Wednesday, March 28, 2012

எல்லா நாட்களிலும் பெண்கள் கோவிலுக்கு செல்லலாம், பூஜையும் செய்யலாம்


கோவிலாவது குளங்களாவது ஏதடா?
பள்ளமும், மேடும் உன்னை பண்படுத்துமா?
சாத்திரம் ஆயிரம் கற்றாலும் உதவாது!!!
ஐந்து அறிவு நிரம்பாத மானுடத்திற்கு 
ஏழாம் அறிவு வேண்டுமாம்????

பத்து மாத துமயல்லோ திரண்டு 
மனித உடல் ஆனதே - சிவ வாக்கியர் 

மாதவிலக்கு நாட்களில் கோயில், குளங்களுக்கு செல்வதோ அல்லது வீட்டு பூஜை அறையில் பூஜை செய்வதோ காலம் காலமாக சில பேர் பெண்களை அனுமதிப்பதில்லை. இது மிகவும் தவறான கருத்தாகும். 
ஒரு பெண்ணிற்குள் உள்ளே என்ன இருக்கிறதோ அதே இரத்தம் தான் மாதவிலக்கு நேரத்தில் வெளியேறுகிறது. மேலும் எந்த இரத்தம் வெளி ஏறுகிறதோ, அதிலே தான் ஒவ்வொரு   மனிதனும்  கருவாகி, பின்பு திசுவாகி, பிள்ளையாகி, பெரிய ஆளாகிறான்.

அந்த காலங்களில் பெரியவர்கள் மாதவிலக்கு நேரத்தில் பூரண ஓய்வினை பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தினை கொண்டு செயல்பட்டனர். இதுவே காலப்போக்கில் தீட்டு நாட்களில் பெண்களை தீண்ட கூடாது மற்றும் இறைவழிபாடுகளில்   ஈடுபடக்கூடாது என்ற மூட நம்பிக்கையாக உருவெடுத்துவிட்டது. 

எப்படி நம்முள் இருக்கும் சோதியான இறைவனை சில நாட்களில் மட்டும் கழட்டிவிட முடியும். 

1 comment:

  1. அருமை சிவா ஆனால் உண்மையான விளக்கம் கூறவா அதன் காரணம் அந்த கால கருங்கல் கோவில்கள் மனித உடல்நிலை வெப்பநிலையை பொறுத்தே அமைக்க பட்டது . அதாவது மனித உடலின் சராசரி வெப்பநிலை எவ்வளவோ அதே வெப்பநிலை கருங்கல்லால் கட்டப்பட்ட கோவில்களுக்கும் உண்டு .மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும் .அந்த நேரங்களில் கோவில்களுக்கு பெண்கள் வந்தால் இன்னும் அதிக படியான உஷ்ணம் உண்டாகும் . இதனால் அதிக படியான ரத்தபோக்கு உண்டாகும் . இதை கருத்தில் கொண்டே கோவில்களுக்கு மாதவிடாய் காலங்களில் பெண்கள் வரக்கூடாது என்று முன்னோர்கள் கூறினார் . தீட்டு என்னும் வார்த்தை அதை சொல்பவர்களுக்கு தான் . உதாரணமாக வீட்டில் யாராவது இறந்தால் மலை ஏறக்கூடாது என்பார்கள் சரி ஏற்றுக்கொள்வோம் . அப்போது மலைகளில் வைத்து இறந்தால் என்னசெய்வது

    ReplyDelete

Total Pageviews

Followers