Wednesday, April 10, 2013

உலகவரலாற்றில் முதன்முறையாக “ருத்ராட்ச உபநிஷத்” பயிற்சிவகுப்பு!!!

கலியுகம் தோன்றி ஐந்தாயிரத்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன;சிவமணி எனப்படும் ருத்ராட்சமானது சைவசமயத்தின் அடையாளச்சின்னங்களுள் ஒன்றாக இருக்கிறது;சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை நமது இந்து தர்மத்தின் ஷண்மதங்களிலும் ருத்ராட்சம் முக்கிய வழிபாட்டு அம்சமாகப் போற்றப்பட்டு வந்தது;
காலபைரவர் சிவவடிவத்தில் கண்களை மேல்நோக்கித் திறந்த நிலையில் தனது தானைத்தலைவனான சதாசிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்;அந்த கடும் தவத்தின் விளைவாக,சிவனருளால் காலபைரவப்பெருமானின் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் பூமியில் இன்றைய நேபாளத்தில் விழுந்தன;அப்படி விழுந்தவை ருத்ரனது அட்சமாக ருத்ராட்சமரங்களாக விளைந்தன;அவைகளே இன்றும் ருத்ராட்சம் என்று போற்றப்படுகிறது.
ருத்ராட்சத்தில் ஒரு முகம் முதல் முப்பத்தி இரண்டு முகங்கள் வரை இருக்கின்றன;இதில் ஒரு முகத்தைப் பார்த்தவர்கள் மிகச் சிலரே! போலிகள் நிறைய உலவுகின்றன;எளிதில் எங்கும் மலிவு விலையில் கிடைப்பது ஐந்துமுக ருத்ராட்சங்களே!!! நாம் அனைவருமே ஐந்துமுக ருத்ராட்சத்தை அணியலாம்;பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகள் கல்வியில் முழுக்கவனம் செலுத்த ஆறு முக ருத்ராட்சத்தை அணிய வேண்டும்.பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும்,கர்ப்பக் காலத்திலும்,பிரசவகாலத்திலும்  ருத்ராட்சத்தை அணிந்திருக்கலாம்;கழற்ற வேண்டிய அவசியமில்லை;ருத்ராட்சத்தை அணிபவர் பின்பற்ற வேண்டிய ஒரே ஒரு கொள்கை அசைவம் சாப்பிடவேக் கூடாது;பிறந்த குழந்தை முதல் நூறு வயதுப் பெரியவர்கள் வரையிலும் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணிந்திருக்கலாம்;ருத்ராட்சத்தை சிகப்புக் கயிற்றில் மட்டுமே கட்ட வேண்டும்;இல்லத்தரசிகள் தாலிக்கொடியோடு சேர்த்துக் கட்டலாம்;ருத்ராட்சமாலை அணிவதற்குத்தான் பலவிதமான நியமங்களைப் பின்பற்ற வேண்டும்.
பல ஜன்மங்களாக புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இப்பிறவியில் ருத்ராட்சத்தை அணியும் அதிர்ஷ்டம் உண்டாகும்;ருத்ராட்சம் அணிவது பற்றி பெரும்பாலும் போலி மூடநம்பிக்கைகளே நம்மிடையே உலவுகின்றன.இந்தமூட நம்பிக்கைகளை அனுபவமுள்ள ஜோதிடர்களே நம்புவதுதான் மிகவும் வருத்தமான நிஜம் ஆகும்.ருத்ராட்சம் அணிந்தவர் மரணமடைந்தால்,அவரை ருத்ராட்சத்தோடு சேர்த்தே புதைக்க அல்லது எரிக்க வேண்டும்;ருத்ராட்சம் அணிந்தவர் நிச்சயமாக ருத்ர உலகத்திற்குப் பயணிப்பார்.ருத்ராட்சம் அணிந்திருப்பவர்களை பேய்,பிசாசு,துர்தேவதைகள்,துஷ்டசக்திகள்,பில்லி,சூனியம் அண்டாது;
இவ்வளவுச் சிறப்பு மிக்க ருத்ராட்சம் பற்றிய பல மறைக்கப்பட்ட தெய்வீக ரகசியங்களின் தொகுப்பே ருத்ராட்ச உபநிஷத் எனப்படுகிறது.இந்த ருத்ராட்ச உபநிஷத்தின் தொகுப்பை ஒரு நாள் பயிற்சி வகுப்பாக நமக்கு போதிக்க நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் சம்மதித்திருக்கிறார்.கடந்த ஐந்தாயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்ட பல சிவரகசியங்கள் இந்த ஆன்மீகப்பயிற்சி வகுப்பில் போதிக்கப்பட இருக்கிறது.மே 2013 இல் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தமிழ்நாட்டின் தெற்குப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு நகரத்தில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பிற்கு குருதட்சிணை உண்டு.
இந்த ருத்ராட்ச உபநிஷத் பயிற்சி வகுப்பில் கற்க இருக்கும் சிவரகசியங்களை தினசரிப்பயிற்சியாகச் செய்து வந்தால்,உங்களின் இறைவழிபாட்டிற்கான பலன்கள் விரைவில் கிட்டும்;மேலும் பல தெய்வீக ரகசியங்களை நீங்கள் அடையலாம்;சித்தர் தரிசனம்,வறுமை நீக்கம்,கர்மவினை நீக்கம் போன்றவைகளையும் நீங்கள் எட்டுவீர்கள்:அனைத்தையும் வெளிப்படுத்த குருமுகமாக உத்தரவு கிட்டவில்லை;மன்னிக்கவும்.
திருஅண்ணாமலையில் தெய்வீக விபூதிப்பயிற்சிவகுப்பு,கோவையில் நடந்த அதன் மறு வகுப்பு,ராஜபாளையத்தில் நடத்தப்பட்ட ஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சிவகுப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் அனுமதி உண்டு;அவர்கள் செய்ய வேண்டியது மின் அஞ்சல் மூலமாக அவரவரின் பெயர்,செல் எண்,போட்டோ,தற்போது வசிக்கும் ஊர்,சொந்த ஊர் போன்றவைகளை aanmigakkadal@gmail.comக்குத் தெரிவிக்க வேண்டும்;Subject இல் நீங்கள் எந்த ஊரில் நிகழ்ந்த பயிற்சிவகுப்பிற்கு வருகைதந்தீர்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும்.உதாரணமாக,Annamalai Viboothi Student/Coimbatore Viboothi Student/Rajapalayam Athma palam Student என்று தெரிவிக்க வேண்டும்.Proxy Studentக்கு அனுமதி கிடையாது;
புதியவர்களுக்கு(பழையவர்களுக்கும்) பின்வரும் நிபந்தனைகள் பொருந்தும்:


