Wednesday, March 28, 2012

இறைவன் பலியை ஏற்றுக் கொள்கிறானா?

கோயில் விழாக்கள், குல தெய்வ வழிபாடு, சிறப்பு நிகழ்ச்சிகள், பண்டிகைகள் எப்படி எது நடத்தினாலும் பலி என்பது உண்டு என்பதை நாம் அறிவோம். இது  இல்லையென்றால் செல்லாதிருப்பவர்களை காண்கின்றோம். ஆதலால் பலி என்பது நிகழ்ச்சிகளுடன் கலந்தது என்றாகி விட்டது. இயற்கையை வழிபட்ட ஆதி மனிதன் எப்படி பலியை ஏற்றுக் கொண்டான் என்பதையும், அதை இறைவனோடு எப்படி தொடர்புபடுத்தி கொண்டான் என்பதையும் சற்று அறிவோடு சிந்திப்போம். ஆதியில்  மனித இனம் காடுகளில் மிக குறைந்த அளவே வாழ்ந்து வந்தனர். மிருகங்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வரும் போது அவை இடும் சாணம் மிக அதிக அளவு ஓரிடத்தில் நிறைந்தது. அவ்வாறு நிறைந்த சாணத்திலிருந்து ஒரு விதமான வாயு(இன்று சாண எரி வாயு என்றும் மீத்தேன் வாயு என்றழைக்கப்படுகிறது). இது தானே எரியும் தன்மையுடையது. அன்று இதை கொள்ளி வாய் பிசாசு என்றனர். இந்த வாயுவானது சூரிய வெப்பத்தாலும் காய்ந்து போன சருகுகள், இலைதழைகள் தீப்பற்றி  பல நாட்கள் எறிந்தது.இதனால் மனித குலமும், விலங்கினங்களும் பெரிதும் துன்பம் அடைந்தன. அவ்வாறு எரிந்து  போன சில விலங்கின மாமிச துண்டுகளை மனிதன் சாப்பிடும் போது சுவை ஒன்றை பெற்றுக் கொண்டான். ஆதியில் மனிதன் காய்,கனி, கிழங்குகளை உண்டு வாழ்ந்து வந்தான். இவ்வாறு தீயினால் வருந்தி வரும் வேளையில்  மனித இனத்தில் சற்று அறிவு பெற்றவன் இந்த நெருப்பு  சாணத்தில்ருந்துதான்  உற்பத்தியாகிறது என்று புரிந்து கொண்டான். இதை மற்றவர்களுக்கு எடுத்து கூறி விளக்க முடியாமல். இது கடவுள் தரும் தண்டனை என்றும், நம் மீது கோபம் கொள்கிறார்.  ஆதலால்  கொள்ளி  வாய் பிசாசை ஏவி விடுகிறார் என்றும், இதை மாற்ற அவருக்கு பல மிருகங்களை பலியிட வேண்டும் என்று கூறினான். மிருகங்களை கண்டு அஞ்சி வாழ்ந்த மனிதன் அவற்றையே கொல்ல முனைந்தான். கல், பெரிய மரக்கிளைகள் இவற்றை பயன்படுத்தி தெய்வ அடையாளமாக ஏற்படுத்தி அதற்கு முன் பலியிட வேண்டும் என்றும் கூறினான். பலியிட்ட மிருகங்களை சுட்டு எல்லோருக்கும் உணவாக அளித்தான். இதன் மூலம் மேற்படி தவறை எல்லோருக்கும் பொதுமை படுத்தினான். கல், பெரிய மர கிளைகள், பெரிய மரங்கள் இவை இன்று ஆலயங்களாகவும், தல விருட்சமாகவும், கற்சிலையாகவும் உருப் பெற்று விட்டது. பலிக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் தெய்வத்தின் ஆயுதமாக வைத்து வழிபட்டனர்(வருகிறார்கள்).இப்படித் தான் இறைவனுக்கென்று பலி இடுதல் தொடர்ந்தது. இவ்வாறு ஏற்படுத்தி  புராணங்களாவும், வேதங்களாகவும், மதங்களாகவும் எழுதி வைத்துக் கொண்டு பின்பற்றி வருகின்றோம்.
தமிழில் பிள்ளைக்கறி நாயனார் வரலாறும், இசுலாமியத்தில் இப்ராகிமின் வரலாறும், கிருத்துவத்தில் மோசே வரலாறு,ம் இதை போன்ற நிகழ்ச்சி சொல்லப் படுகின்றது.அவர்கள் இறைவனின் ஆணை, காட்சி பெற்று செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் நாம் எந்த இறைவனின் ஆணை அல்லது அசரீரி, காட்சி பெற்று இந்த செயலை செய்கின்றோம். இது எங்கள் பழக்கம் ,சமயம், மதம் என்று சொல்லி தவறுகளை மறைக்கின்றோம். ஒருவன் இது என் பழக்கம், தொழில் என்று திருட்டையும், கொலையையும் செய்வதை இந்த மானுடம் ஏற்றுக் கொள்ளுமா? அனைத்தும் மனிதனுக்காக படைத்தான்  என்று கூறிவரும் மனிதன் நோயும், இயற்கை சீற்றத்தையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளவில்லையே!

