நம் உடம்பில் உள்ள 72000 நாடிகளிலும் நடைபெறும் வாயு கூட்டங்களில் 10 வகை நாடிகள் முதன்மையானவை,(Channels) அதில் பின்களை, இடகலை, சுழிமுனை என்னும் மூன்று நாடிகளே சிறப்பானவை. இந்த மூன்று நாடிகளில் பிராணன், அபானன், சமானன் என்ற மூன்று விதமான வாயுக்கள் செல்லும். இந்த மூன்று வாயுக்களே நமது உடம்பிற்கு ஆதாரம். இந்த மூன்று வாயுவானது மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம் பொறியாலும், ஓசை, பரிசம், உருவம், சுவை, நாற்றம் என்னும் ஐம் புலனாலும், மனம் செல்லும் தன்மைக்கேற்ப மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது. எப்படி எனில் சுவாசம் 12 அங்குலம் அளவு செல்லும் (சுவாசத்தின் நீளம் 12 அங்குலம் ஆகும்) அதில் 8 அங்குலம் மட்டுமே மீண்டும் உட்செல்கிறது, 4 அங்குலம் வீணாகிறது (பொறி புலனை பற்றி மனம் 4 அங்குலம் வீணாகிறது).
அவ்வாறு வீணாகும் தன்மையினால் (வெட்டுபடுவதினால்) வெட்டை நோய் வருகிறது. இதையே வெட்டை முற்றினால் கட்டை!! என்று கிராம மக்கள் கூறுவார்.
அவ்வாறு வீணாகும் தன்மையினால் (வெட்டுபடுவதினால்) வெட்டை நோய் வருகிறது. இதையே வெட்டை முற்றினால் கட்டை!! என்று கிராம மக்கள் கூறுவார்.
வெட்டப்படும் பிராண வாயுவால் - வாதமும்
வெட்டப்படும் அபான வாயுவால் - பித்தமும்
வெட்டப்படும் சமான வாயுவால் - சிலேத்துமம் குற்றம்(தோசம்) உண்டாகும்.
இதையே முக்குற்றம், முத்தோழம், முத்தோசம் என்கின்றோம். மேலும் காமம், வெகுளி, மயக்கம் எனும் முக்குற்றங்களால் மனம் பற்றி செல்லும் போது எந்த நாடி நடைபெறுகிறதோ அந்த நாடியில் செல்லும் வாயு அளவுக்கு அதிகமாக வெட்டுப்பட்டு(முறிவு) ஏற்பட்டு தோசம் அதிகமாகி நோய் வருகிறது.
இதையே வள்ளுவர்
அழுக்காறு, அவா, இன்னாச் சொல், வெகுளி இந்நான்கும்
இழுக்கா இயன்ற தரும் - என்கிறார்.
வெட்டை நோய் தாக்கிய ஒருவனுடைய உடல் நிலை எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறே அவனுடைய சுக்கிலமும் இருக்கும்.
சுக்கிலத்தில் வாத ஆதிக்கம் பெற்றால் கருங்கிரந்தி நோயும்,
சுக்கிலத்தில் பித்த ஆதிக்கம் பெற்றால் செங்கிரந்தி நோயும் ,
சுக்கிலத்தில் சிலேத்துமம் ஆதிக்கம் பெற்றால் அம்மை என்கிற செவ்வாப்பு கட்டியும் ஏற்படும்.
இதுவே பிறவியிலேயே நோய் ஏற்பட காரணம். மூன்று நாடியில் அலையும் வாயு தோசம் முற்றி அதனால் ஏழு வகை தாதுக்களை (இரசம், இரத்தம், கொழுப்பு, நரம்பு, மஞ்ஞை, சுக்கிலம்) பாதிக்கும் என்றால் பலம் குன்றிய குழந்தை பிறக்கும்.
வள்ளுவரும்
தக்கார் தகவிலார் என்பதராவர்
எச்சத்தார் காணப் படும் என்கிறார்
மேலும் வள்ளுவர்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓமப் படும் என்கிறார்
உயிரை தவிர மேன்மயமான ஒன்று உலகில் இல்லை. உயிரை காத்துக் கொள்வதே ஒழுக்கம். ஒழுக்கம் என்பது ஒரு சடங்கோ, தடையோ அல்ல. ஒழுக்கம் ஆண், பெண் இருவருக்கும் வேண்டும் - இவர்களே நல்ல சமுதாயத்தை அமைக்க முடியும்.
"ஒழுக்கத்தார் எய்தும் மேன்மை" என்றும்
"வையத்துள் வாழ்வாங்கு வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்" என்கிறார்.
வள்ளுவர் ஒழுக்கத்தோடு வாழ்பவரை தெய்வம் என்றே அழைக்கிறார்.
No comments:
Post a Comment