Sunday, August 5, 2018

பல் சொத்தை - வீட்டு வைத்தியம்

பல் சொத்தையால் அவதியா ??? 

எளிய வீட்டு  வைத்தியம் மற்றும் நிரந்தர தீர்வு!!!

பல் சொத்தை  முதல் கட்டத்தில் இருந்தால்,  கீழ்கண்ட வீட்டு வைத்திய குறிப்பு 100% குணமடைய செய்யும் .



கீழ்கண்ட வைத்திய முறைகளை தவறாமல் செய்தால் குணமடைவது உறுதி. மேலும் கீழ்கண்ட எதாவது ஒரு முறையை வரம் தோறும் கடை பிடித்ததை பல் சொத்தையாவதிலிருந்து விடுபடலாம் அல்லது பாதுகாத்து கொள்ளலாம் .


1. ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு முடித்தவுடன் 3-5 கொய்யா இலைகளை கழுவி நன்கு மெல்லவும் . கொய்யா இலைகளை மெல்லும் பொது வாயில் எச்சில் நன்கு ஊறும். இந்த சாறு மற்றும் நுண்ணிய இலைகளை வாயில் 15-30 நிமிடம் வைத்திருக்கவும் . பிறகு வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் போடி மற்றும் உப்பு சேர்த்து 5-10 முறை வாய்  கொப்பளிக்கவும் . 





2. புளிய இலைகளையும், மஞ்சள் பொடியும் மற்றும் உப்பு  சேர்த்து  200 மில்லி நீரில் 10 நிமிடம் கொதிக்க வைத்து, சிறுது சூடு ஆறியவுடன் 10-20 முறை வாய் கொப்பளிக்கவும். 







3. இரண்டு கிராம்பு அல்லது லவங்க பூவை வாயிலிட்டு நன்றா மென்றால் வாயில் எச்சில் நன்றா உறும், பிறகு 10-20 நிமிடம் இந்த சாற்றை வாயில் வைத்து துப்பி விடவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம்.


4. காலை மற்றும் இரவில் கீழே குறிப்பிட்ட மூன்று பொருட்களை கொண்டு பல்துலக்கவும்.
கடுக்காய் பொடி, மஞ்சள் பொடி  மற்றும் உப்பு மூன்றையும் சரியளவு கலந்து பல்பொடியாக உபயோகிக்கவும் . 




மேற்குறிய முறைகளை எந்த வரிசையில் வேண்டுமானாலும்  செய்யலாம். ஆனால் 4 முறைகளையும் ஒருமுறையாவது ஒரு நாளைக்கு கட்டாயம் செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் 
lakshmi_mailme@rediffmail.com

நலம்பெற வாழ்த்துக்கள்!!!

Sunday, June 24, 2018

கால் வெடிப்பு குணமாக எளிய வீட்டு வைத்தியம்



1. விளக்கெண்ணெய்  2 தேக்கரண்டி 
2. சுண்ணாம்பு சிறிதளவு (3 மிளகு அளவு)
3. சிறிது மஞ்சள் பொடி 
4. மேற் கூறிய இந்த மூன்று பொருளையும் நன்றாக கலக்கி வைத்துக்கொள்ளவும் 
5. தினமும் இரவில் 3-5 நாட்கள் கல் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வரவும் 

விரைவில் குணமாவதை நன்கு உணரலாம்

பாட்டி வைத்தியம்/ வீட்டு வைத்தியம்


உடல் சோரவை போக்க:
ஒரு டம்ளர் அண்ணாசிப் பழச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் காலை அருநதி வந்தால் உடல் சோர்வு குறையும்

மயக்கம்:
அடிக்கடி மயக்கம் ஏற்படும் நபர்கள் காப்பி,தேனீர்க்கு பதில் எலுமிச்சை பழச்சாற்றை குடிப்பது நல்லது.

கை, கால் வலி:
சுக்கு50 கிராம் ஆவாரம்பட்டை  50 கிராம் அளவு எடுத்து 200மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆற வைத்து சாப்பிட்டு வர கை, கால் வலி போகும்.

விஷம் முறிவு:
விஷம் உள்ள வீட்டுப்பூச்சிகள் கடித்து விட்டால் ஆடாதொடையை சுத்தம் செயது அரைத்து சிறிதளவு வெந்நீரில் கலந்து குடிக்க விஷம் முறியும்.

