Saturday, March 24, 2012

வளமான வாழ்க்கைக்கு வாழ்க்கை துணை நான்கு








வளமான வாழ்க்கைக்கு வாழ்க்கை துணை நான்கு 
மக்கள் மானிட பிறவி எடுத்த பயனை(நற்கதியை) மாறுபாடின்றி பெற நான்கு பெருந்துணைகள் வேண்டும். அந்த துணைகளை பெற்றும், பின்பற்றியும், அடங்கியும் நடக்கவில்லை என்றால் உடல் நலம் கெட்டு பாழாகும் என்பது உறுதி.

இவ்வாறு பாழாகாமல் இருக்க மெய்யறிவுடைய பெரியோர்கள் இயம, நியம அற நெறிகளை வகுத்து அளித்தார்கள். அந்த அறநெறிகளை நான்கு துணைகளை கொண்டு அறிய வேண்டும்.

தாய் 
குழந்தை பருவத்தில் தனிச்சைப்படி தக்கது, தகாதது என்று அறியாமல் கைக்கு அகப்பட்டதையும், வாய்க்கு அகப்பட்டதையும் விழுங்கி உடல் நலம் குன்றி மாளாமல் இருக்க தாயின் துணை முதலாவதாகும். 

ந்தை 
இளமைப் பருவத்தில் மனம் போனபடி ஆடித்திரியாமல் கல்வியறிவு பெற்றும், சமுதாய மதிப்பும் பெற்று உயர தந்தை துணை இரண்டாவதாகும்.

குரு 
யெவன பருவத்தில் யாக்கையின் இளமை நலத்தை பாழாக்கி மாயாமல் இருக்கவும், சற்குரு 
நெறியை மேற்கொண்டு நடவாமையால் பல பிணிகளுக்கு ஆளாக்கி தானும் கெட்டு , கெட்ட  சமுதாயத்தை உருவாக்கி மடியாமல் இருக்கவும் குரு துணை வேண்டும்.
அவ்வாறு குரு நெறி இல்லையென்றால் 
"கண்கள் விழியு இருள் சூழ்ந்து நாடிகலகலத்து 
 பெண்கள் மயில் கொண்டு விந்தழிந் தேபெரு நோய்க்கிடமாய் 
வெண்தந்த மாறியே மெய்நரை யுற்று வினைப்பயனாய்
மண்ணிடறுமாருஞ் சுடுகாடு கான் சொந்த மாளிகையே" 
என்ற கவிப்படி அழிவு நிலையை அடைகிறார்கள். தனது சந்ததிகளை தீராத நோய்க்கு உட்படுத்துகிறார்கள். 
இதை திருமூலர்
"வித்திடு வோர்க்கன்றி மேலோர் விளைவில்லை
 வித்திடு வோர்க்கன்றி மிக்கோர் அறிவில்லை
 வித்தினில் வித்தை விதற உணர்வரேல்
 மத்திலிறுந் ததோர்  மாங்கனி யாமே!"   என்கிறார் 

  உடலுக்கு வித்தாகிய விந்து விடுவோனுக்கு எச்சரிக்கை செய்கிறார். அகத்தியரும், 

" விந்துதித்த போதே வந்துதித்த நாதம் 
   எந்த விதத்தோடுமோ அந்த விதத்தாடுமே" என்கிறார்
எனவே விந்தை பாழ் செய்யாமல் காக்கவேண்டும். களவி என்பது ஒரு விளையாட்டில்லை என்பதையும், விந்து வீணாக கூடாது என்பதும் ஆன்றோர் வகுத்த நெறி. இவ்வாறு இல்லையென்றால் "விந்து விட்டவன் நொந்து கெட்டான்" என்னும் பழமொழிக்கேற்ப தனக்கும் நோய் செய்து கொண்டு, பிள்ளைகளையும் நோயுறச் செய்து சேர்த்து வைத்த பணமும், உடலும் கெட்டு இறப்பான். 
விந்தை தன் உடலில் சார செய்பவனுக்கு அகம், புறம் குளிர்ந்து அமிர்தம் பொழியும். இதற்கு நல்ல குருநாதர் வழி காட்ட வேண்டும்.

மெய்குரு இல்லையென்றால் 
"குருட்டினை நீக்கா குருவினை கொள்வர் 
குருடும் குருடும் சேர்ந்து குருட்டாட்டம் ஆடி
குழியில் விழுந்து வாறே"

  என்ற திருமூலர் வாக்கு போல் அழியும் 
மேலும் குருநாதரை ஏற்றுக் கொள்ளும் போதும் 

"குருவுனை நல்ல குருவை கொள்க" 

 என்று திருமூலர் சொல்கிறார்      
 மேலும் குருநாதரை பெரும் போதும் "நதி மூலம் ரிஷி மூலம்" பார்க்கக் கூடாது என்பர். 
அது தவறாகும் 
இதையே 
"தாடி சடை முடி கமண்டலம் யோக
தண்டுகொண்ட மாடுகள் - தேவியை 
அலையவிட்டு தேசமெங்கும் சுற்றியே 
பாவி என்றே வீடெல்லாம் 
பருக்கை கேட்டலை வாறே!"
 என்று அகத்தியர் எச்சரிக்கை செய்கிறார். காரிய குருக்களை ஏற்றுக் கொண்டால் நமது சரீரம் கெட்டு விடும். 
எனவே தான் நெருஞ்சில் சித்தரும்
"விதியை நல்ல மதியையும் 
  உன் சுழி திறந்தாள் காணலாம்"  என்கிறார்
எனவே விதி மதியை கூட்டிக் காட்டும் நல்ல குருநாதரை அடையாளம் கண்டு பிறவிப் பயன் பெருக.
தெய்வம் 
முதுமையடைந்து இறுதிநிலை எய்தும் நம் சீவன் மீண்டும் பழைய பிறவி வாசனைகளில் விக்குராது உயர் பதவி அடைய தெய்வத்துணை வேண்டும். இதுவே வாழ்வின் இறுதி துணை. 

 "காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ" என்று கண்ணாதாசன் ஏக்கம் போல் இல்லாமல் தெய்வத்துணை ஏற்றம் பெற வேண்டும். இதற்க்கு சிறந்த சத்குருநாதர் வழி காட்ட வேண்டும்.  சத்குருநாதர் கிடைக்க அறநெறி நில்லுங்கள். அப்பொழுது சற்குருவே தெய்வமாக வருவார்.

"சற்குரு தெய்வம் என்கிறார் 
 கண்ணுதல் நந்தி"                           - திருமூலர் 
  
" குருவருள் இன்றி திவருள் இல்லை"  - தமிழ்மறை  

No comments:

Post a Comment

Total Pageviews

Followers