"ஏழ் பிறப்பும், உன்னை விடாது"
"ஏழு பிறப்பும், ஏமா புடைத்து"
"ஏழு சென்மம் எடுத்தாலும்"
இது போன்று ஏழு பிறப்பு இருப்பதாக தமிழ் மக்கள் கூறிவருது இன்றும் வழக்கத்தில் இருந்துவருகிறது. இவற்றின் உண்மை என்ன?
நாம் உண்ணும் உணவானது இரைப்பையில் சென்று சீரணம் ஆகி, கல்லீரல், மண்ணீரல், பருகும் நீர் மூன்றும் கலந்து ஒரு விதமான நீர்மம் ஆகும். இந்த நீர்மம் 7 விதமான நீர்மம் ஆகும். இந்த 7 விதமான தாதுக்களாக பிரியும். அவை முறையே இரசம், இரத்தம், கொழுப்பு, நரம்பு, மஞ்ஞை, சுக்கிலம் என்பனவாம். இவைகள் தாம் நம்மை வளர்க்கும் தாதுக்கள்(Occult Power ) ஆகும். இவைதான் நமக்கு ஏழு பிறப்பு என்பது. இவை சீராக நடந்தால் நல்ல ஆரோக்கியமான உடல் வளம் பெறலாம். மாறாக நடக்குமென்றால் நோய் என்கிறோம். மேற்கண்ட காரணத்தால் 'அன்ன தானம்' மேன்மையை தானமாக கருதப்படுகிறது. மேற்படி தாதுக்களில் ஏற்படும் குறைகள் காலத்தால் தொடர்ந்து இருக்குமென்றால் அவை, நோய், வியாதி, உரோகம், பிணி,பீடை, சீக்கு,கன்மம் என்னும் ஏழு விதமான குற்றங்களை(நோய்களை) தரும்.
மேற்படி சீரணம் சீராக நடக்க வேண்டும் என்றால் முறையான உணவு உட்கொள்ள வேண்டும். கொளுத்த, பருத்த, வறுத்த உணவுகளை உண்ணக்கூடாது. மேற்படி சீரணம் எப்படி நடக்கிறது என்றால் நாம் நம் அன்னை, தந்தையிடம் இருந்து கடன் பெறப்பட்ட நாத, விந்து, கலை(Entoplasm, Cytoplasm, Ectoplasm) என்ற அடிப்படையான மூன்று சக்திகளால் ஆகும். எனவே உடம்புக்கு 'கடம்' என்று பெயர். இதையே "நாத விந்து கலை ஆதி நமோ நாம" என்று அருணகிரி பெருமான் விளக்கியுள்ளார். இந்த சக்திகள் நம் உடம்பில் உப்பு வடிவமாக இருக்கின்றன. அவைகள் மொத்தம் 27 ஆகும். ஆதலால் தான் "உப்பிட்டவரை உள்ளவும் நினை" என்பது. ஓட்டலில் உப்பு போடும் ஊழியரை (அ) உறவினரை அல்ல. நம் உடம்பை தந்த தாய், தந்தையரையே குறிக்கும். நாம் இருக்கும் வரை நினைத்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்பது.
மேற்படி விந்து, நாதங்கள், கலையில் ஏற்படும் மாறுபாடுகளே மரபு நோய்களுக்கு காரணம். ஆதலால் கண்ட உணவுகளை உண்டு தாதுக்களின் குற்றத்தை அதிகப்படுத்தி நோய்களை பெருக்கி கொள்ள வேண்டாம்.
"நோய்க்கு இடங்கொடேல்" - அவ்வை பாட்டி
விந்து குற்றம் அதிகமானால் -- கண் நோய்கள், நீரழிவு, மேக நோய், மோக நோய், நரம்பு தளர்ச்சி, வாத நோய் வரும்.
நாதம் குற்றம் ஏற்பட்டால் -- காது கேளாமை, பக்கவாதம், முடமான குழந்தைகள், கருப்பை கோளாறுகள் வரும்.
கலை குற்றத்தால் --- குறைந்த ஆயுள், ஊமை குழந்தைகள், சுவாச கோளாறுகள், இரண்டு தலை, அதிகமான விரல்கள்(உறுப்புகள்) உள்ள குழந்தைகள், பைத்திய நோய்கள் வரும்.
இவற்றை மருந்துகளை மூலம் நிவர்த்தி செய்வது முடியாத செயல்.
எனவே அவரவர் நல்ல உணவு உண்டு, ஒழுக்கத்தோடு வாழ்வதும், பின்வரும் சந்ததிகளை வாழவைப்பதும் நமது கடமை. வள்ளுவரும் இதை,
"தம்பொருள் என்பதாம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினால் வரும்" என்கிறார்.
நாத(ம், கலை என்றால் என்ன.இங்கே விளக்கம் இல்லை..
ReplyDeleteகொஞ்சம் விளக்கமாகச் சொல்லவும்....