கால் வலி:
முருங்கை பட்டை மற்றும் சுக்கு இவற்றை ஊற வைத்து பின்பு அதை மைய அரைத்து கால் வலி ஏற்பட்ட இடத்தில் பூச வலி குறையும்.

உடலில் ரத்தம் விருத்தி:
தினமும் ஒரு செம்பருத்தி பூவை காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சூடு தணிந்து இரத்தம் விருத்தியாகும்.

உள்ளங்கை, கால் வியர்வை நிருத்த: 
இருவேளை இலந்த மர இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை, கால்களில் தடவி வர உள்ளங்கை& கால் வியர்வை நின்று விடும்.

முகத்தில் கரும்புள்ளி:
வெள்ளரிக்காயை அரைத்து கரும்புள்ளி மீது தடவி நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி வநதால் கரும்புள்ளிகள் குறையும்

*வெள்ளை நோய் ,உடல் சூடு,கண் எரிச்சல் குணமாக*

           பெரிய கற்றாழை மடலை நீளவாக்கில் கீறிப் பிளந்து இதில் மூன்று தேக்கரண்டி அளவு வெந்தயத்தைப் பதித்து மூடி, நூலால் கட்டி இரண்டு நாள் இரவு முழுவதும் வைத்து  மூன்றாவது நாளில் பிரித்துப் பார்க்கும் போது வெந்தயம் முளை கட்டியிருக்கும். இந்த வெந்தயத்தை மூன்று பாகமாக்கி மூன்று தினங்கள் காலை வெறும் வயிற்றில்  சாப்பிட்டால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்பட்ட வெள்ளை நோய் குணமாகும்.

குளியலுக்கு….

மூலிகை குளியல் எண்ணெய் தயாரிக்க

 சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரைக்கிலோ எடுத்து ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் தினமும் ஐந்து முதல் 8 மணி நேரம் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான இயற்கை வாசனையைக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் எண்ணெய் உடல் எரிச்சல்,பாத எரிச்சல்,உடல் ஊறல்,வெட்டைச்சூடு,ஜனன உறுப்பு நோய்கள் குணமாகும்.!

Wednesday, February 8, 2017

தொப்புளில் எண்ணெய்

தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்றத் தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு, முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
கண்கள்_வறட்சி_நீங்க
குறைந்தபார்வை_சரியாக பளபளப்பான_தலைமுடி_பெற மெருகூட்டப்பட்ட_சருமம்_பெற
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.
முழங்கால்_வலி_குணமடைய
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி விளக்கெண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.
நடுக்கம்_மற்றும்_சோர்வு, மூட்டுவலி_மற்றும்_வறண்ட_சருமத்திலிருந்து_நிவாரணம்_பெற
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி கடுகு எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரைஇன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்.
தொப்புளில்_ஏன்_எண்ணெய்விட_வேண்டும்?
எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும். அதனால் தொப்புள் அந்த எண்ணெயைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பி திறக்கச் செய்கிறது.
சிறு குழந்தைக்கு வயிறு வலியென்றால், பெரியவர்கள் காயப்பொடியுடன் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம். சில நிமிடங்களில் குணமாகும். எண்ணெயும் அவ்வாறே வேலை செய்கிறது.

