Wednesday, October 12, 2011

சைவ உணவின் மகிமைகள்




"உற்றியும் என்ற ஓரறிவு கொண்டே
ஆறறிவை வளர்க்கும் அற்புதம் 
தான் தாவரம்"  
தாவரம் = தா + வரம்  
தாவரங்களே மனிதன் பூமியில் வாழ்வதற்கான உணவையும், உடையையும், புகலிடத்தையும் வரங்களாக நமக்கு அளிக்கிறது.  தாவரங்களே மனிதன் வாழ ஆதார நாடி. 
தாவரங்கள் மட்டுமே விண்ணுக்கும், மண்ணுக்கும் தொடர்பு கொண்டு வாழும் ஒரு உயர்ந்த ஜீவா ராசி.
அண்ட சக்தியை, ஒளியை, விண் காந்த துகள்களை விண்ணிலிருந்து உறுஞ்சி உணவாக உட் கொள்கிறது. விண் காந்த துகள்கள் பஞ்ச பூதத்தின் ஒரு முக்கிய அங்கம்.
பூமி பல பல தனிமங்களை தன்னுள்ளே கொண்ட ஒரு சேர்மம். பூமியில் உலோகத்தின் அப்பால் உள்ள நீர்ம பொருள்  பாதரசம். மேலும் பூமியின் உட்கருவிலிருந்து அரிய பல தாதுக்கள், உலோகங்கள், சுபரசங்கள், பாஷாணங்கள் வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது. இத்தனை அரிய பொருட்களையும் தாவரங்கள் உறுஞ்சி  தன்னையே மனிதகுலத்திற்கு [பூக்களாகவும், காய்களாகவும், பழங்களாகவும், கொட்டைகளாகவும், வேர்களாகவும், தண்டுகளாகவும், இலைகளாகவும்] அர்பணிக்கிறது.

தாவரங்களுக்கு இருப்பதோ ஓரறிவு, ஆனால் அதுவே மிக உயர்ந்த ஜீவ ராசி. 
தாவரத்தின் மற்றொரு பெயர் பல்லவம் என்பதாகும். தாவரம் மட்டுமே மலம் அற்ற ஒரு அரியஉயிரினம். தாவரங்கள் பஞ்ச பூதங்களை உட்கொண்டு மனித உடலை உருவாக்கி, வளர்ந்து உயிர் வாழ வைக்கிறது.

இப்படியிருக்க நாம் ஏன் அசைவத்தை உணவாக உட்கொள்ள வேண்டும்????

முதலில் மனிதனின் செரிமான உறுப்பானது அசைவத்தை செரித்து உறுஞ்சும் தன்மை  அற்றது.
இரண்டாவது ஒரு உயிரை கொள்ளும் போது அது துடித்து தன்னுடைய எல்லா கெட்ட சுரபிகளை அதிகமாக இயக்க செய்கிறது. பயம், கோபம், வலி, வேதனை இந்த வகையான உணர்வுகளையே தன்னுடைய மாமிசத்தில்  கலக்கிறது. இதை நாம் உட்கொள்ளவது சரியா என்று ஆறரிவு உள்ள மனிதன் சற்று சிந்திக்க வேண்டும். நமக்கு மட்டும் பிறர் துன்புறுத்துவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை, ஆனால் நாமோ பல உயிர்களை  பறிக்கிறோம். 
ஒரு விலங்கானது பல கோடி அணுக்களை ஒன்று சேர்த்த ஒரு கூட்டு பொருள். இதனை கொள்ளும் பொது இறைமைக்கும், பிரபஞ்ச சக்திக்கும் எதிராக செய்யும் ஒரு கொடிய பாவச் செயல். இப்படியே சென்றால் இயற்க்கை மனித சங்கிலியை அழிப்பதற்கு சற்றும் தயங்காது.

இதற்க்கு ஒரு மிக பெரிய சத்திய உதாரணம்:
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் என்ற பெரிய,கொடிய மிருகம் வாழ்ந்ததை பற்றி நாம் எல்லோரும் அறிவோம். இப்போது எங்கே போயிற்று???
!!!!சிந்தியுங்கள்!!!!                 
இயற்கையே இந்த வகை மிருகங்களை அழித்து விட்டது???
ஏன் தெரியுமா??? டைனோசர் மிருகங்கள் சிறிதும் கருணை இன்றி பல விலங்குகளை உண்டு பெருத்த பாவத்தால் கூண்டோடு அழிக்கப்பட்டது.
இதை போல் யாளி என்ற மிருகம் யானையை போல மூன்று மடங்கு பெரிய உருவம். இதுவும் சிறிதும் கருணை இன்றி பல விலங்குகளை உண்டு பெருத்த பாவத்தால் கூண்டோடு அழிக்கப்பட்டது.

உயிர் சங்கிலியின் பிணைப்பு ஒன்றை ஒன்று சார்ந்தது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர்   டோடோ என்ற தரை வாழ் பறவை இருந்தது. போர்ச்சுகீசியர்கள் மொரிஷஸ் தீவில் வாழ்ந்த டோடோ பறவை இனத்தை சுட்டுத் தள்ளி அந்த இனத்தையே அழித்தனர்.  இந்த பறவை ஒரு பழத்தை உணவாக உட்கொள்ளும். அந்த மரமானது மிகவும் உயர்ந்த வகையை சார்ந்தது, மருத்துவத்திற்கும் உதவும். ஆனால் அந்த பழத்தின் ஓடுகள் கடினமாக இருக்கும். இந்த பறவை தன் அலகால் கொத்தி தின்று கொட்டையை எச்சத்தில் வெளி விடும். அதிலிருந்தே அந்த மரம் வளரும். இப்போது அந்த அரிய வகை மரமானது ஒன்று கூட இல்லை. 

இப்படி பல பல இனங்கள் மனிதனின் ஆசையை தீர்த்துக்கொள்ள அழிக்கப்பட்டன.

மனிதனுக்கு படைத்த ஆறாம் அறிவானது மற்ற ஜீவ ராசிகளை அழிப்பதற்கு அல்ல. தனது ஜீவன் எங்கு உறைந்துள்ளது என்று அறிந்து மரண மில்லா பெருவாழ்வை பெற்று இறை வீடு அடைவதே.        

  10 கிணறுகள் 1 குளத்திற்கு சமம்.
  10 குளங்கள்  1 ஏரிக்கு சமம்.
  10 ஏரிகள் 1 மகனுக்கு சமம்.
  10  மகன்கள் 1 மரத்திற்கு சமம்     
     
"ஜீவ காருண்யம் கொண்டு விலங்குகளை காப்போம். நம்மை, இந்த பூமியை பாவ அழிவிலிருந்து காப்போம்."   

No comments:

Post a Comment

Total Pageviews

Followers