நமது உடலில் "வீணா தண்டு " என்னும் முதுகு தண்டில் நாம் சுவாசிக்கும் மூச்சானது மூன்று பிரிவாக (channels) பிரிந்து (இடகலை , பிங்கலை, சுழி) உச்சி முதல் குதம் வரை சென்று 32 அடிப்படையான உறுப்புகளுக்கு சக்தி பரிமாற்றம் செய்கின்றன. இவை ஒரு நாளைக்கு 21,600 மூச்சாக பெரியோர்கள் கணக்கீடு செய்துள்ளனர்.இந்த மூச்சானது முதுகு தண்டின் வழியாக செல்லும் போது ஏழு இடங்களில் சுழித்து ( முடிச்சு போன்றது ) செல்கின்றன. இவற்றை "கிரந்தி" (முடிச்சு) என்பர். நவீன அறிவியலார் இவற்றை நாளமில்லா சுரப்பிகள் என்கின்றனர் (Endo glands ). யோக நூல்கள் "ஆதாரம் " என்றும், குண்டலி சக்தி பாயும் "சக்தி பீடங்கள்" என்றும் எடுத்துரைகின்றது. இவ்வாறு இந்த மூச்சு சுழித்து பரவும் போது ஏற்படுத்துகின்ற ஓசைக்கு "நாதாந்தம்" என்று பெயர். இந்த நாதாந்தம் ஏழு நிலைகளில் ஏற்படுத்தும் ஓசைக்கு ஏற்ப வடிவம் கொடுத்தனர். இவையே எழுத்து என்று பெயர் பெற்று வழங்கி வருகிறது. (ஏழு + அத்துக்கள் ) அத்து என்றால் முடிச்சு என்று பொருள். இவை "ஏழு சுரங்களாக " சங்கீதத்தில் சொல்லபடுகிறது. இவற்றை வகை படுத்தி "இராகங்கள்" என்று பாடி வருகின்றனர். இதையே
"ஏழிசையாய் இசைப் பயனாய்"
"ஏழு சுரங்களுக்குள் எத்தனை ராகம் "
என்கின்றனர்.
மேற்படி எழுத்துக்கள் என்பன தமிழில் "உயிர் எழுத்துக்கள் " என்று போற்றப்படுகின்றன. அவைகள் முறையே அ , இ ,உ எ, ஐ,ஒ ஓள, என்பன.
இவைகள் ஐம்பத்தொன்று அச்சரமாக விரியும். இதை "சிதம்பர ரகசியம்" என்பர். ( இவற்றை சற்குருநாதர் தாள் பணிந்து பெறுக ). சுவாசம் ஆனது இந்த ஏழு ஆதார மையங்களில் செல்லும் போது எப்படி ஓசை உண்டாகின்றதோ அது போன்றே ஒளியும் அவ்விடங்களில் உண்டாகிறது. இதையே " ஓசை ஒளியெல்லாம் நீனே ஆனாய்" என்பது. இது அகத்தில் நடப்பது. இந்த ஒளியை "கோள்கள்" என்று பெரியோர்கள் குறித்தனர். கோ என்றால் ஒளி ஆகும். கோயில் என்றால் ஒளி உள்ள இடம் என்று பொருள்.மேற்படி கோள்கள் மூலம் மனிதருக்கு "மனம்" என்ற அலையும் காற்று உண்டாகிறது. இவற்றை கோள்கள் மூலம் எடுத்துரைத்தனர். இதனால் ஏற்படும் (வாயு சுழலுவதால் ) உச்ச, நீச்ச, ஆட்சி படி ஒரு கோள் என்றனர்.
பிங்கலை - சூரியன் (மனம்)
இடகலை - சந்திரன் (புத்தி )
சூரியனாகிய மனம் சந்திரனாகிய புத்தியை உச்ச பலத்தால். கூடும் போது "துணிவு" என்னும் "செவ்வாய்"தோன்றுகிறது (பிங்கலை) .
சந்திரன் என்னும் புத்தி உச்ச பலத்தால் சூரியனை கூடும் போது "நுட்பம்" என்னும் "புதன்" தோன்றும் (இடகலை).
சூரியன் என்னும் மனம் நீச்சம் என்னும் குறை பெறும் போது "மறதி" என்னும் "சனி " தோன்றுகிறது (பிங்கலை).
சந்திரன் என்னும் புத்தி நீச்சம் பெறும் போது "மயக்கம்" என்னும் "இராகு" தோன்றுகிறது (இடகலை).
மறதி என்னும் சனியும் மயக்கம் என்னும் இராகுவும் உச்சத்தில் கூடினால் "நூதனம்" என்னும் "குரு " தோன்றுகிறது.
மறதி என்னும் சனியும் மயக்கம் என்னும் இராகுவும் நீச்சம் பெறும் போது "களிப்பு" என்னும் "சுக்கிரன்" தோன்றும்.
இவை அல்லாமல் நாடியானது "சுழியில்" ஓடும் போது "அறிவு " என்னும் "கேது" உண்டாகிறது.
இதை கொண்டு தான் அறிவு என்பதை கேதுவுக்கு கொடுத்தனர். கேதுவை அறிவுக் கடவுளாக "கணபதி" என்றனர்.
சித்தர்களும் இந்த அறிவு என்னும் "சுழியை" போற்றி வணங்கினர். இதை பற்றி முன் கட்டுரையில் காண்க. இதனாலே தான் சித்தர்களுக்கு கோள்களின் பாதிப்பு இல்லை என்பர்.
இவ்வாறு நமது சான்றோர்கள் நமக்கு எடுத்துரைத்த அறிவு பெட்டகங்கள் ஆயிரம். இதை விடுத்து ஒன்பது கோள்களுக்கு விளக்கம் இல்லை. உண்மையில் வான்வெளியில் நிறைய கோள்கள் இருக்கின்றன. மணிவாசகரும் நூற்றி ஒரு கோடி கோள்கள் இருப்பதாக அண்ட உற்பத்தியில் கூறுகின்றார். நமது முன்னோர்கள் ஒன்பது கோள்களை மட்டும் சொன்னதின் கருத்து இது தான். இதை
"ஊனுக்குள் உறையும் உறு பொருளை உணர
உள் மூச்சை சீராக்கும் உயர் வித்தையை
தத்துவமாக சொன்னோம் தரணியில்
சித்தனாக வாழத் தானே "
என்கிறார் நெருஞ்சில் சித்தர்
No comments:
Post a Comment