Monday, January 23, 2017

சென்னை வெள்ளத்தில் மக்களுக்கு உதவவில்லை என ரஜினியை வசைபாடிய மக்கள்
கபாலி வந்ததும்
2000 ரூபாய் கொடுத்தும் டிக்கெட் கிடைக்கவில்லை என வருத்தபடுகின்றனர்
கலாம் இறுதி ஊர்வலத்தில் தனது பிறந்தநாளை வெகு விமரிசையாக(மற்றவர்கள் மணம் புண்படுத்தும் படி) கொண்டாடிய தனுஷை திட்டிய இளைஞர்கள்,
இன்று
அவர் படத்திற்கு போஸ்டர் ஒட்டுகின்றனர்.
நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட பொதுமக்களிடம் பணம் வசூலிக்க நேரம் இருக்கு, ஆனால்
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு ஆதரவாக குரல்(விஜய் சேதுபதி தவிர்த்து)கொடுக்க யாருக்கும் நேரமில்லை..
சிவாகார்த்திகேயன் தன்னுடைய தயாரிப்பாளருக்கு காரு இல்லை என்று கண்ணீர் விட்டதும் விஷால்,சிம்பு ஆதரவு கரம் நீட்டுகிறார்கள் ஊடகம் அதற்கும் ஒரு படி மேலே போய் நடிகனயை கூப்பிட்டு வச்சு நிகழ்சசி நடத்துகின்றன. அந்த தயாரிப்பாளர் ரெமோ படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு வழங்கியது 5கோடிக்கும் மேல்.. அதை வைத்து 100 கார் கூட வாங்கலாம்.. அந்த ஹீரோவே கண்ணீர் விட்டதற்கு பதில் கார் வாங்கி கொடுத்திருக்கலாம். எல்லாமே நடிப்புங்க, இனிமேலும் நடிகனை நம்பி காலத்தை கடத்தாதீர்கள். இப்பதிவு யார் மனதையும் காயப்படுத்த பதிவிடவில்லை,,,
என் தமிழ் இனம்
"ரசிகன்" என்ற பெயரில் யாரிடமும் அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை.
அன்று வெள்ளைகாரன் நம்மை அடிமையாக்கினான்,
இன்றோ சில நடிகர்களுக்கு நாம் அடிமையாக வாழ்கிறோம்....
திரையுலகம் இல்லாவிட்டால், தமிழ்நாடு இருளாகாது.
விவசாயம் இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் யாரும் உயிர் வாழ முடியாது..
திரையில் தோன்றுபவனுக்கு கோடிகளில் சம்பளம்,
உழைத்த உழவனுக்கு உடுத்த உடையில்லை யாம்..
ரசிகனால் நடிகர் வாழ்கிறார்கள்,,
நடிகரால் ரசிகன் வாழ்கிறானா????????
நடிகர்,நடிகையை காண வந்த கூட்டம் ,
விவசாயிகளுக்காக குரல் கொடுக்க வரவில்லை,காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க வரவில்லை,,..
2000 ரூபாய்,1000 ரூபாய் கொடுத்து முதல் காட்சி அந்த நடிகர்/நடிகை படம் பார்த்தேன் என பெருமைப் படுகிறோம்,,, உங்கள் ஊரில் எத்தனை ஆசிரமம் இருக்குன்னு தெரியுமா????,
ஒரு சொட்டு பாலுக்காக எவ்வளவு பேர் கஷ்டப்படுகிறார்கள்'னு தெரியுமா??,
எத்தனை முதியோர்கள் அடுத்த வேளை உணவு கிடைக்குமா,கிடைக்காதா என்று காத்து கொண்டிருக்கிறார்கள்..
திரைப் படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே,,,,
நீங்கள் கூறலாம் திரையுலகத்தால் பல ஆயிரம் பேர் வாழ்கிறார்கள் என்று.
உண்மை தான்,
ஆனால் சினிமா வால் எத்தனை கலை அழிந்து விட்டது என உங்களுக்கு தெரியுமா??
எத்தனை கலைஞர்கள் தன் வாழ்க்கையை தொலைத்தார்கள் என தெரியுமா??
அழிந்த கலைகள்;
தோல்பாவை கூத்து,தெரு கூத்து,வீதி நாடகம்,மேடை நாடகம், கரகாட்டம்,
ஒயிலாட்டம்,
சிலம்பாட்டம்,
புலியாட்டம்,
தப்பாட்டம்,இன்னும் நிறைய......
முகம் தெரியாத ஒருவருக்காக என் வாழ்நாளை வீணாக்க விரும்பவில்லை,,,
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே,
அப்பா,ஜோக்கர்,
இறுதிசுற்று,
ஆண்டவன் கட்டளை போன்ற சிறந்த படங்களை திரைஅரங்கில் சென்று பாருங்கள்,பொழுதுபோக்காக..
கலைக்கு மட்டும் ரசிகனா இருங்கள்,
கலைஞனுக்கு இல்லை...
தன் வாழ்நாள் முழுவதும் கவிதைக்காகவும்,
விடுதலைக்காகவும் போராடிய "பாரதி" பிறந்த மண்ணுங்க இது..
தான் இறக்கும் தருவாயில் கூட",நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்" என்று கூறிய "திரு.வி.க" வாழ்ந்த தமிழ்நாடு நம் பூமி,
என் கல்லறையில் "தமிழ் மாணவன் இங்கு உறங்கிக் கொண்டிருக்கிறான்" என எழுத சொல்லி நானும் தமிழன் என பெருமை பட்ட ஆங்கில கவிஞர் ஜி.யு.போப் வளர்த்த தமிழ் மொழி நம் மொழி.....

