Wednesday, March 28, 2012

ஓம் பிரணவ மந்திரம்
பிரணவ மந்திரம் என்னும் ஓம் பற்றி  நிறைய கருத்துகளை நாம் அறிவோம். இது ஓ மற்றும் ம் என்ற இரண்டு எழுத்துகளை கொண்டது. இது ஆதி காலம் தொட்டு தமிழர்களால் வழங்கி வருவது. இதற்கான விளக்கம் என்ன என்று கேட்டால் இது பிரணவ மந்திரம் என்றும், உயிர் மந்திரம் என்றும், முருகன் சிவனுக்கு சொன்னது என்றும், முதற் சித்தரான தட்சினமூர்த்தி மறைவல்லோர் நால்வருக்கு சொன்னது என்றும், அண்டம் என்னும் வான்வெளி வெடித்து சிதறும் போது உண்டான  ஒலி என்றும், இதுவே முதல் தொனி என்றும், ஆர்பரிக்கும் கடல் எழுப்பும் நாதாந்த ஓலி என்றும், பெருமாள் கையில் வைத்துள்ள வலம்புரி சங்கு எழுப்பும் ஒலி என்றும் இன்னும் பல்வேறு வகையான கட்டு (இட்டு) கதைகள் இந்த ஓம் என்னும் இரண்டு தமிழ் எழுத்திற்க்கு வழங்கி வருவதை நாம் காண்கிறோம். இதற்கான உண்மை விளக்கம் இதுவரை யாரும் சொன்னதாக தெரியவில்லை. தமிழ் மொழியானது இயற்கை என்னும் பேரண்டத்திலிருந்து உதித்த உயிரினங்களிலிருந்து வெளிபட்டு உயிரை இயக்கும் உன்னத மொழியாகும் என்று தமிழ் கற்ற பெரியோர்கள் கூறுவார்கள். இப்படி  இருக்க கட்டும் இட்டும் கூறும்  கருத்துகளையே உண்மை என்று நம்பி வருவது வேதனை அளிக்கிறது. மோசே காலத்தில் கிருத்துவக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் அங்கிருந்து கைபர் போலன்  கணவாய் வழியாக சம்பு நாடு என்றும் பாரத நாட்டில் குடியேறிய "செர்மானியர்" என்னும் யூதர்களால் ஈர்க்கப்பட்ட தமிழ் நாகரிகம் அவர்களுடையதாக (பிறமண்ணினர்) ஆக்க வேண்டும் என்ற கொடூர சிந்தனையின் விளைவே. இந்த மறைக்கப்பட்ட(இட்டும் கட்டும்) உண்மைக்கு காரணம். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உண்மையை சான்றோர் வழி நின்று காண்போம். நமது உடலானது மூன்று அடுக்குகளாக உள்ளது  அதாவது ஊண் உடல், பூத உடல், வளி உடல்(சூட்சும உடல்) ஆகும். இந்த உடல்களானது காற்றால் இயக்கம் பெறுகிறது. இந்த காற்றானது உடலின் மூக்கு வழியே சென்று உயிரை இயக்குகின்றது. அவ்வாறு இயங்கும் காற்றை சித்தர்கள் உயிர் மெய் உயிர்மெய் என்று பெயரிட்டு  அவற்றைக்கு வரி வடிவம் தந்து எழுத்து என்றார்கள். அவ்வாறு கண்ட ஒலிகள் 12- உயிர், 18- மெய் எழுத்து, 216 உயிர்மெய் எழுத்துக்கள் என்று வகைபடுத்தினர். இதையே தமிழ் என்றனர்.இதில் ஓ என்பது மூக்கை குறிக்கும் எழுத்து ஆகும். மூக்கு என்பது மூச்சு உறுப்பாகும். ம்  என்பது (உடல் )மெய் எழுத்தாகும். "ம்" என்ற மெய் எழுத்து மட்டுமே மேலே குறிப்பிட்ட மூன்று( ஊண், பூதம், வளி  உடல் ) காற்று உள்ளே சென்று உயிருக்கு வலிமை சேர்க்கிறது அதாவது ம் என்ற மெய் எழுத்து மட்டுமே மொழிக்கு முதலிலும் இடையிலும் கடையிலும் வரும் தன்மை உடையது. மேலும்

"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இல"

இக்குறளில் மகாரம் இல்லாததால் உச்சரிக்கும் போது உதடு ஒட்டப்படுவதில்லை. ஆதலால் உயிரோடு இயக்கபடுவது இல்லை.

ஓ என்பது உயிரெழுத்து

ம்  என்பது மெய் எழுத்து
ஓம் என்பது  உயிர் + மெய்  எழுத்தாகும். ( உயிர் + உடல் சேர்ந்தது)

உடல் + உயிர்  இதுவே நமக்கு  ஆயுள் அதாவது (பிரமாணம்)(உயிரின் கால அளவு) தருவது.இந்த பிரமாணம் தழுவி  பிரணவ ஆயிற்று. மந்திரம் என்பது மறைவான மொழி. இந்த உடல் + உயிரின் இரகசியத்தை (மறைவை) கூற வந்த  மொழியே தமிழ் என்றும் ஓம் என்றும் வழங்கும் பிரணவ மந்திரம்  ஆகும். இது 1008 முறை  சொல்வதோ, செபிப்பதோ, மனனம் செய்வதோ இல்லை. இது ஒரு தந்தரமான செயல் முறை ஆகும். இதை நல்ல குருநாதர் மூலம் அறிந்து ஆயுள் நீட்டிப்பு  பெற்று. இன்புற்று வாழ்க.

இதை கண்டு கொண்ட  மேல் நாட்டியிலிருந்து மதம் பரப்ப வந்த  வீரமாமுனிவர். சி.யு. போப் தேவநேயபாவணர் போன்றோர் மதத்தை விடுத்து தமிழுக்கு அடிமையானார்கள். நாம் இன்னும்  தமிழ் கற்காமல் சாகிறோம். கடன் பெற்ற அறிவைக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்."ஓமெனும் ஓங்காரத் துள்ளே யொருமொழி
ஓமெனும் ஓங்காரத் துள்ளே யுருவரு
ஓமெனும் ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனும்ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே"


                                                திருமந்திரம்

"ஊணும் உயிரும் ஒரு வழி ஓட
காணும் ஞானத்தை கண்டிடு தமிழாலே"       

   
                                                    நெருஞ்சில் சித்தர்.

No comments:

Post a Comment

Total Pageviews

Followers