Wednesday, March 28, 2012

தாய்மைபெண்மை என்பது பேதமையுடையது என்கிறார் திருவள்ளுவர். ஒரு பேதை பிள்ளை பெற்றால் எப்படி தாயாக மாறுவாள்? பெற்றவளாகத்தான் இருப்பாள். பெண் வழிச் சேரல் என்று ஒரு அதிகாரம் எழுதியவர். தாய்மை பற்றி எதுவுமே கூறவில்லை. தாயை அவர் பொருட்படுத்தவில்லை.தியாகம் செய்பவள் தான் தாய், தனது கடமைகளையும், தனது உயிரையும் பிள்ளைகளுக்காக  விட்டுக் கொடுபவள் தான் உண்மையான தாய். பிள்ளைகளின் மனக் குறிப்பறிந்து கொடுத்து மகிழவும், மகிழ வைக்கும் தன்மை கொண்டவளே தாய் என்ற பெயர் பெற முடியும். கருவுற்ற பெண்னை தாய்மை அடைந்து விட்டாள்  என்கிறார்கள், இது பாரமாகி விட்டதே? என்ன துன்பம் வருமோ? சுகப் பிரசவம் ஆகுமா? தன் உயிருக்கு கேடு வருமா? என்றெல்லாம் எண்ணுகிற பெண் எவ்வாறு தாய்மை பெற்றவளாவாள்? கருவுருதல் என்பது சாதாரணச் செயல்பாடு என்று தைரியம் கூறுவார் இல்லை. அது எல்லா பெண்களுக்கும் மன நோயாக இருக்கிறது.இந்த குழந்தையால் தான் நமக்கு இந்த பேறு கிடைத்தது என்று எந்த பெண்ணும் எண்ணுவதில்லை. உடல் உபாதைகளை எண்ணி வருந்துதல், தனக்குள்ளே ஒரு பூ மலர்கிறது என்று எண்ணாதிருத்தல், மன அதிர்வுகள், உருட்டல், புரட்டல்கள், குழப்பம், அச்சம், இவற்றை எண்ணி வருந்துதல கொண்ட பெண்கள் அனைவரும் தாய்மை என்பதன் பொருள் அறியாதவர்களே, இதை கருத்தில் கொண்டு தான் பெண்கள் வள்ளுவர் பெண்  பேதமையுடையவள் என்கிறார். வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆகாத உணவுகள்,பழக்கங்கள்,பேச்சுக்கள் இவைகளை தள்ளி வைப்பதும் தாய்மையின் கடமையாகும். ஆனால் ஆசைப்பட்ட  அனைத்தையும் கேட்டு பெற இதனை பயன்படுத்துகிறார்கள். அவர்களுடைய அசைவுகளும் இயற்கையானதாக  இக்காலங்களில் இருப்பதில்லை.குழந்தையை சுமப்பது, உணவு ஊட்டுவது, அதன் இயக்கத்தை கவனிப்பது, குழந்தையின் இயற்கை எழுச்சியை உடனே சரி செய்வது எல்லாம்  ஒரு தாயின் கடமையாகும். இதையெல்லாம்  நான் செய்கிறேன் என்ற எண்ணம் கூட தவறாகும் பிள்ளை பகையாகி விட்டால் பாலூட்டியதை சொல்லிக் காட்டும் எந்த பெண்ணும் "தாய்" இல்லை. மேற்படி சொல்லி காட்டி திட்டும் செயல் தழை போட்டு வளர்த்த ஆட்டை தானே வெட்டிக் கொல்லும் செயலை விட கொடுமையானது. நாய் ஒரே நேரத்தில் 10 குட்டிகளுக்கு பாலூட்டுகின்றது இதில் ஒரு பங்கு கூட பெண்கள் செய்வது இல்லை. பழி சொற்களை  எப்படி வேண்டுமானாலும் சொல்வதற்கு பெண்களால் மட்டுமே முடியும். இதற்கு வருந்தவும்இ திருந்தவும் தயார் இல்லாத பெண்களை "தாய்மை" என்று அழைப்பது  அர்த்தம் இல்லை. எந்த பெண்ணாவது பிள்ளை பெறாத காலங்களில் எதையாவது ஒரு குழந்தைக்கு பாலூட்ட முடியுமா? பிள்ளை பெறுவதும்,  பாலூட்டுவதும் இயற்கை நிகழ்வு, இதை மனதில் கொள்ளாமல் ஆண்களை பழிக்கும் எந்த பெண்ணும் "தாய்" என்னும் தகுதி பெறாதவர். தியாகம் எங்கே உருவாகிறதோ அங்கே அன்பு என்னும் உயிர் வளரும் அன்பில்லா எந்த பெண்ணும் "தாய்மை" அடைய முடியாது.


"கற்புடுத் தன்புமுடித்துநாண் மெய்ப்பூசி
நற்குண நற்செய்கை பூண்டாட்கு மக்கட்பே
றென்ப தோர் செல்வமு முண்டாயின் இல்லன்றே
கொண்டாற்குச் செய்தவம் வேறு".

                                              நீதிநெறி விளக்கம்

"வட்டிலிலும்  தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்"

                                                                        பட்டினத்தார்."பிறந்தபோழுதினும் பெரிது வக்கும் தன்மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய்".
                                                           வள்ளுவர்

No comments:

Post a Comment

Total Pageviews

Followers