Monday, October 8, 2018

தாய்மையுற்ற பெண்ணின் சுக பிரசவத்திற்காக வாழ்த்தும் நெஞ்சம்

பெண்மைக்கு எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் அதில் அனைத்திலும்
உச்சமாய் இருப்பது தாய்மை...

மகிழ்ச்சி பொங்க உள்ளம் நெகிழ 

மங்கள நிகழ்ச்சி இனிதே தொடர என் மனமார்ந்த

வாழ்த்துக்கள்!! 


சின்னக் குயிலாய் முத்துப் பிள்ளையாய் 

சிங்கார நடை கொண்டு 

அறிவுச்சுடராய் அகிலம் பாராட்ட 

அன்னையின் மடியில் அழகு சிரிப்புடன் 

அன்பு மழலை இனிதே தவழ என் ஆழ்ந்த பிரார்த்தனை 

தாயுமானவரின் தாழ் பணிந்து 

தாய்மையுற்ற பெண்ணின்  சுக பிரசவத்திற்காக!! 

சீரும் சிறப்புமாய்

வாழ்வும் வளமுமாய்

பேரும் புகழுமாய்

பாசமும் பண்புமாய் 

நன்றியும்   நட்புமாய்

காதலும் கனிவுமாய்

கருணையின் உருவமாய் 

சிரிப்பும் சிந்தனையுமாய்

ஆயகலையுடனும் அஷ்டலக்ஷ்மியுடனும் 

இன்றும் என்றும் 

வளமோடு வாழ 

உளமார வாழ்த்தும் நெஞ்சம் - தமக்கை லட்சுமி 

No comments:

Post a Comment

Total Pageviews

197,860

Followers