Wednesday, December 14, 2016

புயலில் ஏன் விழுந்தன மரங்கள் ?

புயலில் ஏன் விழுந்தன மரங்கள் ?
சென்னையில் நேற்று போட்டுத்தாக்கிய "வர்தா" புயலுக்கு ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்துவிட்டதாக செய்திகளில் பார்த்தோம்....
அந்த மரங்களை யாராவது சற்று உற்று கவனித்தீர்களா ?...
அந்த மரங்கள் அனைத்தும் இந்த மண்சார்ந்த இயல்மரங்கள்தானா ?
அல்லது இந்த உலகில் ஏதோ ஒரு பகுதியிலிருந்து எப்போதோ, யார்மூலமோ , எந்தக்காரணத்தினாலோ இங்குவந்து சேர்ந்த அயல்மரங்களா ?....
இந்தமண்ணின் மரங்கள் அவ்வளவு எளிதில் விழ வாய்ப்பில்லை...
அப்படியே விழுந்தவைகள்கூட வேர்ப்பிடிப்பு பகுதிகளில் காங்கிரீட் போன்றவைகளால் அதாவது மனிதக் காரணங்களால் வழுவிழந்தவைகளாக இருக்கும்...
விழுந்தவைகளில் பெரும்பாலானவை தூங்குமூஞ்சி,மே ஃபிளவர் போன்ற அன்னிய மரங்களாகத்தான் இருக்கும்....
மற்ற இழப்புகளைத்தான் இழப்புகளாகப் பார்க்கிறோம் மரங்களின் இழப்பு தீவிரமாக நம்மை பாதிப்பதில்லை.அவற்றை இன்னும் பலர் உணரவில்லை.அவை இந்த அளவு வளர எத்தனை நாட்கள் ஆகியிருக்கும் ? அதுசெய்த வேலைகளை இனி யார் செய்வார் ?....
உணவைக்கூட தொழிற்கூடங்களில் தயாரித்துவிடலாம் ஆனால் காற்றை. காற்றிலுள்ள உயிர்வளியை யார் உருவாக்க முடியும் ? கரியமிலவாயுவை இனி யார் ஆக்ஸிஜன் என்கிற உயிர்வளியாக மாற்றுவார் அல்லது மாற்றமுடியும்?
விழுந்த மரங்கள் குறைத்த புவிவெப்பத்தின் பங்கை யார் இனிக் குறைப்பார்கள்?...
இதையெல்லாம் கணக்கிட்டால் மனிதனின் பொருளாதாரக்கணக்கினால் மதிப்பிடவேமுடியாது!...
இனி அந்த இடங்களில் மீண்டும் மரங்களை நடுவார்களா ? அப்படியே நட்டால்கூட இந்த மண்ணின் மரங்களை நடுவார்களா ?இதை யார் நடக்கூடிய மனிதர்களுக்கு எடுத்துச் சொல்வது ?....
சரி ஏன் அயல் மரங்களை நடக்கூடாது ?
ஒருமரம் இருந்தால் முதலில் உயிர்ச்சூழலை பேணக்கூடியதாக இருக்கவேண்டும்.அதாவது அந்தத் தாவரங்கள் மற்ற ஏனைய உயிரினங்களுக்கு உணவாகவோ அல்லது இருப்பிடங்களாகவோ இருக்க வேண்டும். அயல்மரங்களில் பெரும்பாலானவற்றில் மற்ற உயிரினங்களுக்கு உணவு கிடைப்பதில்லை மேலும் அவற்றில் வசிப்பதும் இல்லை! இதுவரை கவனிக்கவில்லையெனில் இனி கவனியுங்கள்...
சரி அவைகள் கெட்ட மரங்களா ? அப்படியெல்லாம் முடிவெடுக்க முடியாது அவற்றின் பூர்வீகத்திற்கேற்ற மரங்கள் அவை அந்த மண்ணிற்கும்,அந்த தட்பவெப்ப சூழலிற்கும் அங்குமட்டும் காணப்படும் உயிரினங்களுக்கும் ஏற்றவைகள் அவை எனவே அந்தப்பகுதிக்கு மிக நன்மை செய்யும் மரங்களே...
சரி இதற்காக என்ன செய்ய வேண்டும் ? புயலில் விழுந்த மரங்களை யாராவது கணக்கெடுத்து அரசிற்கு அறிக்கையாகக் கொடுத்தால் என்றாவது இந்தநிலைமாறும்.
இந்தமண்ணின் மரங்களை இனியாவது நடப்பட ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவாவது உதவும்...
நமது மரங்கள்தான் இந்த மண்ணிற்கும் தட்பவெப்ப சூழலிற்கும் மற்ற உயிரினங்களுக்கும் ஏற்றவையாக இருப்பதோடு ஒன்றிற்கொன்று பயனாகவும் இருக்கும்.மரங்கள் உணவையும் இருப்பிடத்தையும் தரும் மற்ற உயிரினங்கள் மரங்கள் பரவ விதைபரவலில் உதவும்... 
நம் மரங்கள் தாமதமாகத்தான் வளரும் ஆனால் நீண்டநாட்கள் நிலைத்துநின்று பயனளிக்கும்.ஆனால் அயல்மரங்கள் விரைவாக வளரும் விரைவாக விழுந்துவிடும் கவனியுங்கள் தெரியும்!...
புயலால் மனிதனால் உருவாக்கி கட்டிடங்களை இழந்தால் அது அந்நாட்டிற்கு மட்டும் சிறிய பாதிப்பு அவற்றை விரைவில் கட்டிவிடலாம்.ஆனால் மரங்களை இழந்தால் இந்த உலகிற்கே பாதிப்பு அந்த இழப்பின் வெற்றிடத்தை உடனே சரிசெய்ய முடியாது அதற்கான விஞ்ஞானமும் நம்மிடம் இல்லை...
உணர்ந்து மரங்களை மதிப்போம்!
(ஒருவேண்டுகோள்:பத்திரிக்கை நண்பர்கள் இதுபற்றி முக்கியத்துவம் கொடுத்துஎழுதுங்கள்ளேன்)
நன்றி: Ramamurthi Ram
Hr. Ravi.

