Saturday, April 6, 2013

உங்கள் மகளை ஆளுமைத்திறனுள்ள(Proper Personality) பெண்ணாக்கிட ஒரு அரிய வாய்ப்பு!!!


இன்றைய காலகட்டத்தில் அம்மாவும்,அப்பாவும் வேலைக்குப்போய்விடுகின்றனர்;வீட்டில் பெரும்பாலும் மகள்கள் தனியாகத் தான் இருக்கிறார்கள்;பள்ளியில் தரப்படும் வீட்டுப்பாடத்தை வாசித்துவிட்டு,எப்போதும் டிவி பார்த்தல் அல்லது வகுப்புத்தோழியிடம் செல்போனில் வம்பளத்தல்தான் நடைபெற்றுவருகிறது;இது தமிழ்நாடு முழுவதும் பரவலாக இருந்துவருகிறது;

மாநகரங்களில் இன்னும் ஒருபடிமேலே போய் முகநூலில் கணக்குத் துவங்கி உலகெங்கும் நட்பு வளர்க்கிறார்கள்;நேரில் பழகும் ஆண்,பெண்களின் சுபாவத்தை உணர இயலவில்லை;ஒருவர் பேசும் வார்த்தைகளைக் கொண்டே அவர்/ள் எந்த இடத்தில் பொய் பேசுகின்றனர்? என்ன நினைக்கின்றார்/ள்? என்பதை உணரும் சிந்தனைத்திறன் இன்று குறைந்து வருகிறது.இவர்களிடம் அன்பு செலுத்தவும்,அக்கறையாக இருக்கவும் ஆளில்லை;எனவே,செல்போனில் பேசும்/நேரில் புகழ்ந்து பேசும் கயவர்களின் பசப்பு வார்த்தைகளில் விழுந்து விடுகின்றனர்;

கூட்டுக்குடும்பமாக வாழும் இடங்களில் வயதானவர்களின் அனுபவ வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவோர் மிகவும் குறைவு.இந்த சூழ்நிலையில் வாரம் ஒருநாள் மட்டுமாவது அம்மா,அப்பா,குழந்தைகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடும் பழக்கமும் அரிதாகிவருகிறது.

மாதம் ஒருமுறை கோவில்களுக்குப் போவதும் குறைந்து வருகிறது.சம்மர் வந்தாலே ஊட்டி,கொடைக்கானல் என்று சென்று அந்த ஊர்களையும் நாறடித்து,தீம் பார்க்குகளில் பணத்தைக் கொட்டிட மட்டும் தெரிந்திருக்கிறோம்.நமது மகள்கள் படிக்கும் பொறியியல் படிப்புகள் அவளை சிறந்த வேலைக்காரியாக மட்டுமே தயார் செய்கிறது;ஆனால்,இல்லத்தரசியாக,பொறுப்புள்ள பெண்ணாக மாற்றிடச் செய்கிறதா?

பருவ வயதிலும்,அதற்குப்பிறகும் தனக்கு வர இருக்கும் & வரும் பிரச்னைகளை தானே எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை நமது மகள்களுக்கு ஊட்டிட முயன்றிருக்கிறோமா?

நமது முன்னோர்களின் பெருமைகளை நமது அடுத்த தலைமுறையான மகள்களுக்குப் போதித்துக் கொண்டே வந்திருந்தால் இன்று பப்கள் சென்னை,கோவை,திருப்பூர்,ஈரோடு,நாகர்கோவில்,மதுரைக்கு வந்திருக்காது;நமக்கே நேரமில்லையே? 

நமது இந்து தர்மப் பண்புகளை மனதில் பதிய வைக்க ஒரு அருமையான வாய்ப்பு இது:=
இந்தக் குறையைத் தீர்க்க ஒரு அருமையான கோடைகால பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் ஏற்பாடாகியிருக்கிறது.அதுதான் பண்புப்பயிற்சி முகாம்! இந்த முகாமில் பெண்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்; ஒரே குடும்பத்தில் இருந்து அக்கா,தங்கை,மருமகள்,அம்மா,பாட்டி என்று அனைவருமே கலந்து கொள்ளலாம்;

அல்லது

குடும்பத்துக்கு ஒரு பெண்ணை அனுப்பி வைப்பது அவசியம்;தனியாக எனது மகள் இருக்க மாட்டாள் என்று நினைத்தால்,இரண்டு மூன்று தோழிகளாக அனுப்பி வைப்பது அவசியம்;இந்த முகாமுக்கு அனுப்பி வைத்துவிட்டால் இந்த பதினைந்து நாட்களும் பார்க்க முடியாது;செல்லில் பேசிக்கொள்ளலாம்;இடையில் வெளியே வந்தால் மீண்டும் உள்ளே செல்ல அனுமதி இல்லை;

தமிழ்பேசும் ஒவ்வொரு இந்துக்குடும்பப் பெண்களுக்கும் இந்தப் பயிற்சி முகாம் அவசியமானது ஆகும் என்பதை பதினைந்தாவது நாள்தான் உணருவீர்கள்;(எனக்கு தேசபக்தியையும்,தெய்வபக்தியையும் உணர்வில் ஊட்டியது இதே போன்ற ஒரு ஆண்களுக்கான பயிற்சி முகாம் தான்! அதன் பிறகே,நான் தன்னம்பிக்கை மிக்கவனாகவும்,பிறருக்கு வழிகாட்டும் முன்னுதாரணமானவனாகவும் மாறத் துவங்கினேன்!!!!)
இதை நடத்துவது ராஷ்ட்ர சேவிகா சமிதி=தமிழ்நாடு
பயிற்சி நடைபெறும் நாட்கள்;3.5.13 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் 18.5.13 சனிக்கிழமை இரவு 9 மணி வரை

இடம்:சுத்தானந்த ஆஸ்ரமம், ‘அடி அண்ணாமலை’, கிரிவலப்பாதை,திருஅண்ணாமலை
கட்டணம்:ரூ.350/-(உணவிற்காக மட்டும்)

தகுதி:பெண்கள் மட்டும்;13 வயது நிரம்பியிருக்க வேண்டும்;கல்வித்தகுதி அவசியமில்லை;

கொண்டுவர வேண்டியவை:=ராணி க்ருஷ்ணன்,மதுரை ப்ராந்த கார்யவாஹி 09790291516 அல்லது ராதா சந்திரமவுலி 9884081969 அவர்களில் ஒருவரைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுக்கொள்ளலாம்.

பயிற்சிக்குப் பிறகு: இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மாணவி,பெண்ணும் தனது ஒவ்வொரு செயலிலும்  தன்னம்பிக்கையோடும்,தெய்வபக்தியோடும்,தேசபக்தியோடும்,செயல்நுட்பத்தோடும் செயல்படுவார்;அவர்களின் பயம்,கூச்சம் விலகும்;படிப்பில்,குடும்பப் பொறுப்பில்,வேலை செய்யும் இடத்தில் இன்னும் சிறப்பாகச் செயல்பட ஆரம்பிப்பார்;சிறந்த ஆளுமைத்திறனும் உருவாகத்துவங்கும்;இந்த ஆளுமைத்திறன் குறைந்தது இருபது ஆண்டுகளுக்கு வழிநடத்தும்!!!
இந்த அரிய வாய்ப்பைப்  பயன்படுத்திக் கொள்ளவும்.
தகவல் ஆதாரம்: விஜயபாரதம்,தேசிய வார இதழ்,பக்கம் 5, வெளியீடு:12.4.13

No comments:

Post a Comment

Total Pageviews

Followers