1.வயது 21 நிரம்பியிருக்க வேண்டும்.


2.அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டிருக்க வேண்டும்.


3.ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.(குழந்தைகளை அழைத்துவராமல் இருப்பது உத்தமம்)


4.Subjectஇல்  Ruthratcha Applicant என்று குறிப்பிட்டு,உங்களது பெயர்,போட்டோ,செல் எண்,பிறந்த ஊர்,தற்போது வசிக்கும் ஊர்,ஜாதக நகலை அனுப்பி வைக்க வேண்டும்.
இதில்,ஏதாவது ஒன்றுவிடுபட்டாலும்,உங்களது விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது; தம்பதியாக விண்ணப்பித்தால்,இருவரும் இருக்கும் போட்டோவை அனுப்ப வேண்டும்; ஜாதகம் இல்லாதவர்கள்,ஜாதகம் இல்லை என்று குறிப்பிடவும்;


5.இந்த ருத்ராட்ச உபநிஷத் பயிற்சிவகுப்புக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டால்,இங்கே பயிலும் சிவரகசியங்களை எனது வாழ்க்கைத் துணை,வாரிசுகளைத் தவிர,வேறு எவருக்கும் எப்போதும்,எந்த வடிவிலும் உபதேசிக்கமாட்டேன் என்ற உறுதிமொழியில் கையெழுத்திட்டப் பின்னரே,வகுப்புக்குள் அனுமதிக்கப்படுவர்.


6.தினசரி சிவ வழிபாடு அல்லது ஸ்ரீகால பைரவர்/ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு அல்லது குலதெய்வ வழிபாடு அல்லது ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்களுக்கு இந்த பயிற்சி வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.வெறும் ஆர்வக் கோளாறுடன் இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.அனுப்ப வேண்டிய முகவரி:aanmigakkadal@gmail.com 
உங்களது விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசித்தேதி:30.4.2013


தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பயிற்சி நடைபெறும் இடம் & ஊர்,நாள்,குருதட்சிணை போன்றவைத் தெரிவிக்கப்படும்;


தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வரும்போது ஜாதகநகல்,இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோக்கள்,குருதட்சிணையைக் கொண்டுவர வேண்டும்;


தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தாம் மட்டுமே வர வேண்டும்;துணைக்கு வருவோருக்கு பயிற்சி அரங்கிற்கு உள்ளே அனுமதி கிடையாது;


நெருங்கிய நண்பர்களை அழைத்து வந்தால் அவர்களுக்கு ஒருபோதும் வகுப்புக்குள் அனுமதி கிடையாது;


 பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பு:ஆன்மீகக்கடல் அறக்கட்டளை,ராஜபாளையம்.
 குறிப்பு:பெரும்பாலான  வாசக,வாசகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஏப்ரல் 2013 இல் நடைபெற வேண்டிய பயிற்சி வகுப்பை மே 2013க்கு தள்ளி வைத்துவிட்டோம்;வீட்டில் தமது குழந்தைகள் ஆண்டுத் தேர்வுகளுக்குத் தயாராவதால்,இந்த வேண்டுகோள் ஏற்கப்பட்டிருக்கிறது.

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment

Total Pageviews

Followers