Wednesday, March 28, 2012

அரைவேக்காடு உணவுகள்



" உணவே மருந்து  மருந்தே உணவு "  என்னும் புதிய சித்தாந்த மருத்துவர்கள் தோன்றி விட்டார்கள். உணவு உணவாக இருக்க வேண்டும் . மருந்து மருந்தாக இருக்க வேண்டும். இன்று நடப்பதென்ன?. பூச்சிக்கொல்லி மருந்துகளை போட்டு "உணவுகள்" எல்லாம் "மருந்தாகி" தான் போய் விட்டது. உணவே "மருந்து" தான் என்று கூறுவதும் சரியாகத்தான் உள்ளது. மருந்தே  உணவு, உணவே  மருந்து என நாடே குழப்பத்தில் இருந்து வருகின்றது.

இன்னுஞ்சிலர் பச்சையாக சாப்பிடு என்றும், சக்தி ஆதிக்கம் உள்ளது என்றும், கொழுப்பு இல்லை என்றும் கூறியும், செய்தும் வருகின்றனர். உணவை வேக வைப்பதால் சக்தி குறைந்து விடும் என்றும் " பூச்சாண்டி" காட்டுகிறார்கள்.  இவர்கள் " கற்காலத்திற்கே செல் " என்கின்றர்களா? என்றும் தெரியவில்லை. "பதார்த்த குண  விளக்கம்", " நளபாகம்" சமையல்  என்றால்  என்ன ! என்று சித்தர்கள் கூறியதை முட்டாள் தனமாக மறுத்து பேசி  வருகின்றனர்.

பச்சடி, ஆவி கட்டல் , புட்டவியல், நீரில் வேக வைத்தல், அமுது செய்தல். நெருப்பில் சுடுதல்  போன்ற எத்தனையோ பக்குவ முறைகளை சித்தர்கள் கூறியுள்ளனர்.  சித்தர்கள் எல்லாம் எடுத்து கூறியும் அறிவு பெறாத மக்களை என்னென்பது?. பச்சையா உண்பதா? வேக வைத்து உண்பதா? என்பதை  இவர்கள் (இயற்கை  மருத்துவர்கள்) விளக்கம்  அளிப்பதில்லை. நீருக்கு  சலிக்கும் தன்மை உண்டு. நீர் சத்துள்ளவை எளிதில்  அழுகும் தன்மை கொண்டவை. காய்களை பல உணவு பொருட்களோடு சேர்த்து சமைத்து   பஞ்சபூதத்தை சமன் செய்து சாப்பிட வேண்டும். இதுவே சமையல் ஆகும். தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்பார்கள். உணவை நீரில் வேக வைத்து உண்ண வேண்டும். உணவை பச்சையாகவோ அறைவேக்காடாகவோ சாப்பிடுவது நஞ்சை சாப்பிடுவதாகும். உடலுக்கு கேடு விளைவிக்கும்.  நோயுள்ள மக்களும், நோயற்ற மக்களும்  அவரவர்களுக்கு தக்கவாறு உணவு அமைய வேண்டும். இதை மறந்து விடுகின்றனர் இன்றைய புதிய தத்துவ வாதிகள். இன்னுஞ்சிலர்  மரக்கறி உணவா? மாமிச உணவா? இதையும் குழப்பி வருகின்றார்கள். ஒன்னரை கோடி மக்கள் வாழும் சென்னை நகரில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் லட்ச கணக்கான வெள்ளை கோழிகள், ஆயிரக்கணக்கான வெள்ளாடுகள்,செம்மறிஆடுகள், ஆயிரக்கணக்கான பன்றிகள், மாடுகள் ,புறாக்கள்,காடை கவுதாரி, முயல்கள் ,டன்கனக்கான மீன்கள் பகல் பன்னிரண்டு மணிக்குள்ளாக  மசாலாவுக்குள் மறைந்து விடுகின்றன. பீசா கார்னர், பேக்கரிகள், துரித உணவுகள் எல்லாம் அன்றே வித்து தீர்ந்து விடுகின்றனர். வாழையடி வாழையாய் ஊறிப்போன மக்களிடம் மாமிச உணவு உண்ணாதே எனக் கூறுவது பைத்தியகாரத்தனமாக தெரிகிறது. " கோவணம் கட்டாத ஊரிலே துணி வியாபாரம் செய்வது சரியல்ல"  என்று பெரியார் கூறுவது சரி எனப்படுகிறது. எதனால் நோய் வருகிறது என்று எடுத்துக் காட்டி பேசினாலும் இந்த மக்களுக்கு புரியவில்லை. புதிய ஆர்வத்தில் மருத்துவர்களாக வருபவர்கள். பொது  மக்களுக்கு அறிவு சொல்கிறார்களா? அல்லது நோயாளர்களுக்கு அறிவு சொல்கிறார்களா? ஒன்றும் புரிய வில்லை.

பொது உலக நடைமுறை உணவுப் பிரச்சனைகளை மருத்துவர்கள் எடுத்துக் கொள்ள கூடாது. பழக்க, வழக்க, ஒழுக்க , நடைமுறை , சூழியல் போன்ற காரணங்களை கொண்டே உணவு முறையை நிர்ணயிக்கவேண்டும். இதுவே அறிவு சார்ந்த செயலாகும். பத்திய உணவிற்கு சிலவற்றை சேர்க்க அல்லது விளக்க வேண்டும். மருத்துவத்திற்காக  கூறப்படும் உணவு வேறு. நடைமுறை மக்களின் உணவு வேறு. இவற்றை குழப்பிக் கொள்ளக் கூடாது. பொதுவாக  ஒரு கொள்கையை கூறும் பொழுது எப்படி வேண்டுமானாலும் அவனவன் அறிவு ஆற்றலுக்கு ஏற்றார் போல் வளைத்துக் கூறலாம். ஆனால் இது தவறாகும். தனிக்கொள்கையும், பொது கொள்கையையும் கலந்து திரிப்பது சரியாகாது. கருவாட்டுக் கடையும், பூக்கடையும் எப்படி ஒன்றாகும்? இது தர்மம் ஆகாது. மக்களும் இவற்றை புரிந்து கொண்டு , தனக்கும் தன் மக்களுக்கும் தகுதியான உணவை தேர்ந்தெடுத்து  உண்பதே நன்மை பயக்கும்.

" தீயள வின்றித் தெரியான் பெரிதுண்ணின் 
நோயள வின்றிப் படும்"
                                                         வள்ளுவர்.
"காத்திருப்போனுக்கு கறியும் சோறும் இல்லை "
                                                                 நெருஞ்சில் சித்தர்

No comments:

Post a Comment

Total Pageviews

Followers