Tuesday, October 11, 2011

சிப்பிக்குள் முத்து பிறந்த ரகசியம்

முத்து எப்படி உருவாகிறது என்பதைப்பற்றி அறிய ஆவலாக  உள்ளீர்களா?

இதோ உங்களுக்காக முத்தான செய்திகள்!!!

ஒவ்வொரு வருடமும்  கார்த்திகை மாதம்
                      விசாக நட்சத்திரம் அன்று
                      சந்திர ஓரை 
                      சுக்ல பட்ச்சத்தில் 
                      நிலவின் இரவில்
மழை பெய்யவேண்டும்.
அப்படி பெய்த மழை நீர் துளி கடல் சிப்பிற்குள் விழ வேண்டும்.
நாட்கள் நகர நகர இந்த மழை துளி முத்தாக மாறுகிறது!!!!
இயற்கையின் ஆச்சர்யம் தான் எத்தனை. 
"இதுவே சிப்பிக்குள் முத்து பிறந்த ரகசியம்"

கால்சியம் கார்பனேட் என்ற வேதியல் பொருளே முத்தில் அதிகமாக உள்ளது.
முத்துக்கள் பல நிறங்களிலும் கிடைக்கும்.

 மேலும்மோர் முக்கிய செய்தி!!!!
நாம் எல்லோரும் பொன், வெள்ளி, முத்து, பவளம், வைரம், மாணிக்கம், பாதரசம், நவரத்தினங்கள் பற்றி அறிவோம்.
அனைவரும் மேலே சொன்ன அத்துனை பொருட்களையும் விலை உயர்ந்தது என்று கூறுகிறோம்.
இந்த பொருட்களின் உண்மையான பயன் தான் என்ன? எதனால் விலை உயர்ந்தது  என்று
ஆராய்ந்தால் மிக அற்புதமான தகவல் கிடைத்தது.

 மேலே சொன்ன அத்தனை பொருட்களும் பண்டைய காலத்தில் சுட்டு சாம்பலாக்கி மருந்து தயாரித்து உயிரை காக்கும் மிக உயர்ந்த விதத்தில் பயன்படுத்தப்பட்டது.

மருத்துவத்திற்க்கே அனைத்து உலோகங்களும் நவரத்தின்களும் உபயோகபடுத்தபட்டது.

இதன் அடிப்படையில் தான் விலை உயர்ந்து  கொண்டே போய் இன்று அலங்கார பொருட்களாகவும், சேமிப்பு சொத்துகளகவும் மாறிவிட்டது.
 "நேயர்களே மிகவும் உபயோகமான தகவல் தானே?"



No comments:

Post a Comment

Total Pageviews

Followers