Tuesday, October 11, 2011

வைர "முத்துவின்" தண்ணீர் தேசத்திலிருந்து நான் எடுத்த முத்துக்கள்

வைர "முத்துவின்" தண்ணீர் தேசத்திலிருந்து நான் எடுத்த முத்துக்கள் 
உணர்வுகளின் தேவை காதல்
உணர்சிகளின் தேவை காமம் 
உலகத்தின் தேவை உழைப்பு 
இந்த தேவைகளின் வெவ்வேறு 
வடிவங்கள் வாழ்க்கை   
அழுகையும் அச்சமும்
தீர்ந்த நிலை தான்
சுதந்திரம்

விரல் விழுந்துவிட்டால் அழுதுகொண்டிருக்ககூடாது
நகம் வெட்டும் நேரம் மிச்சம் எண்டு நினைத்து கொள்வோம் 

படகு பழுது என்றல் பதறிக் 
கொண்டிருக்கக்கூடாது 
கடலில் ஓர் இரவு என்ற கட்டுரைக்கு 
குறிப்பெடுப்போம் 

எரிந்து விட்டது வீடு
இனி 
தெளிவை தெரியும் 
நிலவு
இந்த கவிதையை வழக்கபடுத்தி கற்றுக்கொண்டேன்

தண்ணீரில் எடையிழக்கும் பரம் போல 
துன்பம் எடையிழந்தது 

தங்கத்தின் துருவல்களை சேகரித்தே 
ஒரு நகை செய்துவிடுவது போல 
கஷ்டங்களை சேகரித்தே 
நாம் கலை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் 

வாழ்வின் மர்மம் தான் வாழ்வின் ருசி 
நாளாய் நேர்வர்வதரியாத சூட்சுமங்கள்  தான்
அதன்  சுவை
எதிர்பாராத வெற்றி தான் மனித மகிழ்ச்சி 

தோல்வியும் எதிர்பாராமல் வருவதால் தான் 
மனிதன் அதன் முன் நிமிடம் வரைக்கும் 
முயற்ச்சியில் இருக்கிறான் 

மரணத்தின் தேதி மட்டும் மனிதனுக்கு
தெரிந்துவிட்டால் மரணம் வரும்முன்பே 
அவன் மரித்துப் போவான்
ஐம் பூதங்கள் தந்த இந்த உடலை நாளை 
 ஐம் பூதங்கள் பிரித்தெடுத்துக் கொள்ளலாம் 
ஆனால்   மரணம் என்ற பௌதிகச் 
சம்பவத்தால் நாம் மரிக்கப் போவதில்லை 

ஒரு மனிதன் 
எத்தனை நாடுகள் கடந்தான் 
 எத்தனை நாடுகள் கடல்கள் கடந்தான் 
எத்தனை  பேரை கொன்றான்
எத்தனை   மகுடம் சூடினான்
எத்தனை   காலம் இருந்தான் 
எத்தனை   பிள்ளைகள் ஈன்றான் 
என்பன அல்ல அவன் எச்சங்கள் 
இவை எல்லாம் நான் என்ற 
ஆணவத்தின் நீளங்கள் 

அவன் இன்னோர் உயிருக்காக 
எத்தனை  முறை அழுதான் என்பது தான் 
அவன் மனிதன் 
என்பதற்கான மாறாத சாட்சி     
   
  
ஒருவன் தனக்காக அழும் கண்ணீர் 
அவனை மட்டுமே சுத்திகரிக்கிறது 
அடுத்த உயிருக்காக அழும் கண்ணீர் அகிலத்தையே 
சுத்திகரிக்கிறது 

 பேதையாய் கூட இரு கோழையாய் இராதே 
இந்த பிரபஞ்சத்தில் எதுவும் நேரலாம் 
இன்று காண்பது நாளை மாறலாம் 
மாற்றமே பரிணாமம் மறுத்தல் ஒன்று தான் 
உலகில் மாறாதிருப்பது 

இந்த சிறகத் தொகுதியும் காட்சி மாறலாம் 

மனித வாழ்வின் பெருந்துன்பம் எது தெரியுமா?

மரணத்தைவிட வாழ்க்கை பயங்கரமானது என்று 
தெரிந்த பின்னும் வாழ்க்கையோடு
ஒட்டிக் கொண்டிருப்பது தான் 
மரணத்தின் வாசல் வரை சென்று 
மீண்டவர்களுக்கே வாழ்வின் பெருமை விளங்கும் 

வாழ்கையை துளி துளித்துளியாய் ரசித்தால் 
வாழ்வின் ஒவ்வொரு கணமும் 
பெருமையுடையதாகும் 
ஒவ்வொவொரு புல்லிலும், பூவிலும் தீராத 
வாழ்க்கை தேங்கி நிற்பது தெரியும் 
தான் உதிரும் முதல் நிமிடம் வரைக்கும் 
இந்த பிரபஞ்சத்தின் சந்தோசத்தை 
மட்டுமே காற்றோடு பேசிக்கொண்டிருக்கும் 
ஒரு தென்ன௩'கீற்றை பூல இனி இன்பமாயிறு
'           

வாழ்வின் பெருமையை உயர்த்துவதும் 
உறுப்புகளின் பெருமையை உணர்த்துவதும் 
நேற்றைய இன்றைய நேசிக்கவைப்பதும் 
தன்னைச் சர்ந்தவர்பற்றி யோசிக்க வைப்பதும் 
செலுத்தப்படாத அன்பைச் செலுத்தச் செய்வதும் 
திமிர் கொண்டாடும் தேகத்தை 
யானைப்பதக்கு அழைத்து வருவதும் 
மனிதனுள்ளிருக்கும்
சிங்கம் புலிகளைத் துரத்தியடிப்பதும் 
கடந்த காலத் தவறுகளை எண்ணிக் 
கடை விழியில் நீரொழுக வைப்பதும் 
நோய்தான்! 
ஆகவே உடம்பே! அவ்வப்போது 
கொஞ்சம் நோய் பெறுக!  
ஆகவே உடம்பே! அவ்வப்போது 
கொஞ்சம் நோய் பெறுக!  
நோயற்ற வாழ்வு தான் குறைவற்ற செல்வம் 
ஆனால் நோயும் ஒரு செல்வமென்று 
பட்டுத்தெளி, மனமே பட்டுத்தெளி    

  
   எது பிறப்பு? எது இறப்பு?
இரண்டிலும் நான் தெளிவாகவே இருக்கிறேன் 
 பிறப்பு என்பது ஐம் பூதங்கள் கொதித்த கடன்
இறப்பு என்பது ஐம் பூதங்களின் வசூல்
நிலம் நீர் தீ வளி வெளி 
என்றும் ஐம் பூதங்களால் மீண்டும்
பிரின்தெடுத்துக் கொள்கின்றன

என் பாதம் தாங்கிய மண்ணே.. நன்றி 
என்  ரத்தமான தண்ணீரே..  நன்றி 
எனக்குள் ஒளி கொடுத்த தீயே  நன்றி 
என் உயிரை இயக்கிய காற்றே  நன்றி 
எங்களுக்கு நிலவும் கதிரும் மழையும்
கொடுத்த ஆகாயமே  நன்றி 

 

No comments:

Post a Comment

Total Pageviews

Followers