Saturday, March 24, 2012

எல்லா உறுப்பும் நாம் நல்ல முறையில் உயிர் வாழ அவசியம்.இந்த கலி காலம் அறிவு காலம் - அறிவியல் காலம்
இருந்தும் என்ன பயன்? 

இன்றைய காலகட்டத்தில் மெத்த படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் உடலை பற்றிய தெளிவும், நோயை பற்றிய புரிதலும் குறைந்தே காணப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க ஊடகங்களின் தாக்குதலால் மக்கள் மனம் விளம்பரத்திற்கும், பெயர் பலகைக்கும் அடிமையாகிவிட்டனர்.
உண்மை எது, என்ன என்பதை பற்றிய தெளிவின்றி தனது உடலையும், பொருளாதாரத்தையும் மருத்துவமனைகளிலும், மருத்துவர்களிடமும் அடமானம் வைத்துவிட்டு தவிக்கிறார்கள். பலபேர் பித்தபையிலோ, கர்ப்ப பையிலோ ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் வெகு சாதாரணமாக உறுப்பை அகற்றும் சிகிச்சைக்கு தயாராகிவிடுகிறார்கள். இது சிறு தற்கொலைக்கு சமம். அகற்றவும் செய்கிறார்கள். இது மிகபெரிய பாவம். "அறியாமை ஒரு பாவம்" என்பர் பெரியோர்கள். நமது உடலில் ஒவ்வொவொரு உறுப்பும் ஒன்றையொன்று சார்ந்து பின்னி பிணைந்து உள்ளது. ஒன்றை அகற்றினால் நாளடைவில் அதனை சார்ந்த அத்தனை உறுப்புகளும் மெது மெதுவாக செயல் இழக்க நேரிடும். நாம் "இருந்தும் இறந்து வாழ நேரிடும்". நமது எந்த ஒரு உறுப்பும் பயனற்று இருப்பதில்லை. கடவுள் காரணமாக தான் ஒவ்வொரு உறுப்பையும் வைத்துள்ளார்.

குறைந்தபட்சம் நாம் நம் உடலை பற்றிய அறிவை, புரிதலை தெரிந்து கொள்ள வேண்டும்.

எந்த ஒரு நோய்க்கும் அடிப்படை காரணம் அணுசிதைவு அல்லது செல்கள் அழிதலே. இருதயத்தில் ஏற்படும் ஓட்டை கூட சீவ அணுக்கள் [உயிர் அணுக்கள்] உற்பத்தி குறைவதால்  தான். இப்படி புற்று நோய், மரபு நோய் அனைத்தையும் குணப்படுத்தமுடியும். பண்டைய காலத்தில் வைத்தியர்கள் ஒருவரின் "நோய் நாடி நோய் முதல் நாடி" வைத்தியம் செய்தார்கள்.  சித்த மருத்துவத்தால் நிச்சயம் 4448 வகையான நோய்களை குணபடுத்தமுடியும். உடலின் எந்த ஒரு அழுகிய பாகத்தையும் பாரம்பரிய சித்த மருத்துவத்தால் குணபடுத்தமுடியும். அலோபதி மருத்துவம் ஒருவரின் தாங்கும் திறனை சோதித்து பார்த்துவிட்டு பிறகு நாற்காலியிலோ  அல்லது  படுக்கயிலோ கைவிட்டு விடும்."

"சித்த வைத்தியமானது ஒருவரை சித்தனாக்கவும் 
மத்த  வைத்தியமானது ஒருவரை பித்தனாக்கவும் 
சால சிறந்தது"

இத்தகைய சீவ அணுக்களை உற்பத்தி செய்து எத்தகைய வியாதிகளையும் குணப்படுத்த வல்ல வல்லோர்கள், நல்லோர்கள் வெகு சிலரே தற்போது உள்ளார்கள்(பெயர் பலகை, விளம்பரம் இன்றி). இவர்கள் சித்தர்களுக்கும், சத்தியத்திற்கும் கட்டுப்பட்டு தன்னை நாடி வருபவர்களுக்கு உயிர் கொடுத்து காக்கிறார்கள். இந்த இணைய தளத்தின் நோக்கமானது அப்படிப்பட்ட மருத்துவர்களை அனைவருக்கும் அறிமுக படுத்தி பலபேரும் பயனடை செய்வதே நோக்கம் ஆகும்.

கடந்த வருடம் புற்றுநோயால் அவதிப்பட்டு , தாங்கவொண்ண வேதனையாலும், துயராலும் தவித்தபோது கடவுளின் அருளால்  நல்ல மருத்துவர்களின் அறிமுகம் கிடைத்தது. இப்போது பிழைத்து இதோ உங்கள் முன்னாள் என் அனுபவத்தை பகிர்ந்துகொண்டு உள்ளேன்.  
கடந்த ஒரு வருடமாக என்னை பக்குவபடுத்த கூறிய அனைத்து செய்திகளையும், தற்போது என்னுடைய அனைத்து கேள்விகளுக்கான விடைகளையும் தருவித்து வருகிறார். எனக்கு கிடைத்த இந்த மருத்துவத்தையும், அறிவையும் நாற்புறமும் நதிபோல பலரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடு இந்த இணைய தளம் நடத்தப்பட்டு வருகிறது.மருத்துவரின் அறிவுத்திறமை, விசய ஞானம், மருத்துவ முறை, குணநலன்கள் பற்றி இனிவரு பதிவுகளில் நீங்கள் விரும்பினால் எழுத ஆயிரம் பக்கங்கள் என்னிடம் உள்ளது.


உங்களது கேள்விகள், சந்தேகங்கள், உடல், மனம் மற்றும் ஆன்மிகம் குறித்து கேட்கப்பட்டால் "அட்சயபாத்திரம்" நிச்சயம் தரும்.  
      

2 comments:

 1. அய்யா வணக்கம், நான் தற்செயலாக இந்த பதிவை பார்த்தேன் . ஆன்மீகம் பற்றி அறிய விரும்புகிறேன்.
  இது பற்றி நிறைய விஷயங்கள் இனையத்தில் உள்ளது.
  எல்லாம் மேலோட்டமாக உள்ளது. அதிக ஈடுபாடு
  உள்ளவர்களின் எதிர்பார்ப்பு வேறு.
  என்னை பற்றி ஒரு குறிப்பு . நான் வயதானவன் . இறை
  இன்பத்திற்காக ஏங்குகிறேன்.பாதை தெரியவில்லை.
  அல்லது புரிந்தும் புரியாமல் இருக்கிறது .குரு தேவை.
  இந்த வயதில் எங்கே சென்று தேடுவது.அறிந்த நாமாவை ஜபித்துக் கொண்டிருக்கிறேன்வழிகாட்டல்
  தேவைப்படுகிறது . உதவ வேண்டுகிறேன் .
  எனது மெயில் id . balasri36@gmail .com
  அன்புடன் s .v

  ReplyDelete
 2. அய்யா மருத்துவர் கணேசன் அவர்களை தொடர்பு கொள்ள முகவரி வேண்டுகிறேன்.
  எனது மெயில் uraigal@gmail.com


  ReplyDelete