Saturday, March 24, 2012

கருமாவை குருமா வைய்க்க முடியுமா?

படைப்புகள் இரண்டு நிலைகளில் ஏற்படுகிறது. 1) இயற்கை படைப்புகள்.2) சீவ படைப்புகள்

 இயற்கை படைப்புகள் என்பது பஞ்சபூதங்கள், நட்சத்திரங்கள், கோள்கள், வினை இல்லா ஓரறிவு தாவரங்கள். இயற்கை படைப்புகள் குற்றமற்றவை. இவை உணர்வுள்ள எல்லா உயிரினங்களுக்கும், இயக்கத்திற்கும் பொதுவானவை ( காற்று, நீர், வெளிச்சம், நிலம்). சீவ படைப்புகள் வினைப்பதிவை கொண்டு இருப்பதால் குற்றமுடையதாக இருக்கின்றது. இதையே "வினையே ஒரு தேகம் கண்டாய்" என்பர். 
"விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய்  மெய்கொண்டு" என்கிறார் மணிவாசகர்.

இங்கு இயற்க்கை படைப்புகளும், சீவ படைப்புகளும்  தொடர் இயக்க மாற்றத்தால் பௌதீக குணங்கள்  உள்ள தோற்றங்கள்  உருவாகின்றன.

"பரமாகிய சக்தியுள் பஞ்சமா பூதம் 
தரம் மாறில் தோன்றும்  பிறப்பு"
                                                                        ஒளவை

இந்த  பௌதீக குணங்கள்  கூட்டுவிக்கும் சக்தியை தான் "இறைவன்" என்கின்றோம். உயிர் தோற்றத்தின் கடைசி நிலைதான் மனிதன் . மனிதனின் அறிவு நிலைக்குதான் பிரபஞ்சம்  என்கிற  கூட்டு இயக்கத்தை அறிய முடிகிற மேன்மை  உண்டு .

உயிரானது ஆணவம் (உயிர் உடலை விட்டு செல்லாதிருக்க மாயையின்  துணை கொண்டு  செய்யும் எந்த செயலும்  ஆணவமாகும் ), கன்மம், மாயை  ஆகிய  மும்மல குற்றத்தால் மனம் பற்றி (அறிவின் படி செல்லாமல்) செல்வதால்  " தவறு " என்னும் "வினை" நிகழ்கிறது. அதாவது "பிரபஞ்ச கூட்டு"  நிலையை அறியாமல் தன் முனைப்பாக செயல்படும் போது வினை என்னும்  "கருமம்" உயிரை பற்றுகிறது. இந்த களங்க பதிவுகள் தான் உயிர்களின் சீவ படைப்புக்கு ஆதாரமாய் அமைகிறது.  இந்த வினையை மூன்றாக பிரித்து  நம் முன்னோர் கூறியுள்ளனர். 

1) பிறவிக்கு காரணமான முன்வினை (சஞ்சிதம்).

2)பிறந்தது முதல் இந்த நிமிடம் வரை செய்த செயல்கள் மூலம்  "வந்த வினை " (பிராரப்தம்). 

இவை இரண்டும் நடந்து முடிந்து விட்டதால் இவற்றை மாற்ற முடியாது

இனிமேல் நடக்க இருக்கும் நிகழ்வுகளுக்கு  உரிய  செயல்களை நல்லனவாக செய்தோமேயானால் மேற்படி இரண்டு கர்மங்களால் வரக்கூடிய தீமையை மாற்றி அமைக்கலாம். இதுவே மூன்றாவது கர்மமாக சொல்லப்படுவது  ஆகாம்மியம் ஆகும்.

சுருக்கமாக பிற உயிர்களுக்கு செய்யும் தீவினையே "கருமம்" என்கின்றோம்.
இந்த வினை என்னும் கருமம் முதலில் இருப்பது உணவிற்காக  பிற உயிர்களை  கொன்று தின்பது.  இதை பெரியோர்கள் பல நூல்களில் தெளிவாக எடுத்துரைகின்றனர். இது எப்படி நம் உடலில் வினையாக பதிந்து கருத்தொடர் மூலம் சந்ததிகளுக்கும் பாதகம் செய்கின்றது என்பதை இனி காண்போம்.

