Wednesday, March 28, 2012

மும்மத மெளன மொழி



இந்த உலகில் வாழும் மானுடத்திற்கு " வாழும் வகை " அறிவிக்க  வந்த எத்தனையோ பெரியோர்கள்  எடுத்து கூறியவை எண்ணிலடங்கா ! இவற்றை தொகுத்து மும்மத மானுடம் ஏற்று கொண்டு வாழ்கிறது.

இந்து மக்கள்: புராண இதிகாச, வேதம்,  திருமுறை, தேவாரம், திருவாசகம்... இன்னும் பலவற்றை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

கிருத்துவ மக்கள்: பைபிள்,வசனங்கள்,பாதிரியார்களின் உரைகள்,சபைகளின் வழி காட்டல் இவற்றை கடைப்பிடிகிறார்கள்.

இசுலாமியர்கள்: குரான், புர்கான்,இபிலிசுகள்,ஜமாத்தின் வழி காட்டல் இவற்றை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர்.

இவற்றில் என்ன இருக்கின்றது என்று அறிவோடு சிந்தித்து பார்க்கும் பொழுது. மானுடத்தின் தவறான புரிதல்(மடமை)   தன்மையை எண்ணி வருந்தும்படி இருக்கின்றது.

அறிவறிந்த சான்றோர்கள் (சித்தர்கள்) இவற்றைப்  பற்றி என்ன கூறியுள்ளனர் என்பதை காண்போம். தன் அறிவை தேடும் வழி முதலில் கோயில், குளம் என்று வைத்தனர். இவற்றை இன்னும் பின்பற்றி கொண்டே இருக்கின்றனர் . "ஆளும் வளரனும் அறிவும் வளரனும்" என்பார்கள். இவற்றில் ஆள் தான் வளர்ந்துள்ளனர். ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்றார் ஒளவை. ஆலயம்(அ+லயம்)  உயிர் இருக்கும் இடம் என்று பொருள். இதையே  "உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்" என்றார் திருமூலர், மேலும்  "நடமாடும் கோயில் தானிருக்க படமாடும் கோயில் எதற்கு ?"என்கின்றார்.  கோயிலாவது ஏதடா  தீர்த்தம் ஆடல் எவ்விடம்  தெளிந்து இயம்புவீர்.  பள்ளமும் மேடும் பரந்து திரிவரே கல்வி இல்லோரே என்று கோயில் வழிபடு வேண்டாம் என்கின்றனர். வேதங்கள் புராணங்கள் இவற்றை பற்றியும் வேர்த்திரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ? புத்தகங்களை சுமந்து போகலை பிதற்றுவீர்! 

"தத்துவக் குப்பைகளை  தள்ளுங்கடி -வேத 
சாத்திரம் பொத்தலை மூடுங்கடி!"

"சாத்திரமும் சூத்திரமும் பார்திடலாதே "
                                                              அகப்பேய் சித்தர் 
"தாவாரம் இல்லை தனக்கொரு வீடில்லை 
தேவாரம் ஏதுக்கடி? குதம்பாய் !"

என்றும் சாடியுள்ளனர். இந்த கணிப்பொறி யுகத்திலும் வேத புராண இதிகாசங்களில் நம்பிக்கை வைத்தே வாழ்கின்றோம். இல்லாத கோயில்களுக்கு 6 வேலை பூசை நடத்தி வருகின்றனர். தென்முக கடவுளான தெட்சிணாமூர்த்தி நால்வருக்கும் "சின்மயம்"  என்கின்ற  பேசா மொழியைத்தான்  காட்டினார். இதை விடுத்து நாம் பல சுலோகங்களை  "காகம்" கரைவது போல் சொல்லி வருகின்றோம்

"ஏற்றிக்கிடக்குது எழு கோடி மந்திரம் என்ன கண்டாய்"  என்கிறார்  பட்டினத்தார் .

கிருத்துவர்கள் பைபிளை வேதமாக கொண்டுள்ளனர்

பைபிள் = பயில்வு + இல். அதாவது பயில வேண்டியது இல்லை என்பதாம், அப்படி என்றால் அது மௌவுனம் எனப்படும்/ இயேசு நாதர் படிக்காதவர் அவர் எப்படி வேதத்தை எழுதினார்? ஆடுகளைப்  போல் என்று உதாரணம் காட்டி பேசினார், இன்று அவரை ஆடு மேய்ப்பவர் " ஆகவே காட்டி விட்டோம். ஞானம் அடைந்தவர் ஆடு மேய்ப்பவரா?

