Wednesday, March 28, 2012

அவயோகம்



அறிவறிந்த சான்றோர்கள் தமிழ் மக்களுக்காக எடுத்தியம்பிய கருத்துக்கள் ஏரானம்.
 சித்தர்கள் தன் உடலையே கருவியாக்கி உயிர் இரகசியத்தையும் அண்டத்தைப் பற்றியும்
அறிந்து உணர்ந்து எடுத்துக்காட்டியவை எண்ணிலடங்கா. அவ்வாறு சித்தர்கள் கூறியவற்றில் ஒன்றுதான்  யோக நெறியும். வீடு பெறுவது தான் இம்மானிடத்தின் உண்மையான நோக்கம் என்பதை உணர்ந்த சித்தர்கள் அவற்றிற்காக  இந்த யோக நெறியை 8 அங்கங்களாக பிரித்து வழிமுறைபடுத்தினர் அவற்றை இன்று அட்டாங்க யோகம் என்று கூறி வருகின்றனர். சித்தர்கள் கூறிய கருத்தை விட்டு இவர்கள் தங்கள் கருத்துக்களையும் தனக்கு சாதகமான கருத்துக்களையும் ஏற்றி எழுதி வைத்துக்கொண்டு பதஞ்சலி யோக சூத்திரம், உபநிசங்கள், வேத சூத்திரங்கள் என்று கூறி மக்களை மாற்றி பிழைத்து வருகிற கூட்டம் ஏராளம் உண்டு. சித்தர்கள் ஆசை அறுமீன்கள் என்றனர். ஆனால் மூடர்கள் அனைத்திற்க்கும் ஆசை படு என்கின்றனர்.  சித்தர்கள் நித்திய வாழ்வு பெற சொன்ன வழிகளை அறிவியல் படி எடுத்துரைக்கின்றேன் என்று அனித்திய வழிகளை போதிக்கும் ஆனந்தாக்கள் ஆயிரம் இருக்கின்றனர். மூச்சை குறைத்து சாகாக் கலை பெற சொன்ன சித்தர்களை மறந்து  "சோகம் சோகம்" என்று  வேகமாக மூச்சை விடும் படி கூறி சாகும் கலையை போதிக்கும் குருக்கள் நிறைய உண்டு. வெயில், பனி, மழை, குளிர் இவற்றால் உடல் பாழாகும் என்று கூறி உடலை பாதுகாக்க சொன்ன சித்தர்கள் கூற்றை அகந்தையால் மறைத்து  பனிமழைகளில் ஈசன் அருளாட்சி இருக்கிறதாக கூறி இலட்சங்கள் பறிக்கும் இலட்சிய வாதிகள் இருக்கின்றனர்.  நாமெல்லாம் கடவுள் சாதி என்றி கூறி கட்டிடம் கட்டி சில கோடிகளை விற்கும் கேடிகள் நிறைய உண்டு. இந்த மாதிரியான யோக குருக்கள் என்னும் மோக குருக்கள் வார்த்தை சறிக்களில் விழாமல் இருக்க பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் "புலத்திய சித்தர்" கூறிய ஈகாத அவயோகம் எவை என்பதைக் காண்போம்

"காணுமூச் சடக்கி  விழியதை உருட்டிக்
கபாலமுந் திறந்தனர் கோடி
கனத்த வாயுவதனால் குன்ம நோய் அனுகி
கலங்கினோர் ரொரு கோடி
தோணு மெய் மறந்து சுழன்று அனல் எழுப்பிச்
சொக்கி னோர் ரொரு கோடி
சூலைவாயு அனுகி சுவாலையும் எழுப்பி
சுரமதனால் இறந்தவர் ரொரு கோடி
ஊண உண்ணாக்கை உள் தூக்கி
உள்ளடங்கி னோர் ரொரு கோடி
உயர சாணீளம் முழமது எழுப்பி
உறங்கி ஒடுங்கினோர் ரொரு கோடி
பேனாதி சாரப் பேதி வந்தனுகி
பிறவியா இறந்தவர் ரொரு கோடி
இனமறியாமல் இருத்தியே வாய்வை
இறந்தனர் ரொரு கோடி
இனிய தம்பனஞ் செய்து எழுப்பி கும்பித்
தேங்கியே இறந்தனர் ரொரு கோடி
கனமறி காற்றை நாசியால் விட்டு
கருதியே இறந்தனர் ரொரு கோடி
கண்ட நாசியை விட்டொன்று விட்டொன்று
கலங்கியே மடிந்தனர் கோடி
தினமொரு நாழி வாசி கொண்டேற்றிச்
சிவபுரம் மேவினர் ரொரு கோடி
அம்புவி தனிலே மறையவும் சூழ்செய்
தனிதும் பதுங்கினோர் கோடி
தெளிந்தவர் அறிந்துமே செப்ப
தேறிடும் வாசி யோகத்தின் பெருமை
திருத்தமாய் உரைத்திடலாமே"

   
            என்கின்றார்

ஆகவே நிறை மதியுடையோர் மேற்கண்ட அவயோகத்தை(தவறான யோகத்தை) புரிந்து கொண்டு வீணர்கள் வழியில் செல்லாமல் சித்தர் வழி சென்றி பிறப்பறுபோம்

"அதயோகங்கள் ஆகாதப்பா"    அகத்தியர்

"அட்டாங்கு செய்தாலும் நெட்டாங்கு பண்ணினாலும்
இட்டாது இட்ட வர ஒட்டாது
முட்டியே அது  பாயுமே முனை தேயுமே"

                                         குணங்குடியார்

"வீணான வேடங்கள் பூண்டு வந்துமெத்த
வெதம் படித்தவன் போல முன்னே நின்று
தோணாத மக்களைக் கெடுப்பானென்று அன்றே
தோற்றம் கூறினரே றானப் பெண்ணே"

       
                                                      நெருஞ்சில் சித்தர்

No comments:

Post a Comment

Total Pageviews

Followers