நாம் உண்ணும் உணவானது இரத்தம், கொழுப்பு, நரம்பு, தசை, எலும்பு, மஞ்சை , விந்து என்று ஏழு  தாதுக்களாக பிரிந்து இந்த உடலை பேணி வருகின்றது. மேலும் 21 நாட்களுக்கு பின்பு ஒளி,ஒலி, கலை சக்திகளாக மாறி  நம் பொறிகளை இயக்கும், இதைதான் "பலம்" என்கிறோம். அசைவ உணவில் இந்த பலம் மிக குறைவு. ஏனெனில் பிற உயிரை கொல்லும் போது அதன் ஒளி சக்தி (உயிர் ) பிரிந்து விடுகிறது . அசைவ  உணவில்  உள்ள மற்ற தாதுக்கள் மனித உடலில்  உள்ள தாதுக்களுடன் இணையும் போது ( assembilization ) ஒரு வேறுபட்ட மாற்றத்தை உண்டு பண்ணும். அதாவது நீர் அணுக்கள் , கொழுப்பு அணுக்கள் அதன் அதன் அணுக்களுடன் இணையும் தன்மை மாற்றம் அடைகிறது. இதைதான் நோய்  என்கின்றோம். மேலும் தசையானது  விரைவாக அழுகும்  தன்மை கொண்டது.  அதாவது  சலிக்கும் தன்மை கொண்டது. இத்தன்மை நமது உடல் புளிப்பு சக்தியை அதிகரிக்க செய்து அழுகும் தன்மையை  உண்டு பண்ணும்.  இந்த அழுகும் தன்மை இரத்ததில் புகுந்து புழுக்களை உண்டு பண்ணும். இதை பாக்டீரியா என்கின்றனர். இதனால் "காய்ச்சல்" , 'சுரம் ', 'கணை சுரம் ' என்று பல வியாதிகள் வர காரணமாகின்றது.  அசைவ உணவுகள் உண்பவர்கள் பருத்து இருப்பதற்கு இதுவே காரணம். மேலும் அசைவ உணவு சீரணிப்பதற்காக   நமது உடலில் உள்ள சுண்ணாம்பு சத்து விரைவில் குறைந்து விடுவதால் மூட்டு வலி,  தேய்மானம், சூலைநோய், எலும்பு சுரம், இரைப்பு போன்ற நோய்களை உண்டு பண்ணும்.  புளிப்பு தன்மை அதிகரிப்பதால், செரியாமை,வாந்தி, பேதி, நரம்பு பலகீனம், வயிற்று புண்கள், நீரழிவு... போன்ற வியாதிகளை  உண்டு பண்ணும். இன்று உலகமே அஞ்சக்கூடிய "Autism"  என்னும் மூளை பலக்குறைவுக்கும் இதுவே காரணம். ஆகவே அசைவ உணவு மனித குலத்திற்கு பாதகமான உணவாகும். தாவரங்கள் ஒளியையே  உணவாக கொண்டவை. ஆகவே  அதை உண்ணும் போது " வனப்பு " என்னும் ஒளி சக்தி உடலில் கூடும். தாவரங்கள் மட்டுமே கழிவுகள் இல்லாதவை. ஆதலால் நமக்கும் கழிவு அற்று விடும். அசைவ உணவு மிருக குணகளை அதிகரிக்க செய்யும். எவ்வகையிலும் கேடு  செய்யும் அசைவ உணவை கைவிடுவதே நல்லது.
பெரியோர்களும் இதை

"தன் ஊன் பெருக்கத்திற்கு  தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம்  ஆளும் அருள்"


"பொருளாட்சி போற்றார்க்கு    இல்லை அருளாட்சி ஆங்கில்லை 
ஊன் தின் பார்க்கு"

"கொல்லா  நெறியே குரு நெறி"  என்றும் 

"மாமிசந் தின்போரெல்லாம்  மானிடப்புலயராவர்"

"கொலை களவு காமம் பொய்கூறல் 
மலையான பாதகமாம் அவை நீக்கி "

"கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க "
                                                              
                                                       என்கின்றனர்.

