உ 
பிள்ளையார் சுழி
பிள்ளையார் சுழி
 தமிழ்நாட்டில்  இருக்கிற நூல்களில் ஒரு சுழியும் ஒரு கோடும் (உ) உள்ள எழுத்தை நாம்  அறிவோம். சிறு சீட்டு எழுதினாலும் முதலில் இந்த எழுத்தை எழுதுவது பழக்கமாக  இருந்து வருகிறது. இது கடவுளை   வணங்குவதற்காகவும்   ,  அதன் வடிவமாகவும்  தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அது என்னவென்று கேட்டால் பிள்ளையார்  சுழி என்பார்கள். இது தமிழில் மட்டுமே வழங்கி வருகிறது. பிள்ளையார் சுழி  என்பது நாம் பிள்ளையான (குழந்தை) சுழியாகும். பிள்ளையாரை(கணபதியை)  குறிக்கும் சொல் அல்ல என்பதை உணர வேண்டும். தமிழில் கணபதி வழிபாடு ஆதியில்  இல்லை. திருக்குறள், நாலடியார், மூதுரை போன்ற தமிழ் நூல்களில் கணபதியை  பற்றி வரவில்லை.பிறகு  எப்படி  கணபதி (உருவம்) வழிபாடு  ஏற்பட்டது  என்பதையும், அவருக்கு முதல் வணக்கம் ஏற்பட்டது என்பதையும் காண்போம். 
நமது  உடலில் பத்து வகையான வாயுக்கள் சுழன்று வருகின்றன அவ்வாறு சுழலும்  வாயுக்கள் ஒரு மையம் கொண்டு இயங்கும் இடம் சுழி என்று அழைக்கப்படும் (cyclone  center) .  
பத்து  வாயுக்களும் சுழலும் போது ஒரு அதிர்வை ஏற்படுத்துகின்றன. இவற்றை சப்த  நாதம் (ஒலி)  என்பர்.  அந்த நாதம்  (ஒலி), விந்துவுடன் (ஒளி) இணைந்து  தந்தையின் சுக்கில பையில் உறையும்.  எனவே தான் தமிழ் மாதமாகிய "ஆடியை"  முதல்  மாதமாக குறிப்பிட்டனர். (ஆடி என்பது கதிரோனை பிரதிபலிக்கும்  இடமாகும்) அதை சத்குரு நாதர் மூலம் அறிக.    
அவை  படிப்படியாக உருபெறும்.  கரு மாதமாகிய காரி மாதத்திற்கு தேள் வடிவம்  கொடுத்துள்ளனர் (விருச்சிக இராசி, தேள் வடிவம், எட்டாம் இடம்). இந்த தேள்  வடிவ விந்து தாயின் கருப்பையில் உறைந்து குழந்தையாக வடிவம் பெறுகிறது.  இதைத் தான் பிள்ளை என்கிறோம். குழந்தைகளை திட்டும் போது,  "இவன் இரட்டை  சுழியன்", "இவனுக்கு சுழி சரியில்லை", "இவன் சரியான  சுழியன்" என்றெல்லாம்  கூறுகின்றனர். சித்தர் பாடல்களிலும் இந்த சுழியை பற்றி பெருமையாக  எடுத்துரைகின்றனர். 
இதுவே  நமது உடலின் "மூலாதாரம்". இதை உணர்ந்த சான்றோர்கள் "உ"   வடிவத்தை கடவுள்  வணக்கமாக குறித்தனர். காலப்போக்கில் இது மறைந்து பிள்ளையார்(கணபதி) என்ற  உருவத்திற்கு பூசை வழிபாடுக்களுக்கு  முதலிடம் கொடுத்து விட்டனர். இது  உண்மை அல்ல. இதை திருமூலர்
"தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே ?"  என்பார்.
 இதில்  தந்தை என்பது சிவம், மகன் என்பது சுழி. சுழி திறந்தால் தான் தந்தை என்கிற  சிவத்தை அடைய முடியும் என்பதாகும்.  இதுவே "ஓம்காரம்" என்றும்,  "பிள்ளை-ஆர்-சுழி" ஆகும். 
 

 
 
No comments:
Post a Comment