Wednesday, October 12, 2011

சோதிடம் பற்றிய ஒரு திடமான கட்டுரை




 சோதிடமும் தமிழரும் 
சோ + உயிர் 
திடம் ----- திடமாக (நுட்பமாக கணித்தல்)
உயிரின் இயக்கத்தையும் அதனால் வரும் பயன்களையும் (நன்மை/தீமை) நுட்பமாக அறிதல் சோதிடமாம்.
சோ ------ என்றால் சந்திரன் 
சந்திரன் இயக்கத்தை அறிதல் - சந்திரனுக்கும் உடலுக்கும் ஏற்படும் உறவுக்கு உலவு சொல்லல் சோதிடம் ஆகும் .
தமிழர்கள் ஆன்ம இன்பம் பெற பல வகையில்  முயன்றனர். அதில் பெறும் வெற்றியை கொண்டு இவரால் முடியும் என்று ஒரு கணிதத்தை ஏற்படுத்தினர். அவை தான் இன்று சோதிடவியலாக மலர்ந்துள்ளது. அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட ஆன்ம மாற்றங்கள் 12 ஆகும். இவையே 12 இராசிகள் ஆகும். மேசம், இரிசபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகும். இவை முறையே,
                                          
  1.  மேசம் ---- அப்பா ----உயிர்  -- செங்கதிரோன்(சூரியன்) 
  2.  இரிசபம் --- அம்மா --- உடல் -- அன்னபூரணி (சந்திரன்)
  3.  மிதுனம் ---- காமம்(அம்மா + அப்பா இணைவு) அம்மையப்பன் (சிவசக்தி)
  4.  கடகம் --- குழந்தை பிறப்பு --- (ஐயனார்)
  5.  சிம்மம் ---- உடல் வளர்ச்சி (அரிகரன்)
  6. கன்னி --- உயிர் வளர்ச்சி --- வியாழன் (குரு)
  7. துலாம் --- வயோதிகம் --- பெருமாள் (பள்ளி கொண்ட பெருமாள்)
  8. விருச்சிகம் --- பசிப்பிணி --- மாரியம்மன் (கூழ் ஊற்றுவது)
  9. தனுசு --- பகை --- கொற்றவை (பகைகடிதல்)
  10. மகரம் -- மரணம் --- (காலன்)
  11. கும்பம் --- உயிரற்ற உடல் -- பிணம் (காட்டேரி)
  12. மீனம் --- அலையும் ஆன்ம --- வேலன் (அடுத்த பிறப்பு)  
மேற்கண்ட 12  பருவன்களே மானுடம் பெறும் பயன், இவற்றில் ஏற்படும் மாற்றங்களை 10  கோள்கள் மூலம் கணித்தனர். கோ -- ஒளி என்று பொருள். மேற்கண்ட பருவத்திற்கு தெய்வங்களை ஏற்படுத்தி வழிபாடு செய்ய வேண்டும் என்று பின் தலைமுறைக்கு உயிரின் அடுத்த நிலை என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப தன்னை மாற்றி அமைத்துக்கொள்ள நெறிபடுத்தினார்கள். 
காலப்போக்கில் இது சிதைவுற்று வெறும்  சடங்காகி போகின. மேற்கண்ட பருவங்களை கடந்து மரணத்தை மாற்றி அமைத்து சாகா வரம் பெற்றனர் சித்தர்கள். சோதிடம் சாகா கலையின் அடிப்படை கூறாகும்.    

அவசியம் தமிழனாகிய நாம் அறிய வேண்டும்

No comments:

Post a Comment

Total Pageviews

Followers