தெய்வத்தின்  பேரில் பலி இடுதலையும் சித்தர்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.


"அஞ்சுதே சன்னதியில்  நின்று
கெஞ்சுதே  கொஞ்சமும் இரக்கம் - இல்லையே
கொடுஞ் செயலை
நஞ்சென வெறுப்பரில்லையே"
                                              சித்தரமுத்து அடிகள்

"ஆலயத்தின் முன்னே ஆடு கோழி வெட்டி
அநியாயம் செய்யாதீர்கள்"
                                                  நெருஞ்சில் சித்தர்

நாம் அசைவம் சாப்பிடாவிட்டால் ஆடு, மாடுகள்,கோழிகள் பல்கி பெருகிவிடும் என்று மூடத்தனமாக கூறுவார்கள். இறைவன் எல்ல உயிர்களுக்கும் மரணத்தை பரிசாக அளிக்கின்றான். இந்த பிரபஞ்சம் தனது படைப்புகளை தானே சமன் செய்து கொள்ளும். உதாரணமாக டைனோசர்கள் அழிந்தது இந்த பிரபஞ்சம் தன்னை சமன் செய்து கொள்வதற்காகத்தான்.அன்பர்கள்  இவ்விடத்தில் கண்ணப்ப நாயனார் பற்றி  கேட்பார்கள் . கண்ணப்ப நாயனார்  இறைச்சியை இறைவனுக்கு படைத்தார்.   அவருக்கு இறைவன் வரவில்லையா ? என்று. கண்ணப்பர் "கண்ணையும் குத்தி  வைத்தார்" நீங்கள் அவ்வாறு செய்ய  முடியுமா ? என்று கேட்டால் சிரிப்பார்கள். கண்ணப்பர் செய்தது  " ஞான சாதனம்" இது இருக்கும் சாதனைகளை விட பெரியது. இதை   தமிழ் கற்ற  சான்றோர்களிடம் கண்டு தெளிக்க (கங்கை வேடனும் , அத்தி வேடனும் என்னும் சன்மார்க்க விளக்கம்  காண்க ) . அப்பொழுது  வேடனாக   இருந்த வேலன் "முருகன்" (ஞான கடவுள்    ) ஆனான் என்பது விளங்கும்.   

மேற்கண்ட கருத்துக்கள் மூலம் "கரும வினை" யின் முதலிடமாக இருக்கும் உயிர் கொலையை விட வேண்டும். மேலும் கரும வினைகளை அழிக்க ஒளவை கூறும் வழிமுறை 


" ஐயம் இடுமின் அறநெறியைக் கடைபிடிமின் 
இவ்வளவேணும் அன்னத்தை இட்டு உண்மின் 
தெய்வம் ஒருவனே யென்ன உணர வல்லீரேல்
அருவினைகள்  ஐந்தும் அறும்"

ஆகவே இது நாள் வரை சேர்த்துள்ள வினை பதிவுகளை கழித்தல், இனிமேல் புதிய வினைகளைச் சேர்க்காமல் இருத்தல், சேர்ந்த வினைகளை களைவதற்கும், புதிய வினைகள் சேராதிருப்பதற்க்கும், தன் உடலில் இருக்கும் "ஒளியை" குருவின் மூலம் அறிந்து தானமும் தவமும் இயற்றி கரும வினைகளை வேரறுத்து அருட்பெருஞ்ஜோதியில் கலப்போம்.

"தானமும் தவமும் தரிதார்க்கல்லது 
வானவர்  நாடு வழி  திறவாதே "

                                                             ஒளவை

"தன்னை அறியும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையை முடிச்சவிழ்ப்பார்கள் 
பின்னை வினையை பிடித்து பிசைவார்கள்
சென்னியில் வைத்த சிவனருளாலே " 
                                                               திருமூலர்

No comments:

Post a Comment

Total Pageviews

Followers