Sunday, January 4, 2015

ஆரோக்கியத்தைப் பராமரிப்பது எப்படி?

1980 ஆம் ஆண்டு வரையிலும் உணவுப் பழக்கத்தில் பெரிய அளவு மாற்றம் எதுவும் நம்மிடையே ஏற்படவில்லை;1.1.1995 அன்று உலக மயமாக்கலில் இந்தியா கையெழுத்திட்டது;இதன் படி உலகில் இருக்கும் 230 நாடுகளில் 220 நாடுகள் உலகமயமாக்கலின் கீழ் ஒரே குடையின் கீழ் வந்தன;இதன் பிறகுதான் கேபிள் டிவி பரவலானது;செல்போன் சகஜமானது;ஒரே ஒரு ஜவுளிக்கடை வைத்திருந்தவர்கள் பெரிய நகரங்களில் தனது கடைகளைத் திறந்து கொண்டேவந்தார்கள்;உலகமயமாக்கல் என்ற பெயரில் அமெரிக்கமயமாக்கல் உலகம் முழுக்கப் பரவியது;

நமது இந்துதர்மக் கொள்கையின் படி குடிக்கும் தண்ணீர்,உண்ணும் உணவு,கற்கும் கல்வி இம்மூன்றையும் ஒரு போதும் பணத்துக்காக விற்பனைச்  செய்யக் கூடாது;அப்படி விற்பனை செய்யும் நிலை வந்தால் குடும்பம் என்ற அமைப்பு சிதைந்துவிடும்;தாம்பத்தியம் என்ற உன்னதமான மனித கண்டுபிடிப்பு நாசமாகிவிடும்;விபச்சாரமும்,மாஃபியாவும் சமுதாயத்தை ஆட்சி செய்யும்;பெண்களின் நிலை மிகவும் இழிவாகிவிடும்;அன்பு,பாசம்,விட்டுக் கொடுத்தல்,பத்தினித்தன்மை,சிவவழிபாடு போன்றவை அருகிவிடும்;

கி.பி.1930 வரை இந்தியாவில் உண்ணும் உணவை விற்கும் அவலநிலை இல்லை;இன்றோ உணவுத்தொழில் தான் கொள்ளை லாபம் தரும் தொழிலாக உருவெடுத்துவிட்டது;பூமியில் சிவ வழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைய,குறைய தண்ணீர்ப்பஞ்சம் உண்டாகும் என்பது கடந்த 20 ஆண்டுகளில் நிரூபணமாகிவருகிறது.


