- மனதிற்கு பிடித்த வைத்தியரிடம் வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்.
- தனக்கு பிடித்த , பிடிக்காதவைகளை வைத்தியரிடம் தயக்கமின்றி கூற வேண்டும்.
- வைத்தியர் கூறும் அறிவுரைகள், உணவு முறைகள், பழக்க முறைகள், சூழல் மாறுபாடுகள் இவற்றை முறையாக புரிந்து கொண்டு அதன் படி நடந்து வர வேண்டும்.
- சந்தேகங்கள் ,மறதி ,கவனக்குறைவு ஏற்பட்டால் அதை முறையாக கேட்டு புரிந்து கொள்ளவும்.
- வைத்தியர் கூறும் காலம் வரை பொறுமையாகவும், முறையாகவும் மருந்துகளை பயன்படுத்தவும்.
- வைத்தியர் கூறும் கால வரையறைக்குள் நோயை குணம் செய்து கொள்ள வேண்டி பத்திய, பழக்க, வழக்க முறைகளை கடுமையாக பின்பற்றவும்.
- காலங்கள் மாறினால் நீங்களும், வைத்தியரும் சில சூழ்நிலை மாறுபாட்டால் கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாகிவிடும். இதற்கு இடம் கொடுக்காதீர்கள்.
- நீங்கள் நல்லவர்கள் என்றாலும் ஊழ் வினை மெல்ல வந்து வைத்தியருக்கும், உங்களுக்கும் உள்ள மனநிலையை மாற்றி அமைத்து விடும். எனவே கவனமாக இருக்கவும்.
- வைத்தியரிடம் பேசும் போது தன்மையான வார்த்தைகளை மட்டும் பயன் படுத்தவும்.
- வைத்தியர் உங்களை புரிந்து கொள்வதற்க்கும், நோயை புரிந்து கொள்வதற்கும் கால அவகாசம் கொடுங்கள்.
- கூடா நட்பு, பழக்கம் இருக்கும் என்றால் வைத்தியரை தனிமையில் கண்டு விளக்கம் கூறவும்.
- பேய் ,பில்லி, சூனியம், குறி கேட்டல் ,சாமி ஆடுதல்,குங்குமம் விபூதி தீர்த்தம் பெறுதல், வாக்கு கேட்டல், ரட்சை கட்டுதல் ,பரிகாரம் கேட்டல் இவற்றில் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் அங்கு செல்ல இருக்கும் 3நாட்களுக்கு முன் மருந்து சாப்பிடுவதை நிறுத்தி விடவும்.
- வேறு மருந்து (அ) மருத்துவ முறைக்கு உங்கள் மனம் விரும்பினால் தயக்கமின்றி வைத்தியரிடம் பணிவுடன் கூறி செல்லவும்.
- வைத்தியரை எக்காரணம் கொண்டும் பகைமையாக கருதாதீர்கள். (குறை கூறாதீர்கள்)தெய்வத்தை இகழ்ந்ததற்கு சமம்.
- உறவினர்கள் , அண்டை, அயலார், தலைவர்கள் கூறும் மாற்று மருத்துவ கருத்துகளில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுமாயின் வைத்தியரிடம் முறையாகக் கூறி விடை பெறலாம்.
- எப்பொழுதும் உங்களுக்கும் , வைத்தியருக்கும் நல்லுறவு நீடிக்கும் படி நடந்து கொள்ளவும்
- பாவத்தால் தான் நோய் வருகிறது என்று உணர்ந்து பாவ காரியங்களான பிற உயிர்களை அடித்தல், கொல்வது ,பிறரை சபிப்பது, தீய செயல்களை செய்வது இவற்றை விடவும்.
- கர்ம வினைகளால் நோய் எற்படுகின்றது என்பதை உணர்ந்து, மருந்து சாப்பிடும் நாள் வரைக்கும் அன்னதானம், முதியோர்களுக்கு உதவுதல், அனாதை குழந்தைகளுக்கு உணவு ,உடை தருதல், பொது சேவைகள் இவற்றை செய்து வரவும்.
- நோய் நீங்க வேண்டும் என்று பெரியோர்கள், சித்தர்கள், குல தெய்வங்கள் ,முதியோர்கள் இவர்களை மனதாலும், உடலாலும் வேண்டி வணங்கி வாருங்கள்.
- உங்கள் நோய்க்கு பிறர் காரணம் இல்லை என்பதை உணர்ந்து "தன் வினை தீர வழி" என்னஎன்பதை சிந்தித்து அதன் படி நடந்து வரவும்.
" ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்"
"விடாது வினை"
"தன் வினை தன்னைச் சுடும்"
"தீதும் நன்றும் பிறர் தர வாரா"
தன் வினை தீர தானமும், தவமும் வேண்டும்.
என்ற பெரியோர்கள் அறிவுரைகளை மனதில் கொள்ளவும்.
No comments:
Post a Comment