதில் சொல்ல முடியவில்லை;அதனால்
நான் மட்டுமல்ல;எனது மகன் அபிஷேக்,மருமகள் ஐஸ்வர்யா ஆகியோரும் இனிமேல் பொருட்களைப்
பயன்படுத்திப் பார்த்தப் பிறகுதான் சம்பந்தப்பட்ட பொருட்களை விளம்பரப்படுத்துவார்கள்”என்று
ஜெய்ப்பூர் நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார்.அமிதாப் நடித்தது 2002 முதல் 2005 வரையிலான
காலகட்டத்தில்.தற்போது பெப்ஸியின் பிராண்ட் அம்பாஸிடர்கள் ரன்பீர் கபூர் & தோனி.
இதே போல நமது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஏராளமான மேல்நாட்டு குளிர்பானங்களும்,உணவுப்பொருட் களும்
டிவி விளம்பரங்களில் அடிக்கடி காட்டப்பட்டு,நமது உழைப்பையும்,ஆரோக்கியத்தையும் சேர்த்தே
கொள்ளையடித்து வருகின்றன.நாம் தான் டிவி,சினிமாவில் மிகைப்படுத்திக் காட்டப்படும் விளம்பரங்களை
நம்பாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.நமது நாட்டு உணவுப் பொருட்களின் முக்கியத்துவத்தை
நமது வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்;
ஆதாரம்:குமுதம் ரிப்போர்ட்டர்,பக்கம் 15,வெளியீடு 13.2.14
No comments:
Post a Comment