உடல் சோரவை போக்க:
ஒரு டம்ளர் அண்ணாசிப் பழச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் காலை அருநதி வந்தால் உடல் சோர்வு குறையும்
மயக்கம்:
அடிக்கடி மயக்கம் ஏற்படும் நபர்கள் காப்பி,தேனீர்க்கு பதில் எலுமிச்சை பழச்சாற்றை குடிப்பது நல்லது.
கை, கால் வலி:
சுக்கு50 கிராம் ஆவாரம்பட்டை 50 கிராம் அளவு எடுத்து 200மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆற வைத்து சாப்பிட்டு வர கை, கால் வலி போகும்.
விஷம் முறிவு:
விஷம் உள்ள வீட்டுப்பூச்சிகள் கடித்து விட்டால் ஆடாதொடையை சுத்தம் செயது அரைத்து சிறிதளவு வெந்நீரில் கலந்து குடிக்க விஷம் முறியும்.
கால் வலி:
முருங்கை பட்டை மற்றும் சுக்கு இவற்றை ஊற வைத்து பின்பு அதை மைய அரைத்து கால் வலி ஏற்பட்ட இடத்தில் பூச வலி குறையும்.
உடலில் ரத்தம் விருத்தி:
தினமும் ஒரு செம்பருத்தி பூவை காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சூடு தணிந்து இரத்தம் விருத்தியாகும்.
உள்ளங்கை, கால் வியர்வை நிருத்த:
இருவேளை இலந்த மர இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை, கால்களில் தடவி வர உள்ளங்கை& கால் வியர்வை நின்று விடும்.
முகத்தில் கரும்புள்ளி:
வெள்ளரிக்காயை அரைத்து கரும்புள்ளி மீது தடவி நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி வநதால் கரும்புள்ளிகள் குறையும்
*வெள்ளை நோய் ,உடல் சூடு,கண் எரிச்சல் குணமாக*
பெரிய கற்றாழை மடலை நீளவாக்கில் கீறிப் பிளந்து இதில் மூன்று
தேக்கரண்டி அளவு வெந்தயத்தைப் பதித்து மூடி, நூலால் கட்டி இரண்டு நாள் இரவு
முழுவதும் வைத்து மூன்றாவது நாளில் பிரித்துப் பார்க்கும் போது வெந்தயம்
முளை கட்டியிருக்கும். இந்த வெந்தயத்தை மூன்று பாகமாக்கி மூன்று தினங்கள்
காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்பட்ட
வெள்ளை நோய் குணமாகும்.
குளியலுக்கு….
மூலிகை குளியல் எண்ணெய் தயாரிக்க
சோற்றுக்
கற்றாழை சோற்றுப் பகுதியை அரைக்கிலோ எடுத்து ஒரு கிலோ நல்லெண்ணெய்
சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் தினமும் ஐந்து முதல் 8 மணி நேரம்
வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக
மாறிவிடும். இதில் தேவையான இயற்கை வாசனையைக் கலந்து வைத்துக் கொண்டு,
குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் எண்ணெய் உடல் எரிச்சல்,பாத
எரிச்சல்,உடல் ஊறல்,வெட்டைச்சூடு,ஜனன உறுப்பு நோய்கள் குணமாகும்.!
No comments:
Post a Comment