Wednesday, March 28, 2012

தலை தீபாவளி





ஆண்டுக்கு ஆண்டுக்கு, தேதிக்கு தேதி  
ஆயிரம் இருக்குது சுபதினம்!! 
என்பதற்க்கேற்ப ஆயிரம் விழாக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றோம்.
அதில் ஒன்று தான் "தீபாவளி" திருவிழாவும். தீபாவளிக்கு  கற்பனை கதைகள் ஏராளம் உண்டு என்பதை  அறிவீர்கள். மழை பொழியும் காலம் என்பதால் கிருமிகள் பல்கி பெருகும் என்பதாலும், பூமி குளிர்ச்சி அடையும் என்பதாலும் பட்டாசுகளை வெடித்து  அதில் உள்ள கந்தக புகை கிருமி நாசினியாகவும்  பூமியை வெப்ப படுத்துவதாகும் அறிவியல் படி விளக்கம் கூறுவாரும் உளர் . மன  மகிழ்ச்சிக்கு  இது போன்ற விழாக்கள் தேவையாக இருக்கின்றன. தீபாவளி அன்று புத்தாடை உடுத்தியும், பட்டாசுளை வெடித்தும் , தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்வதும்,   ஆறு குளங்களில் ஒளி தீபங்களை மிதக்க விடுவது வழக்கமாக இருக்கிறது.


புதிதாக திருமணம் புரிந்த புதுமண தம்பதிகள் தீபாவளியை "தலை தீபாவளி"  என்று கூறி கொண்டாடுவார்கள். தீபாவளி என்றால் சரி. அது என்ன தலை தீபாவளி?

என்று கேட்டால் "முதல் தீபாவளி" என்பார்கள். என்ன சிறப்பு ? என்றால்,  ஏதோ  பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பார்கள். என்ன சொல்லியிருக்கிறார்கள்?  என்றால் மகிழ்ச்சியாக இருக்க சொல்லியிருக்கிறார்கள் என்பார்கள். அன்று மகிழ்ச்சியாக இருப்பீர்களா? என்றால் இல்லை. நிறைய செலவுதான் என்று வருத்தத்தோடு சொல்லுவார்கள்.
பெரியோர்கள் மகிழ்ச்சி அடைய சொன்ன வழி என்ன என்பதை காண்போம்

தீபம் - ஒளி

ஆவளி - வரிசை

தீபங்கள் வரிசையாக ஏற்றி வைத்து வழிபாடு செய்வதென்றும்

தீபம் + அ+ வளி

தீபாவளி என்றும் பொருள் படும்.

அ-உயிர்
வளி- விண் (வளிமண்டலம்) ( விண்  அணுக்கள்)

தலை - முதல்

இந்த உடலுக்கு தலை தான் முதல்.
விண் அணுக்கள் உயிராக மாறி தீபம் போல் தலையில் ஒளிர்கின்றது என்பதை தான்,

தலை தீபாவளி என்று கூறியுள்ளனர்.


"நெற்றிக்கு நேரே நிறைந்த ஒளி காணின்"

                                                                     ஒளவை


"உச்சித்திலகம் உயர்ந்தோர்  மதிக்கின்ற மாணிக்கம்"

                                                                   அபிராமி பட்டர்

சீவனானது தலையில் ஒளி வடிவமாக ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த ஒளிக்கு உடலில் காணப்படும் விந்தணுக்களே (வெள்ளை அணுக்கள் - White  Blood  Cells  ) எண்ணெய் போல் இருந்து உயிரை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த விந்தணுக்கள் குறைந்தால் சீவனின் வலுவும் குறைந்து விடும்.
தீபாவளி அன்று இலட்சக்கணக்கான உயிர்களை (சீவன்கள்)வதைத்து  வயிறு முட்ட தின்று மகிழ்ச்சி அடைகின்றோம். மனிதர்களுக்கு "தீபாவளி" என்றால் உயிர்களுக்கு "மரண ஒலி "ஆகின்றது. இரவு முழுவதும் கேட்டும் மரண ஒலி  "செவிடன் காதல் ஊதிய சங்கு" என்றாகிவிடுகிறது.
அதோடு மட்டுமல்லாது சோம பாணம், சுரா பாணம் லிட்டர் கணக்கில் குடித்து மகிழ்கின்றோம். விலங்குகளின் இறைச்சியில் 80 சதவகிதம் அமிலமும் (யூரிக் ஆசிட்)
20 பங்கு புரதமும் இருக்கின்றது. இந்த 20 பங்கு புரதத்திற்க்கு தானா இத்தனை பலிகள்? இதை சீரணிக்க உடல் எவ்வளவு சிரமப் படுகிறது என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளுங்கள். அவற்றை சீரணிக்க  சீவன் நடத்தும் போராட்டத்தால் அயர்வு, சோர்வு ஏற்படுகின்றது. பல "பலகார" வகைகள் காரத்தோடு உள்ளே  சென்று பருவத் தூண்டுதல்களை ஏற்படுத்தும். இப்படியா மகிழ்ச்சி அடைய சொன்னார்கள்? பெரியோர்கள் சொன்னார்கள்  என்று  சொல்லி அவர்கள்,  சொல்லாததை நடைமுறை படுத்தி வருகின்றோம். சாரத்தை விட்டு விட்டு சக்கையை பிடித்து கொண்டு இருக்கின்றோம். இதன் மூலம் இளைய தலைமுறையினருக்கு தவறான வழியை காட்டுகின்றோம்.