அறியாமல் செய்த தவறு என்றதினால்  தினம் தவறு செய்து விட்டு "ஞாயிறு" அன்று மன்னிப்பு கேட்டு வருகின்றோம்.

இசுலாமியர்கள் குரானை வேதமாக கொண்டுள்ளனர்.

அதாவது கூறா - சொல்லாத.
             அ     - உயிர்.
             அன்   - மொழி.
சொல்லாத உயிர் மொழி= மெளவுனம் எனப்படும். ஆனால் இன்று "அல்லாகு அக்பர்" என்று  "5" முறை கத்தி வருகின்றோம். மெளவுனம்  என்ற பிறகும் "புர்கான்" தேவையா? முகமது நபியும் படிக்காதவர் என்பதை அறிவோம். மெளவுனம் என்ற "இறை ஞானத்திற்க்கு"  இத்தனை இபிலிசுகள்?

இதையே குணங்குடியாரும்

"சாத்திரம் சத கோடி கற்றாசம்
பாத்திரம் ஏந்தி புறத்தில் அலைந்தாலும்

நமன் வரும்போது உதவாது உதவாது"
                                                       என்றார்கள்

"செப்பும் பல பல மந்திரம் -திக்ரு
செய்யெனக் கூறிடு தந்திரம் - எழுதிச்
செபியெனக் கூவிடு மந்திரம் - வேசத்
திருடர் பிழை வழி- என் மகவே"


            என்றார் மகதூம் பாவா அவர்கள்

பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை ஞானியர்கள் கூறியதைக் காண்போம்.

இறைவன் எல்லா உயிர்களுக்கும் ஒரு நாளைக்கு  அளித்துள்ள நன் நிதியம் 21,600 மூச்சே ஆகும். இதை எவ்வளவு சேமிக்கறோம் என்பதே சாதனையாகும். இதுவே நமது "ஆயுள்" ஆகும். இதுவே இறைவனைக் காண "ஞான சாதனை"யும் ஆகும். மனித குலத்திற்க்கு தந்த "கலிமா" ஆகும்.

"உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் கபாலம் ஏற்ற வல்லீரேல்"


"கால் பிடித்து மதி மண்டலத்தினுள்
செலுத்த தேகம் விழுமோ பராபரமே"

"காற்றை பிடிக்கும் கணக்கறிவாலருக்கு
கூற்றை உதைக்கும் குறி அதுவாமே!"


                                                            என்றும்

"நாசியில் மூச்சுசோடுகிறவன் சொல்வதை நம்பாதே"
              
                                                                  பைபிள்
"உன் விசுவாசம் உன்னை காப்பாற்றும்"

                                                                  பைபிள்
விசுவாசம் - (உள் சுவாசம்)

"விசுவாசிக்கிறவன் என்னிலும் மேலான அற்புதங்களை செய்வான்

விசுவாசிக்கிறவன் இதை கேட்பான்"

                                                                  பைபிள்

"விசுவாசிக்கிறவன் மரியான்"
                                              என்றும்

"வாசிஅறிந்தவனே இசுலாம் வாசி
வாசி அறியாதவன் காபிராகும்"


வாசி - மூச்சு

"பாயாத கொம்பிரண்டும்
பரிவுடன் இணக்கம் ஆனால்
ஆசானும் அவனே ஆவான்
அல்லாவும் அவனே ஆவான்"


"சூத்திர பாவை கயிறற்று விழுமுன்
அதி சூட்ச கயிற்றை பிடித்திடடா"


"முட்டையும் பொரிப்பேன்
 முழு கோழியும் பொரிப்பேன்
 தட்டில் வைத்து தருவேன்
 மனோன் மணியே"   - 
      குணங்குடியார்


ஆகவே இதுகாறும் கண்டவை அனைத்தும் ஒரு தந்திரம் மூலம் காற்றை வசப் படுத்தும் வழிமுறையே என்பது விளங்கும். இதுவே "மெளவுனம்" என்றும் இறை நிலை யோகம் எனப்படும்.இதற்கு சாதி, மத, சாத்திர, வேத, இதிகாசம் அணைத்தும் உதவாது.

இது நல்ல குரு மூலம் கிடைக்கும் "விளைச்சல்" என்பதை உணர்க

இதை

    "தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலவே ஒரு
      தந்திரம் நீ சொல்ல வேணும் வெண்ணிலவே"


                                                                      வள்ளலார்
மேலும்

"பொன் வண்ண சாலியாம் புதின மூலி
பொறுமை யுடன் பொருந்துமாயின் அகம் குளிருமே"

  
                                                                   நெருஞ்சில் சித்தர்.

No comments:

Post a Comment

Total Pageviews

Followers