ஓர் உயிரின் எழுச்சி என்பது பிறப்பு, உயிரின் வீழ்ச்சி என்பது மரணம். பிறப்பு, வாழ்வு, அழிவு என்பது இயற்கை நியதியாக இருக்கிறது. இந்த இயற்கை உண்மைகளை கண்டு மனிதன் அஞ்சுகிறான். மரணம் இயற்கையாகவும், செயற்கையாகவும் நடைபெறுகிறது. உடலில் அகமும்,புறமும் இணைந்து உயிர் இயக்கம் நடைபெறுகிறது. மூச்சு ஓட்டம், இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம் ஒளி, ஓசைகளின் ஓட்டங்கள் மொத்தமாக கூடி இந்த உடலை நடத்துகிறது. உண்மையில் உயிர் ஓட்டந்தான் மற்ற இயக்கங்களை நடத்துகின்றது. இதற்கு புலன்கள் செயல்படுகின்றன அதாவது இதயம், ஈரல்கள், இரத்த குழாய்கள், மூத்திர கருவிகள், மலக்கருவிகள் போன்ற கூட்டுறவு கருவிகள் துணை செய்கின்றன. இவற்றில் ஒன்றின் ஓட்டம் நின்றுவிட்டாலும், பழுதானாலும் மற்ற இயக்கங்களும் பாதித்து முடிவில் உயிர் இயக்கத்தை நிறுத்தி விடுவதாக இருக்கிறது.உயிர் ஓட்ட கருவிகளை தூண்டவும், ஊக்கப் படுத்தவும், நிர்வாகியாகவும் மூளை செயல்படுகிறது. இந்த மூளையின் இடது பாகத்தில் மனம் என்னும் மாயக் கருவி இருக்கிறது. இந்த மனத்திற்கும், உயிருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இவை இரண்டும் மின் காந்த அலைகளால் தொடர்பு கொண்டுள்ளன. இந்த மின் காந்த ஏற்ற, இறக்கத்தின் மூலமே உடலின் அனைத்து உறுப்புகளும் இயக்கப்படுகின்றன. இந்த காந்த இயக்கமே உயிரின் இயக்க ஆற்றல் என்கின்றோம். உயிர் செயல்பாடுகளுக்கு கரு அணுக்கள் எனப்படும் விந்தணுக்களிலிருந்தே இந்த காந்த சக்தி பெறப்படுகிறது. உடல், மன, உயிர் இயக்கத்திற்கு இந்த விந்தணுக்களே சக்தி பீடமாக இருக்கின்றன. உடலின் காந்த ஆற்றல் செலவை ஈடு செய்ய முடியாமல் போனால் முடிவில் மரணம் என்னும் இயக்கமற்ற நிலை அடையும். நல்ல முதுமை பெற்ற மனிதனின் உடல் உறுப்புகளில் எந்த நோயும், பாதிப்பும் இல்லை என்றாலும் கரு அணுக்களில் தயாரிக்கப்படும் காந்த ஆற்றல் தன் சக்தியை இழக்கும் போது மனம் செயலற்று போகும். அதனை தொடர்ந்து காற்று மண்டலம், நீர் மண்டலம், ஒளி,ஒசை மண்டலம் என வரிசையாய் செயலிழப்பு ஏற்பட்டு மரணம் என்ற நிலை ஏற்படும். இதுவே இயற்கை மரணம் எனப்படும். இப்படி இல்லாமல் கை, கால்கள் விழுவது, இதயம் நின்று நின்று துடிப்பது, மூன்று திணறுவது, வாய் குளறுவது, நீர், மலம் உணர்வற்று தானே கழிவது போன்ற வேதனை நடக்கும் போது மனம் செயல்பட்டு கொண்டிருப்பது துர்மரணமாகும் (அ) நரக வேதனையாகும். சொர்க்கமும், நரகமும் வானத்தில் இல்லை. அவனவன் நினைவிலே இருக்கிறது.( சொர்க்கம் = சுவர்(தங்கம்) அகம் நல்லமனம். நரகம்= நர(கெட்ட) அகம் தீதான மனம்). அதாவது மரணம் என்பது மனதிலிருந்து துவங்கினால் இயற்கை மரணம் என்றும், கருவி கரணங்களிலிருந்து துவங்கினால் துர்மரணம் ஆகும். பொய், களவு, சூது, கட்குடி, காமம், நன்றி கொல்வது, உயிர் கொலை இல்லாமல் சத்தியம், தருமம், ஒழுக்கம், பொறுமை, இனிய நடத்தை காத்து வாழ்வின் மரணம் அமைதியாகவும், தருமத்திற்கும், ஒழுக்கதிற்கும் கேடாக வாழ்ந்தவன் மரணம் அமைதியற்று நிகழ்வதும் இயற்கையின் சட்டமாகும். என்ன பாவம் செய்தேனோ, சாவு வரவில்லையே என்று புலம்புகிறவர்களை காண்கின்றோம். எந்த பாவம் செய்திருந்தாலும் செய்நன்றி கொன்ற பாவத்திற்கு ஆளாக கூடாது. நல்ல உடல் வசதிகள், நல்ல மனமுள்ள நல்லவர்கள், நல்ல முன்னோர்கள் கிடைத்தும் நன்றி இல்லாமல் நடந்து கொள்வதன் மூலம் அந்த உயிருக்கு உடலுக்கு கிடைக்க வேண்டிய உய்வு எனப்படும் "இயற்கை பரிசளிப்பு" கிடைக்காமல் போய் விடும். ஒரு மனிதனுக்கு இறுதி நாளில் கணக்கு தீர்க்கப்படும் என்பது இது தான் ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்பதை மரணமே முடிவு செய்யும்.
"என் நன்றி கொன்றாற்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"
என் வள்ளுவர் எழுதியதன் பொருள் இது தான் வாழ்கையில் கரை ஏறுவது மட்டுமல்ல மரணத்தில் கூட நல்லபடியாகக் கரை ஏற வேண்டும் இது தான் "உய்வு"
வைதோரைக் கூட வையாதே!
வெய்ய வினைகள் செய்யாதே!
கஞ்சாப் புகைபிடி யாதே!
கட்குடித்து மயங்கி திரியாதே!
அஞ்ச வுயிர் மடியாதே!
அஞ்ஞான நூல் படியாதே!
கள்ள வேடம் புனையாதே!
கொள்ளை கொள்ள நினையாதே!
நட்புக்கு நீ கோள் முனையாதே!
கடுவெளி சித்தர்.
"ஆவியோடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவியென்று நாமம் படையாதே"
பட்டினத்தார்
No comments:
Post a Comment