"கொன்ற ஆள் பாவம் தின்ற ஆள் போச்சு" என்றார்போல்
இளைய தலைமுறையினருக்கு துன்பத்தை பரிசலிக்கின்றோம்.

"விந்து விட்டால் நொந்து கெடுவாய்"

"கெடுவான் கேடு புரிவான்"

என்று பெரியோர்களின் வாக்கை பொய்த்து நடக்கின்றோம்.

திருமண தம்பதிகள்  இணை விழைச்சு (இச்சை) வில்  அதிகம் ஈடுபடுவார்கள் (காணாததை கண்டவர்கள் அல்லவா) அதை முறைபடுத்தவும், சீவன் விரைவில்  சத்து போகாமல்(செத்து) இருப்பதற்கும் 
பெரியோர்கள் ஒர் விழாவை ஏற்படுத்தி புதுமண தம்பதியருக்கு அறிவு புகட்டினர். இதை விடுத்து உடலையும், இயற்கை சீரமைப்பையும் கெடுத்து விடுகின்றோம். சீவன்களை  வதைப்பதால் இயற்க்கை கட்டமைப்பு குலையும். இதன் விளைவாக பூகம்பம், தட்பவெட்பம் மாறுதல், பேரழிவுகள், கண்டறியா நோய்கள், உணவு பஞ்சம்..... ஏற்படுகிறது. 

என்னடா  தீபாவளி அன்றைக்கு இப்படி ஒரு அணுகுண்டை  வெடிக்கிறார்  என்று எண்ண வேண்டாம். இன்று பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வரும் புகை எப்படி சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துகின்றதோ அதற்கு ஒவ்வொரு வாகன உரிமையாளருக்கும் பங்கு உள்ளதோ அது போல் தான் இதுவும். (அண்டத்தில் உள்ள அனைத்து   சீவன்களுக்கும் பங்கு உண்டு)

பிறக்கும் குழந்தைகள் ஒன்றும் தவறு செய்ய வில்லை. நாம் ஏற்படுத்தியுள்ள சுற்று புறச் "சுழல் மாசுக்கள்" எப்படி பாதிக்கின்றன என்பதை அறிவியல் எடுத்து காட்டி வருகின்றது.

வதைக்கப்பட்ட  உணவால் இந்த உடல் வாதை பெருகின்றது. மட்டுமல்லாது  பிறக்கும் சந்ததிகள்(குழந்தைகள்) அறியா நோய்களுடன்  பிறந்து, ஆறா துன்பம் அடைவதற்க்கு காரணமாகின்றோம்.

புது மண தம்பதியினர் இதை புரிந்து கொண்டு தங்களுக்கும், சமுதாயத்திற்க்கும் கேடு செய்யும் செயல்களையும், உணவுகளையும் ஒதுக்கிவிட்டு இச்சையில் அதிகம் நாட்டம் கொள்ளாமல்

"ஆன முதல் அதிகம் செலவானால்
மானம் கெட்டு மதி இழந்து
போன திசை யெல்லாம் கள்ளனாய்
எழு  பிறப்பும் நல்லாருக்கும் பொல்லானாய் நாடு"
                      
                                                               ஒளவை
"நீறு  இல்லா நெற்றி பாழ்"

நீறு  - ஒளி            ஒளவை


என்ற எச்சரிக்கையை மனதில் நிறுத்தி தலையில் ஒளிரும் "சீவ சோதியை" "சுந்தர சோதியாய்" மாற்றி தலை தீப ஒளி கண்டு கொண்டாடி  மகிழ வாழ்த்துகின்றோம்.

No comments:

Post a Comment

Total Pageviews

Followers