மகாபாரதத்தை பற்றி எல்லோருக்கும் ஓரளவு தெரியும். அறிவுரை கூறும் போது மகாபாரதத்தை மேற்கோள் காட்டி விளக்கம் தருவார்கள். மேற்படி பாரத கதை உண்மையா? என்றால் ஆம் என்றே உரைப்பார்கள். உண்மையில் பாரத கதை நடக்க வில்லை. அது உடல், உயிர் போராட்டத்தை எடுத்துக் கூறுவதாகும். பாரத கதையில் அருச்சுணன் என்பவன் நாடு, வீடு, மனை, மனைவி, குழந்தைகள், மக்கள் இவற்றை பெறுகின்றான். தருமன் என்பவன் நாடு, வீடு, மனை, மனைவி, பொன், பொருள், மக்கள் இவற்றை இழக்கின்றான். இதில் அருச்சுணன் என்பவன் இந்திரனுக்கு பிறந்தவன் அதாவது பிறப்பாகும். பிறந்தால் மேற்படி செல்வங்களை பெற முடியும். தருமன் என்பவன் எமனுக்கு பிறந்தவன் அதாவது அழிவு ஆகும். அழிவு ஏற்படும் போது மேற்படி செல்வங்கள் அழிவது உறுதி. இந்திரபிரத்தம் ( இந்திரியம் - விந்து , பிரத்தம் - பிறப்பு ) பிறப்பின் நகரம். அத்தினாபுரம்(அஸ்தி - சாம்பல்) - இறப்பாகும், இறப்பின் நகரம். வீமன் என்பது ஆன்மா வாகும். வீமன் என்பது வாயுவிற்கு பிறந்தவன். வாயு என்பது ஆவியாகும், ஆவி என்பது ஆன்மாகும். அதாவது ஆன்மா தருமன் என்ற மரணத்தையும் அருச்சுணன் என்ற பிறப்பையும் அடையும் என்பதை குறிக்கும். கருணன் சூரியனுக்கு பிறந்தவன். அதாவது வானுலகம் அதாவது மோட்ச உலகம், கருணன் என்பவன் பிறருக்காக தன் உடல், பொருள், ஆவியை கொடுத்ததால் மோட்சம் பெற்றான். துரியோதனன் தனக்காக பிறருடைய உடல், பொருள், ஆவியை எடுத்தான். ஆதலால் கீழ் உலகை பெற்றான். தனக்காக வாழ்வர் கீழ் உலகை அடைவர். சகாதேவன் - அசுவனி தேவருக்கு பிறந்தவன் அதாவது மேல் உலக பிறப்பு (அசுவினி - குதிரை - ஆவி)
நகுலன் - தேவ பிண்டத்தில் பிறந்தவன் அதாவது கீழ் உலக பிறப்பு (பிண்டம்-பாண்டம்).
அதாவது வீமன் (ஆன்மா) - மேல் உலக, கீழ் உலக பிறப்பை சகோதரர்களாக வைத்துக் கொள்ளும் ( மேல் கீழ் உலகில் பிறக்கும் என்பதாம்).
நகுலன் - தேவ பிண்டத்தில் பிறந்தவன் அதாவது கீழ் உலக பிறப்பு (பிண்டம்-பாண்டம்).
அதாவது வீமன் (ஆன்மா) - மேல் உலக, கீழ் உலக பிறப்பை சகோதரர்களாக வைத்துக் கொள்ளும் ( மேல் கீழ் உலகில் பிறக்கும் என்பதாம்).
பாஞ்சாலி என்பது தருமன், வீமன், அருச்சுணன், நகுலன், சகாதேவன் என்னும் பஞ்ச பூத ஆற்றல்களால் இயங்கும் வாயு (உயிர்) ஆகும்.
பாண்டவர்கள் என்பது (பாண்டம்-உடல்) அழிவற்ற உடல் பெற்றவர்கள் என்பதாம்.
கெளரவர்கள் என்பது ( காவு-சாவு + இரியர்) அதாவது அழியும் உடலை பெற்றவர்கள் என்பதாம்.