சமைத்த உணவு சாத்தானின் உணவு;தொந்தி மரணத்தின் தந்தி போன்றவை ஆரோக்கியத்தை நினைவூட்டும் பழமொழிகள்;


ஆரோக்கியத்தைப் பராமரிக்க நாம் உண்ணும் உணவுப்பழக்கத்தை முறைப்படுத்தினாலே போதும்;ஒரு போதும் நம்மை நோய்கள் அண்டாது;


காலையில் ஒரு போதும் பற்பசைகளைப் பயன்படுத்தக் கூடாது;பற்களை பாதுகாக்க பல் பொடியே சிறந்தது;டூத் பேஸ்டில் உப்பு இருந்தாலும் சரி;மூலிகைகள் கலக்கப்பட்டிருந்தாலும் சரி;அதனால் தீமையே! காலையில் பல்லின் மீது ஒரு போதும் இனிப்பு படக் கூடாது;(பெட் காபியானது குளிர்காலங்களிலும் தீமையையே தருகின்றன;)காலையில் கசப்பு,துவர்ப்பு சுவையில் பற்பொடியைப் பயன்படுத்தினால் பல்லும் வாயும் ஆரோக்கியமாக இருக்கும்;


தூங்கி எழுந்தது முதல் காலை உணவு சாப்பிடும் வரையிலும் உள்ள காலத்தில் இறைவழிபாடு 15 நிமிடங்கள் இருக்க வேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே உடலுக்கு அந்த நாள் முழுவதும் அதிர்ஷ்டம் நிறைந்தவைகளாக இருக்கும்;இன்றும் 40 வயதைக் கடந்த பலர் காலையில் காலைக் கடன் களை முடித்துவிட்டு இறைவழிபாடு  செய்தப் பின்னரே காலை உணவு சாப்பிடும் பழக்கம் வைத்துள்ளனர்;
ஆறு சுவைகளும் உள்ள உணவை ஒரு நாளுக்கு ஒரு வேளையாவது ஒவ்வொரு மனிதனும் சாப்பிட வேண்டும்; ஏதாவது ஒரு சுவையை நாம் தினமும் தவிர்த்து வந்தால் அந்தச் சுவையால் செயல்படும் நமது உடல் உறுப்பு நாளடைவில் பலம் இழக்கும்;படிப்படியாக செயல் இழக்கும்;(நம்மில் பெரும்பாலானவர்கள் கசப்புச் சுவையைத் தவிர்க்கிறோம்)


இனிப்புச் சுவையால் இரைப்பை பலம் பெறுகிறது;

புளிப்புச் சுவையால் கல்லீரல் செயல்படுகிறது;

காரச்சுவையால் நுரையீரல் வாழ்கிறது;

கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையால் இருதயம் துடிக்கிறது;

உப்புச் சுவையால் சிறுநீரகம் இயங்கிவருகிறது;

இந்த சுவைகள் உள்ள உணவுகளே நமது தமிழ் உணவுகளாக இருந்து வருகின்றன;நமது சமையல் அறையில் இருக்கும் ‘அஞ்சறைப் பெட்டி’யில் என்னென்ன இருக்க வேண்டும்? என்பதை 20 நூற்றாண்டுகளுக்கு முன்பே தனது சித்த சக்தியால் தீர்மானித்தவர் சித்தர்களின் தலைவர்;தமிழ் மொழியை பூமிக்குக்கொண்டுவந்தவருமான அகத்தியர்! அதனால் தான் உணவே மருந்து;மருந்தே உணவு என்ற பழமொழி தோன்றியது;


கோதுமையில் செய்யப்படும் உணவுகள் ஆரோக்கியமானவை;மைதாவில் இருந்து தயாராகும் நூடுல்ஸ்,மேகி,பிஸ்ஸா,பர்கர்,பேக்கரி வகைகள் ஜீரணமண்டலத்தைக் கெடுப்பவை;

அயோடைஸ்டு உப்பு,சீனி,ஷாம்பு,சோப்பு போன்றவையும் நமது ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல கெடுக்கக் கூடியவை;

