இல்வாழ்க்கைக்கு இருபது
- பசும் பால் உண்போம்
- எண்ணெய் இட்டு வெந்நீரில் குளிப்போம்
- நீரை சுருக்கியே உண்போம்
- இடக்கையை கீழே வைத்து உறங்குவோம்
- புளித்த தயிரை பெருக்கியே உண்போம்
- கருணை கிழங்கையே உண்போம்
- உண்ட பின் குறு நடை கொள்வோம்
- ஆறு திங்கள் ஒரு முறை வாந்தி செய்வோம்
- நான்கு திங்களுக்கு ஒரு முறை பேதி கொள்வோம்
- ஒன்றரை மாதத்திற்கு ஒரு முறை நசியம் செய்வோம்
- வாரம் ஒரு முறை சவரம் செய்வோம்
- வாரம் இருமுறை எண்ணெய் இடுவோம்
- நெய் உருக்கியே உண்போம்
- மூன்று நாளுக்கு ஒரு முறை மை இடுவோம்
- உணவு செரிக்கும் வரை புணரோம்
- காலையின் இஞ்சி சுரசம் கொள்வோம்
- மாலையில் சுக்கு சுரசம் கொள்வோம்
- இரவில் கடுக்காய் சுரசம் கொள்வோம்
- தேன், திணை அமுதென கொள்வோம்
- உணவின் கடைசியில் நீர் அருந்துவோம்.
சித்தர் சன்மார்க்கம் சித்தி தரும் மார்க்கம்
சிறப்பான பலனடைய வழி சொல்லும் மார்க்கம்
சதாசிவம் நிலை உணர்ந்து அருள் பெறவே
நெருஞ்சில் சித்தர்
No comments:
Post a Comment