நமது பூமியை குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று 5 பகுதிகளாக பிரித்து பண்டைய காலத்தில் மக்கள் வாழ்க்கையை வாழ்ந்தார்கள். இதன் அடிப்படையில் நாம் எந்த நிலத்தை சார்ந்தவர் என்பதை அறிந்து அதற்க்கான உணவு மற்றும் உடை கலாச்சார விதிகளை வகுக்க வேண்டும். இல்லையேல் நம்மை ஆபத்து அணுகி விடும்.
இதன் அடிப்படையில், கோதுமை உணவு வட இந்திய பூமியை சார்ந்த உணவு. வட இந்தியாவில் ஒரு வருடத்தில் மூன்று மாத காலம் மட்டுமே வெப்பம் மீதி ஒன்பது மாதமும் குளிரும்,பனியுமே. கோதுமையில் அதிக உப்பு சத்தும் அமோனியா சத்தும் அதிகம் உள்ளதால் நமது உடலில் அதிக வெப்பத்தை உண்டு பண்ணும். எனவே வட இந்திய மக்களுக்கு மட்டுமே சிறந்த உணவு.
நம் தமிழ்நாட்டு அன்பர்கள் அரிசி, கம்பு, சோளம் , கேழ்வரகு, பருப்பு மற்றும் தானிய உணவுகளை பயன்படுத்துவதே மிகவும் சிறந்தது.
[குறிப்பு : பொடுகு உள்ளவர்கள் கட்டாயம் கோதுமைஉணவை பயன் படுத்தக் கூடாது.]
No comments:
Post a Comment