ஹேர் டை,செண்ட்,ஸ்பிரே,டியோடரண்ட் போன்றவை நேரடியாகவே கேன்சர் அல்லது ஹார்ட் அட்டாக்கை வரவழைக்கும் கெமிக்கல்களைக்கொண்டவை;நாடு முழுவதும் இந்த உண்மைகளை அறிந்து கொண்டு இவைகளை நிரந்தரமாக ஒதுக்கியவர்கள் பல லட்சம் பேர்கள்;

சீனியை படிகமாகவே இருக்க ஒரு கெமிக்கலைச் சேர்க்கிறார்கள்;வெண்மையாக இருக்க இன்னொரு கெமிக்கலைச் சேர்க்கிறார்கள்;பல ஆண்டுகலளுக்குக் கெடாமல் இருக்க ஒரு கெமிக்கலைச் சேர்க்கிறார்கள்;இதனால் சீனியில் இனிப்புச் சுவை மட்டுமே இருக்கிறது;அந்த சுவையுடன் மூன்றுவிதமான ஸ்லோ பாய்சன் கள் இருக்கின்றன; சாதாரண உப்பிலும்,ராக் சால்ட் எனப்படும் பாறை உப்பிலும் நமது ஆரோக்கியம் நமக்காக காத்திருக்கிறது.


சாப்பிடும் போது போனில் பேசக்கூடாது;சாப்பிடும் போது டிவி பார்க்கக் கூடாது;சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் குடிக்கக் கூடாது;சாப்பிடும் போது இடையிடையே கோக் முதலான பானங்களும் அருந்துவது நமது உடல் நலத்தைச் சீரழிக்கும்;
சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிக்கக் கூடாது;பழச்சாறு அருந்தக் கூடாது;குளிர்பானம் அருந்தக் கூடாது;சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது;அப்படி குடிக்கும் நீரானது,உடலுக்குள் நாம் சாப்பிட்ட உணவை ஜீரணிக்க காத்திருக்கும் ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டை செயலிழக்க வைக்கும்;


குளித்து விட்டப் பிறகு குறைந்தது 30 நிமிடத்திற்குப் பின்னரே சாப்பிட வேண்டும்;
சாப்பிட்டு விட்டால் 2.30 மணி நேரத்திற்குப் பின்னரே குளிக்க வேண்டும்;உடல் ஆரோக்கியம் பற்றிய முழுமையான விழிப்புணர்வைப் பெற விரும்புவோர் ராஜபாளையம் அரவிந்த் ஹெர்பல்ஸ் நிறுவனத்தார் மாதம் தோறும் நடத்தும் இயற்கை நலவாழ்வு விழிப்புணர்வு முகாம்களில் கலந்து கொள்ளலாம்;15 வயது நிரம்பிய எவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்;முகாமில் கலந்து கொள்ள கட்டணம் கிடையாது;(சில பொருட்களை வாங்க ரூ.300/-ம்,எடை பார்க்க ரூ1/- நாணயங்கள் இரண்டும் கொண்டு வருவது அவசியம்)ஒவ்வொரு ஆங்கில மாதமும் முதல் வாரத்தில் 3 நாட்களும்,இரண்டாம் வாரத்தில் ஆறு நாட்களும் இந்த முகாம் நடைபெற்று வருகிறது.முகாமுக்குள் செல்போன்,கணினி,மடிக்கணினி,ஐபோன்,ஐபேடு,புத்தகங்கள் அனுமதி கிடையாது;இந்த முகாம் நாட்களில் மூன்று வேளையும் பழச்சாறுதான் உணவு;ஆமாம் பட்டினி கிடக்கும் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும்;மற்றவர்கள் இந்தக் கட்டுரையை வாசித்துவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விடலாம்;முழு ஆண்டு விடுமுறை வரப் போகிறது;பள்ளி கல்லூரியில் பயிலும் நமது குழந்தைகளோடு நாம் இந்த முகாமுக்கு கலந்து கொள்வதால் நமது அடுத்த தலைமுறைக்கும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கலாம்;முன்பதிவு செய்து கொள்ள அரவிந்த் ஹெர்ப் என்ற இணையதளத்தைத்  தொடர்பு கொள்ளவும்.அதில் குறிப்பிட்டிருக்கும் தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளவும்;இந்தக் கட்டுரையை அரவிந்த் ஹெர்பல்ஸ் நிறுவனத்தார் வெளியிடவில்லை;அவர்கள் நடத்தும்இயற்கை நலவாழ்வு முகாமில் கலந்து கொண்ட ஒருவர் எழுதியது.

Total Pageviews

Followers