ஆன்மாவாகிய வீமனுக்கும், உடலாகிய துரியோதனனுக்கும் ஏற்பட்ட போராட்டமே பாரத கதையாகும். தமிழ் மக்களின் வழிபாட்டையும், ஆன்ம அறிவியலையும் மறைத்து எழுதப்பட்டது தான் பாரத கதையாகும். ஐரோப்பிய யூதர்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள். அவர்கள் ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு தமிழ் நாட்டில் குடியேறினர்.குடியேறிகள்
தமிழ் கலாச்சாரத்தை தெரிந்து கொண்டு தமிழர்களையும், யூதர்களையும் கலப்பு இனமாக மாற்ற எழுதப்பட்ட கதையே பாரதம். இதில் பாண்டவரும், கெளரவரும் தமிழர்கள். பலராமனும், கிருட்டினனும்-யூதர்கள். யூதர்களையும் தமிழர்களையும் இணைக்க வேண்டி எழுதப்பட்ட காவியமே பாரதம் என்று வழங்கி வருகிறது.
தமிழ் கலாச்சாரத்தை தெரிந்து கொண்டு தமிழர்களையும், யூதர்களையும் கலப்பு இனமாக மாற்ற எழுதப்பட்ட கதையே பாரதம். இதில் பாண்டவரும், கெளரவரும் தமிழர்கள். பலராமனும், கிருட்டினனும்-யூதர்கள். யூதர்களையும் தமிழர்களையும் இணைக்க வேண்டி எழுதப்பட்ட காவியமே பாரதம் என்று வழங்கி வருகிறது.
பாரதம் நடந்த கதையில்லை என்பதை அகத்தியர், தேரையர் நூல்களில் சான்றுகள் நிறைய காணக் கிடைக்கின்றன. ஆகவே பாரத கதையின் (தத்துவத்தை) மட்டும் எடுத்துக் கொண்டு வேண்டாத பொய்யான கற்பனைகளை மறுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரும் செய்ய வேண்டிய கடமையாகும். ஏனெனில் வேத, புரான, இதிகாசங்களை எழுதி வைத்துக் கொண்டு தமிழர்களை இழிவுபடுத்துகின்றனர்
துவாரகை அழிந்தது கி.மு 1700 கு முன்பு .ஆரியர்கள் பாரதத்தில் நுழைவது கி.மு 1400-1500.ஆனால் மகாபாரதம் நடந்ததறகு எந்த சான்றுகளும் இல்ல.இத பல ஆராய்ச்சியாளர்கள் உறுதிபட சொல்லிட்டாங்க. கிருட்டிணன் கருமை நிறத்தவன் என்பதாலும்,(தமிழர்கள் கருமை நிறத்தவர்களே) ,கிருட்டிணன தசா யாதவன் என்று பாகவத புராணம் அழைப்பதாலும் (தமிழர்கள் தசா மற்றும் தஸ்யு என அழைக்கப்பட்டவர்கள்),துவாரகை குஜராத் மாநிலத்தில் (சிந்து சமவெளி பகுதி) இருந்ததாலும் கிருட்டிணன் வாழ்ந்தான் என்றே தெரியவருகிறது. ரிக் வேதத்தில் இந்திரன் 50000 கிரஷணன்களை கொன்றதாக கூறப்படுகிறது.அதாவது கிருட்டிணன் வழி வந்த 50000 மக்களை (தமிழர்களை) இந்திரன் வழி வந்த ஆரியர்கள் கொன்றுள்ளார்கள் என்பதே அர்த்தம்.துவாரகை அழிந்து 1300 வருடம் கழித்து வியாசர் உயிரோட வாழ்ந்த கிருட்டிணனை அடிப்படையாக வைத்து வாய் வழியாக கதை சொல்றாரு .பிற்காலத்தில் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் பெரிய கதையாட எழுதப்பட்டது.சாண்றுகள் படி துவாரகை தவிர மற்ற மகாபாரதத்தில் வரும் ஊர்கள்,நாடுகள் கி.பி 7 ஆம் நூற்றாண்டில்தான் உருவாகிறது.கி.பி 5ஆம் நூற்றாண்டில் வியாசரால் கதை சொல்லப்பட்டு 1000 வருடம் கதை எழுதப்பட்டது.
ReplyDelete