"பிதாவே என்னை மன்னியும்", "அல்லாவே உன் புறம்பான செயலை மன்னியும்", "வினையே ஒரு தேகம் கண்டாய்" என்று சொல்லி வரும் மானுடம். அந்த பாவம் அல்லாவிற்கு புறம்பான வினை என்னவென்று இதுவரை சிந்திக்க வில்லையே!. "நான்  வழியும், சத்தியமும், சீவனுமாய் இருக்கிறேன்","அல்லா அனைத்து உயிர்களுக்குள்ளும் "நூர்" ஆக இருக்கிறான்". சீவன் என்ன சிவன் என்ன வேறில்லை என்பர். பெரியோர்களின் மதிப்பு மிக்க அறிவுரையை மதிக்க வில்லையே!.

முல்லைக்கு தேர் கொடுத்த பாரியும், மயிலுக்கு போர்வை கொடுத்த பேகனும், புறாவிற்கு தசை அரிந்த சிபி சக்கரவர்த்தியும், பசுவுக்காக மகனைக் கொன்ற மனுநீதிச் சோழுனும்,பறவைகளுக்காக கற்ப தேகத்தை சிதைத்த வள்ளுவரும். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரும் வாழ்ந்த பூமி தான் இது. பிற உயிர்களின் துன்பத்தை தன் துன்பமாக காணவில்லையா? இந்த வள்ளல்கள். இவர்கள் வாழ்ந்த இந்த பூமியில் தான் இத்தனை கொடுமைகள்! அறிவுடையோர் சிந்திக்க... விலங்கினங்களை கொல்லாமல் விட்டு  விட்டால்  பெருகிவிடும் என்பார்கள். இவர்களை விட முட்டாள்கள் யாரும் அல்லர். சர்வத்தையும் படைக்கும் இயற்கைக்கு தெரியாதா எது வேண்டும், எது வேண்டாம் என்று. இந்த அண்டமானது ஒளி அணுக்களில் இருந்து திணிவு பெற்று பஞ்ச பூதங்களாகவும் கோள்களாகவும் இயங்கி வருகிறது ( தங்கத்தை பொருட்டே வாணிபம் நடப்பது போல்) இந்த திணிவு சிதைந்து மீண்டும் தனது ஆதி  நிலை(ஒளி அணுக்களாக) மாற்ற வேண்டும். இதைத் தான்  இயற்கை ஒழுங்கமைவு(Eco Balance) என்கிறோம். இதற்காகத் தான் இந்த  பூமியில் 84 லட்சம் உயிர்கள் தோன்றுகின்றன. அதாவது பூமியில் கிடைக்கும் புல் ,பூண்டு ,உலோகம், தாது பொருள்கள், உப ரசங்கள் இவற்றை தின்று சீரணித்து மீண்டும் ஒளி அணுக்களாக (காந்த அலை) மாற்றும் கருவியாக தான் உயிர்கள் தோன்றுகின்றன.

இந்த உயிர்கள் ஒரே நாளில் கொல்லப் படும் போது ஒளி அணுக்களின் தன்மாற்றம் பாதிக்கப் படுகிறது. இதுவே பஞ்ச பூதத்தின் மாற்றத்திற்கு காரணம். இந்த மாற்றத்தால் இயற்கை சீற்றம் ,பூகம்பம், பெரும் மழை, பஞ்சம் போன்ற பாதிப்புகளுக்கு முக்கிய காரணம். இதை அறிவுடையோர்  உணர்ந்து தெளிக. உயிர்களை கொல்வது நடைமுறை இயற்கை சட்டத்துக்கு புறம்பானது. அன்பும் கருணையும் கொண்ட இறைவனை நாம் அன்பும் கருணையும் இல்லாமல் அவன் அன்பும்  கருணை கொண்டு  படைத்த உயிர்களை கொன்று அவனுக்கே படைப்பதை இறைவன் ஏற்றுக் கொள்வானா? அறிவுடையோர்  பதில் தருக..

"பராபரம் ஒன்றே தெய்வம்
அனைத்து உயிரும் அதுவாச்சே"

                                                   அகத்தியர்


"வெள்ளைநிற மல்லிகையோ வெறெந்த மாமலரோ
வள்ளல் அடியினைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளைநிற பூவுமல்ல வெறெந்த மலருமல்ல
உள்ள கமலமடி உத்தமனார் வேண்டுவது"


                                                        விபுலானந்த அடிகள்

"கோவிலில் பலி கொடுக்குங் 
கூவின சேவல் ஆடு 
ஆவிகள் துடித்து ஓடுதே
அறிவிழந்த பாவயென்றே சாபமிடுதே "

                                                       சித்திர முத்தடிகள்

"புண்டரிக மலர் சொரிந்து
புண் நெறி தவிர்த்து வாழ்வோம்"

                                               நெருஞ்சில் சித்தர்

No comments:

Post a Comment

Total Pageviews

Followers